Tag Archives: இயக்குனர் ஷங்கர்

கமலுடன் நடிக்கும் வாய்ப்பை கை விட்ட ஆர்.ஜே பாலாஜி.. இதுதான் காரணம்..!

தமிழில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்பொழுது இயக்குனர் நடிகர் என்று பல பரிமாணங்களை எடுத்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜே பாலாஜி ஆரம்பத்தில் காமெடி நடிகராக வந்தாலும் கூட பிறகு வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.

சூர்யா நடித்து வரும் கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜிதான் இயக்கி வருகிறார். இதற்கு முன்பே வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவருக்கு வாய்ப்பு கொடுத்த கதையை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. அதில் அவர் கூறும்பொழுது இந்தியன் 2 திரைப்படத்திற்கான கதையை எழுதும் பொழுது சங்கர் சார் அது குறித்து என்னிடம் பேசியிருந்தார்.

rj balaji

அப்பொழுது அவரிடம் கூறும் பொழுது மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று நான் தீர்மானம் செய்யவில்லை ஆனால் கதையில் ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது மட்டும் அதில் நீங்கள் தான் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறினார்.

நானும் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தேன் ஆனால் நாட்கள் சென்று கொண்டிருந்ததே தவிர இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கு நடுவே எல்.கே.ஜி திரைப்படத்திற்கான வேலையை பார்த்து நான் அதில் நடித்தும் விட்டேன்.

எல் கே ஜி திரைப்படத்தில் நடித்த பிறகு இனி காமெடி நடிகராக படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இதனை சங்கர் சாரிடமே பிறகு நான் கூறினேன். அவரும் நான் தான் தாமதப்படுத்திவிட்டேன் நீங்கள் இன்னும் உயர்ந்து வரவேண்டும் என்று எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

 

75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை என்கிற பகுதியின் மன்னரான வேள்பாரியை அழிப்பதற்கு மூவேந்தர்களும் ஒன்றினைகின்றனர். இந்த நிலையில் அவர்களை வேள்பாரி எப்படி எதிர்க்கிறான் என்பதாகதான் கதை செல்கிறது.

இந்த நிலையில் முதன் முதலாக தமிழில் வேள்பாரி நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அதற்காகதான் இந்த வேள்பாரி வெற்றி விழா நடந்தது.

அதில் பேசிய ரஜினிகாந்த் பேசும்போது இந்த விழாவிற்கு என்னை அழைத்தப்போது நான் வேள்பாரி நாவலை படிக்கவே இல்லையே.. என்னை எதற்கு அழைத்தீர்கள் என கேட்டேன். அதற்கு பதிலளித்த சு.வெங்கடேசன் உங்களுக்கு கதை சொல்வதற்கு நான் ஆள் அனுப்புகிறேன் அவர் வேள்பாரி கதையை சொல்வார் என்றார்.

அப்படியாக கதையை கேட்டுதான் இங்கு வந்தேன். நீங்கள் எல்லாம் நினைக்கலாம். ஒரு சினிமா பிரபலத்தை புத்தக விழாவிற்கு அழைப்பது என்றால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அதிகம் புத்தகம் படிப்பவர், பெரிய பேச்சாளர், இல்லை எனில் கமல்ஹாசனை கூப்பிட்டிருக்கலாம் அதை விட்டு விட்டு 75 வயதிலும் கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் இவரை கூப்பிட்டு வந்திருக்கிறார்களா என நினைப்பீர்கள் என கிண்டலாக பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. ஷங்கரையே மனம் நோக வைத்த திரைப்படம்..!

இயக்குனர் ஷங்கர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார்.

இந்திய அளவிலேயே அதிகமாக நோக்கப்பட்ட ஒரு இயக்குனர் ஷங்கர் என்று கூறலாம். ஏனென்றால் அவர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பொழுது மொத்த இந்திய சினிமாவுமே இயக்குனர் ஷங்கரை திரும்பி பார்த்தது.

ஏனெனில் அதுவரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்த ஷங்கர் இப்பொழுது இயங்கும் திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.

அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிக மோசமான தோல்வியை கண்டது. அதேபோல கேம் சேஞ்சர் திரைப்படமும் பெரிய தோல்வியை அடைந்தது.

இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து அவர் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் ஷங்கர் கூறும் பொழுது கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக நான் செய்திருக்க வேண்டும்.

அந்த திரைப்படத்தில் மக்கள் மனதை தொடும் வகையிலான காட்சிகள் நிறைய இருந்தன. ஆனால் படத்தில் கட் செய்யும் பொழுது அந்த காட்சிகளை எல்லாம் நாங்கள் நீக்கிவிட்டோம். என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது மொத்தமாக அந்த திரைப்படம் ஐந்து மணி நேரம் இருந்தது. ஆனால் ஒரு சிலையை உருவாக்க வேண்டும் என்றால் கற்களில் சில பகுதிகளை நாம் நீக்கி தான் ஆக வேண்டும் அதற்காக நாம் வருத்தப்பட முடியாது என்று கூறியிருக்கிறார் ஷங்கர்.

Game Changer படத்தை எடுத்திருக்கவே கூடாது.. மனம் விட்டு பேசிய தயாரிப்பாளர்..!

கடந்த சில காலங்களாகவே இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெறுவது இல்லை. 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் என்று எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை.

அவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தை பொருத்தவரை அதில் அரசியல் ரீதியாக கதைக்களம் அமைந்திருந்தாலும் கூட திரைக்கதையாக அது அவ்வளவு சிறப்பாக சொல்லப்படவில்லை என்று கூறலாம்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது எந்த அளவிற்கு என்பது அறியப்படாமலேயே அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனாலேயே அந்த படம் பெரும் தோல்வியை கண்டது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய தயாரிப்பாளர் தில்ராஜ் கூறும்போது நான் பெரிய இயக்குனர்கள் படத்தை தயாரித்தது கிடையாது. முதன்முதலாக நான் பெரிய இயக்குனர் என்று தயாரித்த திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படம்.

ஆனால் நான் அதை அவர் போக்குக்கு விட்டு விட்டேன். ஆரம்பத்திலேயே அக்ரீமெண்ட் மாதிரியான விஷயங்களை நான் போட்டிருக்க வேண்டும் தவறு என்னுடைய பக்கம் தான். நான் இந்த ப்ராஜெக்ட்டை கையிலே எடுத்திருக்கக் கூடாது என்று கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார் தில்ராஜ்.

 

 

என் பையனை ஏ.ஆர் முருகதாஸ் கிட்ட அனுப்ப இதுதான் காரணம்.. உண்மையை கூறிய இயக்குனர் ஷங்கர்.!

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுகிறார். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து ஹிட் கொடுக்கும் இயக்குனராக ஷங்கர் இருந்து வருகிறார். ஆனால் இப்போதெல்லாம் ஷங்கரின் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை.

இருந்தாலும் அவர் வாய்ப்புகளை பெற்று படங்களை இயக்கி கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் கூட இயக்குனராகவே ஆசைப்படுகிறார். எனவே அவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார்.

இதுக்குறித்து இயக்குனர் ஷங்கரிடம் கேட்டப்போது, அவர் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். எனக்கு என் மகன் என்னுடன் சேர்ந்து பணிப்புரிய வேண்டும் என்றுதான் ஆசை. அவனுக்கும் நல்ல திறமை இருக்கிறது. ஆனால் அவனும் நானும் ஒரு படத்தில் பணிப்புரிந்தால் அது அப்பா மகன் உறவாகதான் இருக்கும்.

அங்கு அவன் உதவி இயக்குனராக இருக்க மாட்டான். அவனை இயக்குனரின் மகனாகதான் பார்ப்பார்கள். அது அவனது திறமையை வளர்த்துக்கொள்ள தடையாக இருக்கும் என நினைத்தேன். எனவே அவனை நான் ஏ.ஆர் முருகதாஸிடம் அனுப்பி வைத்தேன்.

அதற்கு பிறகு கேம் சேஞ்சர் திரைப்படத்தில் என்னுடன் பணிப்புரிந்தான். நிறைய கற்றுள்ளான். அவன் லிமிட் தெரிந்து அந்த இடத்திலேயே இருந்து ஒரு உதவி இயக்குனராக படத்தில் பணிப்புரிந்தான். என்று கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

என் படத்தில் அதிக ப்ளாஸ்பேக் இருக்க இதுதான் காரணம்..! இயக்குனர் ஷங்கர் ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். நண்பன் மாதிரியான குறைந்த பட்ஜெட் திரைப்படங்களைக் கூட இயக்குனர் சங்கர் இயக்கும்போது அவை அதிக பட்ஜெட் படங்களாக மாறி விடுவதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு பட்ஜெட்டை அதிகமாக மாற்றி விடுபவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் திரைப்படங்களில் பிளாஷ்பேக் கதைகள் இருப்பதை பார்க்க முடியும்.

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என்று பெரும்பான்மையான திரைப்படங்களில் இந்த விஷயத்தை பார்க்க முடியும். ஆனாலும் அவர் இயக்கிய சிவாஜி, காதலன் மாதிரியான திரைப்படங்களில் பிளாஷ்பேக் கதைகள் கிடையாது.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஃப்ளாஸ்பேக் கதை அதிக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக நான் இயக்கிய காதலன் திரைப்படத்திலும் பிளாஷ்பேக் இருக்க வேண்டும் என்று உதவி இயக்குனர்கள் கூறினார்கள்.

ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஒரு கதைக்கு தேவையான இருந்தால் மட்டும் தான் பிளாஷ் பேக் விஷயத்தை வைக்க வேண்டும். தேவையில்லாமல் உள்ளே புகுத்தினால் அது நன்றாக இருக்காது. அதனால்தான் மற்ற படங்களில் பிளாஷ்பேக் தேவையாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் நான் பயன்படுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

350 நடிகைகள் ஷங்கர் மீது புகார்.! இந்த பிரச்சனையை சரி செய்யுங்க..!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பாடல்கள் மாதிரியான விஷயங்களுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்து விடுவார்.

இதனால் அவரது படம் அதிகபட்ஜெட் படமாக மாறிவிடும். இப்படியாக சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது.

director shankar

கேம் சேஞ்சர் திரைப்படம் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் உருவான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் இந்தியன் 2 அளவுக்கு கூட வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிறகும் ஒரு பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு 350 நடிகர் நடிகைகளை நடிக்க வைத்திருக்கின்றனர். அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் களுக்கு சரியான சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இது குறித்து அவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

கடைசி நேரத்தில் அழுதுட்டேன்.. டிராகன் படம் குறித்து இயக்குனர் ஷங்கர்.. பிரதீப் கொடுத்த பதில்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முக்கியமான நடிகராவார். அவரது முதல் திரைப்படமான லவ் டுடே திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கான வரவேற்புகளும் அதிகமாக இருந்தன.

இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து மூன்று படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் மற்றும் எல்.ஐ.கே ஆகிய இரண்டு திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கினார்.

டிராகன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான முதல் நாளே இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கதாநாயகனாக மாறியுள்ளார்.

இந்த நிலையில் டிராகன் திரைப்படம் குறித்து பிரபல இயக்குனரான ஷங்கர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பேசிய ஷங்கர். டிராகன் திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும் பிரதீப்பின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் உங்களது படத்தை பார்த்து வளர்ந்தவன் சார் நான் உங்களிடம் கிடைக்கும் பாராட்டால் எனக்கு உண்டான மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்.. இத்தனை வருடம் கழித்து வெடித்த பூகம்பம்.!

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் தொடர்ந்து அதிக பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்த நிலையில் ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் இந்தியன் முதல்வன் திரைப்படங்களுக்கு பிறகு பெரிதாக பேசப்பட்ட திரைப்படம் எந்திரன்.

கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் பெரிதாக அறிமுகமாகாத காலக்கட்டத்திலேயே மிக சிறப்பாக எந்திரன் திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். எந்திரன் திரைப்படம் வெளியான சமயத்திலேயே அந்த படத்தில் கதை திருட்டு நடந்திருப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

director shankar

ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தான் 2007 இல் எழுதிய ஜுகிபா என்னும் கதையை காபி அடித்துதான் எந்திரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இதுக்குறித்த வழக்கில் தற்சமயம் ஷங்கருக்கு எதிராக தீர்ப்புகள் வந்துள்ளன.

எந்திரன் திரைப்படத்திற்காக ஷங்கர் 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார். இந்த நிலையில் அவருடைய 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தற்சமயம் அமலாக்கதுறையினரால் முடக்கப்பட்டுள்ளன.

பெரிய ஹீரோக்களை ஒதுக்கிய ஷங்கர்.. வாரிசு நடிகருக்கு கிடைத்த அடுத்த பட வாய்ப்பு.!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் ஷங்கர். ஆனால் சமீப காலங்களாக இயக்குனர் ஷங்கருக்கு வெற்றி படங்களே அமையவில்லை. பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்கள் தற்சமயம் தோல்வியடைந்து வருகின்றன.

அவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் பெறும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் அப்படியே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தில் பல காட்சிகள் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பாரா அளவிலான தோல்வியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து ஷங்கர் இயக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜ் உடையதாகும். இந்த படத்தையும் பெரிய பட்ஜெட்டில் இயக்கினார் ஷங்கர்.

director shankar

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியானது. ஆனால் இரண்டிலுமே படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து ஷங்கரின் ப்ரோஜக்ட் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி இருந்து வருகிறது.

இப்போது ஒரு வெற்றி படமாவது கொடுத்து இயக்குனர் ஷங்கர் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே பெரிய ஹீரோக்களை எல்லாம் தவிர்த்துவிட்டு சின்ன ஹீரோவை வைத்து ஹிட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.

அந்த வகையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஷங்கர் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படமாவது இயக்குனர் ஷங்கருக்கு வெற்றி படமாக அமையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

உங்க காசா இருந்தா இப்படி பண்ணுவீங்களா..? வாயை விட்டு சிக்கிய இயக்குனர் ஷங்கர்.!

தென்னிந்தியாவில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் என பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடும் அளவில்தான் இருக்கின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர்.

அவர் இயக்கிய ஜெண்டில்மேன் திரைப்படத்தில் துவங்கி இப்போது வெளிவந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரை எல்லாமே அதிக பட்ஜெட் திரைப்படங்கள்தான்.

பெரும்பாலும் இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்துவிடும். மிக அரிதாகதான் அவரது திரைப்படங்கள் தோல்வி படமாக அமையும். ஆனால் சமீப காலமாக அவரது திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெறாமல் இருந்து வருகின்றன.

ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து இவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது.

இதனால் பலரும் இயக்குனர் ஷங்கர் குறித்து அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதுக்குறித்து இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அதில் அவர் கூறும்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தை கட் செய்வதற்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.

மொத்தமாக 5 மணி நேர காட்சிகள் எடுத்து வைத்திருந்தோம். அதில் 2 மணி நேரம் 15 நிமிட காட்சிகளை படத்திற்கு கட் செய்தோம் என கூறியுள்ளார் ஷங்கர்.

கிட்டத்தட்ட 2 படங்களுக்கான நேரத்திற்கு ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் ஷங்கர். அவர் காசாக இருந்தால் இப்படி செய்வாரா? அவர் தயாரிக்கும் படங்கள் மட்டும் குறைந்த பட்ஜெட் படங்களாக இருக்கின்றன என கேள்வி எழுப்பு வருகின்றனர்.

ரஜினியை வச்சே ரஜினியின் வாழ்க்கை வரலாறு… இளமை ரஜினியை பார்க்க தயாரா? ஷங்கரின் அடுத்த திட்டம்…

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இடையில் சில காலங்கள் ரஜினிகாந்தின் மார்க்கெட் குறைந்தது உண்மைதான். தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகர்களே கிடையாது.

ஆனாலும் துவண்டு போகாமல் ஒரு நடிகர் தனக்கான இடத்தை பிடிப்பதுதான் அவர்களின் வெற்றியாக இருக்கிறது. பாபா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு நான்கு வருடங்கள் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த படம் சந்திரமுகி.

சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி நடிக்கும்போது இந்த படத்தில் ரஜினிக்கு மட்டுமே முக்கிய கதாபாத்திரம் கிடையாது. பிரபு, ஜோதிகா என பலருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என ரஜினி கூறவில்லை.

rajinikanth

ஒரு தோல்வி படத்துக்கு பிறகு நடிக்கும் எந்த நடிகரும் இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் ரஜினி அந்த படத்தில் நடித்தார். சந்திரமுகி படம் ஒரு வருடம் ஓடி வெற்றி கொடுத்தது. பொதுவாகவே ரஜினிகாந்தை மக்களுக்கு பிடிப்பதற்கு முக்கிய காரணம் அவரும் நம்மை போல ஏழ்மையில் இருந்து வந்தவர் என்பதுதான்.

ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் ஷங்கரிடம் பயோபிக் எடுப்பதாக இருந்தால் எந்த நபரின் கதையை எடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர் நடிகர் ரஜினியின் கதையைதான் படம் பண்ணனும்னு ஆசை இருக்கு என கூறியுள்ளார். இதுக்குறித்து ரசிகர்கள் கூறும்போது ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை படமாக்கினால் கண்டிப்பாக ஷங்கர் ரஜினிகாந்தைதான் அதில் நடிக்க வைப்பார்.

டீ ஏஜிங் முறையில் ரஜினிகாந்தை அதில் இளமையாக காட்ட வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர்.