நடிகர் சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகவிருக்கும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது கருப்பு திரைப்படம்.
ஆரம்பத்தில் ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் இயக்கும்போது காமெடி கதைகளைதான் தேர்ந்தெடுத்து இயக்கி வந்தார். இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கதைகளத்தை மாற்றி அமைத்தார்.
அந்த வகையில் அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதையை ஆரம்பத்தில் இவர் விஜய்யிடம் கூறியதாக ஒரு கருத்து இருந்து வருகிறது.
ஆனால் விஜய் அடுத்து ஜனநாயகன் திரைப்படத்தில் கமிட்டான காரணத்தினால் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த கதை சூர்யாவிடம் வந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி இயக்கிய படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்திருப்பதால் இந்த திரைப்படமும் வெற்றியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிரூத். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என நடிகர்களும் தயாரிப்பாளர்களுமே கேட்க துவங்கிவிட்டனர்.
அந்த அளவிற்கு அனிரூத் பிரபலமடைந்துவிட்டார். ஆனால் அதே சமயம் இளையராஜா மாதிரி நிறைய படங்களுக்கு அனிரூத்தால் இசையமைக்க முடியவில்லை. எனவே அவரே முக்கியமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர்கள் பலருக்குமே அனிரூத் மாதிரி இசையமைக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் சாய் அபயங்கர் அதை பூர்த்தி செய்யும் வகையில் எண்ட்ரி கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் வந்த 2 ஆல்பம் பாடல்கள் ஏற்கனவே நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் இவர் அனிரூத்திடம் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கறுப்பு படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் இவரது இசைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் கிட்டத்தட்ட இந்த இசையானது அனிரூத் இசையை போலவே இருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். ஆனால் ஜெயிலர் மாதிரியான அனிரூத் இசையமைத்த படங்களில் சாய் அபயங்கர் இசையமைத்து இருப்பதால் அவரது இசையும் அனிரூத் இசையை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோவில் பணிப்புரிந்து வந்த ஆர்.ஜே பாலாஜி தனது பேச்சு திறனால் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அப்படியே காமெடி நடிகராக நடித்து கொண்டு இல்லாமல் கதாநாயகனாக தனது பயணத்தை துவங்கினார் ஆர்.ஜே பாலாஜி. இதன் மூலம் இவர் அதிக வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து படங்களை இயக்கவும் துவங்கினார். இவரது இயக்கத்தில் உருவான வீட்ல விஷேசம், மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்சமயம் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தை இயக்கியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளியாகியுள்ளது. படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கிறார். இவரது இசைக்கு எந்த அளவில் வரவேற்பு கிடைக்கும் என தெரியவில்லை. ஏனெனில் டீசரிலேயே படத்தில் வரும் இசையும் பாடல் வரிகளும் புரியாத வண்ணத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips