Tag Archives: swashika

அந்த படத்துல இருந்த சலுகையை எல்லாம் இங்க எதிர்பார்க்க கூடாது.. நடிகைக்கு கண்டிஷன் போட்ட ஆர்.ஜே பாலாஜி.!

ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதற்குப் பிறகு ஆர்.ஜே பாலாஜி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதன் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அப்படியாக அவர் நடித்த படங்களில் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் காமெடி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் இதற்கு நடுவே திரைப்படங்களை இயக்குவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை இயக்கினார் ஆர்.ஜே பாலாஜி.

அந்த திரைப்படங்களும் நல்ல வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் அடுத்து ஆர் ஜே பாலாஜி சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த சுவாசிகா நடிக்கிறார்.

இது குறித்து பேட்டியில் கூறும்போது லப்பர் பந்து திரைப்படத்தை பார்த்த ஆர் ஜே பாலாஜி எனக்கு கண்டிப்பாக அவரது படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் படத்தை எடுக்கும் பொழுது லப்பர் பந்து திரைப்படத்தில் இருந்த அளவிற்கான முக்கியத்துவம் இந்த திரைப்படத்தில் உங்களுக்கு இருக்காது அதைவிட குறைவான அளவில் தான் இருக்கும் என்று கூறினார். இருந்தாலும் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார் சுவாசிகா.