Tag Archives: mookuthi amman

மூக்குத்தி அம்மன் 2 வில் நடந்த சம்பவம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!

நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் கூட கடவுள் என்கிற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது.

இதனால் இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது அடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரிக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி என்று கூறப்படுகிறது.

mookuthi amman

நயன்தாராவிற்கு அப்படி ஒரு மார்க்கெட் இல்லை என்றாலும் கூட இந்த படம் வெற்றியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில் அதை எடிட் செய்து ஐசரி கணேசுக்கு போட்டுக்காட்டினார் சுந்தர் சி.

அதனை பார்த்து பிரம்மித்து போய்விட்டாராம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று அவர் நம்பத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

 

படத்தில் பங்கு வேண்டும்.. நயன் தாரா போட்ட கண்டிஷன்.. இரு மடங்கு பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன்.!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் திரை கதையில் துவங்கி பல விஷயங்களை வேலை பார்ப்த்தவர் நடிகரும் இயக்குனருமான ஆர.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜியின் உழைப்பால் அந்த திரைப்படம் சிறப்பான காமெடி திரைப்படமாக வந்தது. அந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு வைக்கப்பட்டிருந்த காட்சிகளுமே நன்றாக ஒர்க்அவுட் ஆயிருந்தது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து தயாரிக்க இருக்கிறது வேல்ஸ் நிறுவனம். இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார் என்பதாலேயே இப்பொழுது இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

mookuthi amman

ஏனெனில் சுந்தர் சி மற்றும் நயன்தாரா காம்போவில் ஒரு சாமி படம் என்னும் பொழுது இது மிகப் புதிதாக இருக்கும். சுந்தர்சியம் இதுவரை எந்த சாமி திரைப்படத்தையும் இயக்கியது கிடையாது பேய் படங்களை தான் இயக்கி இருக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு சாதாரணமாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் 55 கோடி பட்ஜெட்டில்தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் சுந்தர்சி வந்த பிறகு படத்தின் பட்ஜெட் அதிகரித்திருக்கிறது. இப்பொழுது இந்த திரைப்படம் 112 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.

தமிழ் சினிமவில்  முதன்முதலாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதைக்கு 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் செலவிடப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. நயன்தாரா இந்த படம் நல்ல வசூலை கொடுக்கும்  என்று நம்பி வருவதால் படத்திற்கு 50 சதவீத சம்பளத்தை மட்டுமே வாங்கி இருக்கிறார்.

மீதி 50 சதவீதத்தை படத்தில் வரும் லாபத்தில் இருந்து பங்குகளாக கேட்டிருக்கிறார் நயன்தாரா

தமிழ் சினிமா வரலாற்றுலேயே முதன் முதலாய்.. நயன்தாரா செய்த சாதனை.!

நடிகை நயன் தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகையாக நயந்தாரா தான் இருந்து வருகிறார். அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் என்பது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்சமயம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நயன் தாரா. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு பின்னால் பல பிரச்சனைகள் நடந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தை வேல்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது.

ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமின்றி படத்தின் கதையிலும் பணிப்புரிந்திருந்தார். ஹிந்தியில் வெளியான பி.கே என்கிற திரைப்படத்தின் மீது கொண்ட ஈடுப்பாட்டால் இந்த படத்தை இயக்கினார் ஆர்.ஜே பாலாஜி.

இந்த நிலையில் அடுத்து ஒரு அம்மன் படமாக மாசாணி என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் ஆர்.ஜே பாலாஜி. அந்த திரைப்படத்தை அவர் சொந்த தயாரிப்பில் உருவாகக் நினைத்தார். அதனால் நயன் தாராவுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க முடியாது என அவர் திரிஷாவிடம் இதுக்குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த நயன் தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி வேக வேகமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் லுக் வெளியானப்போது அதன் இயக்குனர் யார் என்று கூட முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது முக்குத்தி அம்மன் 2 திரைப்படம். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் எந்த ஒரு திரைப்படமும் இதுவரை 100 கோடி பட்ஜெட்டில் உருவானது இல்லை.

எனவே இது நயன் தாராவுக்கு தமிழ் சினிமாவில் பெரும் சாதனை என கூறப்படுகிறது,

படம் பண்ண தெரியாம களத்தில் இறங்கிய ஆர்.ஜே பாலாஜி.. எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படத்தில் செய்த தவறுகள்.!

தமிழ் சினிமா பிரபலங்களில் சில நடிகர்கள்தான் சாதாரண இடத்தில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்கின்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஆண்களுக்கு எப்போதும் நடிப்பு மீது ஒரு ஆர்வம் இருப்பதுண்டு. ஆனால் எல்லோருக்குமே அதற்குள் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை.

அப்படியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் காமெடி படங்களாகதான் இருக்கும். அவரும் இப்போதுதான் சிவகார்த்திகேயன் போலவே தன்னுடைய திரைப்படங்களில் சீரியஸான காட்சிகளை வைத்து வருகிறார்.

இறுதியாக அவரது நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கூட கொஞ்சம் சீரியஸான காட்சிகள் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜிக்கு திரைப்படங்கள் இயக்குவது மேல்தான் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் இயக்கிய சில படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துள்ளது..

rj balaji

ஆரம்பத்தில் எல்.கே.ஜி திரைப்படத்திற்கு கதை எழுதும்போது ஆர்.ஜே பாலாஜிக்கு பெரிதாக கதை எழுதுவதில் அனுபவம் இருக்கவில்லை. எனவே படத்தில் அதிக கதாபாத்திரங்களை வைக்கவில்லை. கதாநாயகனை மட்டுமே முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து கதை அமைப்பை வைத்தார்.

அதற்கு பிறகு வந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில்தான் ஓரளவுக்கு அதிக கதாபாத்திரங்களை வைத்து கதை களத்தை அமைத்தார். அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய வீட்ல விசேசம் திரைப்படத்திலும் கூட கதாபாத்திரங்களை அதிகரித்தார்.

இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பேசும்போது ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.

நண்பர்னு கூட பார்க்காமல் இப்படி செஞ்சிட்டாங்க!.. ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக கூட்டு சேரும் நயன் அணி!.

நயன்தாரா நடித்த திரைப்படத்தில் நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நயன்தாராவுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

அந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து இருந்தனர். மூக்குத்தி அம்மன் நல்ல வெற்றியை நயன்தாராவிற்கு பெற்றுக் கொடுத்தது. முதன் முதலில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடிப்பதாக இல்லை.

மூக்குத்தி அம்மன் படம்:

முதலில் ஆர்.ஜே பாலாஜி சுருதிஹாசனிடம் சென்றுதான் படம் குறித்து பேசி இருந்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு சுருதிஹாசனும் ஒப்புக்கொண்டார் அதற்கு பிறகு படத்தின் கதையை கேட்ட விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.

மேலும் அவரிடம் சென்று இதுக்குறித்து பேசியிருக்கிறார் நயன்தாரா நயனுக்கு கதை பிடித்திருந்ததால் அந்த திரைப்படத்தில் நயன்தாராவை அம்மனாக நடிக்க வைத்தனர். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் முதல் பாகம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

ஹிந்தியில் வெளியான பி கே என்ற திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் மூக்குத்தி அம்மன். அந்த திரைப்படத்தை ஹிந்தியில் பார்த்த பொழுது தமிழில் எடுக்க வேண்டும் என்பது ஆர் ஜே பாலாஜி ஆசையாக இருந்தது ஆனால் அதற்கான தமிழ் காப்புரிமையை ஏற்கனவே வேறு ஒரு தயாரிப்பாளர் வாங்கிய நிலையில் வேறு வழியில்லாமல் புதுக்கதையாக மூக்குத்தி அம்மன்  திரைப்படத்தில் அவர் நடித்தார்.

மாசாணி அம்மன்:

அதனை தொடர்ந்து தற்சமயம் மாசாணி அம்மன் என்கிற இன்னொரு திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்க இருக்கிறார். இதில் அம்மனாக நடிப்பதற்கு முதலில் நயன்தாராவிடம்தான் இவர் சென்று பேசினார் என்று கூறப்படுகிறது.

ஆனால் நயன்தாராவின் சம்பளம் படத்தின் பட்ஜெட்க்கு செட்டாகவில்லை என்பதால் பிறகு திரிஷாவிடம் சென்று பேசியிருக்கிறார். திரிஷாவும் குறைந்த சம்பளத்தில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து இது நயன்தாராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்று வேல்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார் நயன்தார. அதனை தொடர்ந்து வேக வேகமாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் வெளியிடப்பட்டது.

அதில் அந்த படத்தின் இயக்குனர் யார் என்பது கூட போடாமல் இருந்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தொடர்ந்து பேய் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி தற்சமயம் ஒரு சாமி படத்தை இயக்கலாம் என்று மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் களமிறங்கி இருக்கிறார். மேலும் அவர் காமெடி திரைப்படம் இயக்கும் இயக்குனர் என்பதால் இந்த படமும் நகைச்சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் ஆர் ஜே பாலாஜியின் மாசாணி அம்மன் படத்திற்கு எதிராக தான் வெளியாகிறது என்று கூறப்படுகிறது.

சுருதிஹாசனுக்கு வந்த வாய்ப்பை பறித்த நயன்தாரா- எந்த படம் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன் தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ அதனால் அவரது சம்பளம் குறைவதில்லை.

இதனால் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாருமே நயன் தாரா பக்கமே செல்வதில்லை. இப்படியான நிலையில் ஒரு திரைப்படத்தில் சுருதிஹாசனின் வாய்ப்பை நயன் தாரா எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் நயன் தாரா அம்மனாக நடித்திருப்பார். ஆர்.ஜே பாலாஜியும் முதலில் அனுஷ்கா அல்லது நயன் தாராவைதான் அம்மனாக நடிக்க வைக்க நினைத்துள்ளார்.

nayanthara-2

அதற்கு முன்பே அந்த கதையை சுருதி ஹாசனிடம் கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. சுருதி ஹாசனும் அம்மனாக நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் அந்த கதை பிடித்து போய் அதில் நடிப்பதாக நயன் தாராவே கூற வேறு வழியில்லாமல் சுருதி ஹாசனுக்கு பதிலாக நயன் தாராவை நடிக்க வைத்துள்ளார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

இத்தனைக்கும் அப்போது தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து சுருதி ஹாசன். இருந்தாலும் பெரிய நடிகையால் இப்படி வாய்ப்பை இழந்துள்ளார்.

ஹிந்தில வந்த அமீர்கான் படத்தை காபி அடிச்சி நயன்தாராவை வச்சி எடுத்த படம்!.. எது தெரியுமா?.

Nayanthara and ameerkhan: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தி வந்த அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு அதே போலவே சிறப்பாக வந்த படம் எல்.கே.ஜி

எல்.கே.ஜி திரைப்படம் அரசியலை பேசும் படமாக அமைந்ததால் அடுத்து வரும் திரைப்படம் மத அரசியலை பேசும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார் ஆர்.ஜே பாலாஜி. எனவே ஹிந்தியில் அமீர்கான் நடித்து வெளியான பி.கே திரைப்படத்தை தமிழில் படமாக்கலாம் என முடிவு செய்தனர்.

ஆனால் அதற்கான தமிழ் உரிமையை ஏற்கனவே தமிழில் வேறொரு தயாரிப்பாளர் வாங்கிவிட்டார். ஆனால் அந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்பது ஆர்.ஜே பாலாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. எனவே பி.கே போலவே ஒரு கதையை தயார் செய்தார் ஆர்.ஜே பாலாஜி.

அதுதான் மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படம். இந்த திரைப்படம் தமிழில் வெளியானப்போது எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்ல போனால் திரைக்கதை ரீதியாக பி.கேவை விடவும் பல விஷயங்களை பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.