Tag Archives: அமீர்கான்

பல வருஷத்துக்கு அப்புறம் அதை நான் லோகேஷ் படத்துல செஞ்சேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அமீர்கான்..!

பாலிவுட்டில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த சித்தாரே சமீபர் என்கிற திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அமீர்கானின் கதை தேர்ந்தெடுப்புகள் என்பது மிக வித்தியாசமானதாக இருக்கும்.

அவர் நடித்த தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே பெண்கள் முன்னேற்றம் குறித்த கதைகளத்தை கொண்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை தேர்ந்தெடுத்தது குறித்து அவர் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கூலி திரைப்படம் குறித்து என்னிடம் லோகேஷ் கனகராஜ் பேச வந்த பொழுது படத்தின் கதையை கூட நான் கேட்கவில்லை.

ரஜினி சாரின் படம் என்று கூறியதுமே நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வெகு வருடங்களுக்குப் பிறகு படத்தின் கதையை கூட கேட்காமல் ஒரு திரைப்படத்தை ஒப்புக்கொண்டேன் என்றால் அது கூலி திரைப்படம்தான்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு தினமும் படப்பிடிப்புக்கு காலை நான்கு மணிக்கே வந்து விடுவாராம் அமீர்கான். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது பொதுவாக படப்பிடிப்பதற்கு நான் ஒன்பது மணிக்கு தான் செல்வேன்.

ஆனால் எனது கையில் டாட்டூ குத்தப்பட்டு இருக்கும் அதனால் எனக்கு மேக்கப் போடுவதற்கு அதிக நேரம் எடுக்கும். மேலும் ரஜினி சார் எப்பொழுதும் டைமிங் இல் படபிடிப்பில் இருப்பார். எனவே அவருக்குப் பிறகு படப்பிடிப்புக்கு வருவது என்பது எனக்கு பெரிய ரிஸ்க்.

எனவேதான் நான் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நான்கு மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் அமீர்கான்.

 

 

 

பாலிவுட்டில் உருவாகும் எல்.சி.யு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்த பிறகும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பாலிவுட் திரைப்படங்களை இயக்காமல் இருக்கிறார்.

பெரிதாக வளரும் இயக்குனர்களுக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் வாய்ப்புகள் வருவது உண்டு. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்க்கு அப்படியான வாய்ப்புகள் வந்ததா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லோக்கி  மாநகரம் திரைப்படத்திற்கு பிறகே எனக்கு வாய்ப்புகள் வந்தது ஆனால் அந்த படத்தை திரும்ப எடுக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

அதேபோல கைதி திரைப்படத்திற்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கும் கூட எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் செய்த வேலையை திரும்ப செய்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று நான் நினைத்தேன்.

அதனால் ஹிந்தியில் படம் பண்ணாமலே இருந்தேன். தற்சமயம் கூலி திரைப்படத்திற்காக அமீர்கானிடம் சந்தித்து பேசிய பொழுது அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அமீர் கானுக்கும் என்னுடைய வேலை பிடித்திருந்தது.

கூலி திரைப்படத்தில் நானும் அவரை காட்டியிருந்த விதம் அவருக்கே புதிதாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கென்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். எனவே பாலிவுட்டில் அமீர்கானை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பெரும்பாலும் கூலி திரைப்படத்தில் வரும் அமீர்கானின் கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி அந்த கதை உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியோடு இணையும் அமீர்கான்.. கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களை விடவும் ரஜினிகாந்த் படம் என்னும்போது இன்னமும் சிறப்பாக செய்திருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இந்த நிலையில் தளபதி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பெயர் தேவா என இருக்கும். அதே பெயரே இந்த படத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களமும் போதைக்கு எதிரானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏனெனில் கூலி திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. எனவே படத்தை பல மொழிகளிலும் வெளியிட வேண்டி இருக்கும். எனவே எல்லா மொழிகளிலும் பிரபலமான நடிகர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்சமயம் ஹிந்தியில் இருந்து நடிகர் அமீர்கான் இந்த படத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

மனசு கஷ்டமாயிடுச்சி.. எஸ்.கேவிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்த அமீர்கான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் ஓரளவு ஹிட் கொடுத்துவிடும் நிலை உள்ளது.

அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாகவே இருக்கின்றன.

தற்சமயம் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே எக்கச்சக்க வரவேற்புகள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே அமீர்கான் நடித்து சமீபத்தில் வெளியான சித்தாரே சமீன்பர் என்கிற திரைப்படத்தில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அமீர்கான் தயாரிப்பதாகதான் இருந்ததாம். ஆனால் அமீர்கானுக்கு அந்த கதை பிடித்துப்போகவே அதில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த விஷயத்தை மேடையில் பகிர்ந்த அமீர்கான் இதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழில் வரும் அமீர் கான் படம்.. சித்தாரே சமீர் பர்.. இதுதான் கதை..!

பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அமீர்கான் இருந்து வருகிறார். இப்பொழுது அவரது நடிப்பில் இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சித்தாரே சமீன் பர்.  இது 20 ஜூன் அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது.

சித்தாரே சமின்பர் படம் தாரே சமின்பர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறலாம். தாரே சமின்பர் திரைப்படத்தில் எழுதுவதற்கு கஷ்டப்படும் ஒரு சிறுவனுக்கு ஆசிரியராக வரும் அமீர்கான் அவனை எப்படி சரி செய்கிறார் என்பதாக கதை செல்லும்.

அதை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழில் பசங்க 2 என்கிற திரைப்படம் வந்தது. இந்த நிலையில் சித்தாரே சமீன் பர் முழுக்க முழுக்க அதிலிருந்து மாறுபட்ட ஒரு படமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம்தான் குடிகாரனாகவும் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியாதவனாகவும் இருக்கிறது. இந்த நிலையில் மனநல பிரச்சனை கொண்ட நபர்களை வைத்து உருவாகும் புட்பால் டீமை வழிநடத்தும் பணி அமீர் கானுக்கு வருகிறது.

அதை வைத்து அவர் என்ன செய்கிறார் என்பதாக படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜெனிலியா வெகு வருடங்களுக்கு பிறகு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் களத்தில் இறங்கிய அமீர் கான்.. இந்த படமும் தமிழில் வருமா?

அமீர் கான் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருக்கும். அந்த திரைப்படங்களில் வழக்கமாக உள்ளது போல ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது என்றாலும் கூட சிறப்பான கதை அமைப்பை கொண்டிருக்கும்.

இதற்கு முன்பு அவரது தயாரிப்பில் தங்கல் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இரண்டு பெண்களை குஸ்தியில் சாம்பியன் ஆக்கும் தந்தையின் கனவை வைத்து கதை செல்லும்.

அதே போல தாரே சமீன் பர் என்கிற இன்னொரு திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் ஒரு சிறுவனுக்கு படிப்பே வராது. இதனால் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவான். இந்த சமயத்தில் புதிதாக சேரும் பள்ளியில் வாத்தியாராக அமீர்கான் வருகிறார்.

அவர் எப்படி இவனை படிக்க வைக்கிறார் என்பதாக அந்த கதை செல்லும். அதனை தொடர்ந்து சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par) என்கிற இன்னொரு திரைப்படத்தின் ட்ரைலர் வந்துள்ளது. இதில் மாற்று திறனாளிகளாக இருக்கும் நபர்களை கொண்டு ஃபுட் பால் டீம் ஒன்றை உருவாக்குகிறார் அமீர் கான். அதனை வைத்து இந்த படத்தின் கதை செல்கிறது.

தாரே சமீன் பர் திரைப்படத்தை கொஞ்சமாக மாற்றி சூர்யா பசங்க 2 என்கிற திரைப்படமாக எடுத்தார். அதே போல இந்த படமும் தமிழில் வருமா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.

என்னை வேணும்னே கீழ தள்ளி விட பார்த்தாரு.. நட்சத்திர நடிகரால் ஆடிப்போன சித்தார்த்..!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர் நிறைய திரைப்படங்களில் நிறைய வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் சித்தார்த்.

அதனாலேயே அவருக்கு என்று தனி வரவேற்பு தமிழ் சினிமாவில் உண்டு சமீபத்தில் கூட நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சித்தா என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது.

மேலும் பள்ளி சிறுமிகள் குறித்து பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது. அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. தொடர்ந்து சித்தார்த் நிறைய திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகர் சித்தார்த்:

ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த். பாலிவுட்டில் அமீர்கானுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

siddharth ameerkhan

அந்த படத்தின் அனுபவங்கள் சமீபத்தில் அவர் பேசியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது ஒரு காட்சியில் நான் அமீர்கானை எட்டி உதைப்பது போன்ற காட்சி இருந்தது. அப்பொழுது நான் அமீர்கானிடம் கூறாமலேயே உதைத்து விட்டேன்.

பாலிவுட் அனுபவம்:

ஆனால் அவர் சமாளித்துக்கொண்டார். பிறகு படப்பிடிப்பு முடிந்த பிறகு உங்களிடம் சொல்லிவிட்டு நான் செய்திருக்க வேண்டும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நண்பர்கள் என்றால் அப்படித்தானே இருப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் இன்னொரு காட்சியில் நான் ஒரு கட்டிடத்தின் உச்சியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பேன். அந்த காட்சியில் என்னிடம் சொல்லாமலே வந்து என்னை தள்ளி விடுவது போல் செய்தார். நான் பயந்தே போய் விட்டேன் அதில் நான் அவரை உதைத்த காட்சி படத்தில் வரவில்லை ஆனால் அவர் என்னை தள்ளுவதுபோன்று பாசாங்கு செய்த காட்சி படத்தில் வந்தது என்று கூறி இருக்கிறார் சித்தார்த்.