Tag Archives: indian 3

இடைவேளையில் கேரவனுக்குள் புகுந்த இயக்குனர்.. சட்டையை கழட்டி.. வேதனையை பகிர்ந்த காஜல்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். பெரும்பாலும் காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

இதனால் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நடித்த மகதீரா மாதிரியான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன.

பொதுவாகவே நடிகைகள் பலரும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது கிடையாது. கணவன், குடும்பம் என செட்டில் ஆகி விடுகின்றனர். காஜல் அகர்வாலும் அதே போல திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் பெரிதாக நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் 3 திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது ஒருமுறை படப்பிடிப்பின்போது ஒரு உதவி இயக்குனர் என்னுடைய கேரவனுக்குள் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே நுழைந்துவிட்டார். வந்தவர் வேகமாக அவரது சட்டையை கழட்டினார். நான் உடனே பயந்துவிட்டேன்.

ஆனால் அவரது நெஞ்சில் அவர் எனது பெயரை பச்சை குத்தியிருந்தார். அதை காட்டவே அவர் சட்டையை கழட்டி இருந்தார். அவர் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் தவறு என இதுக்குறித்து காஜல் கூறியுள்ளார்.

ஷங்கருக்கு ரெட் கார்டு போட்ட லைக்கா.. சிக்கலில் நிற்கும் திரைப்படம்.. இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருக்கிறார். ஷங்கர் இயக்கிய அவரது முதல் திரைப்படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் துவங்கி சமூகம் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் பேசுவதை முக்கிய வேலையாக கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அதேபோல இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களின் பட்ஜெட் என்பது அதிகமாக இருக்கும். எனவே தயாரிப்பாளர்கள் ஷங்கரை வைத்து படம் எடுப்பதை பெரிய ரிஸ்க்காக பார்ப்பதும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் கூட போட்ட காசை கூட இந்த படம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான வேலைகள் சென்று கொண்டுள்ளன. இதற்கு நடுவே இயக்குனர் ஷங்கர் அவர் இயக்கிய தெலுங்கு திரைப்படத்தை வெளியிடுவதில் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

ஆனால் லைக்கா நிறுவனம் இதுகுறித்து பிரச்சனை செய்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது இந்தியன் 3 திரைப்படத்திற்கு 30 கோடி ரூபாய் இயக்குனர் ஷங்கர் சம்பளமாக கேட்டிருந்தார். இன்னமும் 80 கோடி ரூபாய்க்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படம் எவ்வளவு வெற்றியை கொடுக்கும் என்பதே லைக்கா நிறுவனத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவே இயக்குனர் ஷங்கர் சம்பளம் வாங்காமல் இந்த திரைப்படத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்தனர்.

ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவே கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையரங்குகள் கிடைக்காத வண்ணம் செய்ய உள்ளனர் லைகா நிறுவனத்தினர் என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

வேண்டாம் அந்த சீட்டை போடாத மாப்ள.. லைக்கா எவ்வளவு சொல்லியும் கேட்காத ஷங்கர்.. இந்தியன் 3 இல் எடுத்த முடிவு..!

வேட்டையன் திரைப்படத்திற்கு முன்பு வரை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு வெளியான திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.

லால் சலாம் திரைப்படமும் சரி இந்தியன் டு திரைப்படமும் சரி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதே சமயத்தில் எடுக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை கொடுத்தது.

விடாமுயற்சி திரைப்படமும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.

லைக்காவின் திட்டம்:

director shankar

எனவே திரையரங்குகளில் வெளியிட்டால் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது எனவே லைக்கா நிறுவனம் இந்த படத்தை நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறது என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஏற்கனவே சேரன் கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் இதற்கு முயற்சி செய்தனர் இப்பொழுது அந்த வகையில் லைக்காவும் டிவி நிறுவனங்களிடம் திரைப்படத்தை நேரடியாக விற்பனை செய்யலாம் என்று நினைத்தது.

ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு பெரிய இயக்குனரின் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவில்லை என்றால் அது அவருக்கு அவமானமாக இருக்கும் என்பதால் ஷங்கர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் 4க்கு எங்கக்கிட்ட ப்ளான் இருக்கு.. குண்டை தூக்கி போட்ட சித்தார்த்..! இவங்க இன்னும் திருந்தல மாமா..!

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை என்னதான் ஒரு நடிகர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அவர் சரியாக ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்த திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள்.

அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அதுதான் நிலைமை. அதனால்தான் ரஜினி, விஜய், கமல்ஹாசன் மாதிரியான பெரிய நடிகர்கள் கூட ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர்.

அதேபோல அவர்களுக்கு தோல்வி படங்கள் என்பதும் அமைவதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. பொதுவாக தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளில் இப்படி கிடையாது பெரிய நடிகர் என்று அவரது திரைப்படத்தை பார்த்து வெற்றி கொடுத்து விடுவார்கள்.

இந்தியன் நான்கின் கதை:

ஆனால் தமிழில் அப்படி கிடையாது அப்படியாக கமல்ஹாசனுக்கு சமீபத்தில் பெரும் தோல்வியை கொடுத்த படமாக இந்தியன் 2 திரைப்படம் இருந்தது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அதிக பொருட் செலவில் உருவான திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 திரைப்படத்தை எப்படியாவது விற்பனை செய்து விட வேண்டும் என்பது லைகாவின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய நடிகர் சித்தார்த் கூறும் பொழுது இந்தியன் 3 திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும்.

ஆனால் நான் இந்தியன் படத்தின் நான்காவது பாகத்திற்கு தான் அதிகமாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அந்த திரைப்படத்தின் கதை இதைவிட சிறப்பாக இருந்தது என்று கூறுகிறார் சித்தார்த். இதை வைத்து இந்தியன் திரைப்படத்தின் நான்காம் பாகம் வேறு வர இருக்கிறதா என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் தயார்!.. கெத்து காட்டும் உலகநாயகன்!..

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பெரும் பட்சத்தில் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாகமே தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். அப்பொழுது இயக்குனர் ஷங்கருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்த படமாக இந்தியன் இருந்தது.

இதனை தொடர்ந்து தப்பித்த இந்தியன் தாத்தாவின் தொடர்ச்சியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பிற்கு தாமதமானதால் அதை முடிப்பதற்கும் தாமதமாகிவிட்டது.

இந்த நிலையில் படத்தின் மூன்றாம் பாகத்தையும் சேர்த்து எடுத்துவிட்டார் ஷங்கர் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது மூன்றாம் பாகத்தை முழுமையாக எடுத்து முடித்து விட்டார்களாம். இரண்டாம் பாகத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் இன்னும் திரும்ப எடுக்க வேண்டி இருக்கிறதாம்.

அதன்படி கமலை வைத்து இரண்டு படங்களையும் எடுத்து விட்டதால் மேலும் 120 கோடியை சம்பளமாக கேட்டுள்ளார் கமல். இதனையடுத்து அடுத்த வருடம் ஒரு படம் அதற்கு அடுத்த வருடம் ஒரு படம் என இரண்டு வருடங்களில் வரிசையாக இரண்டு பாகத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். நிச்சயமாக இந்த படம் கமலுக்கு முக்கியமான திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.