Tag Archives: பொன்னம்பலம்

கேப்டனை அவமதிச்சா இவ்வளவு பிரச்சனை உண்டா.. வில்லன் நடிகருக்காக ரசிகர் மன்றத்தோடு மீட்டிங் போட்ட விஜயகாந்த்.. புது நியுசா இருக்கே..!

நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து நடிகர்களுக்கு நன்மை செய்து வந்த நடிகராக நடிகர் விஜயகாந்த் இருந்து வருகிறார். கதாநாயகனாக நடித்து வந்த விஜயகாந்த் பெரும்பாலும் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லும் வகையில்தான் நடித்து வந்தார்.

அதிகப்பட்சம் விஜயகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்களில் அரசு அதிகாரியாக இருப்பதை பார்க்க முடியும். விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்ட பிறகுதான் அவர் திரை உலகிற்கும் மக்களுக்கும் செய்த நன்மைகள் எல்லாம் வெளியில் வர துவங்கின.

நடிகர்களிலேயே அதிக மரியாதைக்குரிய நடிகராக இருந்ததால் விஜயகாந்துக்கு படத்தில் காட்சிகள் வைப்பதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. அவருக்கு மரியாதை குறைவான காட்சிகளை வைக்க கூடாது என்பதில் அவரை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் தெளிவாக இருந்து வந்தனர்.

vijayakanth

இந்த நிலையில் தவசி திரைப்படத்தில் ஒரு காட்சியில் பொன்னம்பலத்தின் செருப்பை விஜயகாந்த் கழுவுவது போல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியால் பிரச்சனை வரும் என்பதால் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பே ரசிகர் மன்றத்தில் முக்கிய பொருப்பில் இருந்தவர்களோடு மீட்டிங் போட்டுள்ளார் விஜயகாந்த்.

அதில் பொன்னம்பலம் அந்த காட்சியில் நடித்தால் ஓ.கே என அவர்கள் கூறியப்பிறகுதான் அந்த காட்சிக்கு அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நிகழ்வை பொன்னம்பலம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதிக சம்பளம் தரலாம்னு இருந்தேன்.. வாயை விட்டு நீயே மாட்டிக்கிட்ட.. பொன்னம்பலத்தை ஏமாற்றிவிட்ட இயக்குனர்..!

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்து வருபவர் பொன்னம்பலம். பொன்னம்பலம் அப்போதெல்லாம் வில்லனாக நடித்த திரைப்படங்களில் அவரை பார்க்கும் பலருக்கும் அவர் மேல் ஒரு பயம் உண்டாகும் என்று கூறலாம்.

அந்த அளவிற்கு மோசமான ஒரு வில்லனாக அவர் நடித்திருப்பார். ஆனால் வில்லனாக நடிப்பதற்கு முன்பிருந்தே ஸ்டண்ட் மேனாக சினிமாவில் இவர் பணியாற்றி வந்தார். இப்போது வரை சினிமாவில் படப்பிடிப்பில் ஏதாவது ஒரு அசாம்பாவிதம் நடந்தால் அந்த நபருக்கு தயாரிப்பு நிறுவனம் எந்த உதவியும் செய்வதில்லை.

வில்லனாக அறிமுகம்:

அதே நிலைதான் பொன்னம்பலம் காலத்திலும் அப்படியும் கூட உயிருக்கு ஆபத்தான அந்த தொழிலை செய்துக்கொண்டுதான் இருந்தார் பொன்னம்பலம். இந்த நிலையில்தான் அவருக்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பஞ்சு அருணாச்சலம் திரைப்படத்தில் அவருக்கு 10 நாள் கால்ஷீட் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த பொன்னம்பலம் ஐயா ஸ்டண்ட் மேனுக்கு கொடுக்குற மாதிரி 500, 600 சம்பளத்துக்கு எல்லாம் என்னால நடிக்க முடியாது. 2000 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமா தரணும்.

சம்பள விஷயம்:

அப்பதான் நடிப்பேன் என கூறியுள்ளார். அதனை கேட்ட பஞ்சு அருணாச்சலம். நல்ல வேளை நீ 5000 கேப்பன்னு நான் நினைச்சேன் என கூறியவர் 20,000 ரூபாயை கொடுத்து இந்தா 10 நாள் காசு திருப்தியா வச்சிக்கோ என கொடுத்துள்ளார்.

வாயை விடாமல் இருந்திருந்தால் தினசரி 5000 ரூபாய் கிடைத்திருக்குமே என பிறகு புலம்பியிருக்கிறார் பொன்னம்பலம்.

ரஜினி படத்துக்கு நடிக்க போனதுக்கு சம்பவம் செஞ்சிட்டாங்க!.. சொத்து அனைத்தையும் இழந்த பொன்னம்பலம்…

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் என அறியப்படுபவர் நடிகர் பொன்னம்பலம். பல காலமாக சினிமாவில் இருக்கும் பொன்னம்பலம் சினிமாவிற்கு முன்பு விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இதனால் அவரது உடல் மிகவும் வளைவு தன்மை கொண்டதாக இருந்தது அது சினிமாவில் சண்டை பயிற்சிக்கு ஏற்றதாக இருந்தது. எனவே சினிமாவில் ஸ்டண்ட் மேனாக அறிமுகமானார் பொன்னம்பலம். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

அவரின் தனிப்பட்ட திறமையே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது எந்த ஒரு சண்டை காட்சியையும் சிறப்பாக செய்யக்கூடியவராக பொன்னம்பலம் இருந்தார். இந்த நிலையில் உழைப்பாளி திரைப்படத்தில் சண்டை போடுவதற்கான வாய்ப்பு பொன்னம்பலத்திற்கு கிடைத்தது. அதுவும் ரஜினியுடன் நேரடியாக சண்டை போடுவது போன்ற காட்சி ஆகும்.

ஆனால் அந்தப் படத்தில் இருந்த ஸ்டெண்ட் மாஸ்டருக்கும் பொன்னம்பலத்திற்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்தது. எனவே பொன்னம்பலம் நடிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் அவர் ஒரு சூழ்ச்சி செய்தார் ஸ்டண்ட் மாஸ்டர்.

ஒருநாள் படபிடிப்பு நடக்கும் பொழுது அனைவரும் கிளம்பிய பிறகு இன்னும் ஒரு காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது என பொன்னம்பலத்திடம் கூறிய ஸ்டண்ட் மாஸ்டர் அவரை வைத்து அந்த காட்சியை படம் ஆக்கினார். அதில் உயரத்தில் இருந்து பொன்னம்பலம் குதிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.

அப்பொழுது அவர் கீழே விழும் பொழுது அவரை தாங்கிப் பிடிக்க இருக்கும் வலையை வேண்டுமென்று லூசாக கட்டினார் ஸ்டெண்டு மாஸ்டர். அப்பொழுது அங்கிருந்து கீழே விழுந்த பொன்னம்பலம் காலில் பெரும் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்து அவர் குணமடைந்தார் இந்த நிலையில் அவரது சொத்துக்களை விற்று அந்த மருத்துவ செலவை செய்திருக்கிறார் பொன்னம்பலம். பிறகு ரஜினியை சந்தித்த பொன்னம்பலம் இந்த விஷயங்களை எல்லாம் கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரஜினிகாந்த் உடனே கே.எஸ் ரவிக்குமாருக்கு போன் செய்து பொன்னம்பலத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுங்கள் என கூறினார் அப்படித்தான் பொன்னம்பலத்திற்கு நாட்டாமை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.