Tag Archives: பாண்டிராஜ்

100 கோடி படமாக அமையுமா? வசூலில் பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி திரைப்படம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.

தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தாலும் கூட இன்னமும் குடும்ப திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படம் இதுவரை 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. எப்படியும் 100 கோடியை தொட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி படமாக தலைவன் தலைவி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒரு குடும்ப படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது ஒரு முக்கியமான விஷயமாக சினிமாவில் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குடும்ப படங்களுக்கும் அடுத்து வரவேற்பு அதிகமாக இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

அஜித் படத்தின் வசூலை தொட்ட தலைவன் தலைவி.. சிறப்பான சம்பவம் போலயே..!

தற்சமயம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.

தலைவன் தலைவி திரைப்படம் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் இருந்தே அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் இயக்குனர் பாண்டிராஜை பொறுத்தவரை குடும்ப கதைகளை மிகச் சிறப்பாக படமாக்க கூடியவர்.

அப்படி அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை தான் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தலைவன் தலைவி படமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குடும்பங்களுக்குள் நடக்கும் குடும்ப பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்தபடத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது.

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சில படங்கள் மட்டும் தான் பெரிய வெற்றி படங்களாக அமைந்து இருக்கின்றன. இதற்கு முன்பு விஸ்வாசம் அவர்களுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

தற்சமயம் அந்த வரிசையில் தலைவன் தலைவி திரைப்படமும் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தலைவன் தலைவி திரைப்படம் நல்ல வசூலை பெற்று இருக்கிறது.

அந்த படம் பண்ணியும் கூட வரவேற்பு கிடைக்கல.. மனம் நொந்த இயக்குனர் பாண்டிராஜ்..!

தமிழில் குடும்ப திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பாண்டியராஜ் முக்கியமானவர். பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.

அதற்கு பிறகு அவருக்கு தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது அவரது இயக்கத்தில் வந்த கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டிராஜ் பேசியிருந்தார். அப்பொழுது அவரிடம் ஏன் எப்பொழுதுமே குடும்ப படமாக எடுக்கிறீர்கள் வேறு ஏதாவது திரைப்படங்கள் எடுக்கலாமே என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாண்டிராஜ் கதகளி திரைப்படம் நான் இயக்கிய திரைப்படம்தான்.

அது பெரும்பாலும் பலருக்கும் தெரியாது. யாராவது என்னை குடும்ப இயக்குனர் என்று கூறினால் அப்பொழுது விவரம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் கதகளி இவருடைய திரைப்படம் தான் என்று கூறுவார்கள். ஒருவேளை அந்த திரைப்படம் மூலமாக எனக்கு ஒரு நல்ல மதிப்பு கிடைத்திருந்தால் அதே மாதிரியான படங்களை செய்திருப்பேன்.

ஆனால் இப்பொழுது வரை குடும்ப பட இயக்குனராக தான் என்னை பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்களும் அந்த மாதிரியான கதையை நான் சொல்லும் பொழுது தான் நம்பி படத்தை தயாரிக்கிறார்கள் எனவேதான் திரும்பவும் குடும்ப திரைப்படங்களை இயக்கி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

 

 

 

போட்டாலே மூட்டைய.. பாடலிலேயே தெரிந்த கதை… விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி..!

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கி வரும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்ததாக பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் பிறகு இந்த படம் விஜய் சேதுபதிக்கு வந்தது. இந்த பாடத்தின் பாடலான போட்டாலே மூட்டையை என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த பாடலை பார்த்தவரை படத்தின் கதை என்ன என்பதை ரசிகர்கள் ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது என்று கூறலாம்.

படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் கணவன் மனைவியாக இருக்கின்றனர். இருவரும் ஒரு உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். வில்லன் கதாபாத்திரம் என்று எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பாண்டிராஜை பொறுத்தவரை அவர் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தான் எடுத்து வருகிறார் எனவே இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவுகளின் சிக்கலை தான் திரைப்படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார்.

 

 

 

உங்கிட்ட அது இல்ல.. பொண்ணு பார்க்க போன இடத்தில் அவமானப்பட்ட இயக்குனர்.. திரும்ப செஞ்சதுதான் செய்கை..!

சினிமாவில் கஷ்டப்பட்டு பிரபலம் அடைந்த சில இயக்குனர்களில் இயக்குனர் பாண்டிராஜ் முக்கியமானவர். தற்சமயம் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு இவரது திரைப்படங்களின் வாயிலாக இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் பாண்டிராஜ். புதுக்கோட்டையை சேர்ந்தவரான பாண்டியராஜ் இயக்குனர் பாக்யராஜிடம் ஆபீஸ் பாயாக பணிபுரிந்த வந்தவராவார்.

உதவி இயக்குனராக வாய்ப்பு:

அப்போது முதலே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து பாக்யராஜ் நடத்தி வந்த பாக்கியா என்கிற இதழில் சில சிறுகதைகளை எழுதி வெளியிட்டு வந்தார் பாண்டிராஜ்.

இந்த நிலையில்தான் இயக்குனர் சேரனிடம் இவருக்கு உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. அவர் இயக்கிய வெற்றி கொடிக்கட்டு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பாண்டியராஜ். அதனை தொடர்ந்து இயக்குனர் தங்கர்பச்சான் மற்றும் அவரது நண்பரான சிம்பு தேவன் ஆகியோருடனும் பணிபுரிந்து வந்தார் பாண்டிராஜ்.

வெற்றிகளை கொடுத்த படங்கள்:

அதற்கு பிறகுதான் அவர் திரைப்படங்களை இயக்க துவங்கினார். பசங்க திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் வரவேற்பு பெற்றன. இதுவரை ஒரு பத்துக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் பாண்டியராஜ்.

அவர் ஒரு பேட்டியில் கூறும்போது ஆரம்பத்தில் கஷ்டத்தில் இருந்த பொழுது எனக்கு பெண் பார்க்க சென்றார்கள். அப்பொழுது எங்களிடம் கார் இல்லை என்பதால். அந்த பெண் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்போது அந்த பொண்ணு மாருதி 800 காரில் போகுது.

ஆனால் என்னுடைய மனைவி பிள்ளைகள் எல்லாம் ஆடி காரில் போறாங்க என்று பெருமையாக கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

ஒண்ணுமே சொல்லாமல் அந்த படத்தில் இருந்து சேரன் என்னை தூக்கிட்டாரு!.. மனம் வருந்திய பசங்க இயக்குனர்…

வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிப்பதை விட உள்ளூரிலேயே பெரிதாக சம்பாதித்து முன்னேற முடியும் என்பதை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் வெற்றி கொடி கட்டு.

இயக்குனர் சேரனால் இயக்கப்பட்ட வெற்றி கொடிக்கட்டு திரைப்படம் அப்போது வந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஆகும். இப்போது வரை கிராமத்து இளைஞர்களுக்கு வெளிநாடு சென்றால்தான் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரு எண்ணம் உண்டு.

ஆனால் அந்த எண்ணத்தை உடைத்து என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்னும் வசனத்திற்கு ஏற்ப இங்கேயே பிழைக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் சேரன் எழுதிய கதைதான் வெற்றி கொடிக்கட்டு.

வெற்றி கொடிக்கட்டு படம் திரைப்படம் ஆக்கப்படும் போது அதில் மொத்தம் ஏழு பேர் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர். அதில் சிம்பு தேவனும் இயக்குனர் பாண்டியராஜும் இருந்தனர். ஆனால் படத்திலிருந்து இரண்டு உதவி இயக்குனர்களை நீக்க வேண்டி இருந்ததால் அப்பொழுது சேரன் பாண்டியராஜையும் சிம்பு தேவனையும் நீக்கிவிட்டார்.

ஆனால் இவர்கள் இருவரும் அதற்கு முன்பே தங்களது குடும்பத்தாரிடம் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகிவிட்டதாக கூறி பெருமைப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மனமுடைந்த பாண்டியராஜ் தனது குடும்பத்தை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றிருந்தார்.

இந்த நேரத்தில் இருந்த ஐந்து உதவி இயக்குனர்களில் ஒருவர் அவராகவே படத்தில் இருந்து நீங்கி விட்டதால் அதற்கு பதிலாக சிம்பு தேவனை சேர்த்துக் கொண்டனர். இறுதியாக பட வாய்ப்பு கிடைக்காமல் தனியாக நின்றார் பாண்டியராஜ். இது குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது படத்தில் பெயர் போடும்போது அதில் உதவி இயக்குனர்கள் பெயரில் எனது பெயர் இல்லாததை பார்க்கும்பொழுது முகுந்த வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார் பாண்டிராஜ்.

கலைஞர் பேரங்குறதுக்காக எல்லாம் படம் பண்ண முடியாது!.. ஸ்ட்ரிக்டாக மறுத்த இயக்குனர்!.. பாண்டிராஜ் கொஞ்சம் டெரர்தான் போல!..

pandiraj arulnithi: பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

ஆனால் அவர் எழுதி வைத்திருந்த பசங்க திரைப்படத்தின் கதையை பலரும் மறுத்துள்ளனர். முக்கியமாக இயக்குனர் சங்கர் கூட இந்த படத்தை தயாரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் பெற்றது. இதனை அடுத்து பாண்டிராஜுக்கு அதிகமான பட வாய்ப்புகள் வரத் துவங்கின இந்த நிலையில் சில பிரபலங்கள் மூலமாக ஒரு நபர் இவருக்கு தெரிய வந்தார் அவர் வேறு யாரும் அல்ல கலைஞர் மு கருணாநிதியின் பேரனான அருள்நிதிதான்.

அருள் நிதி அப்பொழுது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்தார். எனவே அவர் பாண்டியராஜை வந்து சந்தித்து இந்த மாதிரி என்னை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா? என கேட்டுள்ளார் ஆனால் அருள்நிதி பார்க்க மிகவும் வெள்ளையாக இருந்தார்.

எனவே நீங்கள் மணிரத்தினம் அல்லது கௌதம் மேனன் திரைப்படத்தில் நடிப்பதற்குதான் சரியாக இருப்பீர்கள் என் படத்தில் உங்களை நடிக்க வைக்க முடியாது என நேரடியாக கூறிவிட்டார் பாண்டியராஜ்.

அதன் பிறகு வெகுநாட்கள் கழித்து வம்சத்தின் கதையை ஒருநாள் கூறிக் கொண்டிருந்த பொழுது அதை கேட்ட அருள்நிதி, சார் இந்த கதை நல்லா இருக்கு சார் என்று கூறியுள்ளார். பிறகு அதை அருள்நிதி வைத்து எடுக்க வேண்டும் என்றால் முதலில் அருள் நிதியை கிராமத்து ஆள் போல மாற்ற வேண்டும் என்பதற்காக அவருக்கு மீசை தாடியெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி வளர வைத்து கிராமத்து ஆள் போல மாற்றி பிறகு வம்சம் திரைப்படத்தை எடுத்துள்ளார் பாண்டியராஜ். இந்த நிகழ்வை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. அதனாலயே மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக வடிவேலு இருந்து வந்தார்.

ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கொடுக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் வடிவேலு. அது தான் வடிவேலு இவ்வளவு காலம் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு காலத்திற்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி கதாநாயகனாக நடித்த வடிவேலுவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 23ஆம் புலிகேசி. சிம்புதேவன் இயக்கிய இந்த திரைப்படம் வடிவேலுவின் கதாநாயகன் வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பமாக அமைந்தது.

இந்த படத்தில் பல விஷயங்கள் வடிவேலு சேர்த்தவை என்று கூறப்படுகிறது இருந்தாலும் இதில் ஒரு காட்சியில் வி.எஸ் ராகவன் நீங்கள் இருவரும் ஒன்று சேருவீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும் என்று கூறுவார். அதற்கு எப்படி என கேட்கும் பொழுது இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேற என்னதான் செய்ய முடியும் என்று கூறுவார்.

இந்த வசனத்தை சிம்பு தேவன் வைக்கலாம் என்று கூறிய பொழுது அதற்கு வடிவேலு ஒப்புக்கொள்ளவில்லை. இது நல்லாவே இல்லை நம்மளே தமிழ் சினிமாவை கேலி செய்வது போல இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் வி.எஸ் ராகவனுக்கும் அதில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாண்டிராஜனுக்கும் அந்த வசனம் மிகவும் பிடித்து விட்டது.

எனவே வி.எஸ் ராகவன் இந்த காட்சியை எடுத்து வைத்துக் கொள்வோம் வேண்டாம் என்றால் அதை நீக்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சரி என்று வடிவேலும் ஒப்புக்கொண்டுள்ளார் ஆனால் அந்த காட்சிக்கு தான் திரையரங்கில் அதிக வரவேற்பு கிடைத்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பாண்டிராஜ்.

அவ்வளவு நல்ல படத்தையா கைவிட்டேன்!.. இயக்குனரிடம் போன் செய்து மன்னிப்பு கேட்ட ஷங்கர்!.

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. அவர் இயக்கிய முதல்வன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.

பொதுவாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசுவார் ஷங்கர் சில காலங்களுக்கு பிறகு திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார் ஷங்கர்.

குறைந்த பட்ஜெட்டில் இருக்கும் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் பசங்க படத்தின் கதையை ஷங்கரிடம் கூறினார். அந்த கதை ஷங்கருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே அவர் அதை தயாரிக்கவில்லை.

அதன் பிறகு அந்த படத்தை இயக்குனர் சசிக்குமார் தயாரித்தார். பசங்க திரைப்படம் வெளியான பிறகு அந்த படத்திற்கு அதிக வரவேற்பு வர துவங்கியது. இந்த நிலையில் பாண்டிராஜிக்கு போன் செய்த ஷங்கர், இந்த கதையையா என்கிட்ட சொன்னீங்க எப்படிப்பட்ட கதையை வேண்டாம்னு சொல்லியிருக்கேன் ரொம்ப சாரி பாண்டிராஜ் என கூறியுள்ளார் ஷங்கர்.

அதன் பிறகு பசங்க படம் தேசிய விருது பெற்றப்போதும் கூட அதற்காக வாழ்த்தியுள்ளார் ஷங்கர்.

காது கேட்காமலே நடிச்சவரு வி.எஸ் ராகவன்!.. படக்குழுவையே திரும்பி பார்க்க வைத்தவர்!..

தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வமும் மரியாதையும் இப்போது உள்ள நடிகர்களை விட அதிகமாகவே இருக்கும். படப்பிடிப்பு துவங்குகிறது என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள் நடிகர்கள்.

சிவாஜி கணேசனை எடுத்துக் கொண்டால் அவரும் கூட எல்லா படங்களிலுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட முன்னால் வந்து விடுவாராம். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் அப்படி கிடையாது.

23ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது இயக்குனர் பாண்டி ராஜ் அதில் பணிபுரிந்திருந்தார். அந்த அனுபவம் குறித்து அவர் கூறும் பொழுது நாகேஷ், மனோரமா, வி.எஸ் ராகவன் போன்ற நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு மிக சீக்கிரமாகவே வந்து படப்பிடிப்பு நேரத்திற்கு முன்பே மேக்கப்பும் போட்டு தயாராகி விடுவார்கள் என்று கூறினார்.

இத்தனைக்கும் நடிகர் நாகேஷ் அப்பொழுது நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். இருந்தாலும் ஒரு மணி நேரம் முன்னதாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அதேபோல வி.எஸ் ராகவனுக்கு அப்பொழுது உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தன.

காது அவருக்கு ஒழுங்காக கேட்காமல் இருந்தது. இதனால் அவரை தொட்டால்தான் அவர் அடுத்த டயலாக்கை பேசுவார் மற்றவர் என்ன டயலாக் பேசுகிறார்கள் என்பது அவருக்கு தெரியாது. பக்கத்தில் நிற்கும் ஒரு ஆள் அவரது கையை தொட வேண்டும் இப்படி எல்லாம் இருந்தும் சிறப்பாக நடித்து கொடுத்தார்கள் அந்த நடிகர்கள்.

எனவே அந்த காலத்து நடிகர்களுக்கு இருக்கும் தொழில் ரீதியான மரியாதை என்பது இப்போது தமிழ் சினிமாவில் கிடையாது என்று பாண்டிராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த படத்தை தயாரிக்க முடியாதுன்னு மறுத்துட்டாரு!.. சங்கர் மறுத்து ஹிட் கொடுத்த திரைப்படம்..

Tamil Director Shankar: தமிழில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து பெரும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் சங்கர். தெலுங்கில் எப்படி பெரும் பட்ஜெட்டில் இயக்குனர் ராஜமௌலி திரைப்படம் இயக்குகிறாரோ, அதேபோல தமிழ் சினிமாவில் ஒரு ராஜமௌலியாக வலம் வருபவர் சங்கர்.

அவரது முதல் திரைப்படமான ஜென்டில்மேனில் தொடங்கி அனைத்து திரைப்படங்களுமே பெரும் பட்ஜெட் திரைப்படம்தான். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் சங்கர். சங்கரிடம் ஒரு நல்ல குணம் உண்டு சின்ன பட்ஜெட்டில் நல்ல கதையை யாராவது ஒருவர் வைத்திருந்தால் அவர்களுக்கு தயாரிப்பாளராக சங்கர் இருப்பது வழக்கமாகும்.

23ஆம் புலிகேசி திரைப்படத்திற்கு கூட சங்கர்தான் தயாரிப்பாளராக இருந்தார். இந்த நிலையில் அவரிடம் கதையை சொல்லலாம் என்று நினைத்த இயக்குனர் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் கதையை சங்கரிடம் கூறினார். ஆனால் சங்கருக்கு அந்த கதையில் விருப்பமில்லை.

இந்த கதையை தயாரிப்பது கொஞ்சம் ரிஸ்க் இந்த படம் ஓடுமா என எனக்கு கண்டிப்பாக தெரியவில்லை எனவே நான் இந்த படத்தை தயாரிக்க முடியாது என கூறினார். ஆனால் அதற்கு நேர் மாறாக பசங்க திரைப்படம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்தது சில சமயங்களில் பெரும் இயக்குனர்களின் யூகங்கள் கூட தவறாகப் போகும் என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணமாக இருக்கிறது.

எனக்கு முதல் வாய்ப்பு வாங்கி தந்தவரே விஜய் சேதுபதிதான்! – உண்மையை கூறிய விமல்!

தமிழ் சினிமாவில் நடிகர் விமல், விஜய் சேதுபதி எல்லாம் ஒரே காலக்கட்டத்தில்தான் சினிமாவில் கதாநாயகன் ஆவதற்காக வாய்ப்பு தேடி வந்தனர்.

விஜய் சேதுபதி, விமல் இருவருமே நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகே திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றனர். நடிகர் விமலுக்கு திரைத்துறையில் வளர்வதற்கு முதல் வாய்ப்பாய் அமைந்த திரைப்படம் பசங்க.

பசங்க படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும் மக்களால் ரசிக்கப்படும் ஒரு கதாபாத்திரமாக விமல் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை தொடர்ந்துதான் களவாணி திரைப்படத்தில் விமலுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிறகு அதை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்பை பெற்றார் விமல். ஆனால் பசங்க படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஆட்களை எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த விஷயத்தை விமலிடம் கூறி அவரை பரிந்துரைத்தது நடிகர் விஜய் சேதுபதி.

இயக்குனர் பாண்டிராஜுற்கு பசங்க திரைப்படம்தான் முதல் படம். அந்த படத்தில் இந்த கதாபாத்திரம் பற்றிய செய்தி முதலில் விஜய் சேதுபதிக்குதான் வந்துள்ளது. உடனே விமலை தொடர்பு கொண்ட விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரம் உனக்கு சிறப்பாக இருக்கும் உடனே இயக்குனரை போய் பார் என கூறியுள்ளார்.

விமல் அப்போது முகத்தில் சவரம் செய்து அடையாளமே தெரியாமல் இருந்தார். அவரை பார்த்த பாண்டிராஜ் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டார் என முடிவு செய்துவிட்டார். அப்போதுதான் விமல் நடித்த பழைய விளம்பரம் ஒன்றின் வீடியோவை விஜய் சேதுபதி பாண்டிராஜிடம் காட்டி உள்ளார். அதை பார்த்ததும் விமலை படத்தில் சேர்த்து கொண்டார் பாண்டிராஜ்.