Tag Archives: மார்க் ஆண்டனி

நான் இயக்குனர்கிட்ட படிச்சி படிச்சி வேண்டாம்னு சொன்னேன்!.. ஆனா அவன் கேக்கலை!.. விஷால் வைக்கவே வேண்டாம் என கூறிய காட்சி!.

தற்சமயம் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படம் வருகிற ஏப்ரல் 26 திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

அவரது முதல் திரைப்படமான செல்லமே திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் திரைப்படமாகதான் இருந்தது. அதனை தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரப்பரணி என அவரது திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

சமீபத்தில் அவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். டைம் ட்ராவல் கதையை மையமாக கொண்டு வெளிவந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அணகொண்டா என்கிற ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வருவார் விஷால்.

அந்த காட்சி குறித்து விஷாலிடம் கூறியப்போது அதற்கு விஷால் ஒப்புக்கொள்ளவே இல்லை. ஏற்கனவே அந்த பெயரில்தான் தன்னை கலாய்க்கிறார்கள் என நினைத்தார் விஷால். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் அந்த காட்சியை வைத்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

இதனால் படத்தில் அந்த காட்சி இடம் பெற்றது. ஆனால் அந்த காட்சிக்குதான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிகழ்வை விஷாலே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இந்த வருடம் தமிழில் வசூல் சாதனை செய்த டாப் 7 படங்கள் லிஸ்ட்!..

இந்த வருடம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது இன்னும் சில நாட்களில் அடுத்த வருடம் துவங்க உள்ளது இந்த நிலையில் இந்த வருடத்தில் பெரும் வசூலை கொடுத்த முக்கியமான ஆறு திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்

07.மார்க் ஆண்டனி 

mark antony

விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த வருடம் வந்த திரைப்படத்திலேயே காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டு கலெக்ஷன் வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரே திரைப்படம் மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டுமே. இந்த திரைப்படம் 160 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

06.வாத்தி

தனுஷ் நடிப்பில் பெரிதாக சண்டை காட்சிகளை இல்லாமல் எடுக்கப்பட்டும் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக வாத்தி திரைப்படம் இருக்கிறது. தனியார் பள்ளியில் நடக்கும் பண அரசியலை பேசும் விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 118 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

05.துணிவு

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான திரைப்படம் துணிவு. துணிவு திரைப்படம் வங்கி குறித்த பெரும் அரசியலை பேசும் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. கதை அம்சம் சார்ந்து முக்கியமான விஷயத்தை பேசி இருந்த ஹெச்.வினோத், அஜித்திற்காக படத்தில் கொஞ்சம் சண்டை காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இந்த திரைப்படம் 21 கோடி வசூல் செய்து இந்த வருட ப்ளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில் ஒன்றாக இருக்கிறது 

04.வாரிசு

varisu-new-pics-4

நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. கதை ரீதியாக பார்க்கும் பொழுது சுமாரான கதைகளம்தான் என்றாலும் கூட ரசிகர்களின் ஈடுபாட்டின் காரணமாக இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. அதனை தொடர்ந்து 32 கோடி வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது வாரிசு

03.பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த வருடம் வெளியானது முதல் பாகம் தந்த அளவிற்கான பெரும் வெற்றியை இந்த படம் தரவில்லை என்றாலும் இந்த வருடம் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது பொன்னியின் செல்வன். 348 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் முதல் நாளே 64 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

02.லியோ

leo

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் இந்த வருடம் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்த நிலையில் படம் வெளியான உடனே பெரும் வெற்றியை கண்டது. இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தை போல வட இந்தியாவில் பெரிதாக வசூல் செய்யவில்லை ஆனாலும் 450 கோடி வசூல் செய்திருக்கிறது லியோ திரைப்படம்

01. ஜெயிலர்

jailer

ரஜினிகாந்த்  நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாரான ஜெயிலர் திரைப்படம்தான் தமிழிலேயே அதிக வசூல் படைத்த திரைப்படங்களில் இந்த வருடம் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 64 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைந்த திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன என்பது ஒரு வகையில் உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்து இருக்கிறது. மீண்டும் ரஜினிகாந்த் ஒரு வசூல் மன்னன் என்பதை இந்த வருடம் நிரூபித்திருக்கிறார்.

லியோ படத்துக்கு வேற பேர் வைக்கலாம்னு இருந்தோம்!. டைட்டிலை தட்டி தூக்கிய விஷால்!.

தற்சமயம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. மக்கள் பலரும் லியோ திரைப்படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வரவேற்பை திரைப்படத்தின் ட்ரைலர் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது முதலில் படத்திற்கு லியோ என பெயர் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த வித யோசனையும் இல்லை. முதலில் நாங்கள் படத்திற்காக யோசித்த பெயர் ஆண்டனி.

ஆனால் ஏற்கனவே ஆண்டனி என்கிற பெயரை வேறு ஒரு நிறுவனம் ரிஜிஸ்டர் செய்திருந்தது. அதே போல அப்போதுதான் மார்க் ஆண்டனி திரைப்படமும் வெளியாக இருந்தது. எனவே ஆண்டனி என்கிற பெயர் வேண்டாம் என முடிவு செய்தோம்.

சரி ஆண்டனிக்கு பதிலாக வேறு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தப்போது சிங்கத்தின் அடிப்படையில் ஒரு பெயர் வைக்கலாம் என யோசித்தப்போது எனது உதவி இயக்குனர் லியோ என்கிற பெயரை கூறினான். சரி சிங்கத்துக்கு தொடர்பான பெயராக இருக்கிறதே என அந்த பெயரையே படத்திற்காக தேர்ந்தெடுத்தேன்.

வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு இருந்தேன்.. ஜி.விதான் கை கொடுத்தார்.. மார்க் ஆண்டனி இயக்குனர் சந்தித்த பிரச்சனை!..

தமிழில் தொடர்ந்து ஆவரேஜ் திரைப்படங்களாக கொடுத்திருந்த போதிலும் கூட தனது ஒரே திரைப்படம் மூலமாக அது அனைத்தையும் மறக்க செய்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

தற்சமயம் அவர் இயக்கி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வேறு சில படங்கள் வெளியாகியபோதும் பல திரையரங்குகளில் இன்னமும் மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிக் கொண்டுள்ளது.

இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா , ட்ரிபிள் ஏ போன்ற திரைப்படங்கள் எல்லாமே அதிக சர்ச்சைக்குரிய திரைப்படங்களாக இருந்தன. இதனால் மக்களும் அவர் மத்தியில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருந்தனர்.

இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறும் போது ட்ரிபிள் ஏ திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு வாழ்க்கை முடிந்து விட்டது என்று நான் இருந்தேன். இதற்கு மேல் படமெல்லாம் எடுக்க வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் அப்போது என்னுடன் நல்ல நண்பராக இருந்த ஜி வி பிரகாஷ் எனக்கு பல வாய்ப்பு கொடுத்தார்.

என்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என்று கூறினார் அவரையும் சோனியா அகர்வாலையும் வைத்து ஒரு திரைப்படத்தை துவங்கினேன். ஆனால் அந்த திரைப்படத்தை முழுதாக எடுக்க முடியவில்லை என்றாலும் சினிமாவில் திரும்ப நம்பிக்கையுடன் நான் காலூன்றுவதற்கு ஜிவி பிரகாஷ் முக்கிய காரணமாக இருந்தார் என்று தனது பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

உங்களுக்கு ரூட்டு தல சிவாஜின்னு ஒருத்தர் இருக்காரு சார்!.. எஸ்.ஜே சூர்யா கேள்விக்கு பதில் கொடுத்த ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக மாறியவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனராக இருந்தபோதும் சரி நடிகராக இருந்தபோதும் சரி. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்தார் எஸ்.ஜே சூர்யா.

ஆனால் அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. அதனை தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இறைவி திரைப்படம் அமைந்தது.

இறைவி திரைப்படத்திற்கு பிறகு ஸ்பைடர் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதனை தொடர்ந்து இவர் வில்லனாக நடித்த தொடங்கினார் எஸ்.ஜே சூர்யா. தற்சமயம் அவர் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

கிட்டத்தட்ட 100 கோடியை தொட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் விஷால் எஸ்.ஜே சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவருக்குமே ஒரு ரீ என்ட்ரி திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது இதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் ஹீரோ இருவருமே டபுள் ஆக்டிங் ஆக நடித்து எந்த படமும் வந்ததில்லை இதுதான் முதல் முறை என்று கூறினார் எஸ் ஜே சூர்யா.

ஆனால் இதற்கு முன்பே மூன்று சிவாஜி கணேசன் இரண்டு எம்.ஆர் ராதா என்ற காம்போவில் பலே பாண்டியா என்கிற சிவாஜி கணேசனின் படம் வெளியாகி இருக்கிறது. இதனை கூறி உங்களுக்கு முன்பே சிவாஜி இதையெல்லாம் செய்து விட்டார் என்று நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால் செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் விஷால். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன அதில் சண்டக்கோழி திமிரு போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை ஆகும்.

தொடர்ந்து திரைப்படங்களாக நடித்து வந்த விஷாலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. அதன் பிறகு அவருக்கு நடிப்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது திரும்ப கம்பேக்காக லத்தி திரைப்படம் மூலமாக விஷால் வந்தார்.

ஆனால் லத்தி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை தற்சமயம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் செய்தார் விஷால் தற்சமயம் பாலிவுட்டில் நடந்த ஊழல் குறித்து முக்கியமான தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.

அதன்படி பாலிவுட்டில் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்கும் படத்தை வெளியிடுவதற்கும் கிட்டத்தட்ட 6.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் விஷால். சான்றிதலுக்காக மூன்று லட்சமும் படத்தை வெளியிடுவதற்காக 3.5 லட்சமும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட விஷால் இது குறித்து ஆய்வு செய்யும் படி பிரதமர் நரேந்திர மோடியிடமும், மகாராஷ்டிரா முதலமைச்சரிடமும் கேட்டுள்ளார்.

அட்லிக்கு விஜய் என்ன செஞ்சாரோ அதைதான் அஜித் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு செஞ்சாரு!.. ஒப்பன் டாக் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழில் சில சமயங்களில் சில திரைப்படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கும். அப்படி தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி.

திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே அந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது. இந்த படம் தற்சமயம் பெரும் வெற்றியை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா பேசும்பொழுது ஒரு விஷயத்தை கூறியிருந்தார். சில பெரும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தருவதுண்டு. அப்படி நடந்த விஷயம்தான் இந்த மார்க் ஆண்டனி படமும் கிட்டத்தட்ட ஜவான் திரைப்படத்திலும் இதே விஷயம் நடந்துள்ளது.

ஜவான் திரைப்படத்தின் கதையை முதன் முதலாக விஜய்யிடம் தான் கூறினார் அட்லீ. அந்த கதையை கேட்ட விஜய் இந்த கதை பாலிவுட்டிற்கு நன்றாக செட்டாகும், எனவே இதை ஷாருக்கானிடம் சென்று சொல் என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்படி அட்லீயும் ஷாருக்கானிடம் கூறியுள்ளார்.

அதேபோல மார்க் ஆண்டனியின் கதையை முதலில் ஆதித் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்திடம்தான் சென்று கூறியுள்ளார். அதைக் கேட்ட அஜித் இந்த கதை விஷாலுக்கு சரியாக இருக்கும் எனவே அவரிடம் இந்த கதையை கூறு என்று விஷாலிடம் அவரை அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயத்தை எஸ்.ஜே சூர்யா அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

என்ன பத்தி யாருமே பேசல!.. கவலையில் மார்க் ஆண்டனி இயக்குனர்…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திடீரென பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் மார்க் ஆண்டனி.

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பல பெறவில்லை. அவரது முதல் படமான ட்ரிபிள் ஏ திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு அவர் எடுத்த திரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா போன்ற அனைத்து திரைப்படங்களும் பெரிதாக பேசப்படவில்லை.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது மார்க் ஆண்டனி திரைப்படம் இயக்க துவங்கியது முதலே நான் இயக்குகிறேன் என்பதால் அந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தன.

ட்ரிபிள் ஏ திரைப்படம் போலத்தான் இதுவும் இருக்கிறது என்று பேச்சுக்கள் இருந்தன. படத்தின் டீசர் வெளியான போது கூட டீசர் கூட பரவாயில்லை ஆனால் அந்த இயக்குனர் படத்தை சொதப்பி விடுவான் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

தற்சமயம் படம் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது அனைவரும் விஷால் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பேசுகின்றனர், ஜி வி பிரகாஷின் இசை குறித்து பேசுகின்றனர் ஆனால் இப்பொழுதும் கூட நான் இயக்கியதை குறித்து பெரிதாக யாரும் பேசவில்லை என்று கவலையுடன் கூறியுள்ளார் இயக்குனர்.

12 பேர் அன்னைக்கு செத்துருக்க வேண்டியது!.. மார்க் ஆண்டனி படத்தில் நடந்த விபத்து!.

எஸ்.ஜே சூர்யா தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஒரு காலத்தில் பெரும் இயக்குனராக இருந்த எஸ்.ஜே சூர்யா நடிகரான பிறகும் கூட நியூ, அன்பே ஆருயிரே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தால் பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி திரைப்படம் இவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது.

அதன் பிறகு அடுத்து ஒரு டர்னிங் பாயிண்டாக ஸ்பைடர் திரைப்படம் அமைந்தது. தற்சமயம் அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை கண்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும்போது க்ளைமேக்ஸ் காட்சிக்காக ஒரு லாரியை ஏற்பாடு செய்திருந்தோம். நானும் விஷாலும் நிற்போம் எங்களுக்கு எதிரே லாரி சுவற்றை உடைத்துக்கொண்டு வர வேண்டும். அதே போல லாரியும் வந்தது. ஆனால் அந்த ட்ரைவர் ப்ரேக்கை அழுத்தாமல் மறந்து ஆக்ஸலரேட்டரை அழுத்திவிட்டான்.

அதனையடுத்து லாரி வேகமாக என்னையும் விஷாலையும் நோக்கி வந்தது. ஆனால் ட்ரைவர் லாவகமாக லாரியை வலதுப்பக்கம் திருப்பினார். ஆனால் வலதுப்பக்கமும் ஆட்கள் நின்றனர். விபத்து நடந்தது. எப்படியும் ஒரு 12 பேராவது காலி என நான் நினைத்தேன்.

ஆனால் நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

சிவகார்த்திக்கேயனை பின் தள்ளிய மார்க் ஆண்டனி!.. சம்பளத்தை உயர்த்தும் விஷால்..

Sivakarthikeyan Vishal: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷால் பிறகு நடித்த படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே நடித்தார். இதனை தொடர்ந்து விஷாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

அதிலும் அவர் நடித்த சண்டைக்கோழி, தாமிரபரணி போன்ற படங்கள் எல்லாம் இப்போதும் கூட பிரபலமாக இருக்கின்றன. ஆனால் இடையில் வந்த விஷால் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிலும் லத்தி திரைப்படம் எல்லாம் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது.

இந்த நிலையில் அடுத்து விஷால் நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்று தந்தது. எஸ்.ஜே சூர்யாவும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் மார்க் ஆண்டனி தற்சமயம் உலகளவில் 87 கோடிக்கு ஓடி ஹிட் கொடுத்துள்ளது.

இந்த வருடம் வெளியான மாவீரனின் வசூலை முறியடித்துள்ளது மார்க் ஆண்டனி. எனவே விஷாலும் சம்பளத்தை உயர்த்தி கேட்க போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

அவன் படம் சரிவராதுன்னு கதையை நான் மாத்துனேன்!.. மார்க் ஆண்டனி குறித்து எஸ்.ஜே சூர்யா…

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. முதன்முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராகத்தான் அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார்.

குஷி திரைப்படத்திற்கு பிறகு எஸ்.ஜே சூர்யா அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்து வெளியான நியூ திரைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அதன் பிறகு ஒரு சில படங்கள் அவரே நடித்து இயக்கினார்.ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்தது மூலமாக ஒரு நடிகராக அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து வரிசையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். மாநாடு படம் அவருக்கு இன்னொரு மைல் கல்லாக அமைந்தது.

தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதலில் என்னிடம் கதையை கூறும் பொழுது அது சரியாக இல்லை. இதே போன்ற கதைகளை எடுத்து நான் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்.

எனவே நீ இப்படியான கதைகளை இனி எடுக்காதே உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனவே புதிய கதையை மாற்றி எடு என அறிவுரை கூறினேன் அதற்கு பிறகு தான் மார்க் ஆண்டனி கதையை அவர் எழுதினார் என தனது பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

இனிமே லோ பட்ஜெட் படம் எடுக்காதீங்க!.. இளம் இயக்குனர்களுக்கு விஷால் அறிவுரை!..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஷால். சில காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாமலே இருந்தது. ஆனால் தற்சமயம் வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

அதனை தொடர்ந்து மீண்டும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் விஷால். இந்த நிலையில் அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறியுள்ளார் விஷால். அதாவது தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் மதிப்பு சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருப்பதில்லை.

இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் முற்றிலும் வரவேற்பை இழந்துள்ளன. பல படங்கள் குறைந்த முதலில் எடுக்கப்பட்டு இன்னமும் வெளியாகாமலே இருக்கின்றன. எனக்கு தெரிந்தே 200க்கும் அதிகமான படங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இனிமேல் 4 அல்லது 5 கோடி பட்ஜெட்டில் எல்லாம் படம் எடுக்காதீர்கள் என கூறியுள்ளார் விஷால். ஆனால் இப்படி சொல்வது சரி கிடையாது. சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.