தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன் தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ அதனால் அவரது சம்பளம் குறைவதில்லை.
இதனால் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாருமே நயன் தாரா பக்கமே செல்வதில்லை. இப்படியான நிலையில் ஒரு திரைப்படத்தில் சுருதிஹாசனின் வாய்ப்பை நயன் தாரா எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் நயன் தாரா அம்மனாக நடித்திருப்பார். ஆர்.ஜே பாலாஜியும் முதலில் அனுஷ்கா அல்லது நயன் தாராவைதான் அம்மனாக நடிக்க வைக்க நினைத்துள்ளார்.
அதற்கு முன்பே அந்த கதையை சுருதி ஹாசனிடம் கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. சுருதி ஹாசனும் அம்மனாக நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் அந்த கதை பிடித்து போய் அதில் நடிப்பதாக நயன் தாராவே கூற வேறு வழியில்லாமல் சுருதி ஹாசனுக்கு பதிலாக நயன் தாராவை நடிக்க வைத்துள்ளார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.
இத்தனைக்கும் அப்போது தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து சுருதி ஹாசன். இருந்தாலும் பெரிய நடிகையால் இப்படி வாய்ப்பை இழந்துள்ளார்.