Tag Archives: Velpari

வேள்பாரியில் கூட்டு சேரும் கமல் ரஜினி… கை கொடுக்கும் நிறுவனம்..!

இயக்குனர் ஷங்கரின் கனவு படமாக இருந்து வரும் திரைப்படம்தான் வேள்பாரி எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி இரண்டு பாகங்களாக வெளிவந்து ஒரு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்று பிரபலமடைந்த நாவல்தான் வேள்பாரி.

பறம்பு மலையில் வாழும் வேள்பாரி என்கிற குல தலைவனின் கதையை கொண்டு இந்த நாவல் அமைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அதனை படித்த ஷங்கர் இதை எப்படியாவது திரைப்படமாக்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறார்.

ஆனால் சமீப காலமாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே அவர் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

இதனால் அவருக்கு வேள்பாரி திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் வெளிநாட்டு தயாரிப்பாளர் ஒருவர் வேள்பாரி படத்தை தயாரிப்பது குறித்து இயக்குனர் ஷங்கரிடம் பேசி வருகிறாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் வயதான இரண்டு கதாபாத்திரங்கள் வருகின்றன வேள்பாரி கூட்டத்தில் ஒரு முதுதலைவர் இருப்பார். அதே மாதிரி பாண்டியர்களின் பக்கம் இருந்து பேசக்கூடிய ஒரு வயதான கதாபாத்திரமும் இருக்கிறது.

இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் கமல் மற்றும் ரஜினிகாந்தை நடித்த வைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர் இது குறித்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை என்கிற பகுதியின் மன்னரான வேள்பாரியை அழிப்பதற்கு மூவேந்தர்களும் ஒன்றினைகின்றனர். இந்த நிலையில் அவர்களை வேள்பாரி எப்படி எதிர்க்கிறான் என்பதாகதான் கதை செல்கிறது.

இந்த நிலையில் முதன் முதலாக தமிழில் வேள்பாரி நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அதற்காகதான் இந்த வேள்பாரி வெற்றி விழா நடந்தது.

அதில் பேசிய ரஜினிகாந்த் பேசும்போது இந்த விழாவிற்கு என்னை அழைத்தப்போது நான் வேள்பாரி நாவலை படிக்கவே இல்லையே.. என்னை எதற்கு அழைத்தீர்கள் என கேட்டேன். அதற்கு பதிலளித்த சு.வெங்கடேசன் உங்களுக்கு கதை சொல்வதற்கு நான் ஆள் அனுப்புகிறேன் அவர் வேள்பாரி கதையை சொல்வார் என்றார்.

அப்படியாக கதையை கேட்டுதான் இங்கு வந்தேன். நீங்கள் எல்லாம் நினைக்கலாம். ஒரு சினிமா பிரபலத்தை புத்தக விழாவிற்கு அழைப்பது என்றால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அதிகம் புத்தகம் படிப்பவர், பெரிய பேச்சாளர், இல்லை எனில் கமல்ஹாசனை கூப்பிட்டிருக்கலாம் அதை விட்டு விட்டு 75 வயதிலும் கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் இவரை கூப்பிட்டு வந்திருக்கிறார்களா என நினைப்பீர்கள் என கிண்டலாக பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

பத்து பொன்னியின் செல்வனுக்கு சமம்.. வேள்பாரி வேலையில் இறங்கிய ஷங்கர்.. எல்லோரும் அந்த படத்துக்கு வெயிட் பண்ண என்ன காரணம் தெரியுமா?.

Velpari is a tribal leader mentioned in many places in Sangam literature. Director Shankar is soon going to make the story of Velpari into a movie.

பொன்னியின் செல்வனை விடவும் தற்சமயம் அதிகமாக மக்கள் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக வேள்பாரி திரைப்படம் இருக்கிறது. அப்படி என்ன இந்த வேள்பாரி படத்தில் இருக்கிறது என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்கிற நாவலின் தழுவல் தான் இந்த திரைப்படம். அந்த நாவலை படித்த பலருக்குமே ஏன் இப்படியான ஒரு காத்திருப்பு இந்த படத்திற்கு உள்ளது என்று தெரிந்திருக்கும்.

வேள்பாரி என்பவர் சேர சோழர் பாண்டியர் போன்ற ஒரு பெரிய பேரரசன் எல்லாம் கிடையாது. பரம்பு மலை என்கிற ஒரு மலையை ஆட்சி செய்த ஒரு குறுநில தலைவர் என்று தான் கூற வேண்டும். மன்னர் என்கிற முறை இருப்பதற்கு முன்பு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர்கள் இருந்திருப்பார்கள்.

வேள்பாரி கதை:

அப்படியாக பரம்பு மலை வேளிர் மக்களுக்கு தலைவனாக இருந்தவர் தான் வேள்பாரி. ஆனாலும் கூட அப்படிப்பட்ட வேள்பாரி வரலாற்றில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளார், கடையெழு வள்ளல்களில் வேள்பாரியும் ஒருவராக இருக்கிறார்.

அதேபோல அவ்வையார் வேள்பாரி பற்றி கூறும் பொழுது மூவேந்தர்களும் சேர்ந்து போனால்தான் வேள்பாரியை தோற்கடிக்க முடியும் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு பேரரசுகளையே பயப்பட வைத்த ஒரு மன்னராக இருந்தார் என்றால் வேள்பாரி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை தான் அந்த நாவல் பேசுகிறது.

எனவே பொன்னியின் செல்வனை விடவும் சிறப்பான ஒரு படமாக வேள்பாரி இருக்கும் என்று நம்பப்படுகிறது. கொரோனா காலகட்டங்களில் வேள்பாரியின் கதையை முழுமையாக படித்த இயக்குனர் ஷங்கர் அந்த  கதையை படமாக்குவதற்கான உரிமையை வாங்கிவிட்டார்.

மேலும் வேள்பாரி படத்தை மூன்று பாகமாக எழுத திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர் அந்த மூன்று பாகத்திற்கான திரைக்கதை வேலைகளையும் முழுவதுமாக முடித்துவிட்டார். இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் முடிந்தவுடன் வேள்பாரியின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் ஷங்கர் என்று கூறப்படுகிறது

வேள்பாரிக்கு ஸ்க்ரிப்ட்லாம் எழுதிட்டேன்.. நடிகர்கள் பத்தி யோசிக்கல! – ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் தொடங்கி எந்திரன், 2.0 வரை இவரது படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் அதேசமயம் கலெக்சனிலும் சாதனை படைத்து விடுகின்றன. இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், இந்தியன் 3 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார்.

இதற்கிடையே அவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்த வேள்பாரி நாவல், கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு பிறகு தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதொரு நாவல் ஆகும். இதை சங்கர் மூன்று பாகமாக இயக்க உள்ளதாகவும், இதுகுறித்து முன்னணி நடிகர்களிடம் அவர் பேசி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் வேள்பாரி குறித்து சங்கரே அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது ‘வேள்பாரி’ நாவலை படித்தேன். அப்போதே அதை மூன்று பாக படமாக எடுக்க வேண்டும் என திரைக்கதை வரை எழுதி வைத்துவிட்டேன். நடிகர்கள் குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். 

சங்கரின் இந்த அறிவிப்பால் விரைவில் மற்றுமொரு சரித்திர நாவலையும் திரைப்படமாக காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களே வரவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்து கொண்டிருக்கிறார்.

அதனால் அவரது இயக்கத்தில் திரைப்படங்கள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் சங்கர். இந்தியன் 2 திரைப்படத்தோடு சேர்த்து ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

பெரும் பட்ஜெட் படம்:

எனவே இந்த வருடம் சங்கர் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படங்களுக்கு பிறகு சு.வெங்கடேசன் எழுதிய விகடனில் தொடராக வந்த வேள்பாரி தொடரை திரைப்படமாக இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

velpari

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக ஏற்கனவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அஜித்தை நடிக்க வைப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை சங்கரின் இயக்கத்தில் அஜித் எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை என்பதால் இந்த செய்தி குறித்து வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் கண்டிப்பாக அது வேள்பாரி கதாபாத்திரமாக இருக்காது கதையில் வரும் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரமாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் வேள்பாரி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

தமிழ் மண்ணின் குலத்தலைவனின் கதை இது!.. பாகுபலி கூட பக்கத்துல நிக்க முடியாது!. வேள்பாரி ப்ரோஜக்டை ஓப்பன் செய்யும் சங்கர்!.

பெரும் பட்ஜெட் இயக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி, கன்னடத்தில் ஒரு பிரசாந்த் நீல் இருக்கிறார்களோ அப்படிதான் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரும் இருக்கிறார்.

2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பல வருடங்களாகவே இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை போக்கும் வகையில் இந்தியன் 2 மற்றும் 3, கேம் சேஞ்சர் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.

வேள்பாரி ப்ரோஜக்ட்

இந்த படங்களின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் தற்சமயம் அடுத்து சு.வெங்கடேசன் எழுத்தில் விகடனில் கதையாக வந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை படமாக்க இருக்கிறார் ஷங்கர். வெகுநாட்களாகவே இந்த கதையை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார் ஷங்கர்.

எனவே தற்சமயம் இந்த படத்தை தயாரிப்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசியுள்ளார் ஷங்கர். இந்த படம் 1000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

வேள்பாரி:

தமிழ்நாட்டில் சேரர், சோழர் பாண்டியர் மாதிரியான பேரரசுகள் உருவாவதற்கு முன்பு அவர்கள் தனி தனி குலங்களாக வாழ்ந்து வந்தனர். அந்த குலங்களுக்கு ஒரு தலைவர் இருப்பார். இந்த குல தலைவர்களை வீழ்த்தி அந்த மக்களை சேர்த்துகொண்டுதான் பேரரசுகள் விரிவடைகின்றன.

அப்படியாக ஒவ்வொரு குல தலைவனாக வீழ்த்திய பேரரசுகளுக்கே சிம்ம சொப்பணமாக இருந்தவர்தான் வேடுவர்களின் குலத்தலைவன் வேள்பாரி. பரம்பு மலையை கோட்டையாக கொண்ட வேள்பாரியை தனியாக சென்று வீழ்த்த முடியாமல் மூவேந்தர்களும் ஒன்றினைந்து வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

மேலும் முருகனை குல தெய்வமாக கொண்ட வேள்பாரி தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். எனவே வேள்பாரி படமாக வரும் பட்சத்தில் அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும்.

மொத்தம் 3 பாகம்.. 1000 கோடி செலவு? வேற லெவலுக்கு போகும் ‘வேள்பாரி’

சமீபத்தில் தமிழ் நாவல்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பல பட தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் சரித்திர நாவல்கள் பக்கம் தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளார்களாம்.

அந்த வகையில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து திரைப்படமாக மாற இருக்கிறது சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. இந்த படத்தை சங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் இதில் வேள்பாரியாக யார் நடிக்க போகிறார்? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்த படத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. அதேசமயம் யஷ், ரன்வீர் சிங் உள்ளிட்ட சிலரிடமும் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மொத்தம் 3 பாகங்களாக உருவாக்க சங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

ஒவ்வொரு பாகத்திற்கும் தோராயமாக 300 கோடி என்ற கணக்கில் மொத்தமாக 3 பாகங்களும் 1000 கோடி ரூபாய் செலவில் படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு பண செலவில் எடுப்பதால் பேன் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்பதால் பல மொழி சினிமாக்களிலும் உள்ள பிரபலமான நடிகர், நடிகைகளை இந்த படத்திற்குள் கொண்டு வர சங்கர் முயல்கிறாராம். ஆனால் 3 பாகங்களும் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்படும் என்பதால் கிட்டத்தட்ட 5 அல்லது 6 ஆண்டு காலம் இந்த படத்தின் பணிகள் தொடரும் என்பதால் பலரும் தயக்கம் காட்டுவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.