தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கம்ல்ஹாசன். தொடர்ந்து கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப்.
இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து விழாவில் பேசிய கமல்ஹாசன் பேசிய ஒரு விஷயம்தான் அதிக வைரலாகி வருகிறது.
அதில் பேசிய கமல்ஹாசன் கூறும்போது தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியிருந்தார். இந்த நிலையில் கன்னட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இதற்கு பதிலளித்துள்ளார்.
சிவராஜ்குமார் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும் கன்னடம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துபவர்கள் முதலில் கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளீர்கள் என கேட்டுள்ளார் சிவராஜ்குமார்.
தமிழில் ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். தற்சமயம் நடித்த சித்தா திரைப்படம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படம் வெளியான முதல் நாள் முதல் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருந்தது. எனவே இதன் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி கூறும் விதமாக மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சித்தார்த். அதில் அவர் பேசும் பொழுது அவரிடம் கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியே அனுப்பியது குறித்து கேள்வி கேட்டார்கள்.
அப்பொழுது அவர் கூறும் பொழுது நாங்கள் அனைத்தையும் சரியாக செய்துதான் அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தோம் இருந்தாலும் எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இதற்காக சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.
அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்கூடியது ஆனால் அவர்களுடைய மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் இதில் அவர்கள் தவறு எதுவுமே கிடையாது எனவே அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவே தேவையில்லை என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் சித்தார்த்.
தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் நடிகர் ரகுவரனும் ஒருவர். வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் ரகுவரன்.
உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் அவரை விட சிறப்பாக யாரும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு இருக்கும். அதே போல பிற்காலங்களில் அவர் நடித்த திருமலை யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களிலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்தனைக்கும் வில்லனுக்கான எந்த ஒரு சாயலையும் அந்த கதாபாத்திரங்களில் பார்க்க முடியாது. சமீபத்தில் நடிகர் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் ரகுவரனின் தம்பியை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார்.
அவரைப் பார்த்ததும் இவருக்கு அதிர்ச்சி தாங்கவில்லை, ஏனெனில் ரகுவரன் மீது அவ்வளவு மரியாதை கொண்டவர் சிவராஜ் குமார் அவர் ரகுவரனின் தம்பியிடம் பேசும் பொழுது ரகுவரன் மாதிரி நடிப்பதற்கு இன்னொரு நடிகர் கிடையாது நான் அவரின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அடுத்து நான் நடிக்கும் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் எனக்கூறி ரகுவரன் தம்பியிடம் அவரது போன் நம்பரை வாங்கி சென்றுள்ளார் .
சிவராஜ் குமார் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கூட இவ்வளவு அடக்கமான மனிதராக இருக்கிறார் என்று அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி சீக்கிரமாகவே பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. பேரரசு அவரது திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரைதான் வைப்பார்.
ஒவ்வொரு இயக்குனருக்கும் அவரை அடையாளப்படுத்த ஒரு விஷயம் இருக்கும். அப்படி பேரரசுக்கு இந்த விஷயம் இருந்தது. ஒரு ஊர் பெயரில் படம் வருகிறது என்றால் அப்போது அது பேரரசு படமாகதான் இருக்கும் என்கிற பெயர் அவருக்கு இருந்தது.
ஆனால் எவ்வளவு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அவ்வளவு சீக்கிரமாகவே சினிமாவில் இருந்து வாய்ப்புகளை இழந்தார் பேரரசு. தற்சமயம் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வருகிறார் இந்த நிலையில் ஒரு பேட்டியில் தற்சமயம் பேசும்பொழுது கர்நாடகாவில் காவேரி பிரச்சனை காரணமாக சித்தார்த்திற்கு நடந்த பிரச்சனை குறித்து பேசி இருந்தார்.
அதாவது சித்தா படத்தின் வெளியீடு சம்பந்தமாக நிகழ்வு ஒன்றை கர்நாடகாவில் நடத்தினார் சித்தார்த். அந்த நிகழ்வில் வந்த சில கட்சிக்காரர்கள் இந்த காவிரி பிரச்சனையை காரணம் காட்டி அவரை அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் விரட்டி அடித்தனர்.
இது குறித்து பேரரசு பேசும்பொழுது தமிழர்கள் எல்லோரும் ஒரு கன்னட நடிகரை எப்படி கொண்டாடினோம். ஆனால் கர்நாடகாவில் தமிழ் நடிகரை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
கே.ஜி.எஃப் திரைப்படம் வந்தப்போது அதை தமிழ் மக்கள் பெருமளவில் கொண்டாடியதையே அவர் அப்படி குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் இந்த நிகழ்விற்கு பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இதற்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
வாரிசு திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ்டர் என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தற்சமயம் வரவிருக்கும் லியோ திரைப்படம் ஒரே சிறப்பான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு நெகட்டிவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற அக்டோபர் 19 லியோ திரைப்படம் திரையில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடிக்கும் கோஸ்ட் திரைப்படத்தையும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர். தற்சமயம் கோஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
கிட்டத்தட்ட லியோ திரைப்படத்திற்கு இணையான ஒரு ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக கோஸ்ட் இருப்பதை பார்க்க முடிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கோஸ்ட் திரைப்படம் தமிழில் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ் குமார் வந்த காட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கும் தமிழ்நாட்டில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அக்டோபர் 19 இரண்டு படங்களுக்கும் நல்ல போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைத்துறையில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே முக்கால்வாசி அந்த படம் மாஸ் ஹிட் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான்.
கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பவர்கள் அதை நம்ப முடியாது. அந்த அளவிற்கு மிகவும் எளிமையாக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரஜினிகாந்தின் எளிமை தன்மையை புகழ்ந்து பேசி உள்ளனர்.
அதேபோல கன்னட நடிகர் ஒருவரும் ரஜினிகாந்தின் எளிமை தன்மையை பார்த்து வியந்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரான சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஒரு காட்சி அதிக வெப்பம் கொண்ட ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது. இதனால் நடிக்க வந்த அனைவருக்கும் கேரவன் கொடுக்கப்பட்டது.
சிவராஜ்குமாருக்கு அதிக வெப்பம் உடலுக்கு ஆகாது என்பதால் அடிக்கடி அவர் தனது கேரவனுக்கு சென்று வந்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் கேரவனுக்கு வெளியிலேயே ஒரு குடையை போட்டு அதற்கு கீழே அமர்ந்திருந்தார். ரஜினிகாந்த் வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது நாம் அடிக்கடி கேரவனுக்கு சென்று வருவது அவ்வளவு நன்றாக இருக்காது என்று யோசித்த சிவராஜ்குமார் பிறகு கேரவனுக்கு செல்லாமல் ரஜினியிடமே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் சிவராஜ்குமார் அடிக்கடி தண்ணீரை குடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதை பார்த்த ரஜினி ஏன் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறீர்கள் உடலுக்கு ஏதும் பிரச்சனையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார் ”எனக்கு வெப்பம் அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது. ஆனால் நீங்கள் வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது நான் மட்டும் எப்படி கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்க முடியும்” என சிவ ராஜ்குமார் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கோபமடைந்த ரஜினிகாந்த் உங்களுக்கு என்ன வசதியோ அப்படியாக இருந்து கொள்ள வேண்டியதுதானே, எனக்கு வெளியில் அமர்ந்திருப்பது தான் பிடிக்கும் என்பதால் நான் வெளியில் அமர்ந்துள்ளேன் என கூறியுள்ளார் அதன் பிறகு சிவராஜ்குமாரின் படப்பிடிப்புகள் எடுத்து முடிக்கும் வரையில் அவருக்காக ரஜினிகாந்த் கேரவனுக்கு உள்ளே அமர்ந்திருந்தார்.
ரஜினியின் எளிமை தன்மையையும் ,புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் பார்த்த சிவராஜ்குமார் பல நண்பர்களிடம் இது குறித்து பேசி உள்ளார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips