Tag Archives: தா.செ ஞானவேல்

என் படத்தோட நிலையை நினைச்சு வருத்தமா இருக்கு… வேட்டையன் குறித்து இயக்குனர் ஞானவேல்..!

சினிமாவைப் பொறுத்தவரை இந்த முதல் நாள் விமர்சனம் என்பது இப்பொழுது பலருக்குமே பிடிக்காத ஒரு விஷயமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்த்தால் தான் அதன் கதை என்னவென்று தெரியும் என்கிற நிலை இருந்தது.

அதனால் ரசிகர்களும் கதை என்னவென்று தெரியாமலேயே திரையரங்கிற்கு சென்று வந்தனர். ஆனால் இப்பொழுது முதல் நாள் விமர்சனம் என்கிற ஒரு விஷயம் வந்துவிட்டது.

இதனை தொடர்ந்து திரைப்படங்கள் எல்லாம் முதல் நாளே விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. முதல் நாள் எதிலும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கும் திரைப்படங்கள் பொதுவாக தோல்வியை காண்கின்றன. இது பல தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டையன் படம் குறித்து ஞானவேல்:

vettaiyan

எனவே முதல் நாள் விமர்சனத்தை எப்படியாவது நீக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய் பீம் மாதிரியான வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் இது குறித்து பேசி இருக்கிறார்.

அதில் இவர் கூறும்பொழுது முதல் நாள் விமர்சனம் என்பது நியாயமானதாக இல்லை. ஒரு படம் வெளிவந்த பிறகு அது எப்படிப்பட்ட படம் என்பதை சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்தை வைத்தே முடிவு செய்கின்றனர்.

விமர்சனம் செய்பவர்களுக்கு ஒருவேளை அந்த படம் பிடிக்காமல் இருக்கலாம். அந்த கருத்தை நம்பி மக்கள் படத்தை குறை கூறுகின்றனர். இப்படிதான் வேட்டையன் படத்திற்கும் கள்ளிப்பால் கொடுத்தனர் என்கிறார் இயக்குனர் தா.செ ஞானவேல்.

ஆர்.ஜே பாலாஜி படத்தில் அதே கதாபாத்திரத்தில் சூர்யா.. ரஜினி இயக்குனர் எழுதின கதையா?..!

ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் பெற்ற நடிகராக சூர்யா மாறினார். அதற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா. இந்த நிலையில்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனால் தா.செ ஞானவேல் படத்தை ஒத்தி வைத்துவிட்டு வணங்கான் படத்தில் நடிக்கச் சென்றார். அதுவும் அவருக்கு சரியாக செட்டாகவில்லை என்பதால் பிறகு கங்குவா திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டார் சூர்யா.

இந்த சமயத்தில்தான் இயக்குனர் ஞானவேலுக்கு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தை இயக்கி அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.

சூர்யாவின் கதாபாத்திரம்:

ஆனால் கங்குவா திரைப்படத்தில் நடித்தப்பிறகு சூர்யாவிற்கு அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. மேலும் விமர்சன ரீதியாக அதிக பாதிப்பு உள்ளானது கங்குவா. இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் நடிகர் சூர்யா.

jai bhim

இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் திரைப்படத்தை நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஏற்கனவே ஆர்.ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன.

எனவே இந்த படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யா வக்கீலாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு தா.செ ஞானவேல் எழுதிய கதையிலும் சூர்யாவை வக்கீலாக வைத்துதான் கதை எழுதியிருந்தார்.

ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்தில் வக்கீல் கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே ஒத்துப்போனது அதனை தொடர்ந்து இந்த படத்திலும் தா.செ ஞானவேல் அதையே செய்திருந்தார். எனவே அந்த கதையை தான் அவர் ஆர்.ஜே பாலாஜிக்கு கொடுத்திருப்பாரோ என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ரஜினி இயக்குனருடன் கூட்டணி போடும் நானி!..இதுதான் கதையாம்!.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களாக அறியப்படும் இயக்குனர்களில் தா.செ ஞானவேலும் முக்கியமானவர். ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பே இவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவருக்கான அடையாளமான திரைப்படமாக ஜெய் பீம் திரைப்படம் இருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஞானவேல். கடந்த ஒரு வருடங்களாக ரஜினியை கதாநாயகனாக வைத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். ஜெய் பீம் திரைப்படம் எப்படி காவலர்களின் அதிகார அத்து மீறலை பேசியதோ அதே போலவே வேட்டையன் திரைப்படமும் அமைந்துள்ளது.

Vettaiyan

போலி என்கவுண்டர்களை கதைக்களமாக வைத்து இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

இதனை அடுத்து தெலுங்கு நடிகர் நானியை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளாராம் தா.செ ஞானவேல். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை வேலையில் இப்போதே இறங்கிவிட்டாராம். இந்த திரைப்படமும் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை முன் வைக்கும் கதை களத்தைதான் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்னமும் திரைத்துறையில் இருந்து இந்த திரைப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

காமெடியனாக களம் இறங்கும் பகத் ஃபாசில்!.. அப்ப வேட்டையன் படத்தில் வில்லன் யாரு?

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.

அந்த படத்திற்கு இப்போது வரை பெரிதாக விளம்பரப்படுத்த படாததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் ரஜினிகாந்த் போலீஸாகதான் நடிக்கிறார். மேலும் அடுத்து நடிக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்திலும் அவர் போலீசாகதான் நடிக்க போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றன.

vettaiyan

இந்த திரைப்படத்தில் இவருடன் பகத்ஃபாசில், ராணா டகுபதி, அமிதாப்பச்சன் மாதிரியான பல முக்கிய புள்ளிகள் நடித்து வருகின்றனர். மாமன்னன் திரைப்படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்ததை அடுத்து வேட்டையன் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் பகத் ஃபாசில் என பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் உண்மையில் அந்த படத்தில் பகத் ஃபாசில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராணா டகுபதிதான் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தற்சமயம் அவர்களுக்கிடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் வேட்டையன் திரைப்படத்தை விடவும் லோகேஷ் ரஜினி காம்போ படத்திற்குதான் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

ஏப்ரல்க்குள்ள ரஜினி எனக்கு வேணும்!.. ஜெய் பீம் இயக்குனருக்கு நாள் குறிச்ச லோகேஷ்!..

இளம் இயக்குனர்களே தற்சமயம் தமிழ் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார் என்று கூறலாம். பழைய இயக்குனர்களை விட புது இயக்குனர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்குதான் பெரும் நடிகர்களே கூட விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி கபாலி படத்திற்குப் பிறகு தொடர்ந்து இளம் இயக்குநர்கள் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

போலீஸ் என்கவுண்டருக்கு எதிரான திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் இந்த படத்திலேயே 100 நாட்கள் வரை படப்பிடிப்பு இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் ஏப்ரல் மாதம் தன்னுடைய திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருப்பதாக கூறியுள்ளார் எனவே ஏப்ரல் மாதத்திற்கு உள்ளாக ஞானவேல் தன்னுடைய படப்பிடிப்பை முடித்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இடையில் சற்று ஓய்வு எடுத்துக் கூட திரைப்படம் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் ஞானவேல்.