இந்த வருடம் தமிழில் வசூல் சாதனை செய்த டாப் 7 படங்கள் லிஸ்ட்!..

இந்த வருடம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது இன்னும் சில நாட்களில் அடுத்த வருடம் துவங்க உள்ளது இந்த நிலையில் இந்த வருடத்தில் பெரும் வசூலை கொடுத்த முக்கியமான ஆறு திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்

07.மார்க் ஆண்டனி 

mark antony
mark antony

விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த வருடம் வந்த திரைப்படத்திலேயே காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டு கலெக்ஷன் வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரே திரைப்படம் மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டுமே. இந்த திரைப்படம் 160 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

06.வாத்தி

தனுஷ் நடிப்பில் பெரிதாக சண்டை காட்சிகளை இல்லாமல் எடுக்கப்பட்டும் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக வாத்தி திரைப்படம் இருக்கிறது. தனியார் பள்ளியில் நடக்கும் பண அரசியலை பேசும் விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 118 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்திருக்கிறது.

05.துணிவு

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான திரைப்படம் துணிவு. துணிவு திரைப்படம் வங்கி குறித்த பெரும் அரசியலை பேசும் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. கதை அம்சம் சார்ந்து முக்கியமான விஷயத்தை பேசி இருந்த ஹெச்.வினோத், அஜித்திற்காக படத்தில் கொஞ்சம் சண்டை காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இந்த திரைப்படம் 21 கோடி வசூல் செய்து இந்த வருட ப்ளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில் ஒன்றாக இருக்கிறது 

04.வாரிசு

varisu-new-pics-4

நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு. கதை ரீதியாக பார்க்கும் பொழுது சுமாரான கதைகளம்தான் என்றாலும் கூட ரசிகர்களின் ஈடுபாட்டின் காரணமாக இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. அதனை தொடர்ந்து 32 கோடி வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது வாரிசு

03.பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த வருடம் வெளியானது முதல் பாகம் தந்த அளவிற்கான பெரும் வெற்றியை இந்த படம் தரவில்லை என்றாலும் இந்த வருடம் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது பொன்னியின் செல்வன். 348 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் முதல் நாளே 64 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

02.லியோ

leo

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் இந்த வருடம் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்த நிலையில் படம் வெளியான உடனே பெரும் வெற்றியை கண்டது. இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தை போல வட இந்தியாவில் பெரிதாக வசூல் செய்யவில்லை ஆனாலும் 450 கோடி வசூல் செய்திருக்கிறது லியோ திரைப்படம்

01. ஜெயிலர்

jailer

ரஜினிகாந்த்  நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாரான ஜெயிலர் திரைப்படம்தான் தமிழிலேயே அதிக வசூல் படைத்த திரைப்படங்களில் இந்த வருடம் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 64 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் நிறைந்த திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன என்பது ஒரு வகையில் உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்து இருக்கிறது. மீண்டும் ரஜினிகாந்த் ஒரு வசூல் மன்னன் என்பதை இந்த வருடம் நிரூபித்திருக்கிறார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version