மணிரத்தினமும் சங்கரும் சினிமாவுக்கு கொண்டு வந்த விஷயங்கள்.. இவ்வளவு நாள் தெரியலையே..!
இயக்குனர் சங்கரும் மணிரத்தினமும் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களாக இருந்து இருக்கின்றனர் ஆனால் இப்போதைய தலைமுறை மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது மிக குறைவுதான்.
ஏனெனில் சமீப காலமாக அவர்களது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் எல்லாமே பெரிய வெற்றியை கொடுக்காமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது இயக்குனர் சங்கரும் மணிரத்தினமும் அவர்கள் வந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நிறைய புது விஷயத்தை கொண்டு வந்தவர்கள். இயக்குனர் சங்கரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பு வரை இடைவேளைக்கு முன்பு தான் பிளாஷ்பேக் கதை என்பது வரும்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு ஃப்ளாஸ்பேக் கதையை கொண்டு வரலாம் என்பதை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சங்கர்தான். அதேபோல மணிரத்தினமும் படத்தின் மிக முக்கியமான வசனங்களை சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.
உதாரணத்திற்கு நாயகன் திரைப்படத்தில் நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை என்கிற ஒரு வசனம் வரும் அந்த வசனம் தான் படத்தின் கதை என்று கூறலாம்.
ஆனால் அதை சர்வ சாதாரணமாக ஒரு காட்சியில் அதை சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இப்படி இவர்கள் சினிமாவிற்கு கற்றுக் கொடுத்த விஷயங்கள் நிறைய. எனவே இப்பொழுது கொடுக்கும் தோல்வி படங்களை வைத்து மட்டும் அவர்களை முடிவு செய்துவிட முடியாது என்று கூறுகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.