Tag Archives: siddharth

என்னப்பா பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்டீங்க.. பத்திரிக்கையாளர் கேள்வியால் ஆடிப்போன சித்தார்த்..!

தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகராக நடிகர் சித்தார்த் இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்திற்கு தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

அவருக்கு ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது என்றால் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அவர் சமீபத்தில் நடித்த திரைப்படம் இந்தியன் 2.

இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது மேலும் அதில் சித்தார்த்தின் கதாபாத்திரம் பலருக்கும் பிடிக்காத கதாபாத்திரமாகவே இருந்து வந்தது.

சித்தார்த் சொன்ன பதில்:

 

இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் சித்தார்த் பேசிக் கொண்டிருந்த பொழுது சில காலங்களாக நீங்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டீர்களே? சித்தா திரைப்படத்திற்கு பிறகு உங்களை சினிமாவில் காணவில்லையே என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த சித்தார்த் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க இப்பதான் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தேன். வருடத்திற்கு இரண்டு திரைப்படங்கள் நான் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் தமிழ் சினிமாவில் என்னை காணவில்லை என்று கூறுகிறீர்கள். நான் எப்பொழுதும் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறேன். எனது வீடு சென்னையில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சித்தார்த்.

அது முழுக்க முழுக்க என் கதை.. சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து இயக்குனர் குற்றச்சாட்டு..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருந்து வந்துள்ளன. ஆனால் ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு பிறகு அவர் சீரியஸான திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து வருகிறார்.

ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் படங்களை விடவும் அவர் இயக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அவர் இயக்கிய வீட்ல விஷேசம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்கி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி இதற்கு நடுவே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல்.

sorgavasal

சொர்க்கவாசல் திரைப்படம்:

இந்த திரைப்படத்தில் இவர் கைதியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கிறார். செல்வராகவன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கிருஷ்ணகுமார் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அவர் கூறும்போது  சைதாப்பேட்டை கிளைச்சிறையில் கைதிகளுடன் நான் சந்தித்த அனுபவங்களை கிளைச்சிறை என்னும் தலைப்பில் கதையாக எழுதினேன்.

அதன் முழு திரைக்கதையும் ட்ரீம் வாரியர் நிறுவனத்திடம் இருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கதை சொர்க்கவாசல் என்று படமாக்கப்பட்டுள்ளது என அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

என்னை வேணும்னே கீழ தள்ளி விட பார்த்தாரு.. நட்சத்திர நடிகரால் ஆடிப்போன சித்தார்த்..!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர் நிறைய திரைப்படங்களில் நிறைய வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் சித்தார்த்.

அதனாலேயே அவருக்கு என்று தனி வரவேற்பு தமிழ் சினிமாவில் உண்டு சமீபத்தில் கூட நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சித்தா என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது.

மேலும் பள்ளி சிறுமிகள் குறித்து பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது. அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. தொடர்ந்து சித்தார்த் நிறைய திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகர் சித்தார்த்:

ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த். பாலிவுட்டில் அமீர்கானுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

siddharth ameerkhan

அந்த படத்தின் அனுபவங்கள் சமீபத்தில் அவர் பேசியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது ஒரு காட்சியில் நான் அமீர்கானை எட்டி உதைப்பது போன்ற காட்சி இருந்தது. அப்பொழுது நான் அமீர்கானிடம் கூறாமலேயே உதைத்து விட்டேன்.

பாலிவுட் அனுபவம்:

ஆனால் அவர் சமாளித்துக்கொண்டார். பிறகு படப்பிடிப்பு முடிந்த பிறகு உங்களிடம் சொல்லிவிட்டு நான் செய்திருக்க வேண்டும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நண்பர்கள் என்றால் அப்படித்தானே இருப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் இன்னொரு காட்சியில் நான் ஒரு கட்டிடத்தின் உச்சியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பேன். அந்த காட்சியில் என்னிடம் சொல்லாமலே வந்து என்னை தள்ளி விடுவது போல் செய்தார். நான் பயந்தே போய் விட்டேன் அதில் நான் அவரை உதைத்த காட்சி படத்தில் வரவில்லை ஆனால் அவர் என்னை தள்ளுவதுபோன்று பாசாங்கு செய்த காட்சி படத்தில் வந்தது என்று கூறி இருக்கிறார் சித்தார்த்.

இந்தியன் 4க்கு எங்கக்கிட்ட ப்ளான் இருக்கு.. குண்டை தூக்கி போட்ட சித்தார்த்..! இவங்க இன்னும் திருந்தல மாமா..!

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை என்னதான் ஒரு நடிகர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அவர் சரியாக ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்த திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள்.

அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அதுதான் நிலைமை. அதனால்தான் ரஜினி, விஜய், கமல்ஹாசன் மாதிரியான பெரிய நடிகர்கள் கூட ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர்.

அதேபோல அவர்களுக்கு தோல்வி படங்கள் என்பதும் அமைவதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. பொதுவாக தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளில் இப்படி கிடையாது பெரிய நடிகர் என்று அவரது திரைப்படத்தை பார்த்து வெற்றி கொடுத்து விடுவார்கள்.

இந்தியன் நான்கின் கதை:

ஆனால் தமிழில் அப்படி கிடையாது அப்படியாக கமல்ஹாசனுக்கு சமீபத்தில் பெரும் தோல்வியை கொடுத்த படமாக இந்தியன் 2 திரைப்படம் இருந்தது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அதிக பொருட் செலவில் உருவான திரைப்படம் இந்தியன் 2.

இந்த திரைப்படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 திரைப்படத்தை எப்படியாவது விற்பனை செய்து விட வேண்டும் என்பது லைகாவின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய நடிகர் சித்தார்த் கூறும் பொழுது இந்தியன் 3 திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும்.

ஆனால் நான் இந்தியன் படத்தின் நான்காவது பாகத்திற்கு தான் அதிகமாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அந்த திரைப்படத்தின் கதை இதைவிட சிறப்பாக இருந்தது என்று கூறுகிறார் சித்தார்த். இதை வைத்து இந்தியன் திரைப்படத்தின் நான்காம் பாகம் வேறு வர இருக்கிறதா என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

சித்தார்த்தால் நொந்துப்போன சிவகார்த்திகேயன்.. அந்த விஷயம் மட்டும் இல்லனா இந்தியன் 2 வில் எஸ்.கே இருந்திருப்பார்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து  வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

அதனாலேயே தனது திரைப்படங்களில் கவர்ச்சிகளை குறைத்து வருகிறார் சிவக்கார்த்திகேயன். அவர் நடித்த டான், டாக்டர் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்சிகளே அதிகம் இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும்.

இரட்டை ஹீரோ படங்கள்:

அதே சமயம் கேடி பில்லா, கில்லாடி ரங்கா திரைப்படத்திற்கு பிறகு இரண்டு கதாநாயகர்கள் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சிவகார்த்திகேயன். அப்படி நடிக்கும் போது தனக்கான அடையாளம் தனியாக மக்கள் மத்தியில் தெரியாது என்று அவர் நினைத்தார்.

sivakarthikeyan

மேலும் இது ஒரு ரஜினியின் பார்முலா ஆகும் ரஜினி எப்போதும் அவர் நடிக்கும் திரைப்படத்தில் அவர் மட்டும் தனியாக தெரிய வேண்டும் என்று நினைக்க கூடியவர். அதே விஷயத்தை சிவகார்த்திகேயனும் கடைபிடிக்கிறார்.

இருந்தாலும் அவருக்கு இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. உண்மையிலேயே இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கப்பட இருந்தபோது சித்தார்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்தான் நடிப்பதாக இருந்தது.

இந்தியன் 2 பேச்சுவார்த்தை:

இதற்காக சிவகார்த்திகேயனிடம் சென்று பேசியிருக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி படிக்கும் மாணவனாக வரும் காரணத்தினால் தாடி எல்லாம் நீக்கி விட்டு வந்து நடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

sivakarthikeyan

இந்தியன் 2 படத்திற்காக தேதி விஷயங்களில் கூட ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தி அவ்வப்போது வந்து நடித்துக் கொடுத்துவிடலாம். ஆனால் ஏற்கனவே நடிக்கும் திரைப்படத்தில் தாடி வைத்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை எடுத்துவிட்டு எப்படி இந்தியன் நடிக்க முடியும் என்கிற காரணத்தினால் அந்த திரைப்படத்தை மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதற்கு பிறகுதான் அந்த திரைப்படத்தில் சித்தார்த்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு இந்தியன் டுவில் நடிக்க அதிக ஆசை இருந்துமே கூட இந்த விஷயத்தை நடிக்க முடியாமல் போய் உள்ளது.

அந்த மாதிரி பண்ணுனா அதுக்கு பேரு எச்ச!.. தொகுப்பாளர் மூஞ்சுக்கு முன்பு கூறிய சித்தார்த்!..

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்கு முன்பே இயக்குனர் மணிரத்தினத்திடம் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். முதல் படமானது சித்தார்த்திற்க்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் சித்தார்த் நடித்தார்.

இதற்கு நடுவே நடிகை சமந்தாவிற்கும் சித்தார்த்திற்கும் இடையே காதல் இருந்து வருவதாக பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் ஏதோ காரணத்தினால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் நடிகர் அதிதிராவ்க்கும் சித்தார்த்திற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

வெகு நாட்களாகவே இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிலையில் உறவுமுறை தொடர்பாக அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு முகத்திற்கு நேராக பதில் அளித்திருந்தார் சித்தார்த்.

siddharth

எப்படிப்பட்ட பெண் மீது உங்களுக்கு காதல் வரும்? என கேட்டப்போது அதற்கு பதிலளித்த சித்தார்த் கூறும்போது என்னை சித்தார்த் என வியந்து பார்த்த எந்த பெண் மீதும் எனக்கு ஈர்ப்பு வந்தது கிடையாது. என்னை சமமாக பார்க்கும் பெண்கள் மீதுதான் எனக்கு ஈர்ப்பு வரும் என கூறினார்.

ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை காதலித்துள்ளீர்களா என கேட்டப்போது அதற்கு எந்த கோபமும் இன்றி இல்லை என பதிலளித்தார் சித்தார். பிறகு உங்கள் நண்பரின் காதலியிடம் கவர்ச்சியாக பேசியுள்ளீர்களா? என கேட்டனர்.

அதற்கு இல்லை என்று பதிலளித்த  சித்தார்த் அதோடு இல்லாமல் அப்படி செஞ்சா அதுக்கு பேரு எச்ச என பதிலளித்தார். ஆனால் ஒரே சமயத்தில் இரு பெண்களை காதலிப்பது குறித்து கேட்கும்போது அதற்கு ஏன் அவர் எதிர்வினை ஆற்றவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நீங்க எல்லாம் விஜய்யை எப்படி பாக்குறீங்களோ ஒரிஜினல் விஜய் அப்படி கிடையாது!.. வெளிப்படையாக கூறிய சித்தார்த்!..

Actor Siddharth: தற்சமயம் வந்த சித்தா திரைப்படம் நடிகர் சித்தார்த்திற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் அப்பாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும். இளம் நடிகர்கள் எல்லாம அவ்வளவு எளிதாக அப்பா மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து விட முடியாது.

சித்தார்த்தும் கூட வெகு நாட்களாக சாக்லேட் பாய் போல காதல் திரைப்படங்களாகதான் நடித்து வந்தார். பிறகு தற்சமயம் கொஞ்சம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சித்தார்த். அப்படியாகதான் அவருக்கு சித்தா திரைப்படமும் அமைந்துள்ளது.

சித்தா திரைப்படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் சித்தார்த். இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்திலேயே அவரை பாராட்டி பேசியிருக்கிறார் விஜய். உண்மையில் விஜய்க்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே நல்ல நட்பும் இருந்துள்ளது.

இதுக்குறித்து சித்தார்த் கூறும்போது விஜய்யை நேரில் சந்திக்கும்போதெல்லாம் அவரை நான் விஜய் என பெயரை சொல்லிதான் அழைப்பேன். அவரும் என்னை சித்தார்த் என சகஜமாக பேசுவார். ஆனால் பொதுவில் நான் விஜய்யை பற்றி பேசும்போது அவரை விஜய் சார் என கூற வேண்டும் என்பார்கள்.

உண்மையில் விஜய் மிகவும் சிம்பிளான ஆள். நீங்கள் நினைப்பது போன்ற ஆள் விஜய் கிடையாது என கூறியுள்ளார் சித்தார்த்.

நான் ஜட்டிய கழட்டுனதால ஹீரோயின் அம்மா அலறிட்டாங்க!.. படப்பிடிப்பில் சித்தார்த் செய்த சம்பவம்!..

Actor Siddharth : தமிழில் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். தமிழில் முதல் முதலில் வரும் பாய்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் பாய்ஸ்.  ஆனால் அந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து சித்தார்த் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர்.

அதில் உதயம் nh4, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பே ஆயுத எழுத்து திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். இந்த நிலையில் பாய்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் பேசும்பொழுது ஒரு காட்சியில் சித்தார்த் தனது உள்ளாடையை கழட்டி விட்டு பொது வழி சாலையில் ஓடுவது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியை எடுப்பதற்காக சித்தார்த் இரண்டு உள்ளாடைகள் போடப்பட்டிருந்தார். படப்பிடிப்பு துவங்கியவுடன் சித்தார்த் வழக்கம் போல அதில் மேலே உள்ள உள்ளாடையை மட்டும் கழட்டினார்.

அப்பொழுது அங்கே இருந்த கதாநாயகியின் அம்மா கதாபாத்திரம் சித்தார்த்தை பார்த்து அலற துவங்கிவிட்டார். ஒருவேளை இரண்டு உள்ளாடையும் சேர்த்து கழட்டி விட்டோமா என்ற பயத்தில் அதிர்ச்சியுடன் பார்த்திருக்கிறார் சித்தார்த்.

ஆனால் அவர் ஒரு உள்ளாடையைதான் கழட்டி இருக்கிறார் இருந்தாலும் எதற்காக அந்த கதாநாயகியின் அம்மா கதாபாத்திரம் கத்தினார் என பார்க்கும் பொழுது அவருக்கு எந்த காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதே அறியாமல் இருந்திருக்கிறார் எதற்காக கதாநாயகன் திடீரென உள்ளாடையை கழட்டுகிறார் என்று பயத்தில் அலறி இருக்கிறார் அந்த பெண். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் சித்தார்த்.

பரோட்டா குருமாவை கைல ஊத்துனதுக்காக கடையையே பிரிச்சுட்டோம்… மதுரையில் சித்தார்த் செய்த சம்பவம்!.

Actor Siddharth: இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். சித்தார்த்தை பொறுத்தவரை அவர் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரம் என கூறலாம்.

பேட்டிகளிலும் சரி மக்கள் மத்தியில் பேசும்போதும் சரி மற்ற நடிகர்களை போல மிக சீரியஸாக பேசிக் கொண்டிருக்க மாட்டார். மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். தமிழ் சினிமாவில் அவருக்கென அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் பல திரைப்படங்களில் சித்தார்த் நடித்திருக்கிறார்.

தற்சமயம் அவர் நடித்து வெளியான சித்தா என்கிற திரைப்படம் வெகுவாக பேசப்பட்டது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசப்பட்ட இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் ஜிகர்தண்டா படப்பிடிப்பில் இருந்த பொழுது நடத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறியிருந்தார்.

ஜிகர்தண்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் பொழுது தினமும் மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில்தான் கூட்டமாக சேர்ந்து அனைவரும் உணவு அருத்துவார்களாம். அப்படி ஒருமுறை உணவருந்தி கொண்டிருந்த பொழுது அந்த கடையின் வேலையால் தெரியாமல் சித்தார்த்தின் கையில் குருமாவை ஊற்றி விட்டார் அதற்காக பிரச்சனை செய்த பட குழுவினர்.

 பிறகு யோசித்து அதையே படத்தில் காட்சியாகவும் வைத்திருக்கின்றனர் அப்போது படத்தின் காட்சிகளுக்காக அந்த கடையை பிரித்து மேய்ந்துவிட்டனர்களாம் பட குழுவினர் இதை சித்தார்த் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Ayalaan : என் படத்தில் ஏலியனுக்கு வடிவேலு ஒன்னும் வாய்ஸ் கொடுக்கலை!.. இந்த ஹீரோதான் கொடுத்தார்!.. உண்மையை உடைத்த இயக்குனர்!.

Sivakarthikeyan ayalaan movie : மாவீரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பொருத்தவரை அந்த திரைப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏனெனில் இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இடையில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக படம் சில நாட்கள் எடுக்கப்படாமல் இருந்தது. ஒரு வழியாக முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

ஏலியன் தொடர்பாக தமிழ் சினிமாவில் பெரிதாக பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் வராத நிலையில் அயலான் அந்த பெருமையை பெற்ற ஒரு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இதற்கு முன்பு இயக்கிய இன்று நேற்று நாளை திரைப்படம் தமிழில் வெகுவாக வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருந்தது.

எனவே இந்த திரைப்படத்திற்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது இந்த நிலையில் இதில் ஏலியனிற்க்கு டப்பிங் யார் பேசினார் என்கிற விஷயம் குறித்து சில புரளிகள் இணையத்தில் வளம் வந்து கொண்டிருந்தன. அதாவது நடிகர் வடிவேலுதான் அந்த ஏலியனிற்க்கு டப்பிங் பேசி உள்ளார் என்பதும் அதனால் அதை சிறப்பாக இருக்கப் போகிறது என்றும் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த விஷயத்தை அறிந்த இயக்குனர் ஆர் ரவிக்குமார் தற்சமயம் யார் உண்மையிலேயே அந்த ஏலியனிற்கு டப்பிங் பேசியது என்பதை கூறியுள்ளார். நடிகர் சித்தார்த் தான் ஏலியனிற்கு டப்பிங் பேசியுள்ளார் என்று இயக்குனர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இதற்கு முன்பு சித்தார்த் லயன் கிங் திரைப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதில் ஏற்கனவே முன் அனுபவம் கொண்டவர்தான் சித்தார்த் என்பதால் இந்த படத்திற்கு டப்பிங் பேசுவதில் அவருக்கு எதுவும் சிரமம் இருந்திருக்காது என்று நம்பப்படுகிறது.

பொண்ணுங்க உடையில் நடிக்கணும்!.. படக்குழுவின் பேச்சால் கடுப்பான சித்தார்த்!..

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சித்தார்த். பெரும் நடிகர்கள் அளவிற்கு சினிமாவில் சித்தார்த் பிரபலமாக இல்லாவிட்டாலும் கூட அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு ஆவல் இருக்கதான் செய்கிறது.

இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து அதன் பிறகு கதாநாயகன் ஆனவர் சித்தார்த். சமூகம் சார்ந்து பல விஷயங்களை தனது திரைப்படத்தில் பேசியவர் சித்தார்த். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடிக்கும்போது ஒரு காட்சியில் ஜிவி பிரகாசுக்கு பெண்கள் அணியும் நைட்டி என்னும் ஆடையை அணிந்து அழைத்துச் செல்வார் சித்தார்த்.

அதன் பிறகு ஒரு காட்சியில் சித்தார்த்தின் அம்மா அவரிடம் பேசும் பொழுது பெண்களின் ஆடையை இழிவாக பார்த்ததால் தானே நீ அந்த ஆடையை அணிவித்து அவனை அழைத்து வந்தாய் என்று கூறி எங்கள் ஆடை என்ன அவ்வளவு கேவலமானதா? என்று ஒரு கேள்வியை கேட்பார்.

அந்தப் படத்திற்கு பிறகு சித்தார்த்தத்திற்கு பெண்கள் ஆடை குறித்து ஒரு விழிப்புணர்வு வந்தது. எனவே டக்கர் திரைப்படத்தில் அவர் பெண் ஆடையை அணியும் ஒரு காட்சி வரும் பொழுது எந்தவித தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் நடித்தார். அப்பொழுது இருந்த பட குழுவினர் இந்த ஆடையை அணிவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா? சார் என்று கேட்டுள்ளனர் அதனால் கடுப்பான சித்தார்த் இந்த ஆடையில் கூச்சம் அடைய என்ன இருக்கிறது என்று கேட்டு சத்தம் போட்டு உள்ளார் அதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிவராஜ்குமாரின் மன்னிப்பை ஏத்துக்க முடியாது!.. ஓப்பனாக கூறிய சித்தார்த்!.

தமிழில் ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். தற்சமயம் நடித்த சித்தா திரைப்படம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் நாள் முதல் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருந்தது. எனவே இதன் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி கூறும் விதமாக மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சித்தார்த். அதில் அவர் பேசும் பொழுது அவரிடம் கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியே அனுப்பியது குறித்து கேள்வி கேட்டார்கள்.

அப்பொழுது அவர் கூறும் பொழுது நாங்கள் அனைத்தையும் சரியாக செய்துதான் அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தோம் இருந்தாலும் எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இதற்காக சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.

அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்கூடியது ஆனால் அவர்களுடைய மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் இதில் அவர்கள் தவறு எதுவுமே கிடையாது எனவே அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவே தேவையில்லை என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் சித்தார்த்.