தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். பெரும்பாலும் காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.
இதனால் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நடித்த மகதீரா மாதிரியான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன.
பொதுவாகவே நடிகைகள் பலரும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது கிடையாது. கணவன், குடும்பம் என செட்டில் ஆகி விடுகின்றனர். காஜல் அகர்வாலும் அதே போல திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் பெரிதாக நடிக்கவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் 3 திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது ஒருமுறை படப்பிடிப்பின்போது ஒரு உதவி இயக்குனர் என்னுடைய கேரவனுக்குள் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே நுழைந்துவிட்டார். வந்தவர் வேகமாக அவரது சட்டையை கழட்டினார். நான் உடனே பயந்துவிட்டேன்.
ஆனால் அவரது நெஞ்சில் அவர் எனது பெயரை பச்சை குத்தியிருந்தார். அதை காட்டவே அவர் சட்டையை கழட்டி இருந்தார். அவர் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் தவறு என இதுக்குறித்து காஜல் கூறியுள்ளார்.