Tag Archives: GOAT

விஜய்யின் வசூலை மிஞ்சிய டிராகன்… மாஸ் காட்டும் பிரதீப்.!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகராக மாறி வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். முன்பை விட தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் மிக எளிதாக நடிகர்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலமே எக்கச்சக்க வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன்.

அவரே இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. தற்கால காதல் குறித்து பேசப்பட்ட திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் படத்தில் நிறைய விஷயங்கள் பெண்கள் மீது பழி சுமத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ஓ மை கடவுளே திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இவர்கள் இருவருக்கும் இதுதான் இரண்டாவது திரைப்படம்.

டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ஹிட் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் வசூல் சாதனை கொடுக்கும் நடிகர்களில் வந்துவிட்டார் எனதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் டிராகன் திரைப்படம் விஜய்யின் கோட் வசூலை மிஞ்சுயுள்ளது. கோட் திரைப்படம் 13.5 கோடி வசூல் செய்திருந்த நிலையில் டிராகன் திரைப்படம் அதனை தாண்டி 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வேட்டையன் ராயனை மிஞ்சிய அமரன் திரைப்படம்.. இப்படி ஒரு சாதனையா?

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை வைத்துதான் நடிகர்களின் மார்க்கெட் கணக்கிடப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் வசூல் சாதனை பொறுத்துதான் அவர்களுக்கான சம்பளம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு நடிகரும் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நடிகர் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கிறார் என்றால் அதற்கான மார்க்கெட் தமிழ் சினிமாவில் குறைந்துவிடும்.

ஏனெனில் அந்த அளவிற்கு இங்கு நடிகர்களுக்கான மார்க்கெட் என்பது இருந்து வருகிறது. இதனால்தான் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தாலும் கூட கவின் மணிகண்டன் போன்ற நடிகர்கள் தொடர்ந்து நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் அதிக எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம்.

vettaiyan

அமரன் படத்தின் சாதனை:

அமரன் திரைப்படத்தை பொருத்தவரை முகுந்த் வரதராஜன் என்கிற உண்மையான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் நாள் புக்கிங் எண்ணிக்கையை பொறுத்தவரை வேட்டையன் இந்தியன் 2, ராயன், மாதிரியான படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவற்றை விட அதிகமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட படமாக அமரன் திரைப்படம் மாறி இருக்கிறது.

அதன்படி

1.TheGreatestOfAllTime – 5,84,000

2.Amaran – 4,78,000

3.Vettaiyan – 4,70,000*

4.Indian2 – 4,03,000

5.Raayan – 2,73,000

6.Thangalaan – 1,98,000

7.CaptainMiller – 1,37,000

8.Ayalaan – 1,15,000

9.Maharaja – 1,15,000

10.Aranmanai 4 – 1,09,000

இந்த திரைப்படங்கள் தான் டாப் 10 திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

 

அந்த படத்தோட காப்பின்னு படம் வந்த பிறகுதான் தெரிஞ்சது.. வெரி சாரி… கோட் குறித்து கூறிய வெங்கட் பிரபு.!

கோட் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி எதிர்பார்த்ததை விட அதிக வசூலை பெற்று கொடுத்திருக்கிறது. லியோ படம் அளவிற்கு இல்லை என்றாலும் கூட அதைவிட கொஞ்சம் குறைவான அளவில் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது கோட் திரைப்படம்.

இந்த வசூலே இவர்களுக்கு நல்ல வெற்றிதான். ஏனெனில் இந்த திரைப்படத்தை தயாரித்தது ஏ.ஜி.எஸ் நிறுவனம். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும்பாலும் பெரிய திரைப்படங்களை தயாரிப்பது கிடையாது.

இப்பொழுது எல்லாம் தொடர்ந்து அவர்கள் சின்ன திரைப்படங்களைதான் தயாரித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு கோட் திரைப்படம் மிகப்பெரிய முதலீடு ஆகும். அதனால் அதிலிருந்து கிடைத்த லாபமும் பெரிய லாபமாக உள்ளது.

கோட் படம் காபி:

இனி தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களை இவர்கள் தயாரிப்பதற்கு இது உதவியாக இருக்கும். இந்த நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது கோட் திரைப்படம் ஒரு திரைப்படத்தின் காப்பிதான் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.

அவர் அந்த பேட்டியில் கூறும் பொழுது படம் வெளியான பிறகு தான் எனக்கே இந்த விஷயம் தெரிந்தது படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் விஜயகாந்த் நடித்த ராஜதுரை திரைப்படத்தின் காபிதான் கோட் என்று கூறினார்கள். அதற்கு பிறகு தான் நான் ராஜதுரை திரைப்படத்தை பார்த்தேன், முன்பே இந்த திரைப்படத்தை பார்த்திருந்தால் படத்தின் திரை கதையை மாற்றி அமைத்திருப்பேன் இன்னும் கொஞ்சம் நல்லாவே படத்தை பண்ணியிருப்பேன் என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.

ஹாலிவுட் படத்தோட அப்பட்டமான காப்பி கோட்..வெங்கட் பிரபு ஒத்துக்கலைனாலும் அதுதான் நெசம்.. எத்தனை ஒற்றுமை இருக்கு பாருங்க..!

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட்.

கோட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் விஜய் வில்லனாக நடித்த திரைப்படம் கோட். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது ஆனால் இந்த படம் துவங்கிய காலகட்டம் முதலே இது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்கிற பேச்சு இருந்து கொண்டே இருந்தது.

ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வில்ஸ்மித் நடித்து வெளியான ஜெமினி மேன் என்கிற திரைப்படத்தின் காப்பி தான் கோட் என்கிற பெயர் இருந்து வந்தது. இந்த படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட அந்த திரைப்படம் ஜெமினி மேன் திரைப்படத்தோடு தழுவலாக இருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து இருக்கின்றனர்.

இந்த படத்தின் காபிதான்:

அதாவது ஜெமினி மேன் திரைப்படத்தில் முதல் காட்சியில் ஓடும் ரயிலில் அமர்ந்திருக்கும் நபரை வில்ஸ்மித் ஒரு பாறையின்மேல் ஸ்னைப்பரை வைத்துக் கொண்டு அமர்ந்தபடியே சுட்டுக் கொல்வார்.

அப்படியான ஒரு காட்சி இந்த படத்தில் நடிகர் அஜ்மலுக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல ஜெமினி மேன் திரைப்படத்திலும் வீல்ஸ்மித் கதாபாத்திரத்தை கொல்வதற்கு இன்னொரு இளமையாக இருக்கும் வில்ஸ்மித் கதாபாத்திரம் வரும்.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட அந்த வில் ஸ்மித் தான் வயதான வில் ஸ்மித் கதாபாத்திரத்திற்கு வில்லனாக வந்து நிற்பான். இதில் எப்படி மோகன் அந்த இளமை கால விஜய்யை வளர்க்கிறாரோ அதேபோலத்தான் அந்த திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் இளமையாக இருக்கும் வீல்ஸ் ஸ்மித்தை வளர்த்து எடுப்பார்.

இதில் இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஜெமினி மேன் திரைப்படத்தில் இளமையாக வரும் வீல்ஸ்மித் கதாபாத்திரம் கிளைமாக்ஸ்சில் திருந்தி விடுவதாக காட்சி இருக்கும். ஆனால் கோட் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தை கதாநாயகன் கொன்றுவிடுவார். மற்றபடி அப்படியே அந்த படத்தின் காப்பி தான் இந்த திரைப்படம் என்கின்றனர் ரசிகர்கள்.

 

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது..! விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழில் தற்சமயம் பெரும் ஹிட் கொடுத்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என கூறலாம். ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவருக்குமே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால்தான் கோட் படம் வெளியானது முதலே தற்சமயம் அதிக வசூலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்த பல கதாபாத்திரங்கள் படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்தில் இருந்து விலகியிருப்பது தெரிகிறது.

விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா

உதாரணத்திற்கு படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது நடிகர் மாதவன் என கூறபடுகிறது. ஆனால் நடிகர் மாதவனுக்கு வேறு படங்களில் வேலை இருந்த காரணத்தால் அவர் அப்போது கோட் திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அதே போல படத்தில் ஆரம்பத்தில் நடிகை நயன்தாராதான் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நயன் தாராவும் மிகவும் பிஸியாக இருந்த காரணத்தினால் நடிகை சினேகா இந்த படத்தில் நடித்தார்.

பிறகு இந்த படத்தை பார்த்த நயன் தாரா தன்னை விட சினேகாவிற்கு இந்த கதாபாத்திரம் நன்றாக செட் ஆகியுள்ளது என கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நயன்தாரா அவருடைய முன்னாள் காதலர் பிரபு தேவா நடித்த காரணத்தால்தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

கோட் ரெண்டு நாள் வசூல் போட்ட காசை எடுத்தாச்சு!.. GOAT box office update

கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் வெளியாகும் முன்பே இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தன.

முக்கியமாக விஜய் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது ஆர்வத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. அதிலும் ஒரு விஜய் வில்லன் என கூறப்படுகிறது. அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலேயே வில்லன் கதாபாத்திரம் அவ்வளவாக எடுப்படவில்லை என்பதால் இந்த படத்தில் அது எப்படி ஒர்க் அவுட் ஆகியுள்ளது என ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.

box office update

அந்த வகையில் வெளியான கோட் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றுள்ளது. வெளியான முதல்நாளே இந்திய அளவில் 100 கோடியை வசூல் செய்தது கோட் திரைப்படம். உலக அளவில் 126 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாம் நாளாக நேற்றும் கிட்டத்தட்ட 68.75 கோடி வசூல் செய்துள்ளது கோட் திரைப்படம். படத்தின் தயாரிப்பு செலவு  400 கோடி வரை ஆகியுள்ளது. அந்த வகையில் இரண்டு நாட்களிலேயே படம் 200 கோடி கலெக்ட் செய்துள்ளது.

எனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

GOAT படம் வெளிநாட்டு கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? முதல் நாளே வேட்டையை துவங்கிய தளபதி..!

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் கோட். கோர்ட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனை போலவே அதில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு டி ஏஜிங் முறையில் வயதை குறைத்தும் இருக்கின்றனர். மேலும் விஜய் நடிக்கும் கடைசி இரண்டு திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் அதற்கு வெகுவாக வரவேற்பு இருந்து வருகிறது.

பட வசூல்:

இதற்கு முன்பு அவர் இயக்கிய மாநாடு திரைப்படமும் கோட் திரைப்படம் போலவே பெரும் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் அதே மாதிரி இந்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கோட் திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதனை போலவே படம் வெளிநாடுகளிலும் வெளியாகி இருக்கிறது வெளிநாடு வாழ் தமிழர்கள் பலரும் இந்த படத்தைக் குறித்து ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

ஏனெனில் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் வெளி நாடுகளில் தமிழில்தான் வெளியாகின்றன அந்த வகையில் கோட் திரைப்படம் இன்று வெளிநாடுகளில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. முதல் நாளே 5 மில்லியன் டாலர் இந்த படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் வெளியாகும் மற்ற படங்களின் வசூலோடு கம்பேர் செய்யும் பொழுது இது அதிக வசூல் என்றும் கூறப்படுகிறது.

எப்படியும் இது ஒரு பெரிய வசூல் சாதனை படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான் படத்தோட சாயல் இருக்கா?.. எப்படியிருக்கு விஜய்யின் கோட் திரைப்படம்..

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக கோட் திரைப்படம் உள்ளது.  நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிற காரணத்தினால் அவர் நடிக்கும் கடைசி இரண்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

அதிலும் கோட் திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு முன்பு விஜய் திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பை விடவும் அதிகமாகவே இந்த படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது. முக்கியமாக பாடத்தில் எத்தனை விஜய் என்பதெல்லாம் பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் படம் இன்று வெளியாகி இருக்கிறது படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்

படத்தின் கதைப்படி தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவை நிர்வாகித்து வருபவர்தான் நடிகர் விஜய். அந்த குழுவின் தலைமையாக இவர் இருந்து பல தீவிரவாதிகளை பிடிப்பதற்கு உதவி செய்து வருகிறார்.

படத்தின் கதை:

மேலும் வாழ்க்கையில் தோல்வி என்பதையே காந்தி (விஜய்) கண்டது கிடையாது என்கிற அளவிற்கு அவர் இறங்கும் ப்ராஜெக்டுகள் அனைத்திலும் வெற்றியை மட்டுமே காண்பவர் விஜய்.

அவரது குழுவில் தான் பிரபுதேவா நடிகர் பிரசாந்த் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் இளமை காலங்களில் விஜய் நிறைய வெற்றிகளை பெற்றவராக இருக்கும் அதே சமயம் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் அவருக்கு ஒரு ப்ராஜெக்ட் இருக்கிறது அதற்கு போகும் பொழுது வெக்கேஷன்காக தனது குடும்பத்தையும் அங்கு அழைத்து செல்கிறார். இந்த நிலையில் அங்கு நடக்கும் ஒரு விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழக்கிறார் விஜய்.

அதே சமயம் அந்த விபத்தில் நடக்கும் ஒரு விஷயம் அவர் எதிர்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என்பதும் அவருக்கு தெரியவில்லை அந்த விபத்துக்கு பிறகு தனியாக வாழும் விஜய் பிறகு இதே போல வேறு ஒரு குழுவை நிர்வாகித்து வருகிறார்.

வயதான காரணத்தினால் பீல்டு ஏஜெண்டாக இல்லாமல் வேறு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வயதான பிறகும் மீண்டும் அவருக்கு அந்த விபத்து நடந்த பொழுது நடந்த ஒரு விஷயம் பிரச்சனையை ஏற்படுத்த துவங்குகிறது.

மேலும் காந்தி தனது மகன் இறந்ததாக நினைத்து கொண்டிருக்கையில் அவரும் உயிரோடு இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் உருவாகி இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்கு அப்போது பீல்டு ஏஜெண்டுகளாக பணிபுரிந்த பிரபுதேவா நடிகர் பிரசாந்த் மற்றும் விஜய் இவர்களெல்லாம் மீண்டும் ஒன்றிணைகின்றனர்.

இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து எப்படி திரும்ப இந்த பிரச்சனைகளை சரி செய்ய போகிறார்கள் என்பதே திரைப்படமாக இருக்கிறது. இந்த படத்தில் புதுப்புது கதாபாத்திரங்களில் நிறைய புதிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் முதல் ஷோ முடிந்த நிலையில் ஒரு பக்கம் அதிகமான வரவேற்பை இந்த படம் பெற்றிருக்கிறது. அதே சமயம் சிலர் கூறும் பொழுது ஜவான் திரைப்படத்திலும் இதே போல தான் கதை இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

கோட் படத்தில் வரும் பாம் சீன்.. லீக் செய்த ரசிகர்கள்.. அதிர்ச்சியில் பிரேம் ஜீ..!

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்கிற்கு வர தயாராகி வருகிறது. நேற்றே படத்திற்கான புக்கிங் ஓபனாகிவிட்டது. அதனை தொடர்ந்து படத்திற்கான புக்கிங் எக்கச்சக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது.

சென்னை மாதிரியான பெருநகரங்களில் தொடர்ந்து புக்கிங் அதிகரித்து வருவதால் தற்சமயம் முதல் நாள் பட காட்சிகள் முக்கால்வாசி திரையரங்குகளில் ஏற்கனவே புக்கிங் ஆகி.விட்டன ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் கோட் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

கோட் திரைப்படம்:

இந்த நிலையில் வழக்கம் போல வெங்கட் பிரபுவின் அனைத்து திரைப்படங்களிலும் நடிப்பது போல நடிகர் பிரேம்ஜி இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இரண்டு பாடல்களிலும் பணி புரிந்திருக்கிறார். பிரேம் ஜி. மேலும் முழு திரைப்படத்திலும் இளம் விஜய்க்கு மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சினேகாவின் தம்பியாக இவருக்கு கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது படத்தை பொருத்தவரை படத்தில் வயதான விஜய்யை நான் மாமா என்று அழைப்பேன். சின்ன விஜய் என்னை மாமா என்று அழைப்பார். ஏனெனில் நான் சினேகா கதாபாத்திரத்தின் தம்பியாக நடித்துள்ளேன்.

படத்தில் ஆக்‌ஷன் சீன்:

படத்தில் முழுக்க முழுக்க நான் வருவது கிடையாது ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவேன். ஏனெனில் படம் முழுக்க விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பை காட்டுவதாகதான் படம் இருக்கும்.

ஆனால் நான் வரும் காட்சிகள் எல்லாம் ஜாலியான காட்சிகளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் படத்தின் ஒரு காட்சியை கண்டுபிடித்து விட்டதாக கூறி தொகுப்பாளர் ஒரு காட்சியை கூறினார் அதன்படி ஒரு காட்சியில் சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையே கிரிக்கெட் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சமயத்தில் அந்த மைதானத்தில் யாரோ பாம் வைத்து விடுகின்றனர் இப்பொழுது பிரேம்ஜியும் விஜய்யும் சேர்ந்து அந்த பாமை கண்டுபிடிக்கின்றனர் என்பதாக ஒரு காட்சி உள்ளதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது உண்மையா என்று பிரேம்ஜியிடம் கேட்கப்பட்டது அதற்கு ஷாக்கான ப்ரேம்ஜி அவ்வளவு கண்டுப்பிடிச்சிட்டாங்களா? மொத்த படம் 3 மணி நேரம் அதில் ஒரு சில காட்சிகளை மட்டும் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள் பரவாயில்லை என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் அந்த படத்தில் இப்படியான காட்சி ஒன்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

கோட் படம் எப்படி இருக்கு.. படத்தை பார்த்தவர்கள் கொடுத்த முதல் விமர்சனம்!.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு கோட் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்திருக்கிறது.

மறுபுறம் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு அரசியலில் முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க போகிறார் என்ற செய்தியும் ரசிகர்களுக்கு கிடைத்து. எனவேஅவர் நடித்த படங்களை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக கோட் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கோட் படத்தில் முதல் விமர்சனம் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோட் திரைப்படம்

இந்த திரைப்படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, வைபவ், ஜெயராம், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படத்தைப் பற்றி கூறியிருக்கும் தகவலும் கசிந்து உள்ளது.

கோட் படத்தின் விமர்சனம்

இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் கேமியோவும், விஜயகாந்த் ஏஐ மூலம் வருவது என எக்கச்சக்க எதிர்பாராத விஷயங்களும் கோட் படத்தில் ரசிகர்களை கவருவதற்காக காத்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் பார்க்கும் பொழுது ரோலர் கோஸ்டர் ரைடு போனது போலவே இருக்கும் என்ற தகவலும் தற்போது கசிந்து இருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கை குழு படம் ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை எந்த இடத்திலும் லாக் இல்லாமல் ஜெட் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாக பாராட்டியதாகவும், படத்தில் வயதான விஜய் , இளமையான விஜய் , நடுத்தரமான வயது விஜய்யாக நடித்திருப்பது ரசிகர்களை நிச்சயம் கவரும் எனவும் படக்குழுவினரை பாராட்டியதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் நல்ல வசூலை கொடுக்கும் எனவும் அவர்கள் பாராட்டியதாக தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு அஜித் பாராட்டியதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

GOAT Movie: அந்த ஹாலிவுட் படத்தோட கதைதான் கோட் கன்ஃபார் ஆயிடுச்சு!..

வெகு காலங்களாகவே விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.

முக்கியமாக இது ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதெல்லாம் இல்லை படம் தனிப்பட்ட ஒரு கதையை கொண்டு எடுக்கப்படுகிறது என்று படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

GOAT Movie:

இதனை அடுத்து கோட் படத்தின் சர்ச்சை கொஞ்சம் அமைதியாகியிருந்தது. ஆனால் அந்த படத்தின் பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் நேற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

ட்ரெய்லர் வெளியானது முதலே அதற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்து வாழ்கின்றன. பலரும் படத்தின் டிரைலரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர் யூட்யூபில் அதிகமான பார்வையாளர்களைப்  பெற்ற டிரைலராக கோட் திரைப்படத்தின் டிரைலர் மாறி இருக்கிறது.

விஜய் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட்டில் வெளியான ஜெமினிமேன் என்கிற திரைப்படத்தின் தழுவல்தான் கோட் என்று பேச துவங்கியிருக்கின்றனர்.

ஹாலிவுட் படம்:

ஜெமினிமேன் திரைப்படத்தின் கதையை பொருத்தவரை அதில் கதாநாயகன் இதே மாதிரியான ஒரு ரகசிய ஏஜெண்டாக இருந்து வருவார். இந்த நிலையில் அவரை யாராலும் எதிர்க்கொள்ள முடியாது அந்த அளவிற்கு திறமையான ஒரு ஏஜெண்டாக அவர் இருப்பார்.

ஆனால் அந்த நிறுவனம் ஒரு கட்டத்திற்கு மேல் ரகசியங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கொலை செய்வார்கள். அந்த வகையில் கதாநாயகனை கொலை செய்ய ஒரு நபரை அனுப்புவார்கள் .

அது யார் என்று பார்க்கும் பொழுது இளம் வயது கதாநாயகனாக இருப்பான் குளோனிங் முறையில் அவனை உருவாக்கி இருப்பார்கள். அந்த படத்தை வைத்துதான் கோட் என்று படமாக்கி இருக்கின்றனர். ஆனால் அதில் க்ளோனிங் முறையில் இருந்ததற்கு பதிலாக இதில் அப்பா மகன் என்று வைத்திருக்கிறனர் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

அரசியல் வசனங்களை வைத்த வெங்கட் பிரபு.. GOAT Movie ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா

பொதுவாகவே வெங்கட் பிரபு எவ்வளவு அரசியல் ஜோக்குகள் அடிக்கக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நடிகர் மணிவண்ணனை போலவே வெங்கட் பிரபுவும் காமெடி வாயிலாகவே நிறைய அரசியல் விஷயங்களை பேசக்கூடியவர்.

அதை அவரது பல முந்தைய படங்களிலும் நிறைய செய்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இதற்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

கோட் திரைப்படம்:

ஏனெனில் இதற்கு முன்பே மாநாடு என்கிற ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தை எடுத்து சரியான வெற்றியை கொடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இதில் அரசியல் தொடர்பாக அவர் செய்திருக்கும் சில வேலைகளை பார்க்க முடிகிறது.

அதேபோல 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பு பெறுவதற்காக சில நாஸ்டாலஜிக்கல் ஆன விஷயங்களையும் கையாண்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் என்ட்ரி ஆகும்பொழுது உங்களை மீட் பண்ண போறது ஒரு புது லீடர் என்கிற வசனம் வருகிறது.

தமிழ் சினிமா:

விஜய்யின் அரசியல் என்று குறிப்பிடும் வகையில் இந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது அதேபோல ஒரு காட்சியில் கில்லி திரைப்படத்தில் விஜய் மருதமலை மாமணியே முருகையா என்று பாடும் ஒரு காட்சி இருக்கும்.

அந்த காட்சியை அப்படியே ரீ கிரியேட் செய்திருக்கின்றனர் படகுழுவினர். கில்லி திரைப்படத்தில் அந்த காட்சியில் விஜய் அனிந்திருக்கும் அதே நிற ஆடையை இதிலும் அணிந்துள்ளார். சமீபத்தில்தான் கில்லி படம் வெளியாகி ரீசாகி நல்ல வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தான் இந்த வேலையை படக்குழுவினர் பார்த்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இப்படியாக இந்த ட்ரைலரிலேயே குறியீடுகள் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக படத்தில் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.