Tag Archives: nee pottu vacha thanga kudam

வெளியானதை விட இப்போ 10 மடங்கு வரவேற்பு.. டாப் ஹிட் கொடுத்த கங்கை அமரன் பாடல்..!

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் என்று மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியர், இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவர் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன்.

இளையராஜாவிற்கு தமிழ் சினிமாவில் நிறைய பாடல் வாய்ப்புகள் வந்த சமயத்தில் எல்லா பாடல்களுக்கும் இளையராஜாவால் இசையமைக்க முடியவில்லை.

அந்த சமயங்களில் எல்லாம் இளையராஜாவிற்கு உதவியவர் கங்கை அமரன் தான். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு youtube பேட்டியில் பேசும்பொழுது பொன்மனச் செல்வன்  திரைப்படத்தில் பாடல் வரிகள் எழுதியது குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

gangai-amaren

இதில் அவர் கூறும் பொழுது அப்பொழுது கதாநாயகனுக்கு நல்ல வார்த்தைகளை வைத்து மட்டும்தான் பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதனால் நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்கிற அந்த பாடலை எழுதி கொடுத்து இருந்தேன்.

ஆனால் அந்தப் படம் வெளியான சமயத்தை விடவும் விஜயகாந்த் இறந்த பிறகு அந்த பாடல் அதிக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அப்பொழுதை விட இப்பொழுது அந்த பாடலுக்கு 10 மடங்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இப்பொழுது வரும் படங்களில் கதாநாயகர்கள் வரும்பொழுது அந்த பாடலை போடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் கங்கை அமரன்.