Tag Archives: Shankar

கமலுடன் நடிக்கும் வாய்ப்பை கை விட்ட ஆர்.ஜே பாலாஜி.. இதுதான் காரணம்..!

தமிழில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்பொழுது இயக்குனர் நடிகர் என்று பல பரிமாணங்களை எடுத்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜே பாலாஜி ஆரம்பத்தில் காமெடி நடிகராக வந்தாலும் கூட பிறகு வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.

சூர்யா நடித்து வரும் கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜிதான் இயக்கி வருகிறார். இதற்கு முன்பே வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை ஆர்.ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவருக்கு வாய்ப்பு கொடுத்த கதையை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. அதில் அவர் கூறும்பொழுது இந்தியன் 2 திரைப்படத்திற்கான கதையை எழுதும் பொழுது சங்கர் சார் அது குறித்து என்னிடம் பேசியிருந்தார்.

rj balaji

அப்பொழுது அவரிடம் கூறும் பொழுது மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று நான் தீர்மானம் செய்யவில்லை ஆனால் கதையில் ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது மட்டும் அதில் நீங்கள் தான் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறினார்.

நானும் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தேன் ஆனால் நாட்கள் சென்று கொண்டிருந்ததே தவிர இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கு நடுவே எல்.கே.ஜி திரைப்படத்திற்கான வேலையை பார்த்து நான் அதில் நடித்தும் விட்டேன்.

எல் கே ஜி திரைப்படத்தில் நடித்த பிறகு இனி காமெடி நடிகராக படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இதனை சங்கர் சாரிடமே பிறகு நான் கூறினேன். அவரும் நான் தான் தாமதப்படுத்திவிட்டேன் நீங்கள் இன்னும் உயர்ந்து வரவேண்டும் என்று எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

 

அப்படி ஒரு சாதனை பண்ணியிருக்காரு.. வேற என்ன வேணும்.. அனிரூத் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார். தோல்வி முகம் காணாத இயக்குனர் என்று பெயர் வாங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலகட்டத்திலேயே பெரும் இயக்குனர்கள் கூட தொட முடியாத ஒரு உயரத்தை தொட்டு இருக்கிறார் என்று கூறலாம்.

இயக்குனர் ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரியான உயரத்தை தொடுவதற்கு நிறைய காலங்கள் தேவைப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது மிக முக்கியமான ஒரு இயக்குனராகிவிட்டார். அவர் சின்ன ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால் கூட அந்த திரைப்படங்கள் வெற்றியடையும் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத் இசையில்தான் லோகேஷ் கனகராஜ் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் கூலி திரைப்படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிரூத்தையே இசையமைக்க வைப்பதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட அனிருத்தின் 31 பாடல்கள் வெற்றி கொடுத்திருக்கின்றன. அதற்கு மேல் அனிரூத்துக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு எதற்கு நான் யோசிக்க வேண்டும் விக்ரம் திரைப்படத்திலேயே எனக்கு பிடித்த மாதிரி இசையமைத்திருந்தார் அனிருத்.

அவரிடம் எனக்கு எப்படி இசை வேண்டும் என்று சிம்பிளாக கூறி விடுவேன் ஆனால் அவர் மிக சிறப்பான ஒரு இசையை அமைத்து கொடுத்து விடுவார் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

வேண்டாம் அந்த சீட்டை போடாத மாப்ள.. லைக்கா எவ்வளவு சொல்லியும் கேட்காத ஷங்கர்.. இந்தியன் 3 இல் எடுத்த முடிவு..!

வேட்டையன் திரைப்படத்திற்கு முன்பு வரை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு வெளியான திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.

லால் சலாம் திரைப்படமும் சரி இந்தியன் டு திரைப்படமும் சரி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதே சமயத்தில் எடுக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை கொடுத்தது.

விடாமுயற்சி திரைப்படமும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.

லைக்காவின் திட்டம்:

director shankar

எனவே திரையரங்குகளில் வெளியிட்டால் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது எனவே லைக்கா நிறுவனம் இந்த படத்தை நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறது என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஏற்கனவே சேரன் கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் இதற்கு முயற்சி செய்தனர் இப்பொழுது அந்த வகையில் லைக்காவும் டிவி நிறுவனங்களிடம் திரைப்படத்தை நேரடியாக விற்பனை செய்யலாம் என்று நினைத்தது.

ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு பெரிய இயக்குனரின் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவில்லை என்றால் அது அவருக்கு அவமானமாக இருக்கும் என்பதால் ஷங்கர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சங்கர் வைத்த அந்த காட்சி.. மேடையிலேயே வைத்து செஞ்ச நீயா நானா கோபிநாத்.!

வெகு வருடங்களாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் பல விஷயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன அவற்றிற்கு கோபிநாத் கொடுக்கும் பதில்களும் மிகச் சிறப்பாக இருக்கும்.

அதனாலேயே அந்த நிகழ்ச்சி இன்னும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பழைய நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் அவரது திரைப்படத்தில் வைத்த காட்சி ஒன்று விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

நீயா நானா கோபிநாத்:

அந்த நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் கூறும் பொழுது ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் அதிக சத்தத்துடன் பாட்டு வைக்கிறார்கள். அது மிகுந்த தொல்லையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனை கேட்ட கோபிநாத் அவரிடம் ஒரு விஷயத்தை கூறினார்.

neeya naana gopinath

அதாவது நீங்கள் பணக்காரர் என்பதால் உங்களுக்கு அந்த விஷயம் தொல்லையாக இருக்கிறதே தவிர உண்மையில் அது தொல்லை கிடையாது நீங்கள் பார் மாதிரியான இடங்களுக்கு சென்று நடனம் ஆடும் பொழுது அங்கு ராக் மியூசிக்களை அதிக சத்தத்தில் தான் கேட்பீர்கள்.

அப்பொழுது அது உங்களுக்கு தொல்லையாக இருக்காது. ஏன் உங்களுக்கு அம்மன் கோவிலில் போடும் பாடல் தொல்லையாக இருக்கிறது என்றால் அது ஏழைகளுக்கான விஷயம், உங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது அதனால் அதை நீங்கள் ஒரு தொல்லையாக பார்க்கிறீர்கள்.

அவர் கொடுத்த விமர்சனம்:

நமது கலாச்சார ரீதியாக அம்மன் எல்லா இடங்களிலும் வணங்கப்படும் ஒரு தெய்வமாக இருக்கிறது. எனவே அதற்கான திருவிழா என்பது நம் வாழ்க்கையோடு ஒத்த ஒரு விஷயம். ஆனால் பணக்காரர்களுக்கு அது அவர்கள் வாழ்க்கையில் இல்லை என்பதால் அதை நீங்கள் விட்டு விலகி வந்து விட்டீர்கள்.

மேலும் அதை தொல்லையாக நினைக்கிறீர்கள் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் கோபிநாத் எந்திரன் திரைப்படத்தில் இதே மாதிரியான காட்சி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் ரவுடிகள் மற்றும் சேரியை சேர்ந்தவர்கள் அதிக சத்தத்தை வைத்து பாடல்கள் கேட்பதாகவும் அது பணக்காரர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதனை விமர்சிக்கும் வகையிலேயே இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பேசப்பட்டிருந்தது.

பத்து பொன்னியின் செல்வனுக்கு சமம்.. வேள்பாரி வேலையில் இறங்கிய ஷங்கர்.. எல்லோரும் அந்த படத்துக்கு வெயிட் பண்ண என்ன காரணம் தெரியுமா?.

Velpari is a tribal leader mentioned in many places in Sangam literature. Director Shankar is soon going to make the story of Velpari into a movie.

பொன்னியின் செல்வனை விடவும் தற்சமயம் அதிகமாக மக்கள் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக வேள்பாரி திரைப்படம் இருக்கிறது. அப்படி என்ன இந்த வேள்பாரி படத்தில் இருக்கிறது என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்கிற நாவலின் தழுவல் தான் இந்த திரைப்படம். அந்த நாவலை படித்த பலருக்குமே ஏன் இப்படியான ஒரு காத்திருப்பு இந்த படத்திற்கு உள்ளது என்று தெரிந்திருக்கும்.

வேள்பாரி என்பவர் சேர சோழர் பாண்டியர் போன்ற ஒரு பெரிய பேரரசன் எல்லாம் கிடையாது. பரம்பு மலை என்கிற ஒரு மலையை ஆட்சி செய்த ஒரு குறுநில தலைவர் என்று தான் கூற வேண்டும். மன்னர் என்கிற முறை இருப்பதற்கு முன்பு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர்கள் இருந்திருப்பார்கள்.

வேள்பாரி கதை:

அப்படியாக பரம்பு மலை வேளிர் மக்களுக்கு தலைவனாக இருந்தவர் தான் வேள்பாரி. ஆனாலும் கூட அப்படிப்பட்ட வேள்பாரி வரலாற்றில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளார், கடையெழு வள்ளல்களில் வேள்பாரியும் ஒருவராக இருக்கிறார்.

அதேபோல அவ்வையார் வேள்பாரி பற்றி கூறும் பொழுது மூவேந்தர்களும் சேர்ந்து போனால்தான் வேள்பாரியை தோற்கடிக்க முடியும் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு பேரரசுகளையே பயப்பட வைத்த ஒரு மன்னராக இருந்தார் என்றால் வேள்பாரி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை தான் அந்த நாவல் பேசுகிறது.

எனவே பொன்னியின் செல்வனை விடவும் சிறப்பான ஒரு படமாக வேள்பாரி இருக்கும் என்று நம்பப்படுகிறது. கொரோனா காலகட்டங்களில் வேள்பாரியின் கதையை முழுமையாக படித்த இயக்குனர் ஷங்கர் அந்த  கதையை படமாக்குவதற்கான உரிமையை வாங்கிவிட்டார்.

மேலும் வேள்பாரி படத்தை மூன்று பாகமாக எழுத திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர் அந்த மூன்று பாகத்திற்கான திரைக்கதை வேலைகளையும் முழுவதுமாக முடித்துவிட்டார். இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் முடிந்தவுடன் வேள்பாரியின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் ஷங்கர் என்று கூறப்படுகிறது

அந்த விஜய் படம் நான் இயக்கியிருக்க வேண்டிய படம்… இயக்குனர் பார்த்திபன் கை நழுவி போன படம்!.

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பார்த்திபன் முக்கியமானவர். பெரும்பாலும் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் உலக சினிமாக்களின் சாயலை கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில் பார்த்திபன் தமிழ் சினிமாவில் சாதாரண திரைப்படங்களைதான் இயக்கி வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல உலக சினிமா தரத்தில் தமிழில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

பார்த்திபன் கதை தேர்ந்தெடுப்பு:

அதனை தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படம் ஆக்கினார் பார்த்திபன். ஆனாலும் அந்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன்.

இப்படி வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து அவர் செய்து வருகிறார் இருந்தாலும் அவருக்கு இதுவரை பெரிய ஹீரோக்கள் யாரும் திரைப்படங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்ததில்லை என்று மனம் நொந்து கூறுகிறார் பார்த்திபன்.

இப்படி ஒரு பேட்டியில் பேசும்பொழுது விஜய்யின் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்து இறுதியில் இயக்க முடியாமல் போன சம்பவத்தையும் பகிர்ந்து இருக்கிறார் பார்த்திபன்.

விஜய்யுடன் வாய்ப்பு:

அதில் அவர் கூறும் பொழுது நண்பன் திரைப்படத்தின் மூலக்கதையான 3 இடியட்ஸ் திரைப்படத்தை பார்த்த விஜய் அதை என்னிடம் தான் திரைப்படமாக்க வேண்டும் என்று கேட்டார்.

அதில் அவர் நடிக்கவும் தயாராக இருந்தார். நானும் சரி விஜய்யை வைத்து அவர் திரைப்படத்தை இயக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்கு பிறகு அந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன.

ஏனெனில் ஷங்கரும் விஜய்யும் ஒன்றிணையும் பொழுது அவர்களுக்கு நல்ல ஒரு மார்க்கெட் கிடைக்கும் படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைத்தனர். இந்த நிலையில் அந்த படத்தின் வாய்ப்பு என்னை விட்டு சென்றது என்று கூறியிருக்கிறார் பார்த்திபன். ஒருவேளை பார்த்திபனே இயக்கியிருந்தால் நண்பன் படத்தின் காமெடி தரம் என்பது இன்னும் அதிகரித்திருக்கும் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.

வேள்பாரிக்கு ஸ்க்ரிப்ட்லாம் எழுதிட்டேன்.. நடிகர்கள் பத்தி யோசிக்கல! – ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் தொடங்கி எந்திரன், 2.0 வரை இவரது படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் அதேசமயம் கலெக்சனிலும் சாதனை படைத்து விடுகின்றன. இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், இந்தியன் 3 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார்.

இதற்கிடையே அவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்த வேள்பாரி நாவல், கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு பிறகு தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதொரு நாவல் ஆகும். இதை சங்கர் மூன்று பாகமாக இயக்க உள்ளதாகவும், இதுகுறித்து முன்னணி நடிகர்களிடம் அவர் பேசி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் வேள்பாரி குறித்து சங்கரே அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது ‘வேள்பாரி’ நாவலை படித்தேன். அப்போதே அதை மூன்று பாக படமாக எடுக்க வேண்டும் என திரைக்கதை வரை எழுதி வைத்துவிட்டேன். நடிகர்கள் குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். 

சங்கரின் இந்த அறிவிப்பால் விரைவில் மற்றுமொரு சரித்திர நாவலையும் திரைப்படமாக காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏங்க நியாயம் வேண்டாமா?.. கமல்ஹாசனிடம் சென்று சண்டை செய்த பத்திரிக்கையாளர்.. இதான் காரணமாம்!..

கமல் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகமே மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றது பலருக்கும் தெரிந்த விஷயமாகும்.

எனவே இந்தியன் 2 கண்டிப்பாக பெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா எக்கச்சக்கமான செலவுகளை செய்திருக்கிறது மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கின்றன.

இந்தியன் 2:

இந்த நிலையில் படத்தை விளம்பரம் செய்வதற்காக இயக்குனர் சங்கமும் நடிகர் கமலஹாசனும் களத்தில் இறங்கி இருக்கின்றனர். நிறைய நிகழ்வுகளுக்கு சென்று வருகின்றனர். இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல யூட்யூப் சேனல்களில் சங்கர் மற்றும் கமல்ஹாசனை அதிகமாக பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

kamalhaasan

இந்தியன் 2 திரைப்படத்திற்காக வெகுவாக உழைத்திருக்கிறார் கமல்ஹாசன். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் இந்தியன் படத்தில் நான்கு ஐந்து பாகங்கள் எல்லாம் வருமா என்று கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் நீங்கள் கூறுவதை கேட்கும் போதே எனக்கு உடம்பெல்லாம் உதறுகிறது திரும்ப என்னால் இந்த மாதிரி ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

தண்ணி கூட கொடுக்கலை:

இப்படி இந்தியன் திரைப்படம் குறித்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த பொழுது ஒரு பத்திரிகையாளர் முன்வந்து இந்தியன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை மதிக்கவே இல்லை எங்களுக்கு குடிக்க தண்ணி கூட கொடுக்கவில்லை இதெல்லாம் உங்களுக்கு சரி என்று படுகிறதா என்று கேட்க தொடங்கிவிட்டார்.

Kamal_haasan

அப்பொழுது அங்க இருந்து தொகுப்பாளர் இந்தியன் திரைப்படம் குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று பதில் அளித்திருந்தார் இருந்தாலும் அந்த சமயத்தில் கமல் மட்டும் சங்கர் இருவருமே பதில் சொல்ல முடியாத தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

தமிழ் சினிமாவில் பொதுவாக பெண்கள் இளம் வயதிலேயே நடிகைகளாக அறிமுகமாகி விடுவார்கள் ஆனால் பிறகு தாமதமாகதான் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர்.

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அந்த பின்புலத்தை பயன்படுத்தி எளிமையாக கதாநாயகி ஆகிவிட்டார். அதனால் முதல் திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர்.

கார்த்தி படத்தில் அறிமுகம்:

அதற்குப் பிறகு அவருக்கு வரவேற்புகள் கிடைத்ததை அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மாவீரன் திரைப்படத்திலும் நடித்தார்.

ஆனால் கார்த்தியுடன் நடிக்கும் போது அவர் பார்ப்பதற்கு ஜோடியாக தெரிந்தாலும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை விட வயது அதிகமான ஒரு பெண்ணாக அவர் தெரிந்ததாக அப்பொழுது விமர்சனங்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் தொடர்ந்து அவர் படங்களில் கமிட்டாகி வருகிறார் இந்த நிலையில் மணிகண்டனை வைத்து குட் நைட், லவ்வர் போன்ற திரைப்படங்களை இயக்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது.

அர்ஜுன் தாஸ் படம்:

இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.  கைதி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கான வரவேற்பு அதிகரித்தது. அவரும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

மேலும் சில  பொது இடங்களுக்கு இவர்கள் ஒன்றாக சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்குமா என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் அதிதி ஷங்கரைப் பொறுத்தவரை அவர் பேட்டிகளிலேயே தனக்கு காதல் மீதெல்லாம் பெரிதாக இப்பொழுது ஈடுபாடு இல்லை என்று கூறியிருந்தார்.

அதனால் அவர்களிடையே நட்பு ரீதியான பழக்க வழக்கமாகத்தான் இருக்கும் என்று பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும் இதனால் இயக்குனர் ஷங்கர் கொஞ்சம் கவலையில் இருப்பதாக அரசல் புரசலாக பேச்சுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

எப்படி இருந்தாலும் ஷங்கருக்கு தனது மகள் நடிக்க வந்ததில் அவ்வளவாக விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் கதை இதுதான்.. 1க்கும் 2வுக்கும் இடையில் ஆறு வித்தியாசம் கூட கண்டுப்பிடிக்க முடியாது போல..

இந்தியன் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த முக்கியமான திரைப்படம். பெரும்பாலும் இப்பொழுதும் மக்களிடம் ஷங்கரின் திரைப்படத்தில் பிடித்த படம் எதுவென்று கேட்டால் முதல்வன் அல்லது இந்தியன் திரைப்படத்தைதான் கூறுவார்கள்.

அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் ஷங்கர். நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று டிரைலரை வைத்து கணித்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் இதுதான் படத்தின் கதை என்று ஒரு கணிப்பு இருக்கிறது.

படத்தின் கதை:

கல்லூரி மாணவராக இருக்கும் சித்தார்த் தொடர்ந்து இந்தியாவில் அதிகமாகி வரும் லஞ்சத்தின் காரணமாக கடுப்பாகி வருகிறார். லஞ்சம் மட்டுமன்றி இன்னும் அதிக ஊழல்கள் இந்தியாவில் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றன.

indian-2

இந்த நிலையில் இதற்காக தொடர்ந்து அகிம்சை வழியில் போராடுபவராக சித்தார்த் இருக்கிறார். அவருக்கு சண்டை எல்லாம் போடத் வராது என்று இருக்கிறது. இந்த நிலையில் இவர்களை அகிம்சை வழியில் போராடி வெல்ல முடியாது என்று சித்தார்த் நினைக்கும் போது தான் ஏற்கனவே  சேனாபதி என்கிற ஒரு முதியவர் லஞ்சம் வாங்கியவர்களுக்கு பயம் காட்டி இருக்கிறார் என தெரிகிறது.

அதனை தொடர்ந்து சேனாபதியை திரும்பவும் வர வைப்பதற்காக சமூக வலைதளங்களில் இந்தியன் தாத்தா என்கிற ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து தமிழகம் முழுவதும் மக்கள் கம்பேக் இந்தியன் என்று அவரை அழைக்க துவங்குகின்றனர்.

இந்த நிலையில் இது எப்படியோ கமல் காதுக்கு செல்ல திரும்பவும் லஞ்சத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை துவங்குகிறார் சேனாபதி இந்தியன் திரைப்படத்தில் சேனாபதியின் வழக்கை ஆய்வு செய்து வந்த காவல் அதிகாரி இதனை அறிந்து திரும்பவும் வருகிறா.ர் அவர் இந்தியனை தேட துவங்குகிறார் ஆனால் இந்த முறை சேனாபதிக்கு இளைஞர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

கதைகளத்தில் உள்ள பிரச்சனை:

 கிட்டத்தட்ட இந்த கதைகளம் அப்படியே இந்தியன் படத்தின் கதை போலத்தான் இருக்கிறது இதில் இப்போதைய தலைமுறைகளுக்கு ஏற்ற மாதிரி சில விஷயங்களை சேர்த்து இருக்கிறார்கள்.

indian-2

ஆனால் படத்தில் எதிர்மறையாக நிறைய விஷயங்கள் இருக்கின்றன முக்கியமாக படத்தின் கதைப்படி கிட்டத்தட்ட 90 வயதை தொடும் இந்தியன் தாத்தா சட்டை எல்லாம் கழட்டி போட்டுவிட்டு சண்டையிடுவது என்பது பார்க்க நகைச்சுவையாக இருப்பதாக ட்ரைலரை பார்க்கும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியன் முதல் பாகத்தை பார்த்த பலரும் அந்த முதல் பாகத்திற்கு ஈடு செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இருக்குமா என்பதை கேள்வி குறிதான் என்கின்றனர்.

ஒரு காலத்துல என்ன விரட்டி விட்ட இயக்குனர் இப்ப கமல் படத்துல நடிக்க கூப்பிடுறார்!.. வாழ்க்கை நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி!..

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்து பிறகு நடிப்பிலும் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சமுத்திரகனி. சாட்டை திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது, மேலும் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர் சமுத்திரக்கனி.

இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். அந்த நிலையில் வெகு காலங்கள் வாய்ப்புகளே கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார் சமுத்திரக்கனி.

samuthrakani

அப்போதுதான் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தியன் திரைப்படத்தில் ஆ.டி.ஓ அலுவலக காட்சிகளுக்கு அதிகமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் தேவைப்பட்டனர். இந்த நிலையில் அதற்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு பெயர் எழுதும்போது சமுத்திரக்கனி தனது பெயரையும் கொடுத்தார்.

ஆனால் அவரது பெயரை படக்குழுவை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ள சமுத்திரக்கனி கூறும்போது அப்போது ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்டுக்கே எனக்கு தகுதியில்லை என அனுப்பினார்கள் ஆனால் இப்போது இந்தியன் 2 திரைப்படம் இயக்கும்போது அதில் இயக்குனர் ஷங்கரே என்னை அழைத்து வாய்ப்பளித்துள்ளார் என்கிறார் சமுத்திரக்கனி.

அவ்வளவு நல்ல படத்தையா கைவிட்டேன்!.. இயக்குனரிடம் போன் செய்து மன்னிப்பு கேட்ட ஷங்கர்!.

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. அவர் இயக்கிய முதல்வன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.

பொதுவாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசுவார் ஷங்கர் சில காலங்களுக்கு பிறகு திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார் ஷங்கர்.

குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் பசங்க படத்தின் கதையை ஷங்கரிடம் கூறினார். அந்த கதை ஷங்கருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே அவர் அதை தயாரிக்கவில்லை.

அதன் பிறகு அந்த படத்தை இயக்குனர் சசிக்குமார் தயாரித்தார். பசங்க திரைப்படம் வெளியான பிறகு அந்த படத்திற்கு அதிக வரவேற்பு வர துவங்கியது. இந்த நிலையில் பாண்டிராஜிக்கு போன் செய்த ஷங்கர், இந்த கதையையா என்கிட்ட சொன்னீங்க எப்படிப்பட்ட கதையை வேண்டாம்னு சொல்லியிருக்கேன் ரொம்ப சாரி பாண்டிராஜ் என கூறியுள்ளார் ஷங்கர்.

அதன் பிறகு பசங்க படம் தேசிய விருது பெற்றப்போதும் கூட அதற்காக வாழ்த்தியுள்ளார் ஷங்கர்.