தமிழில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்பொழுது இயக்குனர் நடிகர் என்று பல பரிமாணங்களை எடுத்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.
ஆர்.ஜே பாலாஜி ஆரம்பத்தில் காமெடி நடிகராக வந்தாலும் கூட பிறகு வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.
சூர்யா நடித்து வரும் கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜிதான் இயக்கி வருகிறார். இதற்கு முன்பே வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவருக்கு வாய்ப்பு கொடுத்த கதையை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. அதில் அவர் கூறும்பொழுது இந்தியன் 2 திரைப்படத்திற்கான கதையை எழுதும் பொழுது சங்கர் சார் அது குறித்து என்னிடம் பேசியிருந்தார்.
அப்பொழுது அவரிடம் கூறும் பொழுது மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று நான் தீர்மானம் செய்யவில்லை ஆனால் கதையில் ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது மட்டும் அதில் நீங்கள் தான் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறினார்.
நானும் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தேன் ஆனால் நாட்கள் சென்று கொண்டிருந்ததே தவிர இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கு நடுவே எல்.கே.ஜி திரைப்படத்திற்கான வேலையை பார்த்து நான் அதில் நடித்தும் விட்டேன்.
எல் கே ஜி திரைப்படத்தில் நடித்த பிறகு இனி காமெடி நடிகராக படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இதனை சங்கர் சாரிடமே பிறகு நான் கூறினேன். அவரும் நான் தான் தாமதப்படுத்திவிட்டேன் நீங்கள் இன்னும் உயர்ந்து வரவேண்டும் என்று எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.