என் வாழ்க்கையில் அந்த விஷயம் நடக்கவே இல்ல.. மனம் நொந்த சுருதிஹாசன்..!

கமல்ஹாசனின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன்.

ஆரம்பத்தில் சுருதிஹாசனுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் அவருக்கு தொடர்ந்து வரவேற்புகள் கிடைத்துக் கொண்டது.

அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்தார் சுருதிஹாசன். பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன.

பெரும்பாலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் சுருதிஹாசனுக்கு அமைவது கிடையாது. ஏனெனில் நடிப்பை பொறுத்தவரை சுமாரான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையாகதான் இவர் இருந்து வருகிறார்.

பேட்டிகளில் பொதுவாக நிறைய விஷயங்களை பேசி வருகிறார் அப்படியாக சமீபத்தில் ஒரு பேடியில் அவர் கூறும் பொழுது எனது வாழ்க்கையில் இவர்தான் ஸ்பெஷல் என்று ஒருவரை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் காதல் தோல்வி குறித்து அவர் கூறும்பொழுது காதல் தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் மீண்டும் வரும்பொழுது அதனால் மற்றவர்களுக்கும் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதன் மூலமாக அவர் நிறைய காதல் தோல்விகளை கண்டிருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.