தமிழில் ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். தற்சமயம் நடித்த சித்தா திரைப்படம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படம் வெளியான முதல் நாள் முதல் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருந்தது. எனவே இதன் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி கூறும் விதமாக மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சித்தார்த். அதில் அவர் பேசும் பொழுது அவரிடம் கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியே அனுப்பியது குறித்து கேள்வி கேட்டார்கள்.
அப்பொழுது அவர் கூறும் பொழுது நாங்கள் அனைத்தையும் சரியாக செய்துதான் அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தோம் இருந்தாலும் எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இதற்காக சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.
அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்கூடியது ஆனால் அவர்களுடைய மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் இதில் அவர்கள் தவறு எதுவுமே கிடையாது எனவே அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவே தேவையில்லை என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் சித்தார்த்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கி சீக்கிரமாகவே பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. பேரரசு அவரது திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரைதான் வைப்பார்.
ஒவ்வொரு இயக்குனருக்கும் அவரை அடையாளப்படுத்த ஒரு விஷயம் இருக்கும். அப்படி பேரரசுக்கு இந்த விஷயம் இருந்தது. ஒரு ஊர் பெயரில் படம் வருகிறது என்றால் அப்போது அது பேரரசு படமாகதான் இருக்கும் என்கிற பெயர் அவருக்கு இருந்தது.
ஆனால் எவ்வளவு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அவ்வளவு சீக்கிரமாகவே சினிமாவில் இருந்து வாய்ப்புகளை இழந்தார் பேரரசு. தற்சமயம் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வருகிறார் இந்த நிலையில் ஒரு பேட்டியில் தற்சமயம் பேசும்பொழுது கர்நாடகாவில் காவேரி பிரச்சனை காரணமாக சித்தார்த்திற்கு நடந்த பிரச்சனை குறித்து பேசி இருந்தார்.
அதாவது சித்தா படத்தின் வெளியீடு சம்பந்தமாக நிகழ்வு ஒன்றை கர்நாடகாவில் நடத்தினார் சித்தார்த். அந்த நிகழ்வில் வந்த சில கட்சிக்காரர்கள் இந்த காவிரி பிரச்சனையை காரணம் காட்டி அவரை அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் விரட்டி அடித்தனர்.
இது குறித்து பேரரசு பேசும்பொழுது தமிழர்கள் எல்லோரும் ஒரு கன்னட நடிகரை எப்படி கொண்டாடினோம். ஆனால் கர்நாடகாவில் தமிழ் நடிகரை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
கே.ஜி.எஃப் திரைப்படம் வந்தப்போது அதை தமிழ் மக்கள் பெருமளவில் கொண்டாடியதையே அவர் அப்படி குறிப்பிட்டிருந்தார். இருந்தாலும் இந்த நிகழ்விற்கு பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இதற்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips