Tag Archives: ஜி.வி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் Blackmail திரைப்படம்.. வெளியான ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர் நடிகர் ஜி.வி  பிரகாஷ்.. ஜிவி பிரகாஷ் நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் பெரிய நடிகர்கள் கொடுக்கும் அளவிற்கான வெற்றி படங்கள் எதுவும் ஜிவி பிரகாஷ் கொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். அவர் நடித்த திரைப்படங்களில் திரிஷா இல்லனா நயன்தாரா மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்திருக்கின்றன.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து இவர் நடித்து வருகிறார் அப்படியாக தற்சமயம் இவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் பிளாக்மெயில்.

இந்த திரைப்படத்தை பொறுத்தவரை குழந்தைகளை கடத்தி மிரட்டுவது தொடர்பான விஷயங்களை இந்த படம் பேசுகிறது. ஜிவி பிரகாஷ் தனக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடத்தல் தொழிலை செய்து வருகிறார்.

ஆனால் அது அவரது காதலிக்கு கூட தெரியாது என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் இந்த கடத்தல் தொழில் இவருக்கு என்ன மாதிரியான பிரச்சனைகளை கொண்டு வருகிறது என்பதை கூறும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

குட் நைட்ட விட சிறப்பா இருக்கா..! இல்ல சுமாரா இருக்கா… ஜிவி பிரகாஷின் டியர் திரைப்பட விமர்சனம்!.

ஒரு காலத்தில் ராமராஜன் மாதிரியான நடிகர்கள் மாதத்திற்கு ஒரு படம் வெளியிடுவார்கள் என கேட்டிருப்போம். அதை தற்சமயம் மக்கள் கண் முன் காட்டுகிறார் ஜிவி பிரகாஷ்.

ரெபெல், கள்வன் வரிசையில் அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் டியர். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

படத்தின் கதைப்படி ஜிவி பிரகாஷ் ஒரு பத்திரிக்கை சேனலில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு லைட் ஸ்லீப்பிங் என்கிற பிரச்சனை இருக்கிறது. எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாலும் சின்னதாக கேட்கும் சத்தம் அவருக்கு விழிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ்க்கும் ஜிவி பிரகாஷிற்கும் திருமணமாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இரவில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில் இது ஜிவி பிரகாஷின் உறக்கத்தை பயங்கரமாக பாதிக்கிறது. இதனால் வேலையில் துவங்கி எங்கு பார்த்தாலும் பிரச்சனையை அனுபவிக்கும் ஜிவி ஒரு கட்டத்தில் டைவர்ஸ் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்படி சரி ஆக போகிறது என்பதுதான் கதை.

விமர்சனம்:

இந்த மாதிரி கதைகள் எல்லாம் தமிழில் மாமூலானவை என கூறலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மாறுப்பட்ட பிரச்சனைகள் அவர்கள் இல்வாழ்க்கையை பாதிக்க பிறகு அந்த பிரச்சனையை ஏற்றுக்கொண்டு அவர்கள் ஒன்றிணைவது என்பது ஒரு மாமூலான கதையாகும்.

அதிலிருந்து மாறுப்பட்ட திரைப்படமாக குட்நைட் இருந்ததால் தான் அந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த இடத்தில் இந்த படம் தடுமாறிவிட்டது. மேலும் குட் நைட் படத்தில் காதலர்கள் இருவருக்கும் இருந்த உணர்வுபூர்வமான உறவை இந்த படத்தில் பார்க்க முடியவில்லை.

சொல்ல போனால் ஐஸ்வர்யா ராஜேஷை ஜிவி பிரகாஷின் மனைவியாகவே பொருத்தி பார்க்க முடியாத அளவிற்கு அமைந்துள்ளது கதைக்களம். எனவே இந்த படம் பார்ப்பவர்களுக்கு எண்டர்டெயின் மெண்டாக இல்லை என கூறப்படுகிறது.

அடப்பாவிகளா!.. எத்தனை நாள் கண் முழிச்சி போட்ட பாட்டு!.. திருவிழாவில் மனம் நொந்த ஜிவி பிரகாஷ்!..

ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா வரிசையில் தன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி பிரகாஷின் முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே உருகுதே மருகுதே மற்றும் வெயிலோடு விளையாடி ஆகிய இரண்டு பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன.

இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் இவர் இசையமைப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அதிலும் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஜி.வி பிரகாஷ். தனுஷ் நடித்த நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.

GV prakash

இந்த நிலையில் வாத்தி திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக வெளியில் நண்பரை காண சென்றிருந்தார் ஜி.வி பிரகாஷ். அந்த சமயத்தில் அவரது நண்பரின் வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த திருவிழாவில் வாத்தி படத்தில் வரும் வா வாத்தி என்னும் பாடலுக்கான இசை ஒலித்து கொண்டிருந்தது. அந்த இசையை ஒரு இரவு முழுவதும் அமர்ந்து இசையமைத்தாராம் ஜி.வி. எனவே அவர் அந்த இசையை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் ஒரு மோசமான குரலில் அந்த பாடல் பாடப்படுவது கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். என்னவென பார்க்கும்போது திருவிழாவில் ஆர்க்கெஷ்ட்ரா கச்சேரி நடந்துள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு போட்ட பாட்டை இப்படி காலி பண்றாங்களே என மனம் வருந்தி இருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.

கேரள மக்களை தவறா சித்திரிக்குதா!.. ஜி.வி பிரகாஷின் ரெபல் படம் எப்படி இருக்கு!..

Rabel Movie : மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து கேரள மக்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக எழுத்தாளர் ஜெயமோகன் கேரள மக்களை குறித்து மிகவும் அவதூராக பேசியிருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருந்தது.

ஏனெனில் தமிழ்நாட்டு திரைப்படங்கள் பலவும் கேரளாவில் ஓடி நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. அதேபோல கேரள திரைப்படங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன. இதற்கு நடுவே கேரளா மக்கள் பெரும்பாலும் குடிகாரர்கள் எனவும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வரும்பொழுது ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை என்றும் பெரும் குற்றச்சாட்டை வைத்தார் ஜெயமோகன்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் ரெபெல் கேரள மக்களை தவறாக சித்தரிக்கும் விதமாக இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் கூறியிருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் ரெபல். இந்த திரைப்படத்தின் கதைப்படி தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் ஜிவி பிரகாஷ் கல்லூரி படிப்புக்காக கேரளாவில் பாலக்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கின்றார்.

அங்கு தமிழ்நாட்டு மக்களை மிகவும் தாழ்த்தி பார்க்கின்றனர் அங்கு இருக்கும் மாணவர்கள். இதனை தொடர்ந்து அங்கு ஜிவி பிரகாஷ் செய்யும் புரட்சியை அடிப்படையாக வைத்து கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து வரும் மக்களை அப்படி கேரள மக்கள் தனித்து பார்ப்பதில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் படத்தில் இசை ஒளிப்பதிவு எல்லாம் அற்புதமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ரெபேல் என்கிற பாடலை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.

இந்த நிலையில் படத்தில் எதற்காக இப்படி கேரள மக்களை தவறாக சித்தரித்து காட்டப்பட்டது என்று தெரியவில்லை என்று பலரும் இது குறித்து விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவை விட்டே போக இருந்த சமயத்தில் பாலாதான் உதவி பண்ணுனார்!..

Music Director GV Prakash: தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஜி.வி பிரகாஷ். யுவன் சங்கர் ராஜாவை போலவே இவரும் இளம் வயதிலேயே சினிமாவிற்கு இசையமைக்க வந்துவிட்டார். தன்னுடைய முதல் படமான வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது ஜிவி பிரகாஷிற்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.

ஆனால் அந்த படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய பாடல்கள் பெறும் வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து மிகவும் பிரபலமானார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். அதன் பிறகு ஜி.வி பிரகாஷ் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்து பெரும் வெற்றியை கொடுத்தன.

முக்கியமாக இயக்குனர் ஏ.எல் விஜய் தொடர்ந்து ஜிவி பிரகாஷிற்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். ஆனால் அப்படியெல்லாம் வெற்றியை கொடுத்தும் கூட சில காலங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷின் மேல் மக்களுக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. பிறகு சினிமாவில் படங்கள் நடிக்க துவங்கினார் ஜிவி பிரகாஷ்.

ஆரம்பத்தில் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியடையவில்லை. இந்த நிலையில் இந்த விஷயத்தை அறிந்த இயக்குனர் பாலா தான் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷிற்கு வாய்ப்பு வழங்கினார். அது ஜிவி பிரகாஷிற்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

ஒரு பேட்டியில் பேசும்போது இதற்காக பாலாவிற்கு நன்றி கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இளையராஜாவுக்கு இருக்கும் அதே திறமை ஜி.வி பிரகாஷ்க்கும் உண்டு.. அசந்து போன விஜய் பட இயக்குனர்!.

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர் ரகுமான் வரிசையில் தமிழ் சினிமாவில் மிக சின்ன வயதிலேயே இசையமைப்பாளரானவர் ஜி வி பிரகாஷ். தனது 17வது வயதிலேயே முதல் படமான வெயில் என்கிற திரைப்படத்தில் இசையமைத்தார் ஜிவி பிரகாஷ்.

அந்த திரைப்படத்தில் வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய இரு படங்கள் அப்பொழுது பெரும் ஹிட் கொடுத்தன. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார் ஜிவி பிரகாஷ்.

அவர் தன்னுடைய 25 ஆவது வயதிலேயே 25வது படத்திற்கு இசையமைத்தார். ஜி.வி பிரகாஷின் ஆரம்பகால வாழ்க்கையில் இருந்தே அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுத்தவர் இயக்குனர் ஏ.எல் விஜய். ஏ.எல் விஜய் இயக்கிய பெரும்பான்மையான படங்களுக்கு ஜி.வி பிரகாஷ்தான் இசையமைத்தார்.

அப்போது ஏ.எல் விஜய் ஒரு பேட்டியில் இதுக்குறித்து கூறும் பொழுது இளையராஜா போலவே ஜி.வி பிரகாஷும் குறுகிய நேரத்திலேயே பாடலுக்கு இசையமைத்து கொடுப்பார் என்று கூறியிருந்தார். ஏ.எல் விஜய் இயக்கிய சைவம் என்கிற திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்தார்.

அந்தப் படத்திற்கு மொத்தமே ஒரு மணி நேரத்தில் படத்திற்கான மொத்த இசையையும் அமைத்துவிட்டார். ஆனால் அதில் ஒரு பாடல் தேசிய விருது பெற்றது. கிட்டத்தட்ட இளையராஜாவும் பல படங்களுக்கு இப்படி சில நேரங்களிலேயே இசையமைத்து கொடுத்திருக்கிறார். அதே திறன் ஜிவி பிரகாஷிற்கும் இருப்பதை ஏ.எல். விஜய் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

என்ன பத்தி யாருமே பேசல!.. கவலையில் மார்க் ஆண்டனி இயக்குனர்…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திடீரென பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் மார்க் ஆண்டனி.

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பல பெறவில்லை. அவரது முதல் படமான ட்ரிபிள் ஏ திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு அவர் எடுத்த திரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா போன்ற அனைத்து திரைப்படங்களும் பெரிதாக பேசப்படவில்லை.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது மார்க் ஆண்டனி திரைப்படம் இயக்க துவங்கியது முதலே நான் இயக்குகிறேன் என்பதால் அந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தன.

ட்ரிபிள் ஏ திரைப்படம் போலத்தான் இதுவும் இருக்கிறது என்று பேச்சுக்கள் இருந்தன. படத்தின் டீசர் வெளியான போது கூட டீசர் கூட பரவாயில்லை ஆனால் அந்த இயக்குனர் படத்தை சொதப்பி விடுவான் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

தற்சமயம் படம் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது அனைவரும் விஷால் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பேசுகின்றனர், ஜி வி பிரகாஷின் இசை குறித்து பேசுகின்றனர் ஆனால் இப்பொழுதும் கூட நான் இயக்கியதை குறித்து பெரிதாக யாரும் பேசவில்லை என்று கவலையுடன் கூறியுள்ளார் இயக்குனர்.

என் மூலமா பெரிய ஆள் ஆன இயக்குனர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட லிஸ்ட்!..

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் ஜி.வி பிரகாஷ். ஜி.வி பிரகாஷ் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு உள்ளது என்றே கூறலாம். ஆனால் ஹீரோ ஆவதற்கு முன்பு இசையமைப்பாளராக இருந்தப்போதுதான் இன்னும் அதிகமாக பிரபலமாக இருந்தார்.

ஜி.வி பிரகாஷ் தனது 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தில் முதன் முதலாக இசையமைத்தார். அந்த படத்தில் வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய இரு பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தன. அதனையடுத்து இசையமைப்பாளராக பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.

ஆனால் கதாநாயகன் ஆனப்போது சின்ன இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார் ஜி.வி பிரகாஷ். இதுக்குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கும்போது பெரிய இயக்குனர்களோடு நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளபோதும் ஏன் சின்ன இயக்குனர்கள் படத்தில் நடிக்கிறீர்கள், சின்ன இயக்குனர் படத்திற்கு இசையமைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜி.வி பிரகாஷ் என்னுடன் சின்ன இயக்குனராக பணிப்புரிந்த இயக்குனர்கள் எல்லாம் இப்போது பெரிய இயக்குனராக இருக்கிறார்கள். வெற்றிமாறன், புஷ்கர் காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன், காக்கா முட்டை மணிக்கண்டன் இவர்கள் அனைவருடனும் ஆரம்பக்கட்டத்தில் நான் பணிப்புரிந்தேன்.

இப்போது அனைவருமே நல்ல நிலையில் இருக்கின்றனர். எனவே ஒரு செண்டிமென்டாக புது இயக்குனர்களோடு பணிப்புரிகிறேன் என கூறினார் ஜி.வி பிரகாஷ்