சத்தமில்லாமல் நெட்ஃப்ளிக்ஸிடம் 3 கோடி வாங்கிய லோகேஷ் கனகராஜ்!.. எல்.சி.யுனாலே காசுதான!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்களுக்கு வர்த்தக ரீதியாக அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

அதிலும் தற்சமயம் netflix அதிக தொகை கொடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தை வாங்கியது. லியோ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து லியோ திரைப்படத்தை ஆங்கில மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறது நெட்ப்ளிக்ஸ்.

lokesh-kanagaraj-pic
lokesh-kanagaraj-pic

லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் தொடர்பாக ஏதாவது ஒன்று செய்யலாம் என்று பேசி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ். ஏனெனில் எல்.சி.யுவில் உள்ள வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு சீரிஸ் செய்யலாம் என்பது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் எண்ணமாக இருக்கிறது.

இந்த நிலையில் எல்.சி.யு எப்படி உருவானது என்பதை லோகேஷ் கனகராஜ் ஒரு வீடியோவாக உருவாக்கி அதை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு மூன்று கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார். மேலும் அடுத்து கைதி 2 திரைப்படத்திற்கு முன்பாக ஒரு முன்னோட்டமாக எல்.சி.யு பற்றி ஒரு குறும்படமும் எடுக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.