Tag Archives: vijayakanth

வெளியானதை விட இப்போ 10 மடங்கு வரவேற்பு.. டாப் ஹிட் கொடுத்த கங்கை அமரன் பாடல்..!

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் என்று மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியர், இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவர் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன்.

இளையராஜாவிற்கு தமிழ் சினிமாவில் நிறைய பாடல் வாய்ப்புகள் வந்த சமயத்தில் எல்லா பாடல்களுக்கும் இளையராஜாவால் இசையமைக்க முடியவில்லை.

அந்த சமயங்களில் எல்லாம் இளையராஜாவிற்கு உதவியவர் கங்கை அமரன் தான். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு youtube பேட்டியில் பேசும்பொழுது பொன்மனச் செல்வன்  திரைப்படத்தில் பாடல் வரிகள் எழுதியது குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

gangai-amaren

இதில் அவர் கூறும் பொழுது அப்பொழுது கதாநாயகனுக்கு நல்ல வார்த்தைகளை வைத்து மட்டும்தான் பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதனால் நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்கிற அந்த பாடலை எழுதி கொடுத்து இருந்தேன்.

ஆனால் அந்தப் படம் வெளியான சமயத்தை விடவும் விஜயகாந்த் இறந்த பிறகு அந்த பாடல் அதிக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அப்பொழுதை விட இப்பொழுது அந்த பாடலுக்கு 10 மடங்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இப்பொழுது வரும் படங்களில் கதாநாயகர்கள் வரும்பொழுது அந்த பாடலை போடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் கங்கை அமரன்.

கேப்டன் குடும்பத்துக்கு போன் செய்த விஜய்… இன்னமும் பழசை மறக்கல.!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆன அதே சமயத்தில்தான் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரும் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த சமயத்தில் விஜயகாந்தை வைத்து சந்திரசேகர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தனர். மேலும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த்.

விஜய் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்தப்போது அவர் நடித்த திரைப்படங்களை யாருமே பார்க்கவில்லை. இதனால் அவரை பிரபலப்படுத்துவதற்காக அப்போது பிரபலமாக இருக்கும் பெரிய நடிகருடன் நடிக்க வைக்கலாம் என நினைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

vijayakanth

அந்த சமயத்தில் நடிகர் விஜயகாந்த் தான் உதவினார். ஆனால் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் இன்னமும் சினிமாவில் கால் ஊன்றுவதற்காக போராடி வருகிறார். ஆனால் விஜய் அவருக்கு உதவவே இல்லை. இந்த நிலையில் பலரும் விஜய்யை விமர்சித்து வந்தனர்.

ஆனால் உண்மையில் விஜய் எப்போதும் விஜயகாந்த் குடும்பத்திற்கு போன் செய்து பேசி கொண்டுதான் இருக்கிறாராம். எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறியிருக்கிறாராம் விஜய். ஆனால் நியாயமாக விஜய்யே முன் வந்து சண்முக பாண்டியனுக்கு அவர் நடித்த படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.

வடிவேலு அதுக்காக வீட்ல அழுது இருப்பாரு.. ரகசியத்தை உடைத்த சரத்குமார்..!

தமிழில் பிரபலமான காமெடி நடிகர்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருடைய காமெடிக்காகவே பிரபலமாக இருந்துள்ளன. இன்னமும் சில வடிவேலு காமெடிகள் எந்த படத்தில் வரும் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும்.

ஆனால் வடிவேலுவிற்கும் நடிகர் விஜயகாந்துக்கும் இடையே சண்டை ஏற்பட்ட பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. அதனை தொடர்ந்து அரசியலுக்கு சென்றார் வடிவேலு. பிறகு திரும்ப அவரால் சில வருடங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.

என்னதான் இப்போது மீண்டும் வாய்ப்பை பெற்று நடித்து வந்தாலும் கூட பழைய வடிவேலுவாக அவர் இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் விஜயகாந்த் தான் வடிவேலுவை வளர்த்துவிட்டவர், ஆனால் அவரது இறப்புக்கே வடிவேலு வரவில்லை என பலரும் வடிவேலுவை பேசி வந்தனர்.

vadivelu

இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சரத்குமார் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் ஒரு கார் பார்க்கிங்கில் வந்த சண்டைதான் எல்லாவற்றுக்கும் காரணம். எல்லா மனிதர்களுக்குமே நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்கிற ஈகோ பிரச்சனை வரதான் செய்யும்.

அதற்கு பிறகு அரசியலுக்கு சென்ற வடிவேலு தொடர்ந்து விஜயகாந்தை பற்றி மோசமாக பேச வேண்டிய சூழல் உருவானது. இதனால்தான் அவர் அந்த இறப்பிற்கு வராமல் இருந்திருப்பார். ஒருவேளை விஜயகாந்தை பார்க்க வந்து ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்திருப்பார்.

ஆனால் வீட்டில் அழுதிருப்பார். இப்படி கடைசி நேரத்தில் கூட விஜயகாந்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டிருப்பார். அவரும் மனிதர்தானே என கூறியிருக்கிறார் சரத்குமார்.

வில்லனா நான் நடிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..! விஜயகாந்த் பட வாய்ப்பில் நெப்போலியனுக்கு அடித்த அதிஷ்டம்.!

தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே சிறப்பாக நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன்.

இப்பொழுதும் கூட அவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாதியிலேயே அமெரிக்கா சென்று அங்கு செட்டிலான காரணத்தினால் பெரும்பாலும் இப்பொழுது அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதே இல்லை.

ஏதாவது சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தால் மட்டும் வந்து நடித்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றை துவங்கி அதில் வளர்ச்சியை கண்டு வருகிறார் நெப்போலியன்.

இந்த நிலையில் விஜயகாந்த் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் நெப்போலியன் கூறும் பொழுது புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக தான் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானேன்.

அதற்கு பிறகு தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் எனக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பரதன் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளர் என்னை வில்லனாக நடிக்க வேண்டாம் என்று கூறினார்.

ஒரு சிஐடி அதிகாரியாக நடிக்க உங்களது உடல் வாகுக்கு நன்றாக இருக்கும் என்று கூறினார். நான் முதல் படம் நடிக்கும் பொழுதே நடிகர் விஜயகாந்த் அவருடைய நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை நடித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவு பெரிய நடிகருடன் எனக்கு நான்காவது திரைப்படத்திலேயே வாய்ப்பு கிடைத்தது அதிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இல்லாமல் கதாநாயகனுக்கு சமமான ஒரு கதாபாத்திரமும் கிடைத்தது என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

எனக்கு விஜயகாந்த் செஞ்ச உதவியை மறக்கவே மாட்டேன்.. எங்கள் அண்ணா வில்லி நடிகை சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு அதிகமாக சினிமா வட்டாரத்தில் போற்றப்படும் ஒரு நபராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த்.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பொது மக்களுக்கும் அதிக உதவிகளை செய்து வந்துள்ளார்.

ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகுதான் விஜயகாந்த் செய்த உதவிகள் பரவலாக மக்கள் மத்தியில் தெரிய துவங்கியது. இல்லையென்றால் முன்பே அரசியலில் முக்கிய புள்ளியாக விஜயகாந்த் மாறி இருந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு பலரும் போற்றும் ஒருவராக விஜயகாந்த் இருந்திருக்கிறார் எந்த நிலையில் எங்கள் அண்ணா திரைப்படத்தில் விஜயகாந்துடன் நடித்த இந்துஜா விஜயகாந்த் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது மலையாளத்தில் மம்முட்டி நடித்த திரைப்படத்தின் ரீமேக் ஆக தான் எங்கள் அண்ணா திரைப்படம் தமிழில் எடுக்கப்பட்டது.

அதுவரை எனக்கு தமிழில் பெரிய கதாபாத்திரம் என்று எதுவும் கிடைத்ததில்லை. ஆனால் மலையாளத்தில் அந்த படத்தை பார்த்த விஜயகாந்த் தமிழில் நான் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்.

அதனை தொடர்ந்துதான் தமிழில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது விஜயகாந்தை பொருத்தவரை சின்ன திறமை உள்ள ஒரு ஆளாக இருந்தால் கூட அவரை எப்படியாவது பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்று நினைப்பார் அவரை போன்ற ஒரு மனிதரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது என்று கூறி இருக்கிறார் நடிகை இந்துஜா.

கேப்டனை அவமதிச்சா இவ்வளவு பிரச்சனை உண்டா.. வில்லன் நடிகருக்காக ரசிகர் மன்றத்தோடு மீட்டிங் போட்ட விஜயகாந்த்.. புது நியுசா இருக்கே..!

நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து நடிகர்களுக்கு நன்மை செய்து வந்த நடிகராக நடிகர் விஜயகாந்த் இருந்து வருகிறார். கதாநாயகனாக நடித்து வந்த விஜயகாந்த் பெரும்பாலும் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லும் வகையில்தான் நடித்து வந்தார்.

அதிகப்பட்சம் விஜயகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்களில் அரசு அதிகாரியாக இருப்பதை பார்க்க முடியும். விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்ட பிறகுதான் அவர் திரை உலகிற்கும் மக்களுக்கும் செய்த நன்மைகள் எல்லாம் வெளியில் வர துவங்கின.

நடிகர்களிலேயே அதிக மரியாதைக்குரிய நடிகராக இருந்ததால் விஜயகாந்துக்கு படத்தில் காட்சிகள் வைப்பதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. அவருக்கு மரியாதை குறைவான காட்சிகளை வைக்க கூடாது என்பதில் அவரை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் தெளிவாக இருந்து வந்தனர்.

vijayakanth

இந்த நிலையில் தவசி திரைப்படத்தில் ஒரு காட்சியில் பொன்னம்பலத்தின் செருப்பை விஜயகாந்த் கழுவுவது போல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியால் பிரச்சனை வரும் என்பதால் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பே ரசிகர் மன்றத்தில் முக்கிய பொருப்பில் இருந்தவர்களோடு மீட்டிங் போட்டுள்ளார் விஜயகாந்த்.

அதில் பொன்னம்பலம் அந்த காட்சியில் நடித்தால் ஓ.கே என அவர்கள் கூறியப்பிறகுதான் அந்த காட்சிக்கு அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நிகழ்வை பொன்னம்பலம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த விஜயகாந்த் படத்தின் காபியா? கேம் சேஞ்சர் திரைப்படத்தில் வந்த பிரச்சனை..!

சினிமாவில் திரைப்படங்களை காபி அடித்து படம் எடுப்பது என்பது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. நிறைய தமிழ் இயக்குனர்கள் கதையை திருடியோ அல்லது காட்சியை திருடியோ திரைப்படம் இயக்குவதை பார்க்க முடிகிறது.

இயக்குனர் அட்லீ கூட அந்த மாதிரியான பிரச்சனையால்தான் தமிழ் சினிமாவை விட்டு நீங்க வேண்டி இருந்தது. பெரும்பாலும் அட்லீ ஹாலிவுட்டில் வரக்கூடிய திரைப்படங்களில் காட்சிகளை அப்படியே காபி அடித்து தன்னுடைய படத்தில் பயன்படுத்துவார்.

அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு அட்லீ நிறைய திரைப்படங்களில் இந்த விஷயத்தை செய்ய துவங்கினார். முக்கியமாக மெர்சல் திரைப்படத்தில் இதை அதிகமாக பார்க்கப்பட்டது.

அதே மாதிரி கோட் திரைப்படமானது ராஜதுரை என்கிற விஜயகாந்த் திரைப்படத்தின் காபி என்று பேச்சு வந்தது. அதுக்குறித்து பேசிய வெங்கட் பிரபு அந்த படத்தை பார்த்த பிறகுதான் எனக்கே அந்த விஷயம் தெரிந்தது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்தின் காபி என்று பேச்சுக்கள் இருக்கின்றன. தென்னவன் படத்தின் ஐ.ஏ.எஸ் படித்து தேர்தல் ஆணைய கமிஷ்னராக இருக்கும் விஜயகாந்த் முதலமைச்சராக இருக்கும் நாசரை எதிர்ப்பதாக கதை இருக்கும்.

கிட்டத்தட்ட அதே கதை அம்சத்தை கொண்டுள்ளது கேம் சேஞ்சர் திரைப்படம் என கூறப்படுகிறது.

 

ஒரு காலத்தில் விஜயகாந்தே புகழ்ந்த மனுஷன்.. விஷாலின் இந்த நிலைக்கு காரணமான நபர்கள்.. கிழித்து தொங்கவிட்ட பத்திரிக்கையாளர்.!

நடிகர் விஷால் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருக்கும் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியைதான் கொடுத்தன.

ஆனால் அதற்கு பிறகு விஷாலின் திரைப்படங்கள் குறித்து பெரிதாக அப்டேட் என்று எதுவும் வரவில்லை. இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த திரைப்படம் மதகஜராஜா.

இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் இந்த படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 அன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்திற்காக நடத்தப்பட்ட விழாவில் நடிகர் விஷால் கலந்துக்கொண்டார். அதில் அவர் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. அவரது கைகள் மிகவும் நடுங்கின. அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஷாலின் இந்த நிலைக்கு ஒரு வகையில் இயக்குனர் பாலாதான் காரணம்.

பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் மாறு கண் கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருந்தார். அப்படி கண்களை மாற்றி வைத்து நடித்தது அவருக்கு மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து ஒற்றை தலைவலிக்கு உள்ளான விஷால் அதற்காக பல பழக்கங்களுக்குள் சென்றார். அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானது என கூறியுள்ளார் அந்தணன்.

ஒரு காலத்தில் அவரது சண்டை காட்சிகளை பார்த்து விஜயகாந்தே பாராட்டிய நடிகராக விஷால் இருந்தார். அப்படிப்பட்ட நடிகரின் இந்த நிலை பலருக்குமே அதிர்ச்சியை அளித்துள்ளது.

விஜயகாந்த் அந்த விஷயத்தில் பயங்கர டெரர்.. எல்லாத்தையும் செக் பண்ணுவாரு..!

நடிகர் விஜயகாந்தை பொருத்தவரை அவர் உயிரோடு இருந்த பொழுது கூட அவரை குறித்து நிறைய நல்ல விஷயங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

ஆனால் அவர் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பகிர்ந்து வருகின்றனர் விஜயகாந்த் மாதிரியான ஒரு மனிதரை திரைத்துறையில் இனி யாரும் பார்க்க முடியாது என்கிற அளவிற்கான ஒரு வாழ்க்கையை தான் விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் இருவரும் இணைந்து ஒரு உணவகத்தை துவங்கினர்.

அந்த உணவகத்தில் இருந்து தினமும் 500 சாப்பாடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அதிலிருந்து 250 தயிர்சாதமும் 250 புளிசாதமும் பொட்டலம் கட்டி வெளியில் வரும்.

அப்படி வந்த பிறகு அங்கு இருக்கும் ஊழியரை அழைத்த விஜயகாந்த் அந்த பொட்டலத்தில் மேலேயும் கீழேயும் எந்த பொட்டலத்தையும் எடுக்க வேண்டாம். அதை நல்லபடியாகதான் செய்திருப்பார்கள் நடுவில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து வாருங்கள் என்று கூறி அதில் இருக்கும் தயிர் சாதத்தை எடுத்து சாப்பிட்டு பார்ப்பார்.

அது நன்றாக இருந்தால் தன் அந்த உணவை அனுப்புவதற்கு ஒப்புக்கொள்வார் அப்படிப்பட்ட மனிதர் விஜயகாந்த் என்று விஜயகாந்தை குறித்து அவரது நண்பர்கள் கூறுகின்றனர்

மீனாவிடம் சில்மிஷம் செய்த நபர்.. கேப்டன் செய்கையால் நடந்த விபரீதம்.. படத்தை மிஞ்சிய உண்மை சம்பவம்..!

நடிகர் விஜயகாந்த் சாதாரண நடிகர் என்பதையும் தாண்டி திரை உலகிற்கும் பொது மக்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறார்.

அந்த நன்மைகள் எல்லாம் பிறகுதான் அதிகமாக பேசப்பட்டது. விஜயகாந்த் வாழ்ந்த காலகட்டங்களில் இவை யாவுமே பெரிதாக வெளியில் தெரியவில்லை.

ஏனெனில் இது எதையுமே விஜயகாந்த் விளம்பரத்திற்காக செய்யவில்லை இந்த நிலையில் மீனாவின் உயிரை விஜயகாந்த் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை தயாரிப்பாளர் சிவா அவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதில் அவர் கூறும் பொழுது சிங்கப்பூரில் நட்சத்திர கலைவிழா என்கிற ஒரு விழாவை நடத்தினோம். அந்த விழாவில் மீனாவும் கலந்து கொண்டார். விழா முடிந்த பிறகு அதிக கூட்டமாக இருந்தது. நடிகைகளின் பெட்டிகளை அப்பொழுது நாங்கள் எல்லாம் ஏற்றிக் கொண்டிருந்தோம்.

கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவில் அந்த சமயத்தில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் வந்து மீனாவிடம் தவறாக நடந்து கொள்ள துவங்கினார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்களால் மீனா பக்கத்தில் செல்ல முடியவில்லை. இதனை கண்ட விஜயகாந்த் வேகமாக சென்று அந்த நபரை தூக்கி எறிந்தார். கீழே போய் அந்த விழுந்த நபரின் ஹெல்மெட்டை கழட்டி அதை வைத்து அவரை அடித்தார்.

அந்த நபரின் தலையில் ரத்தம் கொட்ட துவங்கியது அதனை பார்த்ததும் அங்கிருந்து மக்கள் கூட்டம் விலகிவிட்டது என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் தயார் பலர் சிவா.

நன்றி மறந்துட்டாரா விஜய்.. கேப்டன் நினைவு நாளுக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்?.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை தொடுவதற்கு உதவியாக இருந்த பிரபலங்களின் நடிகர் விஜயகாந்தும் முக்கியமானவர்.

நடிகர் விஜய் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்த காலகட்டங்களிலேயே தனது திரைப்படத்தில் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்.

அந்த நன்றியை மறக்காமல்தான் கோட் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு காட்சி வைத்திருந்தார் நடிகர் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் குருபூஜை ஒன்று நடத்தப்பட்டது.

vijay

இந்த குருபூஜைக்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர் ஆனால் நடிகர் விஜய் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகர் விஜய் விஜயகாந்தை மறந்துவிட்டாரா என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் விஜயகாந்த் இறப்பின் பொழுது அதற்காகவே அந்த நாளில் கலந்து கொண்டு சென்றார் விஜய். அப்படி இருக்கும் விஜய் எப்படி முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு வராமல் இருப்பார் என்றும் கேள்விகள் இருந்தது.

ஆனால் இது குறித்து தகவல்கள் வேறு மாதிரி வருகின்றன அதாவது தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர்கள் இதில் கலந்து கொள்வதற்கு போலீசிடம் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏ.ஐ முறையில் விஜயகாந்த் நடிக்கும் அடுத்தடுத்து இரண்டு படங்கள்.. மீண்டும் போலீசாக களம் இறங்கும் கேப்டன்..!

நடிகர் விஜயகாந்த் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய விஷயங்கள் மக்களுக்கு வெளிப்படையாக தெரிய துவங்கியது. முக்கியமாக திரைத்துறைக்கு விஜயகாந்த் ஆற்றிய பங்கு என்பது மிக அதிகமானது.

அதற்கு நன்றி செய்யும் விதமாக தொடர்ந்து விஜயகாந்தை நிறைய திரைப்படங்களில் இப்பொழுது பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் உதாரணத்திற்கு கோட் திரைப்படத்தில் முதல் காட்சியில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை கொண்டு வந்திருப்பார்கள்.

ஆனால் அது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால் லப்பர் பந்து திரைப்படத்தில் விஜயகாந்தை மரியாதை செய்யும் வகையில் நிறைய காட்சிகள் இருந்தது. அதில் கெத்து என்னும் கதாபாத்திரத்தை விஜயகாந்த் ரசிகராக வைத்து படம் முழுக்க விஜயகாந்தின் பாடல்கள் விஜயகாந்தின் புகைப்படங்கள் என்று பயன்படுத்தி இருப்பார்கள்.

vijayakanth

விஜயகாந்த் நடிப்பில் படம்:

இப்படியாக விஜயகாந்துக்கு நன்றி செலுத்த துவங்கி இருக்கின்றனர் திரைத்துறையினர். இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து ஊமை விழிகள் படத்தை இயக்கிய ஆபாவணன் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை வைத்து ஊமை விழிகள் பாகம் 2 படத்தை இயக்க இருப்பதாக கூறி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அவர் ஏ.ஐ முறையை நன்றாக செய்யும் பட்சத்தில் படம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் ரமணா விஜயகாந்தை கொண்டு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

எளிய முறையில் மிகச் சிறப்பாக அதை செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தால் இப்பொழுது படை தளபதி திரைப்படத்தின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.