Tag Archives: கண்ணதாசன்

இதுக்கூட பண்ண முடியல… நீயெல்லாம் ஒரு கவிஞனா?.. எகத்தாளமாய் பேசிய எம்.எஸ்.வி.. கண்ணதாசன் செய்த சம்பவம்..!

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த இசை கலைஞர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.வி. தமிழில் எம் எஸ் வி நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இளையராஜாவிற்கு முன்பு வரை எம்.எஸ்.வி இசைக்குதான் அதிக வரவேற்பு இருந்தது.

இதனால் திரைத்துறையில் இருக்கும் பெரும் நடிகர்களே எம்.எஸ்.வியின் இசையில் தங்களுக்கு பாடல்கள் வேண்டும் என்று நினைத்தனர். இந்த நிலையில் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது.

கண்ணதாசனின் பழக்கம்:

கண்ணதாசனை பொருத்தவரை அவரை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும் அவரிடம் ஒரு சில வார்த்தைகள் யாரேனும் தவறாக பேசிவிட்டால் கூட அந்த படத்திற்கு  பாடல் வரிகள் எழுதாமல் சென்று விடக் கூடியவர் கண்ணதாசன்.

MSV

இப்படி இருக்கும் பொழுது எம்.எஸ்.வி அவரை மோசமாக திட்டிய சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ஒரு பாடலுக்கான இசையை எம்.எஸ்.வி எழுதிய பிறகு அந்த பாடலில் வரும் வார்த்தைகள் லா என்ற எழுத்தில் முடிய வேண்டும் என்பது எம்.எஸ்.வியின் ஆசையாக இருந்தது..

அதை கண்ணதாசனிடம் கூறினார். அதற்கு கோபமடைந்த கண்ணதாசன் அது எப்படி லா என்று முடியும் பாடல் வரிகளையே வரிசையாக எழுத முடியும் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார்.

சத்தம் போட்ட எம்.எஸ்.வி:

இது எம்.எஸ்.விக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது உடனே நீ இவ்வளவு பெரிய கவிஞன் என்று கூறிக் கொள்கிறாய் இந்த மாதிரி ஒரு பாட்டை உன்னால் போட முடியாதா என்று கேட்டுவிட்டார் எம் எஸ் வி.

kannadasan

இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து அவர் அப்படியான ஒரு பாடலை பிறகு எழுதி கொடுத்து விட்டார். இருந்தாலும் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் அதற்கு பிறகு பெரிதாக சண்டைகள் ஏற்பட்டதில்லை.

அவர்கள் நண்பர்கள் என்பதால் அப்போது ஏற்படும் சண்டைகள் எல்லாம் அப்பொழுதே முடித்து விடும் இந்த விஷயத்தை எம்.எஸ்.வி. ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இளையராஜாவால் திரைத்துறையை விட்டு சென்ற கண்ணதாசன்!.. இதுதான் காரணமாம்!.

கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பிரபலமான கவிஞராக இருந்து வந்தவர் ஆவார். தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் மாற துவங்கியப்போது கண்ணதாசனுக்கு அதில் வாய்ப்புகள் குறைய துவங்கின. வாய்ப்புகள் குறைய துவங்கின என கூறுவதை விடவும் அவரே விலகி கொண்டார் என கூறலாம்.

இதுக்குறித்து கண்ணதாசனின் மகன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கண்ணதாசன் வெகு காலங்களாக இசையமைத்து வந்தாலும் இளையராஜா மாதிரியான இசையமைப்பாளர்கள் வந்தப்போது அவருக்கு பாடல் வரிகள் எழுதுவது கடினமானது.

kannadasan-1

ஒருமுறை இளையராஜாவின் பாடலுக்கு வரிகள் எழுத கவிஞர் சென்றார். பொதுவாக ஒரு பாடலை கேட்டவுடனேயே அதற்கு வரிகளை எழுத கூடியவர் கவிஞர். ஆனால் இளையராஜாவின் இசைக்கு எந்த ஒரு பாடல் வரியும் அவருக்கு தோன்றவில்லை.

வேறு இசை போட சொன்னார். இளையராஜாவும் அன்று மட்டும் 40 வகையான இசையை போட்டுள்ளார். ஆனால் அது எதுவுமே கண்ணதாசனுக்கு பாடல் வரிகள் எழுத தோன்றவில்லை. அந்த படத்திற்கு பிறகு கண்ணதாசன் பாடல் வரிகள் எழுதுவதை விட்டுவிட்டார் என கூறப்படுகிறது.

ஆனால் கவிஞர் வாலியை பொறுத்தவரை அவரால் அனைத்து இசையமைப்பாளர்களுக்குமே பாடல் வரிகள் எழுத முடிந்தது.

கண்ணதாசனுக்கு பாடை கூட நான் சொல்றப்படிதான் இருக்கணும்!.. மேஜர் சுந்தர் ராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்!.

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை என கூறலாம். அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த எந்த ஒரு நடிகரையும் விட மதிப்பு வாய்ந்தவராக நடிகர் எம்.ஜி.ஆர் இருந்தார். இதனாலேயே அவரிடம் வாய்ப்பு வாங்குவதற்காக வரிசையில் நின்றனர் தயாரிப்பாளர்கள்.

அதே போல எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் நிறைய விதிமுறைகளை போடுவார். அவர் நடிக்கும் படங்களில் உள்ள நடிகர்களில் துவங்கி படத்தின் கதை, பாடல் என அனைத்துமே எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கும்.

அதில் ஏதேனும் ஒன்று எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்றாலும் உடனே அதை மாற்றிவிட வேண்டும். ஆனால் அதே விஷயத்தை ஒரு நபரின் இறப்பிலும் செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அது வேறு யாரும் அல்ல கண்ணதாசனின் இறப்பில்தான்.

MGR

கண்ணதாசனின் இறப்பிற்கு தாமதமாகவே வந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்காக காத்திருந்து பார்த்துவிட்டு அவர் வர தாமதமாகும் என பாடையை எல்லாம் கட்டி அதில் கண்ணதாசனையும் வைத்துவிட்டனர். அப்போதுதான் அங்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

பாடையை பார்த்த எம்.ஜி.ஆர். கண்ணதாசன் முகம் தெரியாத மாதிரி இப்படியா பாடையை கட்டுவீர்கள் என கூறி முழுவதுமாக அதை அவிழ்த்து மீண்டும் கட்ட சொல்லியுள்ளார். இந்து மத மரபுப்படி ஒருவரது உடலை பாடையில் ஏற்றிவிட்டால் திரும்ப சுடுக்காட்டில்தான் கீழே இறக்க வேண்டும்.

ஆனால் எம்.ஜி.ஆர் அடம் பிடித்ததால் கண்ணதாசன் பிரேதத்தை கீழே இறக்கி மீண்டும் பாடையை வேறு மாதிரி மாற்றி கட்டி அவரது உடலை ஏற்றியுள்ளனர். மேஜர் சுந்தர் ராஜன் ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை தெரிவித்துள்ளார்.

கண்ணதாசன் பாட்ட தூக்கி குப்பைல போடுய்யா!.. இயக்குனர் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அரசியல் தலைவராக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தப்போதே அவருக்கு பெரும் ரசிக கூட்டம் ஒன்று இருந்தது.

பிறகு அவர் கட்சி துவங்கிய பிறகு அந்த ரசிக கூட்டம் அப்படியே தொண்டர் கூட்டமாக மாறியது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் தமிழகத்தையே ஆட்சி செய்யும் அளவிற்கு பெரும் உயரத்தை தொட்டார். சினிமாவில் இருக்கும்போதே அதில் எம்.ஜி.ஆரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.

அவர் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்களில் துவங்கி பாடல்கள் வரை அனைத்தும் எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு தகுந்தாற் போல இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனால்தான் ஏ.வி.எம் மாதிரியான பெரும் நிறுவனங்கள் கூட எம்.ஜி.ஆரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கவில்லை.

mgr

இந்த நிலையில் பாடல் வரிகள் எழுதுவதில் கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து படகோட்டி திரைப்படத்திற்கு பிறகு கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு பாடல் வரிகள் எழுதுவதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் கே.சங்கர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து கலங்கரை விளக்கம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்களுக்கு வரி எழுதுவதற்கான வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்திற்கு கொடுத்தார் இயக்குனர் கே.சங்கர்.

பஞ்சு அருணாச்சலம் அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். அவர் எழுத்து நன்றாக இருக்கும் என்பதால் கவிஞர் சொல்லும் கவிதைகளை இவர்தான் எழுதி வந்தார். இந்த நிலையில் கலங்கரை விளக்கம் படத்திற்கு இரண்டு பாடல்களை பஞ்சு அருணாச்சலம் எழுதி கொடுத்தார்.

ஆனால் அந்த பாடல் வரிகளை கேட்டவுடனேயே எம்.ஜி.ஆருக்கு சந்தேகம் வந்தது. யார் இந்த பாடல் வரிகளை எழுதியது என கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார் என கூறியுள்ளார் இயக்குனர் கே.சங்கர்.  இல்லை இந்த மாதிரியான வரிகளை கண்ணதாசனை தவிர யாரும் எழுத முடியாது.

என்னிடம் பொய் சொல்லாதீர்கள். அந்த வரிகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு புது வரிகளை எழுதுங்கள் என கூறிவிட்டார். இந்த நிலையில் விஷயத்தை கேள்விப்பட்ட எம்.எஸ்.வி எம்.ஜிஆரிடம் சென்று என் முன்னிலையில்தான் பஞ்சு அருணாச்சலம் அந்த பாடல் வரிகளை எழுதினார். கண்ணதாசன் அதை எழுதவில்லை என கூறினார்.

அதன் பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த பாடல் வரிகளை படத்தில் வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

அவமாரியாதை செய்த தயாரிப்பாளரை ஆட்டம் காண வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!.. அந்த ஒரு வாக்கியம்தான் காரணம்!.

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து குறைந்த காலங்களிலேயே பெரும் உயரத்தை தொட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஒரு கவிஞராக அவரது திறனை கண்டு கவிஞர் கண்ணதாசன் வரை பலரும் மிரண்டு போயுள்ளனர் என்றே கூற வேண்டும்.

பொதுவாக கவிஞர் கண்ணதாசன் அவ்வளவு எளிதாக யாரையும் புகழ்ந்து பேசிவிட மாட்டார். அவரது காலத்திலேயே சிறப்பாக பாடல் வரிகளை எழுதி வந்த வாலியை புகழ்ந்து பேசியது கிடையாது. அப்படியிருக்கும்போது கண்ணதாசனே புகழ்ந்து பேசியிருக்கிறார் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்டவராக இருப்பார் என அறிய வேண்டும்.

இந்த நிலையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1955 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்கிற திரைப்படத்தில்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரை பொறுத்தவரை அவரது அலுவலகத்தில் அவர் அமர மட்டுமே எப்போதும் நாற்காலி இருக்கும். அவரை பார்ப்பவர்கள் வருவதற்கு அவர் நாற்காலி போட மாட்டார்.

அவர்கள் நின்றுக்கொண்டேதான் அவரிடம் பேச வேண்டும். இதில் கலைஞர் மு கருணாநிதி மட்டும் விதிவிலக்கு. அவருக்கு மட்டுமே நாற்காலி போடப்படும். இந்த நிலையில் ஒரு நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சந்திப்பதற்காக வர சொல்லியிருந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்.

அங்கு அவரை பார்க்க சென்ற கல்யாணசுந்தரம் அங்கு நாற்காலி இல்லாமல் இருப்பதை பார்த்தார். உடனே ஒரு பேப்பரை எடுத்து ஒரு வாசகத்தை எழுதி மாடர்ன் தியேட்டர் நிறுவனரிடம் கொடுத்தார். அதில் மரியாதை கொடுத்து மரியாதை வாங்க பழகி கொள்ளுங்கள் என எழுதியிருந்தது. அதை படித்ததும் உதவியாளரை அழைத்து கல்யாணசுந்தரத்திற்கு நாற்காலியை போட்டார் மாடர்ன் தியேட்டர் நிறுவனர்.

முதல் படம்தான் என்றாலும் கூட தயாரிப்பாளர் தனக்கு உண்டான மரியாதையை அளிக்க வேண்டும் என நினைத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

தேவையில்லாமல் போட்ட ஒரு கையெழுத்து.. அண்ணனை கூட விடல!. குத்தி காட்டி கண்ணதாசன் போட்ட பாடல்!.

சினிமாவில் பெரும்பாலும் சிறப்பான பாடல் வரிகளை எழுதும் கவிஞர்களுக்கு எல்லாம் மானசீக குருவாக கவிஞர் கண்ணதாசன்தான் இருப்பார். அந்த அளவிற்கு கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக இருந்தவர்.

பொதுவாக கவிஞர்களுக்கு ஒரு பாடலுக்கான வரிகளை எழுதுவதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படும். ஆனால் கண்ணதாசனை பொறுத்தவரை அவருக்கு அருவி மாதிரி பாடல் வரிகள் வந்துக்கொண்டே இருக்கும். இது இல்லாமல் கண்ணதாசனிடம் ஒரு சிறப்பம்சமும் உண்டு.

அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் இருந்தார் என்றால் அவருக்கு சிறப்பாக மகிழ்ச்சியான பாடல்களை எழுதுவதற்கு வரும். அதுவே மிகவும் சோகமாக இருந்தார் என்றால் சோகமான பாடல்களை எழுதுவார் கண்ணதாசன்.

kannadasan

இந்த நிலையில் வேறு ஒரு நபருக்காக ஜாமின் கையெழுத்து போட்டு அதன் மூலம் பெரும் கடன் சுமையில் சிக்கினார் கண்ணதாசன். அந்த சமயத்தில் அவர் மிகவும் கவலையில் இருந்தார். அதே நேரம் ஒரு சோக பாடலுக்கு பாடல் வரிகள் எழுத அவருக்கு வாய்ப்பு வந்தது.

இந்த நிலையில் அந்த பாடலுக்கு சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என பாடல் வரிகளை எழுதியிருந்தார் கண்ணதாசன். அதே போல ஒருமுறை மாபெரும் கடன் பிரச்சனையில் இருந்தப்போது தனது அண்ணனிடம் கடன் கேட்டார் கண்ணதாசன்.

ஆனால அவரது அண்ணன் அந்த சமயத்தில் இவருக்கு உதவவில்லை. இதனால் விரக்தியடைந்த கண்ணதாசன் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்னும் பாடல் வரிகளை எழுதினார். இப்படி அவரது வாழ்வில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பாடல் வரிகள் வழியாக அவர் வெளிப்படுத்தி வந்தார்.

இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங்!.. எம்.ஜி.ஆர் மேல கைய வைக்காதீங்க!.. கண்ணதாசனுக்கு எச்சரிக்கை கொடுத்த சோ!..

MGR and Kannadasan: இப்போது இருக்கும் திரை துறையை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் திரைத்துறை மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. சொல்லப்போனால் திரைத்துறையும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த காலகட்டம்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம்.

அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பலரும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அது குறித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அவர்கள் பேசியும் வந்தனர். அப்படியாக கவிஞர் கண்ணதாசன் திமுக கழகத்தின் தொண்டராக இருந்து வந்தார்.

அதே சமயம் பத்திரிகையாளர் சோ வை பொறுத்தவரை அவர் தி.மு.கவிற்கு எதிரான மனநிலையில் இருந்தார். அதேசமயம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான மனநிலையில் இருந்தார். இந்த நிலையில் ஒருமுறை கலைஞர் மிகப்பெரிய ராஜதந்திரி என்று கண்ணதாசன் கூறிய பொழுது அதை ஒப்புக்கொள்ளவில்லை சோ.

அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து எம்.ஜி.ஆரை பொருளாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்து இருந்தார் கலைஞர். இந்த விஷயம் முன்பே கண்ணதாசனுக்கு தெரிந்து விட்டது.

இந்த நிலையில் சோவுக்கு போன் செய்த கண்ணதாசன் இந்த விவரத்தைக் கூறி இப்பொழுது சொல்லுங்கள் கலைஞர் ராஜதந்திரி என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த சோ கூறும் பொழுது இப்படி ஒரு விஷயத்தை கலைஞர் செய்தார் என்றால் அவரை ராஜதந்திரி என்று யாரும் ஒப்புக்கொள்ள முடியாது.

ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் மக்கள் கூட்டம் என்னவென்று உங்களுக்கு புரியவில்லை. திமுக என்கிற கட்சி இருந்தாலும் இல்லை என்றாலும் அது எம்.ஜி.ஆர் புகழை எப்படியும் பாதிக்கப் போவது கிடையாது. சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் ஒரு கட்சி துவங்கினார் என்றால் அது தி.மு.கவிற்கு மிக பெரும் எதிரான ஒரு கட்சியாக அமைந்துவிடும்.

மக்கள் கூட்டமும் அந்த கட்சியின் பக்கம்தான் போகும் எனவே அவரை கட்சியிலிருந்து நீக்குவது என்பது சரியான முடிவு கிடையாது என்று சோ கூறினார். சோ கூறியது போலவே எதிர்காலத்தில் எம்.ஜி.ஆரின் கட்சி மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானது.

எங்கப்பா நினைச்சிருந்தா 15 வருஷத்துக்கு அவர்தான் கவிஞர்!.. வேற யாருக்கும் அப்படி நடக்கலை!. கண்ணதாசன் மகனின் ஓப்பன் டாக்!..

Poet Kannadasan: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் கவிஞர்களுக்கு என்று தனி மதிப்பும் மரியாதையும் தமிழ் சினிமாவில் இருந்தது. எப்படி இசையமைப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் அதிக சம்பளம் தருகிறார்களோ அதே போலவே அதிக சம்பளம் பெற்றவர்களாகத்தான் கவிஞர்களும் இருந்தனர்.

ஏனெனில் இசைக்கு தகுந்த பாடல் வரிகளை எழுதுவது என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு விஷயம் கிடையாது. அதுவும் அந்த வரிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். தற்சமயம் பாடல் வரிகளை நடிகர்கள் கூட எழுதுகின்றனர்.

ஆனால் அந்த வரிகள் எல்லாம் அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்பது கேள்விதான். இதனால்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மிகப் பெரும் கவிஞராக கண்ணதாசன் அறியப்பட்டார். கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவருடைய கால் சீட் கிடைப்பது என்பது இயக்குனர்களுக்கு கடினமான விஷயமாக மாறியது.

kannadasan

இது குறித்து கண்ணதாசனின் மகன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது எங்கள் ஏரியாவில் யார் வீட்டிலுமே கார் கிடையாது. ஆனாலும் ஏரியாவில் குறைந்தது எப்போதும் 30 காராவது நின்று கொண்டிருக்கும். அவையெல்லாம் ஒவ்வொரு திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனுப்பிய கார் ஆகும்.

வெளியில் வரும் எனது தந்தை எந்த காரில் ஏறுகிறாரோ அந்த படத்திற்கு தான் அவர் முதலில் பாடல் வரிகள் எழுதப் போகிறார் என்று அர்த்தம். கண்ணதாசன் நினைத்திருந்தால் அடுத்த 15 வருடத்திற்கு தமிழ் சினிமாவில் வேறு எந்த கவிஞரும் வளர முடியாதபடி செய்திருக்க முடியும். அந்த அளவிற்கு அவருக்கு மதிப்பு இருந்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு கவிஞருக்கு இப்படி வண்டி அனுப்பி காத்திருந்த கதை கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு என்று கூறுகிறார் அவர் மகன்.

எனக்கு அந்த பொண்ணுதான் பாட்ட பாடணும்!.. எம்.எஸ்.வி தரகுறைவாக பேசியதால் கடுப்பான கண்ணதாசன்!..

Kannadasan and MSV : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு துறையும் அந்த துறை சார்ந்த நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உதாரணமாக இசைத்துறையை பொறுத்தவரை இசையமைப்பாளர்தான் பாடலாசிரியர் மற்றும் பாடகர்களை தேர்ந்தெடுப்பார்.

அதில் வேறு யாரும் மூக்கை நுழைக்க முடியாது. எம்.ஜி.ஆர் மாதிரியான பெரும் நடிகர்கள் மட்டும் அனைத்து துறைகளிலும் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப ஆட்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் யாரை பாடலில் பாட வைத்தது என்பது தொடர்பாக எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு பெரும் பஞ்சாயத்து நிகழ்ந்திருக்கிறது.

மகாதேவி என்கிற திரைப்படத்திற்கு எம் எஸ் விதான் இசையமைத்து வந்தார். அந்த படங்களுக்கான பாடல்களை கண்ணதாசன் எழுதி வந்தார் இருவருமே அப்பொழுது திரைத்துறையில் பெரும் ஜாம்பவான்களாக இருந்து வந்தனர்.

அப்பொழுது அந்த திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான பாடல் ஒன்று இடம்பெற்றது. அதற்கான வரிகளை கண்ணதாசன் எழுதிய பொழுது ஜமுனா ராணி என்கிற பாடகிதான் இந்த பாடலை பாட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். ஆனால் எம் எஸ் வி க்கு இதில் உடன்பாடு இல்லை.

ஏனெனில் ஜமுனா ராணி பொதுவாகவே கவர்ச்சி பாடல்கள்தான் அதிகமாக பாடக்கூடியவர். இப்படி உணர்ச்சிகரமான ஒரு பாடலை அவரால் பாட முடியாது என்பது எம் எஸ் வியின் எண்ணமாக இருந்தது. இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

எனவே எம்எஸ்வியிடம் சென்று பேசிய கண்ணதாசன் அவரை வைத்து அந்த பாடலை பதிவு செய்யுங்கள் ஒருவேளை அது நன்றாக இல்லை என்றால் அதற்கு ஆன செலவை நானே கொடுத்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் கண்ணதாசன். சரி என்று எம்.எஸ்.வியும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஜமுனா ராணிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. ஆனால் அந்த பாடலை மிகச் சிறப்பாக பாடி இருக்கிறார் ஜமுனா ராணி.

100 நாள் ஓடின அந்த படம்தான் என் முதல் படம்!.. விருதும் வாங்கினேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வாலி!..

Poet vaali: தமிழ் திரைப்பட கவிஞர்களில் கண்ணதாசனுக்கு பிறகு அனைவராலும் வெகுவாக போற்றப்படும் கவிஞராக வாலி பார்க்கப்படுகிறார். கண்ணதாசனுக்கு பிறகு நிறைய புது கவிஞர்கள் சினிமாவிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் வாலி அளவிற்கு கவிதைகளை எழுதிவிடவில்லை.

அந்த அளவிற்கு சிறப்பான பாடல் வரிகளை வாலி அளித்துள்ளார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் வாலி மிகவும் கஷ்டப்பட்டார். ஏனெனில் அப்போதெல்லாம் ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது சிரமமான விஷயமாக இருந்தது.

இதனால் வாலி சிரமப்பட்டுதான் பாடல் வரிகளுக்கான வாய்ப்பை பெற்றார். எடுத்த உடனே முழு படத்திற்கும் பாடல் வரிகள் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் பாடல் வரி எழுத வாய்ப்பு கிடைத்தது.

tamil-poet-vaali

அதிலேயே சிறப்பான பாடல் வரிகளை எழுதியிருந்தார் வாலி. வாலியின் இந்த திறனை கண்டு திரைத்துறையினர் வாய்ப்பு கொடுக்க துவங்கினர். இதுக்குறித்து வாலி ஒரு பேட்டியில் கூறும்போது உண்மையில் ஜெமினி கணேசன் நடித்த கற்பகம் திரைப்படம்தான் எனக்கு முதல் படம்.

அந்த படத்தில்தான் நான் அனைத்து பாடல்களுக்குமே வரிகள் எழுதினேன். அந்த படம் 100 நாள் வரை ஓடியது. மேலும். அந்த படத்திற்காக கண்ணதாசனே எனக்கு விருது கொடுத்தார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம் என கூறியுள்ளார் வாலி.

போலீசாரால் தனக்கு நடந்த அனுபவத்தை பாடலில் வைத்த கண்ணதாசன்!.. எந்த பாட்டு தெரியுமா?..

Poet Kannadasan : தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் பாடல்களுக்கு அனைத்து பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் கண்ணதாசன்.

ஏழ்மையான நிலையில் இருந்தே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார் கண்ணதாசன். தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் கையில் காசும் இல்லாமல் சென்னைக்கு வந்தார். இப்போது வரை இப்படி கண்ணை மூடிக்கொண்டு சென்னைக்கு வருபவர்கள் அதிகம்.

அப்படி வந்த கண்ணதாசனுக்கு தங்குவதற்கு இடமிருக்கவில்லை. அப்போதெல்லாம் சென்னையில் தங்குவதற்கு இடமில்லாதவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரைதான் அடைக்கலம். எனவே கண்ணதாசன் நேராக மெரினா கடற்கரை சென்று அங்கு உறங்கி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர்கள் அவரிடம் 25 பைசா கொடுத்தால்தான் இங்கு தூங்க விடுவோம் என கூறியிருக்கின்றனர். ஆனால் கண்ணதாசனுக்கு அவர்களிடம் காசு கொடுக்க விருப்பமில்லை. எனவே அவர் நடந்து சென்றபோது அவருக்கு காந்தி சிலை அடைக்கலம் கொடுத்தது. அங்கு உறங்கினார்.

அதன் பிறகு அவர் பாடலாசிரியர் ஆன பிறகு அவர் தயாரித்த சுமைதாங்கி திரைப்படத்தில் அதை பேசும் விதமாக பாடல் வரிகளை அமைத்தார். மனிதர்கள் கை விட்டால் கூட காந்தியின் சிலை கூட தனக்கு உதவியது. அந்த விதத்தில் பார்க்கும்போது நல்லவர்களும் உலகில் இருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்கிற பாடலை எழுதினார்.

அதில் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்.

புகழ்ந்து பாட்டு எழுத நான் என்ன புலவனா!.. எம்.ஜி.ஆரை உதாசினப்படுத்திய கண்ணதாசன்!..

MGR and Kannadasan : பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும்புள்ளியாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலகட்டங்களில் சிவாஜி கணேசனை போலவே பலவிதமான கதைகளிலும் நடித்து வந்தாலும் ஓரளவு பிரபலமான பிறகு தொடர்ந்து கமர்சியல் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக உள்ள சாதாரண கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. தொடர்ந்து மக்களுக்காக உழைக்கும் கதாபாத்திரமாகவும் எதிரிகளை எதிர்த்து சண்டை போடும் கதாபாத்திரமாகவும் மட்டுமே நடித்து வந்தார் எம்.ஜி.ஆர்.

பெரும் நட்சத்திரமாக உயர்ந்த பிறகு அவரது திரைப்படங்களில் அனைத்து விஷயங்களையும் அவரே முடிவு செய்வார் என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் படத்தின் பாடல்களில் துவங்கி நடிக்கும் நடிகர்கள் வரைக்கும் அனைத்தும் எம்ஜிஆரின் விருப்பத்திற்கு ஏற்பவே செய்யப்பட்டது.

mgr (1)

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத வந்த பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளில் குறை கூறிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதும் போது எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசுவது போல பாடல் வரிகள் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார்.

இதனால் கோபமான கண்ணதாசன் சிவாஜி கணேசனுக்கே நான் அப்படி பாடல் வரிகள் எழுதியது கிடையாது உங்களுக்கு எப்படி எழுத முடியும் புகழ்ந்து பேசி பரிசு வாங்கி செல்வதற்கு நான் என்ன புலவனா என்று கூறி கோபமான கண்ணதாசன் அதற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு பெரிதாக பாடல் வரிகளே எழுதி கொடுக்கவில்லை. பெரும்பாலான பாடல் வரிகளை கவிஞர் வாலிதான் எழுதி கொடுத்தார்.