Tag Archives: நடிகர் விஜய்

அந்த புரளிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… முடிவெடுத்த நடிகர் விஜய்..!

போன வருட துவக்கத்திலேயே நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி ஆகி தனது கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளாக அரசியலில் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார்.

இதற்கு நடுவே தனது திரை வாழ்க்கையை பார்க்க முடியாது என்பதால் திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். அதற்கு பிறகு அவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என கூறியிருந்தார்.

அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம்தான் ஜனநாயகன். இந்த திரைப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என தெரிகிறது. எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இதற்கு நடுவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய்யை வைத்து மாஸ்டர் 2 மற்றும் லியோ 2 இயக்க ஆசை உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் கிடையாது என ரசிகர்கள் வதந்திகளை பரப்பிவிட்டு வந்தனர்.

ஆனால் இந்த வதந்திகளை கண்டுக்கொள்ளாத விஜய் தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படம் மீதே கவனம் செலுத்தி வருகிறார். எனவே இதன் மூலம் ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படம் என தெளிவாகிறது.

அஜித்துக்கு விஜய் அளவு வசூல் வராதாதுக்கு இதுதான் காரணம்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் இவருக்கு நடிகர் அஜித் வாய்ப்பை கொடுத்தார். இந்த நிலையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 10 நாட்களை கடந்த நிலையில் தற்சமயம் 200 கோடிக்கும் அதிகமாக ஓடி வெற்றியை கொடுத்துள்ளது.

ஆனால் விஜய் படத்தோடு ஒப்பிடும்போது எப்போதுமே அந்த அளவிற்கான வெற்றியை அஜித் திரைப்படங்கள் கொடுப்பதில்லை. அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படமும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

அவர் கூறும்போது உண்மையில் விஜய்யை விட அஜித்துக்கு ரசிகர்கள் குறைவுதான். தமிழ் நாட்டில் வேண்டுமானால் அஜித் ரசிகர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஆந்திரா கேரளாவில் கூட விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதே போல வெளிநாடுகளிலும் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால்தான் விஜய் படம் வெளியான உடனேயே பெரும் வெற்றியை கொடுத்து விடுகிறது என்கிறார் பிஸ்மி.

படத்தில் 40 பஞ்ச் டயலாக்குகள்.. ஜனநாயகன்.. அனல் பறக்கும் அப்டேட்.!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அவரது இறுதி படம் குறித்த ஆவல் என்பது அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன் திரைப்படம். முழுக்க முழுக்க அரசியல் பின்புலத்தை கொண்ட ஒரு திரைப்படமாக இந்த படம் உள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹெச். வினோத்தை பொறுத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் அரசியல் சார்ந்த பல விஷயங்களை வெளிப்படையாக கூறுவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் எல்லா வகையிலும் நல்ல விலைக்கு விற்பனை ஆகி வருகிறது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஏற்கனவே சன் டிவி வாங்கியுள்ளது. 68 கோடிக்கு சாட்டிலைட் உரிமம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் ஓ.டி.டி தளம் இந்த படத்தை 121 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படியாக படத்தின் படப்பிடிப்புகள் முடிவதற்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடிக்கு விற்பனையாகியுள்ளது இந்த திரைப்படம். இந்த நிலையில் படத்தில் மொத்தம் 40 பஞ்ச் டயலாக்குகள் இருக்கிறதாம்.

ஓட்டு அரசியலை பேசும் படமாக இது இருப்பதாகவும் விஜய் இதில் தேர்தல் கமிஷன் அதிகாரியாக வருவதாகவும் சில தகவல்கள் உள்ளன. விஜய்யின் அரசியல் வருகைக்கு இந்த படம் அதிக உதவியாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

விஜய் நல்லவிதமாதான் பேசி இருக்கார்.. ஆதரவாக பேசிய உதயநிதி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த சில மாதங்களிலேயே கட்சியை துவங்கிவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சிக்கான கொடியை அறிவித்தார் விஜய். அதில் இருந்து விஜய் மீது மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து வருகிறது.

அரசியலுக்கு வருகிற காரணத்தால் முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் கொள்கைகள் என்பது தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து திமுக விற்கு எதிராகதான் விஜய் அதிகமாக பேசி வருகிறார்.

கட்சி மாநாடு துவங்கியதில் இருந்தே விஜய்யின் பேச்சுக்கள் அதிகப்பட்சம் ஆளுங்கட்சியை தாக்கும் விதமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் என்ன பேசினாலும் அதுக்குறித்து தி.மு.கவிடம் கருத்து கேட்பதை பத்திரிக்கையாளர்கள் வேலையாக வைத்துள்ளனர்.

vijay tvk

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பேசியது குறித்து உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. விஜய் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க சொல்கிறார் அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி அவர் சரியாகதானே சொல்லி இருக்கார். அதுப்பற்றி உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? என கேட்டார்.

பிறகு பத்திரிக்கையாளர்கள் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லோருக்கும் அதற்கு உரிமை உள்ளது என பதிலளித்திருந்தார்.

தளபதி 70க்கு ப்ளான் இருக்கா.. சீக்ரெட்டை வெளியிட்ட மூத்த சினிமா பிரபலம்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அதே சமயத்தில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விஷயத்தையும் அறிவித்தார். அரசியலுக்கு வந்த பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலக போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம்தான் அவரது இறுதி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதற்கு பிறகு விஜய் படம் எல்லாம் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் சினிமா வட்டாரத்தில் வேறு விதமாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது விஜய் பிளான் பி ஒன்று வைத்துள்ளார். அதன்படி 2026 தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார் என்றால் கண்டிப்பாக பிறகு சினிமாவுக்கு வர மாட்டார்.

vijay tvk

ஆனால் அதற்கு பதிலாக தோல்வியடைந்தால் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியல் பணிகளிலும் ஈடுபாடு காட்டுவார் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் தொடர்ந்து ஆளுங்கட்சிகளை விமர்சித்து பேசி வருகிறார். அது அவரது திரை வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் பேசப்படுகிறது.

இதற்கு நடுவே நடிகர் விஜய்க்கு மீண்டும் சினிமாவிற்கு வருவதற்கு ப்ளான் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். சினிமா பிரபலம் சித்ரா லெட்சுமணன். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.

மீண்டும் விஜய் படத்தை கையில் எடுத்த கௌதம் மேனன்.. விரைவில் வெளிவர இருக்கும் அப்டேட்.!

விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் நிறைய இயக்குனர்களுக்கு விஜய்யே வாய்ப்பு கொடுத்தும் கூட படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் அமையாமல் போயுள்ளது.

இதை நிறைய இயக்குனர்கள் பேட்டிகளில் பகிர்ந்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிவகாசி திரைப்படத்திற்கு பிறகு விஜய் பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்போது பேரரசு வேறு படத்தை இயக்கி வந்ததால் அந்த படத்தை அவரால் இயக்க முடியவில்லை.

அதே போல இயக்குனர் பி.வாசுவிடம் நடிகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும் அதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். ஆனால் அப்போது இயக்குனர் பி.வாசு வேறு வேலைகளில் இருந்ததால் அவரால் இயக்க முடியாமல் போனது.

இதே சம்பவம் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் நடந்தது. உலக பிரபலமான லார்கோ வின்ச் என்கிற காமிக்ஸை அடிப்படையாக கொண்டு கௌதம் மேனன் இயக்க நினைத்த திரைப்படக் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தை இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டிருந்தார் கௌதம் மேனன்.

ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அந்த படம் பாதியிலேயே நின்று போனது. இந்த நிலையில் அந்த படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன். இந்த நிலையில் இப்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிவுக்கு வரும் 15 வருட காதல்.. அடுத்த பிப்ரவரியில் கீர்த்தி சுரேஷின் முடிவு… பக்க பலமாக நிற்கும் நடிகர் விஜய்..!

Actress Keerthy Suresh is one of the emerging actresses in Tamil. Mostly Keerthy Suresh starrer movies are successful and currently there is an update about her marriage

நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்பு இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்று வரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் பெரும்பாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ் முன்பெல்லாம் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் காதல் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ் யாரை காதலிக்கிறார் என்பது இன்னமும் ரசிகர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து அவரது காதலர் யார் என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இதற்கு நடுவே சிலர் சினிமாவில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுடன் கீர்த்தி சுரேஷ் தொடர்பில் இருப்பதாக எல்லாம் பேசி வந்தனர்.

keerthy suresh

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

ஆனால் சினிமாவை பொருத்தவரை திருமணம் ஆன பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் என்பது கொஞ்சம் குறைந்துவிடும். தொடர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் முடிந்த அளவிற்கு திருமணத்தை தள்ளி போட வேண்டியிருக்கிறது.

அதனால்தான் நடிகை பிரியா பவானி சங்கர் கூட தனது காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். எனவே இதனால் தான் கீர்த்தி சுரேஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலனை திருமணம் செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் நடிகர் விஜயும் இதற்கு வாழ்த்துக்களை கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தோளில் இருந்து கையை எடுங்க!.. விஜய்க்கு வார்னிங் கொடுத்த மாணவி… விழாவில் நடந்தது என்ன?

அரசியல் கட்சியை துவங்கியது முதலே பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

போன வருடம் முதலே அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்குவதை ஒரு விஷயமாக செய்து வருகிறார் விஜய்.

இது அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது இது பலராலும் அப்போதே பாராட்டப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது என்றாலும் அப்பொழுது சூர்யா இதற்கு எதிர்மறையான விமர்சனம் ஒன்றை முன் வைத்திருந்தார்.

விஜய் செய்யும் உதவி:

அவருடைய அகரம் அறக்கட்டளை மூலமாக அவர் தொடர்ந்து பல மாணவர்களுக்கு உதவி வருகிறார் என்பது பலரும் அறிந்த விஷயமே அவரது குறித்து கூறும் பொழுது அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட நலிவடைந்தவர்களுக்கு தான் உதவிகள் தேவையாக இருக்கிறது என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வருடம் இரண்டாவது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் விஜய். இந்த விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டது வந்தது. அங்கே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது.

மாணவியிடம் சர்ச்சை:

போன வருடமும் இதே போல நிறைய பேர் போட்டோ எடுத்துக் கொண்டனர் இந்த நிலையில் ஒரு மாணவிக்கு சால்வையை போர்த்திய விஜய் அந்த மாணவியின் தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

அப்பொழுது அந்த மாணவி விஜய்யை அழைத்து அவரது காதில் ஏதோ கூறிய பிறகு அவர் உடனே அந்த பெண்ணின் தோளிலிருந்து தனது கையை எடுத்துக் கொண்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இருந்தாலும் விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். கண்டிப்பாக அந்த பெண் தோளிலிருந்து விஜயின் கையை எடுக்க சொல்லி இருப்பார்.

அதனால்தான் விஜய் உடனே கையை எடுத்து இருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் எழ தொடங்கி இருக்கின்றன மேலும் நெட்டிசன்களை இது குறித்து கேட்கும் பொழுது ஏன் விஜய் இப்படி மாணவிகளின் தோளில் கையை போட வேண்டும் என்றும் ஒரு பக்கம் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம் இது நட்பு ரீதியாக சிறுமி என்று விஜய் தோளில் கையை போட்டதை பலரும் திரித்து பேசுகின்றனர் என்கின்றனர் தளபதி ரசிகர்கள். பொதுவாகவே ரசிகர்கள் தோளில் கை போட்டு பேசுவதை விஜய் வாடிக்கையாகதான் கொண்டுள்ளார். மேலும் அந்த பெண் தோளில் இருந்து கையை எடுக்க சொன்னார் என கூறியதாக கூறுவதும் திரிக்கப்பட்டதே என அவர்கள் கூறுகின்றனர்.

ஓட்டு போடுறதுல கூட காபியா!.. விஜய்யை அட்டு காபி அடித்த விஷால்!.

விஜய் கட்சி துவங்கியது முதலே நானும் கட்சி துவங்க போகிறேன் என கூறி வருகிறார் நடிகர் விஷால். ஆரம்பம் முதலே அவர் செய்யும் செயல்கள் விஜய்யை பார்த்து செய்வதாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல ஒரு சம்பவம் தற்சமயம் நடந்துள்ளது.

விஷால் ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயமே தொடர்ந்து அவர் அரசியல் சார்ந்து பேசுவதையும் பதிவிடுவதையும் வேலையாக கொண்டுள்ளார். ஆனால் குறிப்பிட்டு அவர் செய்யும் நிறைய விஷயங்கள் விஜய்யை காபி அடிப்பதாகவே உள்ளது.

உதாரணமாக அவரது பட்டமே புரட்சி தளபதி என்றுதான் வைத்திருக்கிறார். தளபதி என்கிற விஜய்யின் பட்டத்தை காபி அடித்துதான் அதை வைத்துள்ளார் என பேச்சுக்கள் இருந்தன. அதற்கு தகுந்தாற் போல போன தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது அனைவரும் அறிந்த விஷயமே.

அந்த சமயத்தில் அது பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதை அப்படியே காபி அடித்து விஷாலும் சைக்கிளில் ஓட்டு போட வந்துள்ளார். ஆனால் விஜய்க்கு ட்ரெண்டிங் ஆன அளவிற்கு அது விஷாலுக்கு ட்ரெண்டிங் ஆகவில்லை.

அந்த படத்தில் வர்ற மாதிரி அவங்களுக்கு தண்டனை கொடு தலைவா!. விஜய்யின் பதிவுக்கு மக்களின் எதிரொலி!.

Vijay: தற்சமயம் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்று மக்களுக்கு நன்மைகள் செய்வதே நடிகர் விஜய்யின் ஆசையாக உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி கருத்து சுதந்திரம் சார்ந்தும் நிறைய விஜய் பாதிக்கப்பட்டுள்ளார்.

சமூகம், அரசியல் குறித்து ஒவ்வொரு முறை பேசும்போதும் அது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அவருக்கு பாதுகாப்பு அரணாக அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். பொதுவாக ஊருக்குள் இடியே விழுந்தாலும் அது குறித்து எந்த ஒரு விஷயமும் விஜய் வாயில் இருந்து வராது என கூறுவார்கள்.

Thalapathy-vijay

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையில் துவங்கி மக்களின் எந்த பிரச்சனைக்கும் விஜய் குரல் கொடுத்தது கிடையாது. கட்சி துவங்கிய பிறகு கூட கட்சி சார்ந்து நிறைய பதிவுகளை விஜய் வெளியிட்டார். ஆனால் பொது மக்கள் பிரச்சனைகளை பேசாமல்தான் இருந்தார்.

கண்டனம் தெரிவித்த விஜய்:

இந்த நிலையில் நேற்று புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுமியை கொலை செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் பேசும்போது “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் தளபதி ரசிகர்கள் தெறி படத்தில் வரும் காட்சி ஒன்றை பதிவிட்டு இப்படி தண்டனை கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் பொண்டாட்டியா இருந்தும் நடிப்பு வரலையே!.. விஜய் படத்தில் நீக்கப்பட்ட நடிகை!.

Actor Vijay : தமிழில் வரவேற்பு பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய்யின் திரைப்படத்தை பொருத்தவரை அதன் கதை அமைப்பு சிறப்பாக இருக்கிறதோ இல்லையோ விஜய்யின் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு ரசிக்கப்பட்டாளம் இருப்பதால் அவரது திரைப்படங்கள் அவர் நடித்தாலே பெரும் வெற்றியை பெரும் திரைப்படங்களாக இருக்கின்றன.

பூவே உனக்காக திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து ஒரு காதல் கதாநாயகனாகதான் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய். அப்போது காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, போன்ற காதல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் விஜய்.

Vijay

ஆனால் அவருடைய திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளும் அவ்வப்போது இருக்கும் என்று இருந்தது. இப்படி இருந்த விஜய்யை முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக மாற்றியது திருமலை மற்றும் கில்லி திரைப்படங்கள்.

படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை:

திருமலையில் பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. திருமலை திரைப்படத்தில் ஜோதிகாதான் கதாநாயகியாக நடித்திருந்தார். அது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

ஆனால் முதலில் ஜோதிகா அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் மனைவியான நர்மதா தான் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மகேஷ் பாபுவை பொருத்தவரை அவருக்கு முகத்தில் பெரிதாக ரியாக்ஷனே வராது என்று எப்போதும் அவரை பலரும் விமர்சனம் செய்திருக்கின்றனர். ஆனால் அவரது மனைவிக்கும் கூட அதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.

திருமலை படத்தின் பாதி படபிடிப்பு முடிந்த பிறகும் கூட நர்மதா அவ்வளவு சிறப்பாக நடிக்கவில்லை. இதனை பார்த்த இயக்குனர் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்க மனமில்லாமல் பிறகு பாதியிலேயே அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார் அதன் பிறகு ஜோதிகாவை வைத்து மீண்டும் அந்த காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு இருக்கிறது.

விஜய்யை வைத்து பல ஹிட் கொடுத்த தயாரிப்பாளர்!.. இப்ப வாய்ப்புக்காக விஜய் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரு!..

Thalapathy Vijay : தற்சமயம் தமிழின் டாப் நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மூலமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் விஜய். விஜய் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் போது அவரை ஒரு ஜாலியான இளைஞராகத்தான் அறிமுகப்படுத்தினார்.

எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிகர் விஜய்யை ஒரு பிளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில்தான் காண்பித்தார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது என்று கூறலாம். அப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.

விக்ரமன் திரைப்படத்தில்தான் ஒரு காதல் நாயகனாக பெரும் வெற்றியை கண்டார் விஜய். பூவே உனக்காக திரைப்படத்தில் அவரது வயதுக்கு அதிகமான முதிர்ச்சியை பெற்ற ஒரு நபராக விஜயை காட்டியிருப்பார். அதிலிருந்துதான் விஜய்யின் காதல் திரைப்பட பயணம் தொடங்கியது. நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை, மின்சார கண்ணா போன்ற அவர் நடித்த நிறைய காதல் படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன.

ஆனால் அப்படிப்பட்ட படங்களை தயாரித்த இயக்குனர் ஆர்.பி சௌத்ரி தற்சமயம் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் கூட விஜய் அவருக்கு வாய்ப்பே தரவில்லை என்று கூறப்படுகிறது.

இத்தனைக்கும் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு ஆர்.பி சௌத்ரி தயாராக இருக்கிறாராம். கடந்த மூன்று வருடங்களாக விஜய்யிடம் அவர் வாய்ப்பு கேட்க கூட விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.