Tag Archives: sruthihaasan

ரஜினி கேட்ட அந்த ஒரு கேள்வி.. தனது பழக்கத்தை மாற்றி கொண்ட ஸ்ருதி..!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் கமல்ஹாசனும் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் மகள் கதாபாத்திரத்தில்தான் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்று பலரும் நினைத்து வந்தனர்.

ஆனால் அப்படி இல்லை ரஜினிகாந்த் நண்பனான சத்யராஜின் மகளாக சுருதிஹாசன் நடிக்கிறார் என்கிற தகவல் ட்ரைலர் வெளியான பிறகு தான் தெரிந்தது.

எனவே ரஜினியின் நண்பன் சத்யராஜ் காணாமல் போவதை வைத்து கூலி திரைப்படத்தில் கதை செல்கிறது என்பதும் தெரிகிறது. இந்த நிலையில் சுருதிஹாசன் ஒரு பாடகி என்பது பலரும் அறிந்த விஷயமே நிறைய படங்களில் பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பில் எப்போதும் சுருதிஹாசன் பாடிக்கொண்டே இருப்பாராம். அதனை பார்த்த ரஜினிகாந்த் ஒருநாள் எப்போதும் பாடிக்கொண்டேதான் இருப்பியா என்று சாதாரணமாக கேட்டிருக்கிறார்.

ஆனால் ஒருவேளை ரஜினிகாந்தை தொந்தரவு செய்கிறோமோ என்று நினைத்ததால் சுருதிஹாசன் அதற்கு பிறகு பாடுவதை நிறுத்திவிட்டாராம் ஒருநாள் ரஜினிகாந்தே இதை பார்த்துவிட்டு ஏன் இப்போது நீ பாடல்கள் பாடுவதில்லை என்று கேட்டிருந்தார்.

அதற்குப் பிறகும் பாடாமல் இருந்த சுருதிஹாசன் பிறகுகூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடி இருந்தார் இதனை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

 

 

என் வாழ்க்கையில் அந்த விஷயம் நடக்கவே இல்ல.. மனம் நொந்த சுருதிஹாசன்..!

கமல்ஹாசனின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன்.

ஆரம்பத்தில் சுருதிஹாசனுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் அவருக்கு தொடர்ந்து வரவேற்புகள் கிடைத்துக் கொண்டது.

அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்தார் சுருதிஹாசன். பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

பெரும்பாலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் சுருதிஹாசனுக்கு அமைவது கிடையாது. ஏனெனில் நடிப்பை பொறுத்தவரை சுமாரான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையாகதான் இவர் இருந்து வருகிறார்.

பேட்டிகளில் பொதுவாக நிறைய விஷயங்களை பேசி வருகிறார் அப்படியாக சமீபத்தில் ஒரு பேடியில் அவர் கூறும் பொழுது எனது வாழ்க்கையில் இவர்தான் ஸ்பெஷல் என்று ஒருவரை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் காதல் தோல்வி குறித்து அவர் கூறும்பொழுது காதல் தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் மீண்டும் வரும்பொழுது அதனால் மற்றவர்களுக்கும் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதன் மூலமாக அவர் நிறைய காதல் தோல்விகளை கண்டிருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

மகள் வயது நடிகையை அடைய நினைத்த நடிகர்!.. சுருதிஹாசனுக்கு நடந்த சோகம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். கமல்ஹாசனின் வாரிசான சுருதிஹாசன் அதை பயன்படுத்தியே தமிழ் சினிமாவில் நடிகையானார்.

ஆரம்பத்தில் அவருக்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. ஆனால் 3 திரைப்படம் வெளியானப்பிறகு ஓரளவு பேசப்படும் நடிகையாக அறியப்பட்டார் நடிகை சுருதிஹாசன்.

சினிமா வாய்ப்பு:

தொடர்ந்து அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவில் சுருதிஹாசனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு சினிமாவில் பலரும் சுருதி ஹாசன் நடிப்பை பாராட்டினர். நடு நடுவே தமிழிலும் பூஜை மாதிரியான படங்களில் நடித்து வந்தார் சுருதி.

சுருதிஹாசனை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றே கூறவேண்டும். பொதுவாக நடிகர்கள் குறித்து நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் சுருதி.

கேரள விழா:

அந்த வகையில் கேரள நிகழ்ச்சி ஒன்றில் அவர் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அதனை கண்ட நடிகர் மோகன்லால் அவரை பார்த்து தவறான செய்கை ஒன்றை செய்துள்ளார்.

இதனை அடுத்து அவரது மகள் வயது பெண்ணிடம் மோகன்லால் இப்படி நடந்துக்கொள்ளலாமா என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சுருதிஹாசனுக்கு வந்த வாய்ப்பை பறித்த நயன்தாரா- எந்த படம் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன் தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ அதனால் அவரது சம்பளம் குறைவதில்லை.

இதனால் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாருமே நயன் தாரா பக்கமே செல்வதில்லை. இப்படியான நிலையில் ஒரு திரைப்படத்தில் சுருதிஹாசனின் வாய்ப்பை நயன் தாரா எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் நயன் தாரா அம்மனாக நடித்திருப்பார். ஆர்.ஜே பாலாஜியும் முதலில் அனுஷ்கா அல்லது நயன் தாராவைதான் அம்மனாக நடிக்க வைக்க நினைத்துள்ளார்.

nayanthara-2

அதற்கு முன்பே அந்த கதையை சுருதி ஹாசனிடம் கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. சுருதி ஹாசனும் அம்மனாக நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் அந்த கதை பிடித்து போய் அதில் நடிப்பதாக நயன் தாராவே கூற வேறு வழியில்லாமல் சுருதி ஹாசனுக்கு பதிலாக நயன் தாராவை நடிக்க வைத்துள்ளார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

இத்தனைக்கும் அப்போது தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து சுருதி ஹாசன். இருந்தாலும் பெரிய நடிகையால் இப்படி வாய்ப்பை இழந்துள்ளார்.