இயக்குனர் ஷங்கர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார்.
இந்திய அளவிலேயே அதிகமாக நோக்கப்பட்ட ஒரு இயக்குனர் ஷங்கர் என்று கூறலாம். ஏனென்றால் அவர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பொழுது மொத்த இந்திய சினிமாவுமே இயக்குனர் ஷங்கரை திரும்பி பார்த்தது.
ஏனெனில் அதுவரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்த ஷங்கர் இப்பொழுது இயங்கும் திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.
அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிக மோசமான தோல்வியை கண்டது. அதேபோல கேம் சேஞ்சர் திரைப்படமும் பெரிய தோல்வியை அடைந்தது.
இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து அவர் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் ஷங்கர் கூறும் பொழுது கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக நான் செய்திருக்க வேண்டும்.
அந்த திரைப்படத்தில் மக்கள் மனதை தொடும் வகையிலான காட்சிகள் நிறைய இருந்தன. ஆனால் படத்தில் கட் செய்யும் பொழுது அந்த காட்சிகளை எல்லாம் நாங்கள் நீக்கிவிட்டோம். என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் பொழுது மொத்தமாக அந்த திரைப்படம் ஐந்து மணி நேரம் இருந்தது. ஆனால் ஒரு சிலையை உருவாக்க வேண்டும் என்றால் கற்களில் சில பகுதிகளை நாம் நீக்கி தான் ஆக வேண்டும் அதற்காக நாம் வருத்தப்பட முடியாது என்று கூறியிருக்கிறார் ஷங்கர்.