Tag Archives: இயக்குனர் பாலா

ஏண்டா உனக்கு இவ்வளவு கொடூர புத்தி.. அந்த பொண்ணு பாவம் இல்லையா?.. பாலாவை மூஞ்சுக்கு முன்னால் கேட்ட இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர்.

இயக்குனர் பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் இதுவரை தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.

முக்கியமாக மக்களின் வேதனை மற்றும் கவலைகளை அவர் காட்டும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். நான் கடவுள், பரதேசி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அப்படியான முறையை தான் அவர் கையாண்டிருப்பார்.

பாலா இயக்கிய திரைப்படங்களில் கொஞ்சம் காமெடியான திரைப்படம் என்றால் அவன் இவன் திரைப்படத்தை கூறலாம். இந்த நிலையில் அவர் சேது திரைப்படம் இயக்கிய பொழுது அவரது குருவான பாலு மகேந்திரா அவரிடம் பேசிய விஷயங்களை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

பாலு மகேந்திரா சேது திரைப்படம் குறித்து என்னிடம் பேசிய போது ஏண்டா உனக்கு எவ்வளவு கொடூரமான ஒரு மனநிலை. ஒரு ஐயர் வீட்டு இன்னசென்டான பெண்ணை ரவுடியை காதலிப்பது போல காட்சிகளை வைத்தாய். அதற்குப் பிறகு அந்த ரவுடி செய்த செயல்களால் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

அப்பொழுதாவது அந்த பெண்ணை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்திருக்கலாம் ஆனால் அந்த பெண் இறந்து போய் அதனால் அந்த நபர் மீண்டும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே செல்வதாக கதை எடுத்துள்ளாய்.

நீ உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்தை நீயே இப்படி அழிப்பது சரியா? என பாலுமகேந்திரா கேட்டதாக பாலா பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

குடும்பமும் விட்டுட்டாங்க.. சாகு.ற நிலைக்கு போயிட்டு வந்தேன்.. பழைய வாழ்க்கையை பகிர்ந்த பாலா..!

தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாதான்.

இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளங்களில் மிக மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர். துணை நடிகைகளை மோசமாக நடத்துபவர் என்றெல்லாம் அவரை குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் அதே சமயம் சின்ன சின்ன நடிகர்களை வைத்து கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வைக்கும் திறனை பாலா கொண்டிருக்கிறார்.

ஆர்யா விஷால் மாதிரியான நடிகர்கள் கூட அவன் இவன் மாதிரியான திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்பை மற்ற திரைப்படத்தில் வெளிப்படுத்துவது கிடையாது.

director-bala1

அதற்கு காரணம் இயக்குனர் பாலாதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த அனுபவம் குறித்து பாலா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு வயது வரை போதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு சென்றேன்.

ஒரு கட்டத்தில் அதிக போதைக்கு உள்ளாகி ஒரு வாரம் மருத்துவமனையிலேயே இருந்தேன். அப்பொழுது முடிவு செய்தேன் இனி போதைப் பொருட்கள் மீது கை வைக்க கூடாது என்று, ஆனால் எனக்கு படிப்பும் இல்லை எந்த ஒரு பெரிய திறமையும் இல்லை என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

சரி சினிமாவிற்கு வருவோம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் சினிமா என்னை வாழ வைத்தது ஒரு வேளை சினிமாவிற்கு வரவில்லை என்றால் நான் இறந்திருப்பேன். ஒன்று கொலை செய்யப்பட்டிருப்பேன் அல்லது நானாகவே இறந்திருப்பேன் என்று கூறியிருக்கிறார் பாலா.

நீ இல்லன்னா வேற ஹீரோ இல்லையா எனக்கு.. விக்ரமிற்கு ஷாக் கொடுத்த பாலா!..

ஒரு சில இயக்குனர்களின் படங்கள் என்றால் தனியாக தெரியும் அளவிற்கு அவர்களின் இயக்கம் அந்த படத்தில் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் படங்கள் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும்.

தற்போது பல இயக்குனர்களும் சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் இயக்குனர் பாலா என்றால் மற்ற நடிகர், நடிகைகள் கூட நடிக்க தயங்குவார்கள். அந்த அளவிற்கு அவரின் இயக்கத்தில் உருவாகும் படங்கள் இருக்கும் என்று கூறினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அந்த வகையில் நடிகர் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் சேது. விக்ரமை தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்திய திரைப்படமாகும். இந்நிலையில் நடிகர் பாலா விக்ரமுக்கு செய்த சம்பவம் பற்றி மூத்த பத்திரிகையாளர் வி கே சுந்தர் கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம்

நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு நடிகர் என்றால் அவர் விக்ரம். இவரின் படங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் மேலும் அந்த படத்திற்காக அவர் செய்யும் தியாகங்கள் என அனைத்தும் அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமையும்.

இந்நிலையில் தான் 1988 ஆம் ஆண்டு கைலாசம் பாலச்சந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார். 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிறகு 9 ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது என்ற படத்தில் முன்னணி நடிகராக நடித்து தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். விக்ரமை மக்களுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் என்றால் அது சேது. இந்த படத்தின் தாக்கம் தற்போது வரை மக்களை விட்டு நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது சினிமாவில் விக்ரமிற்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்ததும் இந்த திரைப்படம் தான்.

இந்நிலையில் இயக்குனர் பாலா விக்ரமை வைத்து எடுத்த பிதாமகன் திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோபப்பட்டு ஆளை மாற்றிய பாலா

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் பிதாமகன் படத்தைப் பற்றி கூறும் போது, பிதாமகன் படத்தில் நடிக்க இயக்குனர் பாலா விக்ரமிடம் கால்ஷீட் கேட்டதற்கு விக்ரம் என்னுடைய மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள் பாலா என்று கூறிவிட்டார்.

உடனே கோபப்பட்ட பாலா என்னிடம் நேரடியாக அவர் பேச மாட்டாரா? என்று விக்ரமின் கதாபாத்திரத்திற்கு நடிகர் முரளியை தேர்வு செய்து இருக்கிறார். இந்நிலையில் முரளிக்கு சம்பளம் 20 லட்சம் வரை பேசப்பட்டு அந்த படத்தின் வேலைகளை தொடங்க பாலா தயாராகி இருந்தார்.

இந்நிலையில் இந்த விஷயம் நடிகர் விக்ரமுக்கு தெரிய வர திருநெல்வேலியில் சாமி படப்பிடிப்பில் இருந்த விக்ரம் உடனடியாக கிளம்பி வந்து பாலாவிடம் சரணடைந்துவிட்டார். ஏனென்றால் விக்ரம் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் பாலாவின் இயக்கத்தில் வந்த சேது திரைப்படம் தான். அதன் பிறகு பாலாவும் விக்ரமும் இணைந்து பிதாமகன் படத்தை உருவாக்கினார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கூறியிருக்கும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ட இடத்தில் கை வைத்த ரசிகர்கள்.. சென்னை வந்து வேதனைகுள்ளான மமிதா பைஜு!.

சமூக வலைத்தளம் இணையம் எல்லாம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் நடிகைகள் மிக எளிமையாகவே பிரபலமாகிவிடுகின்றனர். சில நடிகைகள் எல்லாம் ஒரு படத்திலேயே வெகுவாக பிரபலமாகிவிடுகின்றனர்.

ஒரே படத்தில் பிரபலம்:

அப்படியாக பிரேமலு என்கிற ஒரு திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக நடிகை மமிதா பைஜு மாறியுள்ளார். பிரேமலு திரைப்படத்திற்கு முன்பும் கூட இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் பிரேமலு திரைப்படம் மட்டும்தான் தமிழில் வெளியானது. அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு கதாநாயகியாக மமிதா பைஜு மாறியுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாராகி வரும் வணங்கான் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனர் பாலாவுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டதன் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

தொடர்ந்து வந்த வாய்ப்புகள்

அதன் பிறகு ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ரெபல் என்கிற திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தார் மமிதா. இந்த நிலையில் அடுத்து பிரேமலு 2 படத்தில் நடிக்க இருக்கிறார் மமிதா பைஜு.

நேற்று சென்னை வி.ஆர் மாலில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மமிதா பைஜு வந்திருந்தார். அப்போது அங்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ரசிகர்கள் கூட்டங்களுக்கு இடையே சிக்கினார் மமிதா பைஜு.

சென்னையில் அசாம்பவிதம்:

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த சில தவறான இளைஞர்கள் மமிதாவின் அங்கங்கள் மீது கை வைத்துள்ளனர். இருந்தாலும் கூட்டத்தில் இருந்து ஒரு வழியாக விலகி வந்த மமிதா பைஜு இதுக்குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் கூட மலையாள ரசிகர்கள் இந்த நிகழ்வால் அதிக கோபத்தில் இருக்கின்றனர் என கூறப்படுகிறது.

ஏனோ தானோன்னு நடிக்கிற ஆட்கள் எனக்கு தேவையில்லை!.. விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணமா?.. இயக்குனர் பாலா

Director Bala: தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமாக சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக பாலா அறியப்படுகிறார். சேது திரைப்படத்தின் வெற்றியானது இயக்குனர் பாலா மற்றும் விக்ரம் இருவருக்குமே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் இயக்குனர் பாலா. அதிகப்பட்சம் பாலா இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதே சமயம் பாலா வழக்கமாக அட்லீ, லோகேஷ் கனகராஜ் மாதிரி சண்டை படங்களை இயக்குவதில்லை.

அவரது திரைப்படங்களில் பல விஷயங்களை பேசியிருப்பார் பாலா. நான் கடவுள், பரதேசி மாதிரியான பல படங்களில் அதை பார்க்க முடியும். இதனாலேயே வளர்ந்து வரும் நடிகர்கள் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என நினைப்பதுண்டு.

உண்மையை கூறிய பாலா:

ஆனால் தற்சமயம் பாலா இயக்கிய திரைப்படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே நடிகர் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து வணங்கான் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் பாலா.

இந்த நிலையில் பாலா முன்பு பேசிய பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில் அவர் கூறும்போது படத்திற்காக கடுமையாக உழைக்கும் நடிகர்களுடன் தான் நான் சேர்ந்து பணிப்புரிய விரும்புகிறேன். சும்மா ஏனோ தானோவென வந்துவிட்டு ஆட்டமும் பாட்டமும் செஞ்சுட்டு போற நடிகர்களுடன் பணிப்புரிய எனக்கு விருப்பமில்லை.

அதன் மூலம் எத்தனை கோடி வருமானம் வந்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறியுள்ளார் பாலா. இதனால்தான் இவர் அஜித் விஜய் மாதிரியான முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லையா என்கிற கேள்வி இதன் மூலமாக எழுந்துள்ளது.

படப்பிடிப்பில் பாலா என்னை அடிச்சார்!.. வணங்கான் படத்தை விட்டு நடிகை விலக இதுதான் காரணமா?..

Director Bala: தமிழில் அதிக சர்ச்சைக்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் தமிழில் வரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்றாலும் கூட நிஜ வாழ்க்கையில் பாலாவை வைத்து நிறைய விமர்சனங்கள் மக்கள் மத்தியில் வருகின்றன.

படப்பிடிப்பு தளங்களில் பாலா நடிப்பவர்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார் என்கிற பேச்சு வெகு நாட்களாகவே இருந்து வந்தது. அதேபோல தனது உதவி இயக்குனர்களிடமும் பாலா மோசமாக நடந்து கொள்வார் என்று கூறப்படுவதுண்டு.

இதனாலையே பாலாவின் திரைப்படங்களும் அதிகமாக தோல்வியை காண துவங்கின சமீபத்தில் பாலா இயக்கிய எந்த திரைப்படமும் தமிழில் பெரிதாக வெற்றி காணவில்லை என்று கூறலாம். இதனால் பாலாவிற்கான வாய்ப்புகளும் குறைந்தது.

ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் எடுப்பதே அவருக்கு கடினமான விஷயம் என்கிற நிலை உருவானது. இதற்கு தகுந்தார் போல பரதேசி திரைப்படம் வெளியான பொழுது அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் பலரையும் தாக்கியது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் சச்சரவை ஏற்படுத்தியது.

ஆனால் அப்பொழுது அதை படப்பிடிப்பு தளத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று செய்து காட்டிய வீடியோதான் அது எனக் கூறி அந்த நிகழ்வை முடித்து வைத்தனர். ஆனால் தற்சமயம் வணங்கான் திரைப்படத்திலும் அந்த பிரச்சனை துவங்கியிருக்கிறது.

வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் கதாநாயகனாக நடிக்க இருந்தது. சூர்யா நடிக்க இருந்த பொழுது அந்த படத்தில் மலையாள நடிகை மமீதா கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் சில காலங்களில் படத்திலிருந்து சூர்யா விலகினார்.

இந்த நிலையில் இது குறித்து பேட்டியில் பேசிய மமீதா கூறும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் பாலா தன்னை அடித்தார் என்று வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். எனவே இதுதான் ஒரு படத்தில் இருந்து விலக காரணமா? என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன மேலும் பாலா உண்மையிலேயே படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் அடிக்கக் கூடியவரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

திருவள்ளுவருக்கா காவி சாயம் பூசுறீங்க… மத அரசியலை பிரிக்கும் வணங்கான் ட்ரைலர்!..

Vanangaan movie Trailer: பாலா இயக்கும் திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என கூறலாம். ஆனால் இயக்குனர் பாலாவை பொறுத்தவரை அவர் அதிக திரைப்படங்கள் எல்லாம் இயக்க மாட்டார்.

எப்போதாவதுதான் திரைப்படம் இயக்குவார். அதே போல இயக்கும் திரைப்படங்களுக்கும் அதிக காலம் எடுத்துக்கொள்வார். இதனாலேயே அதிகபட்ச தயாரிப்பாளர்கள் இவரது திரைப்படங்களை தயாரிப்பதில்லை.

இந்த நிலையில் முதலில் சூர்யாவே தயாரித்து நடித்துதான் வணங்கான் திரைப்படம் தயாரானது. ஏனெனில் அந்த படத்தின் கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் சூர்யாவிற்கும் பிதாமகன் திரைப்படம் மூலமாக நல்ல வெற்றியை கொடுத்திருந்தார் பாலா.

எனவே அந்த படத்தை தயாரித்து நடித்தார் சூர்யா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்திற்கான செலவு மிகவும் அதிகமானது. அதை பார்த்த சூர்யா படத்தில் இருந்து விலகிக்கொள்ள பிறகு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் பார்க்கும்போது இந்து மற்றும் கிருஸ்துவ மத அரசியலையும் அதற்கு எதிராக கதாநாயகன் போராடுவது போலவும் தெரிகிறது. அதே சமயம் பகுத்தறிவு தெய்வ நம்பிக்கை இரண்டிலும் நம்பிக்கை கொண்டவராக அருண் விஜய் இருப்பார் என தெரிகிறது. ஒரு காட்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைக்கிறார் ஒரு பெண். அவரை அடிக்கிறார் அருண் விஜய்.

ஏனெனில் ஒரு கையில் பிள்ளையாரும் மற்றொரு கையில் பெரியாரையும் அவர் வைத்திருப்பது போல காட்சி ஒன்று அமைந்துள்ளது.

சினிமாவை விட்டே போக இருந்த சமயத்தில் பாலாதான் உதவி பண்ணுனார்!..

Music Director GV Prakash: தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஜி.வி பிரகாஷ். யுவன் சங்கர் ராஜாவை போலவே இவரும் இளம் வயதிலேயே சினிமாவிற்கு இசையமைக்க வந்துவிட்டார். தன்னுடைய முதல் படமான வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது ஜிவி பிரகாஷிற்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.

ஆனால் அந்த படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே ஆகிய பாடல்கள் பெறும் வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து மிகவும் பிரபலமானார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். அதன் பிறகு ஜி.வி பிரகாஷ் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்து பெரும் வெற்றியை கொடுத்தன.

முக்கியமாக இயக்குனர் ஏ.எல் விஜய் தொடர்ந்து ஜிவி பிரகாஷிற்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். ஆனால் அப்படியெல்லாம் வெற்றியை கொடுத்தும் கூட சில காலங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷின் மேல் மக்களுக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. பிறகு சினிமாவில் படங்கள் நடிக்க துவங்கினார் ஜிவி பிரகாஷ்.

ஆரம்பத்தில் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியடையவில்லை. இந்த நிலையில் இந்த விஷயத்தை அறிந்த இயக்குனர் பாலா தான் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷிற்கு வாய்ப்பு வழங்கினார். அது ஜிவி பிரகாஷிற்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

ஒரு பேட்டியில் பேசும்போது இதற்காக பாலாவிற்கு நன்றி கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை விலக்குவது வருத்தமாக உள்ளது? – இயக்குனர் பாலாவின் அதிர்ச்சி தகவல்?

இயக்குனர் பாலா திரைப்படம் என்றாலே மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். வித்தியாசமாக தனது திரைப்படத்தில் எதாவது ஒன்றை செய்பவர் பாலா.

இந்த நிலையில் இயக்குனர் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை எடுக்க இருந்தார். ஏற்கனவே பிதாமகன், நந்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பாலா.

இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் இருந்து சூர்யாவை விலக்குவதாக பாலா அறிவித்துள்ளார். படத்தின் கதைக்கும் சூர்யாவிற்கும் ஒத்து வராது என தோன்றியதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் சூர்யா இந்த கதைக்கு தகுதியாய் இருந்தது போல தோன்றியது.

ஆனால் இப்போது இந்த கதை சூர்யாவிற்கு ஏற்றதாக தோன்றவில்லை. எனவே இருவரும் ஒன்றாக பேசி இந்த முடிவிற்கு வந்தார். சூர்யா நீங்கியதால் வணங்கான் பட வேலைகள் நிற்காது. வேறு கதாநாயகனை வைத்து எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாலாவிற்கு சூர்யாவிற்கும் மனகசப்பு ஏற்பட்டு அதனால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பாரோ என்கிற சந்தேகமும் பலருக்கு வருகிறது.