Tag Archives: சந்திரமுகி

சந்திரமுகி 2 ஏற்கனவே கர்நாடகாவில் வெளியாயிடுச்சு!.. உண்மையை உடைத்த இயக்குனர் வாசு

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வசூல் கொடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை எப்போதுமே மக்களிடம் நல்ல செல்வாக்கு உண்டு.

இதனாலேயே 70 வயதிற்கு மேல் ஆனாலும் கூட ரஜினிகாந்த் தற்சமயம் இருக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். சொல்ல போனால் 70 வயதில் கூட கதாநாயகனாக நடிக்கும் ஒரு நபராக ரஜினிகாந்த் இருக்கிறார்.

 ரஜினி நடித்த படங்களில் சில படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அப்படி ஹிட் கொடுத்த படங்களில் சந்திரமுகி திரைப்படம் முக்கியமான படமாகும்.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடம் வரை திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது அதனைத் தொடர்ந்து அப்போதே சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார் இயக்குனர் பி வாசு.

 எனவே இது குறித்து அவர் ரஜினிகாந்திடம் பேசியுள்ளார் ஆனால் அப்பொழுது ஏற்கனவே ரஜினிகாந்த் 2 படங்களில் கமிட் ஆகி இருந்தார்.  இதனால் பி வாசுவின்  திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலைமை இருந்தது. இதை புரிந்து கொண்ட ரஜினிகாந்த் அந்த கதையை கொண்டு வேறு ஒரு படத்தை இயக்குமாறு கூறினார்.

 அதனைத் தொடர்ந்து இயக்குனர் பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் கதையை கொஞ்சம் மாற்றி அமைத்து தெலுங்கு நடிகர் வெங்கடேஷை கதாநாயகனாக கொண்டு கன்னடத்தில் அப்தரக்‌ஷா என்கிற திரைப்படத்தை இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளியிட்டார்.இந்த திரைப்படம் பெரும் வெற்றி கண்டது இதை தனது பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் பி வாசு 

ரசிகன்னு சொல்லி என்ன வச்சி காசு சம்பாதிப்பான்!. வாசுவிடம் ரஜினிகாந்த் சொன்ன சீக்ரெட்!..

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே உள்ளதால் எப்போதுமே அவரது திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உண்டு.

ஆனால் பாபா படம் பெரும் தோல்வியை கண்ட பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் மார்க்கெட் குறைந்தது. அதன் பிறகு அவருக்கு மறுபடி மார்க்கெட் வர காரணமான படமாக சந்திரமுகி இருந்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் இந்த படம் தயாரானது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரைப்படத்தின் ரீமேக்காக சந்திரமுகி எடுக்கப்பட்டது. ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்தது சந்திரமுகி. பொதுவாக பெரிய நடிகர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு தங்களது ரசிகர்களுக்காக ரசிகர் மன்றங்களை திறப்பார்கள்.

ரஜினியும் அதை செய்தார் என்றபோதும் ரஜினிகாந்த் அனைத்து ரசிகர்களையும் கூட சேர்த்து கொள்ள மாட்டாராம். இதுக்குறித்து ஒருமுறை வாசு கேட்டப்போது ரசிகர்களில் நல்ல ரசிகரும் இருப்பார்கள், கெட்ட ரசிகரும் இருப்பார்கள். சிலர் நம்மை பயன்படுத்தி சம்பாதிக்க பார்ப்பார்கள். என அறிவுரை கூறியுள்ளார் ரஜினி.

தற்சமயம் பி.வாசு நடிகர் லாரன்ஸை வைத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.