Tag Archives: panju arunachalam

14 லட்சத்தில் இருந்து 1 கோடி.. ரஜினியின் தலை எழுத்தை மாற்றிய தயாரிப்பாளர்.. இந்த விஷயம் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இருந்து எந்த ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மற்ற நடிகர்களை போல மேடையில் பேசும்போது கூட எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களையும் ரஜினிகாந்த் பேசுவது கிடையாது.

மிகவும் அடக்கமான ஒரு நடிகராக தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். அதே போல இவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்ற பிறகும் கூட இயக்குனர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பதை ரஜினிகாந்த் ஒரு பானியாக வைத்திருக்கிறார்.

அதே போல தனக்கு உதவி செய்தவர்களுக்கு சினிமாவில் திரும்பவும் உதவி செய்ய ரஜினிகாந்த் தயங்கியதே இல்லை என கூறலாம். இப்படியாக பஞ்சு அருணாச்சலத்துடன் அவருக்கு நடந்த ஒரு நிகழ்வு முக்கியமானது.

பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட துறைகளில் முக்கிய நபராக இருந்தவர். சொல்ல போனால் ரஜினிகாந்துக்கு குரு என்று அவரை கூறலாம்.

பஞ்சு அருணாச்சலம் மீது ரஜினிகாந்துக்கு அதிகம் மரியாதை உண்டு. பஞ்சு அருணாச்சலம் பிரியா என்கிற திரைப்படத்தை தயாரித்த பொழுது அதில் நடிப்பதற்கு ரஜினிகாந்திடம் கேட்டார். அப்பொழுது அதற்கு ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த் வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றதும் மிகுந்த ஆசையாக அந்த படத்தில் நடிக்க வந்திருந்தார்.

அப்பொழுது உன்னுடைய சம்பளம் என்ன என்று பஞ்சு அருணாச்சலம் கேட்டார் அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் வெளிநாடு எல்லாம் செல்கிறீர்கள் என்றால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும்.

எனக்கு ஒரு 14 லட்சம் சம்பளமாக கொடுங்கள் போதும் என்று கூறினார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சு அருணாச்சலம் உன்னுடைய மார்க்கெட் என்னவென்று தெரியாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறாய் என்று கூறிவிட்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார்.

ரஜினிகாந்த் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்த திரைப்படம் பிரியா திரைப்படம் தான்.

 

 

அதிக சம்பளம் தரலாம்னு இருந்தேன்.. வாயை விட்டு நீயே மாட்டிக்கிட்ட.. பொன்னம்பலத்தை ஏமாற்றிவிட்ட இயக்குனர்..!

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்து வருபவர் பொன்னம்பலம். பொன்னம்பலம் அப்போதெல்லாம் வில்லனாக நடித்த திரைப்படங்களில் அவரை பார்க்கும் பலருக்கும் அவர் மேல் ஒரு பயம் உண்டாகும் என்று கூறலாம்.

அந்த அளவிற்கு மோசமான ஒரு வில்லனாக அவர் நடித்திருப்பார். ஆனால் வில்லனாக நடிப்பதற்கு முன்பிருந்தே ஸ்டண்ட் மேனாக சினிமாவில் இவர் பணியாற்றி வந்தார். இப்போது வரை சினிமாவில் படப்பிடிப்பில் ஏதாவது ஒரு அசாம்பாவிதம் நடந்தால் அந்த நபருக்கு தயாரிப்பு நிறுவனம் எந்த உதவியும் செய்வதில்லை.

வில்லனாக அறிமுகம்:

அதே நிலைதான் பொன்னம்பலம் காலத்திலும் அப்படியும் கூட உயிருக்கு ஆபத்தான அந்த தொழிலை செய்துக்கொண்டுதான் இருந்தார் பொன்னம்பலம். இந்த நிலையில்தான் அவருக்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பஞ்சு அருணாச்சலம் திரைப்படத்தில் அவருக்கு 10 நாள் கால்ஷீட் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த பொன்னம்பலம் ஐயா ஸ்டண்ட் மேனுக்கு கொடுக்குற மாதிரி 500, 600 சம்பளத்துக்கு எல்லாம் என்னால நடிக்க முடியாது. 2000 ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமா தரணும்.

சம்பள விஷயம்:

அப்பதான் நடிப்பேன் என கூறியுள்ளார். அதனை கேட்ட பஞ்சு அருணாச்சலம். நல்ல வேளை நீ 5000 கேப்பன்னு நான் நினைச்சேன் என கூறியவர் 20,000 ரூபாயை கொடுத்து இந்தா 10 நாள் காசு திருப்தியா வச்சிக்கோ என கொடுத்துள்ளார்.

வாயை விடாமல் இருந்திருந்தால் தினசரி 5000 ரூபாய் கிடைத்திருக்குமே என பிறகு புலம்பியிருக்கிறார் பொன்னம்பலம்.

கண்ணதாசன் பாட்ட தூக்கி குப்பைல போடுய்யா!.. இயக்குனர் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அரசியல் தலைவராக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தப்போதே அவருக்கு பெரும் ரசிக கூட்டம் ஒன்று இருந்தது.

பிறகு அவர் கட்சி துவங்கிய பிறகு அந்த ரசிக கூட்டம் அப்படியே தொண்டர் கூட்டமாக மாறியது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் தமிழகத்தையே ஆட்சி செய்யும் அளவிற்கு பெரும் உயரத்தை தொட்டார். சினிமாவில் இருக்கும்போதே அதில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.

அவர் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்களில் துவங்கி பாடல்கள் வரை அனைத்தும் எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு தகுந்தாற் போல இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனால்தான் ஏ.வி.எம் மாதிரியான பெரும் நிறுவனங்கள் கூட எம்.ஜி.ஆரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கவில்லை.

mgr

இந்த நிலையில் பாடல் வரிகள் எழுதுவதில் கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து படகோட்டி திரைப்படத்திற்கு பிறகு கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு பாடல் வரிகள் எழுதுவதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் கே.சங்கர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து கலங்கரை விளக்கம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்களுக்கு வரி எழுதுவதற்கான வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்திற்கு கொடுத்தார் இயக்குனர் கே.சங்கர்.

பஞ்சு அருணாச்சலம் அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். அவர் எழுத்து நன்றாக இருக்கும் என்பதால் கவிஞர் சொல்லும் கவிதைகளை இவர்தான் எழுதி வந்தார். இந்த நிலையில் கலங்கரை விளக்கம் படத்திற்கு இரண்டு பாடல்களை பஞ்சு அருணாச்சலம் எழுதி கொடுத்தார்.

ஆனால் அந்த பாடல் வரிகளை கேட்டவுடனேயே எம்.ஜி.ஆருக்கு சந்தேகம் வந்தது. யார் இந்த பாடல் வரிகளை எழுதியது என கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார் என கூறியுள்ளார் இயக்குனர் கே.சங்கர்.  இல்லை இந்த மாதிரியான வரிகளை கண்ணதாசனை தவிர யாரும் எழுத முடியாது.

என்னிடம் பொய் சொல்லாதீர்கள். அந்த வரிகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு புது வரிகளை எழுதுங்கள் என கூறிவிட்டார். இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட எம்.எஸ்.வி எம்.ஜிஆரிடம் சென்று என் முன்னிலையில்தான் பஞ்சு அருணாச்சலம் அந்த பாடல் வரிகளை எழுதினார். கண்ணதாசன் அதை எழுதவில்லை என கூறினார்.

அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த பாடல் வரிகளை படத்தில் வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

விஜயகாந்த் சொன்னதை அவர்கிட்ட சொல்லிடாத தம்பி!.. கேப்டனுக்கே பயம் காட்டிய திரை பிரபலம் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் அறிமுகமானப்போது கருப்பாக இருப்பதால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அவரது முதல் படமான தூரத்து இடி முழக்கம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கு அடுத்த படமான சட்டம் ஒரு இருட்டறை அவருக்கு பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது.

மேலும் அது நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகருக்கு முதல் படமாகும். அதனை தொடர்ந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்தார் விஜயகாந்த். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் சினிமாவிற்கு வந்த காலம் முதலே எவருக்கும் பயப்பட மாட்டார்.

எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் கவலையே படாமல் தைரியமாக கையாள்வார் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்தே கண் பார்த்து பேச பயப்படும் பிரபலம் ஒருவர் தமிழ் சினிமாவில் உண்டு என்றால் அவர் பஞ்சு அருணாச்சலம்தான்.

Vijayakanth

திரைத்துறையில் அதிக புகழ்ப்பெற்ற ஒரு பிரபலம்தான் பஞ்சு அருணாச்சலம். கண்ணதாசனிடம் உதவியாளராக பணிப்புரிந்தவர் பஞ்சு அருணாச்சலம். இளையராஜாவை முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம்தான். அதே போல ரஜினிகாந்திற்கு முதன் முதலாக ப்ரியா படத்தில் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி கொடுத்தவரும் பஞ்சு அருணாச்சலம்தான்.

இதனால் மொத்த திரைத்துறையும் அப்போது பஞ்சு அருணாச்சலத்திற்கு அதிக மரியாதை அளித்து வந்தனர். இந்த நிலையில் அலெக்சாண்டர் என்கிற திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் பஞ்சு அருணாச்சலம். ஆனால் அந்த கதை விஜயகாந்திற்கு பிடிக்காத காரணத்தால் அவர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்புவிடம் “எனக்காக கொஞ்சம் ஐயாவிடம் கதையை மாற்ற சொல்லி கூறுங்களேன்” என கேட்டுள்ளார்.

சுப்புவும் சரி என்று கூறிவிட இந்த செய்தி எப்படியோ விஜயகாந்த் நண்பர் ராவத்தருக்கு சென்றுள்ளது. அவர் உடனே சுப்புவை அழைத்து விஜயகாந்த் சொன்னதை எல்லாம் ஐயாவிடம் சொல்லி கொண்டிருக்காதீர்கள் தம்பி. அதெல்லாம் படம் நன்றாக வரும். இவன் இப்படிதான் சொல்லி கொண்டிருப்பான் விடுங்கள் என கூறியுள்ளார். சுப்பு பஞ்சு இதனை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..

தமிழ் சினிமாவில் பல புது முகங்களை சினிமாவிற்கு கொண்டு வந்து அவர்களை பெரிதாக வளர்த்துவிட்டவர் வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம். சினிமா துறையில் உள்ள அனைத்துமே அவருக்கு அத்துப்படி என கூறலாம். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் முதலில் அவரை போலவே கவிதைகள் எழுத துவங்கினார்.

பிறகு அதன் மூலமாக சினிமாவிற்கு வந்தவர் சினிமாவில் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டார். முக்கியமாக மக்களின் ரசனையை கற்றுக்கொண்டார் பஞ்சு அருணாச்சலம். இப்போது உள்ள பிரபலங்கள் இயக்குனர்களால் கூட முடியாத விஷயம் அது.

ஏதாவது ஒரு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டால் அதற்கு முன்பு அதை பஞ்சு அருணாச்சலத்திடம் போட்டு காட்டுவதை பல தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக கொண்டிருந்தன. அவர் அந்த படத்தில் எது மக்களுக்கு பிடிக்காது, எது பிடிக்கும் என கூறிவிடுவார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான ஸ்ரீதர் எழுதிய கதை ஒன்றை ஒருமுறை கண்ணதாசனிடம் பகிர்ந்துக்கொள்ள வந்தார். அப்போது அங்கு பஞ்சு அருணாச்சலமும் இருந்தார். பொதுவாக சுருக்கமாக கதை சொல்லும் ஸ்ரீதர் அந்த கதையை மட்டும் வெகு நேரம் கூறி கொண்டிருந்தார்.

கலைக்கோயில் (kalaikovil) என்ற அந்த திரைப்படத்தை எம்.எஸ்.வி தயாரிக்க இருந்தார். இந்த கதை பஞ்சு அருணாச்சலத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக படம் வெற்றியடையும் என அவர் நினைத்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை தரவில்லை.

இது பஞ்சு அருணாச்சலத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே அவரே சென்று அந்த படத்தை பார்த்தார். அதில் சில பிரச்சனைகள் இருந்ததை அப்போதுதான் பஞ்சு அருணாச்சலம் கவனித்தார். அதன் பிறகு அதை திருத்தி பஞ்சு அருணாச்சலம் ஒரு திரைக்கதை எழுதினார். அந்த அளவிற்கு திரைப்படங்களின் நுட்பங்களை அறிந்தவராக பஞ்சு அருணாச்சலம் இருந்தார்.

இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..

தமிழ் திரை இயக்குனர்களில் எப்போதுமே முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜா சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே சினிமாவில் புது முயற்சிகளை எடுத்தவர்.

இப்போது உள்ள இயக்குனர்கள் போல சண்டை காட்சிகள் மட்டும் வைத்து படங்களை இயக்காமல் படங்களில் பல விஷயங்களை பேசி இருந்தார் பாரதிராஜா. அதனாலேயே பாரதிராஜா திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.

பாரதிராஜா தனது முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஒரு காலகட்டத்திற்கு பிறகு பாக்கியராஜ் தனியாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தார் ஆனால் முதலில் திரைக்கதை எழுதி பழகி இருந்தால்தான் பிறகு திரைப்படம் எடுக்க முடியும்.

எனவே ஒரு திரைகதையை பாக்கியராஜ் எழுதினார். எழுதிய பிறகு அந்தத் திரைக்கதையை பாரதிராஜாவிடம் கொண்டு வந்து கொடுத்து நான் எழுதிய கதை படித்து பாருங்கள் சார் என்று கூறியுள்ளார். பாரதிராஜாவும் அந்த கதையை படித்தார்.

பாரதிராஜாவிற்கு அந்த கதை நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது ஆனாலும் தொழிலில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் இந்த கதையைப் படித்து நன்றாக இருக்கு என்று கூறினால்தான் சரியாக இருக்கும் என்று யோசித்தார் பாரதிராஜா. எனவே பஞ்சு அருணாச்சலத்திடம் இந்த கதையை கொண்டு சென்றார் அதனை படித்த உடனேயே பஞ்சு அருணாச்சலம் ஒரு விஷயத்தை கூறினார்.

பாக்கியராஜ் எதிர்காலத்தில் சிறப்பாக வருவார். அவரது கதை சிறப்பாக இருக்கிறது. எனவே இந்த படத்திற்கான திரைக்கதையை பாக்கியராஜ் எழுதட்டும் வசனத்தை நான் எழுதுகிறேன் என்று கூறினார் பிறகு பாக்யராஜ் எழுதிய அந்த கதை பாரதிராஜா இயக்கத்தில் படம் ஆக்கப்பட்டது. நிறம் மாறாத பூக்கள் என்கிற அந்த திரைப்படம் பெரும் வெற்றியை கண்டது.

அந்த ஒரு பாட்டுக்காக ஒரு கதையே எழுதினார் இயக்குனர்!.. அவர் இல்லைனா இளையராஜா இல்லை..

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. சினிமாவில் இதுவரை இளையராஜா அளவிற்கு இவ்வளவு காலங்கள் ஒரு இயக்குனர் மார்க்கெட் குறையாமல் இருப்பது கடினமான விஷயமாகும்.

இதுவரை இவர் 1000க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமாவிற்கு இளையராஜா வந்த காலக்கட்டத்தில் அவரது இசைக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. இதனால் இளையராஜா தங்களது திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என இயக்குனர்களே ஆசைப்பட்டனர்.

ஆனால் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது இவ்வளவு பெரிய வரவேற்பு இவருக்கு இருக்கவில்லை. அப்போது கஷ்டத்தில் இருந்த இளையராஜா ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா? என போராடி வந்தார். இந்த நிலையில் பல இயக்குனர்களிடம் தனது பாடலின் இசையை போட்டு காண்பித்தார் இளையராஜா ஆனால் அவர்கள் அவருக்கு வாய்ப்பு தரவில்லை.

இந்த நிலையில்தான் பிரபல கதையாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்தார் இளையராஜா. பஞ்சு அருணாச்சலத்திடமும்  தனது இசையை இசையமைத்து காட்டினார். அதை கேட்ட உடனே இளையராஜாவின் திறமையை கண்டுக்கொண்டார் பஞ்சு அருணாச்சலம்.

எனவே அவர் இளையராஜாவிடம் “நான் இப்ப நகைச்சுவை படத்துக்குதான் கதை வச்சிருக்கேன். இந்த இசைக்கு ஏத்த மாதிரி ஒரு கதையை எழுதிட்டு சொல்றேன். அதுக்கு இசையமைத்து கொடு.” என கூறினார். அதே போலவே அடுத்து அன்னக்கிளி படத்தின் கதையை எழுதிவிட்டு அதில் இளையராஜாவிற்கு வாய்ப்பளித்தார் பஞ்சு அருணாச்சலம்.

இளையராஜாவிற்காக அப்போது ஒரு கதையே எழுதியுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.

கம்மி சம்பளம் கொடுத்து உன்ன ஏமாத்துறாங்க! ரஜினிக்காக பஞ்சு அருணாச்சலம் எடுத்த நடவடிக்கை…

தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை அவரது மார்க்கெட் குறையாமல் இப்போது உள்ள இடம் நடிகர்களுக்கு கூட போட்டியாக நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு வந்த பொழுது 1000, 2000 என்று மிகக் குறைவான சம்பளத்திற்காக நடிக்க வந்தவர் ரஜினிகாந்த். ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார்.

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த போது பல படங்களில் நடித்து பெரிய ஹிட் நடிகராக ஆன பிறகு, அவருக்கு சம்பளம் குறைவாகவே கொடுத்து கொண்டு வந்தனர் ஆனால் ரஜினிகாந்த் அதை குறித்து எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரஜினிகாந்தை அழைத்துச் சென்றார் பஞ்சு அருணாச்சலம். நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் வருவதற்கு அவருக்கு எவ்வளவு தர வேண்டும் என்று அவர் கேட்கும் பொழுது அதற்கு ரஜினி படங்களில் சம்பளமாக முப்பதாயிரம் வரை தருகிறார்கள் நீங்கள் ஒரு 15,000 அல்லது 20,000 கொடுத்தால் பரவாயில்லை எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் பஞ்சு அருணாச்சலத்திற்கு மிகவும் ஷாக்காக இருந்துள்ளது. உன் மார்க்கெட் என்னவென்று தெரியுமா? உனக்கு எவ்வளவு டிமாண்ட் என்று தெரியுமா? என்ன வெறும் முப்பதாயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய். என சத்தம் போட்டுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.

1978ல் வெளியாகிய ப்ரியா திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்போதுதான் துவங்கியிருந்தது. பஞ்சு அருணாச்சலம் அந்த படப்பிடிப்பு நிறுவனத்திடம் பேசி அப்போது முப்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சம்பளமாக வாங்கித் தந்தார்.

சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பிரச்சனை, சென்ஸாரில் பிரச்சனை என இந்த மாதிரியான பிரச்சனைகளால் வெளியாகாமல் போன திரைப்படங்கள் பல உள்ளன.

தமிழ் திரையுலகில் முக்கியமான ஆளான பஞ்சு அருணாச்சலத்திற்கும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம் தொழிலதிபர்கள் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் மூலமாக படங்களை தயாரிப்பது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில் பஞ்சு அருணாச்சலம் விளையாட்டாக சிவாஜி கணேசனிடம் ஒரு நகைச்சுவை தங்க புதையல் கதையை கூறியுள்ளார். அதை கேட்கும்போதே பலருக்கு நகைச்சுவையாக இருந்திருக்கிறது. எனவே இதை படமாக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். அதுதான் பஞ்சு அருணாச்சலம் சினிமாவிற்கு எழுதிய முதல் கதை.

இந்த படத்தை சேதுராமன் என்கிற தொழிலதிபர் ஜே.எல் பிலிம்ஸ் என்னும் நிறுவனம் மூலமாக படத்தை தயாரித்தனர். படத்தில் சிவாஜிகணேசன், ரவிசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பட வேலைகள் எல்லாம் முடிந்ததும் படத்திற்கான மொத்த உரிமையை எங்களுக்கு கொடுத்து விடுங்கள். பொறுப்பு எடுத்து தயாரித்ததற்கு உங்களுக்கு ஒரு தொகை தருகிறோம் என சேதுராமன் தரப்பினர் ஜே.எல் பிலிம்ஸிடம் பேசியுள்ளனர்.

ஆனால் ஜே.எம் பிலிம்ஸ் தரப்பினர் “பணம் எல்லாம் ஒன்றும் வேண்டும் ஆளுக்கு பாதி பங்கு பிரித்து கொள்ளலாம்” என பேசியுள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இறுதி வரை அந்த படம் வெளியாகவில்லை. ஆனால் அந்த படம் வெளியாகி இருக்கும் பட்சத்தில் நல்ல ஹிட் கொடுத்திருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு பாடலுக்குதான் வரி எழுதினேன்! –  ஒரே வாய்ப்பில் பெரும் ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம்!

தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நபராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால் பதித்தவர் பஞ்சு அருணாச்சலம் என சொல்லலாம்.

சினிமாவிற்கு வந்த புதிதில் இவர் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தார். அப்போதைய காலக்கட்டங்களில் ஒரு படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாடலாசிரியர்களும் முக்கியமானவர்களாக இருந்தனர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்ததால் அப்போது தமிழ் சினிமாவில் முக்கால்வாசி பாடல்களுக்கு கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதி வந்தார். இந்த நிலையில் 1960 களில் வெளிவர இருந்த திரைப்படம் சாரதா.

இந்த படத்திற்கும் கூட கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதி தந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் படத்தில் இன்னொரு பாடல் சேர்க்க வேண்டி இருந்ததால் படக்குழு கண்ணதாசனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

ஆனால் அதற்குள்ளாக கண்ணதாசன் வெளியூருக்கு சென்றுவிட்டார். உடனடியாக பாடலுக்கு வரிகள் எழுத வேண்டும் என்கிற நிலை வரவே அவர்கள் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்தை அணுகியுள்ளனர்.

அவரும் படக்குழு மிகவும் வற்புறுத்தி கேட்டதால் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதி கொடுத்தார். சாரதா படத்தில் வரும் மணமகளே மணமகளே வா வா என்னும் அந்த பாடல் திரைத்துறையில் மிகவும் பிரபலமானது. இப்படி முதல் பாடலிலேயே ஹிட் கொடுத்து பஞ்சு அருணாச்சலம் திரை துறைக்குள் வந்தார்.