Tag Archives: வடிவேலு

இளம் நடிகர்களால் வரும் பிரச்சனை.. ஓப்பன் டாக் கொடுத்த காமெடி நடிகை..!

தமிழில் நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சுமதி. முக்கியமாக வடிவேலுவுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கும் நிறைய காமெடிகள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சுமதி சினிமா துறையில் இருக்கும் பல விஷயங்களை தற்சமயம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய கணவர்தான் என்று கூறியிருந்தார்.

சினிமாவில் என்ன மாதிரியான பிரச்சனைகள் உங்களுக்கு வருகின்றன என்று கேட்ட பொழுது சுமதியின் கணவர் அதற்கு பதில் அளித்து இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது சினிமாவிற்கு வரும் இளம் நடிகர்கள் துடிப்பாக நடிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கும் வயதான நடிகர்களால் அப்படி தொடர்ந்து நடிக்க முடியாது. சில நேரம் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும். அப்பொழுது ஓய்வு கொடுத்து நடிக்க வேண்டும். ஆனால் இளம் நடிகர்களை பொருத்தவரை ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருப்பார்கள்.

அதனால் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் மற்ற நடிகர்களும் அப்படியே நடிக்க வேண்டி உள்ளது. சுமதியும் அந்த மாதிரி நிறைய நேரங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் அவருடைய கணவர்.

 

 

 

தேறுமா இல்லையா? எப்படியிருக்கு மாரீசன் திரைப்படம்..!

இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நாளை வெளியாகியிருக்கும் திரைப்படம் மாரீசன். இந்த திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனாலேயே இந்த படத்திற்கு நல்ல வகையில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி பகத் பாசில் ஒரு திருடனாக இருந்து வருகிறார். அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் வடிவேலு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அப்போது அவர் பகத் பாசிலிடம் உதவி கேட்கிறார்.

மேலும் தன்னை காப்பாற்றினால் ஒரு தொகை தருவதாகவும் கூறுகிறார் வடிவேலு. இந்த நிலையில் பகத் பாசிலும் அவரை காப்பாற்றுகிறார். பிறகு ஏ.டி.எம் சென்று பணத்தை எடுத்து கொடுக்கிறார் வடிவேலு. அப்போதுதான் அவரது வங்கி கணக்கில் நிறைய பணம் இருப்பதை பார்க்கிறார் பகத் பாசில்.

அதை எப்படியாவது எடுத்துவிட பகத் பாசில் திட்டமிடுகிறார். இந்த நிலையில் அதற்காக வடிவேலுவுடன் பயணிக்கிறார் பகத் பாசில். வடிவேலுவிற்கு அல்சைமர் என்கிற நினைவு இழப்பு வியாதி இருந்து வருகிறது. இதனை அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய விஷயங்களை மறக்க துவங்குகிறார்.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்திற்கு மேல் வடிவேலுவால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார் பகத் பாசில். இதற்கு நடுவே பகத் பாசிலுக்கும் வடிவேலுக்கும் இடையே ஒரு நல்ல உறவு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து கதை எப்படி செல்லும் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

படம் சுறு சுறுப்பான திரைக்கதையை கொண்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் சிறப்பாக இருப்பதால் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை சரளாவுக்கும் எனக்கும் ஒரே அறை வேணும்.. வடிவேலு செய்த ரகளை.. வெளிப்படுத்திய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஒரு காலக்கட்டத்தில் வடிவேலுவின் காமெடிக்காக திரைப்படங்கள் ஓடி நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரது சம்பளம் என்பதும் அதிகரிக்க துவங்கியது.

வடிவேலு அதிகமாக கோவை சரளாவுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ என்பது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. முதன் முதலாக இயக்குனர் வி.சேகர் திரைப்படத்தில்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

vadivelu-1

இந்த நிலையில் இதுக்குறித்து வி.சேகர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது வடிவேலுவை வைத்து படம் இயக்கும்போது அவர் என்னிடம் வந்து மேக்கப் செய்வதற்கு எதற்கு சார் தனி தனி அறை ஒரே ரூம் போதாதா எனக் கேட்டார்.

சரி என நானும் ஒரு அறையை வைத்தேன். அதற்கு பிறகுதான் தெரிந்தது. கோவை சரளாவுடன் மேக்கப் போட  போனால் அறையை சாத்திக்கொண்டு வடிவேலு வெளியே வருவதில்லை என்று. என அந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் வி.சேகர்.

 

Trailer: ஞாபகமறதிகாரரும்.. பண திருடனும்.. மாரீசன் ட்ரைலரில் லீக் ஆன கதை..!

நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கும் திரைப்படமாக மாரீசன் திரைப்படம் இருந்து வருகிறது. ஏற்கனவே மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் சதீஷ் சங்கர் என்பவர் இயக்கத்தில் மாரீசன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி வடிவேலு ஞாபகம் ம்றதி நோய் கொண்ட ஒரு நபராக இருக்கிறார்.

பகத்பாசில் கதாபாத்திரம் திருடன் கதாபாத்திரம் ஆக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக பணம் வைத்திருக்கும் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடுவதற்காக திருவண்ணாமலைக்கு அவரை தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார் பகத் பாசில்.

இதற்கு நடுவில் எப்படி அவர் பணத்தை திருடினார் என்பதுதான் கதையாக இருக்கிறது. ஆனால் டிரைலரை பார்த்தவரை திருடுவதற்கு முன்பே வடிவேலுவுடன் ஒரு நல்ல உறவு உருவாக்குகிறது.

இதனை தொடர்ந்து அவர் திருடாமல் தன்னுடைய நண்பனாக வடிவேலுவை பார்க்க துவங்குகிறார் என தெரிகிறது. வடிவேலுவும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய ஏடிஎம் பாஸ்வேர்டை கூட மறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து அவராலேயே பணம் எடுக்க முடியாது என்கிற நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு எப்படி செல்கிறது என்பதாக தான் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு வடிவேலு இல்ல.. கிடப்பில் கிடக்கும் வடிவேலு படம்.!

சினிமாவிற்கு வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்தது முதலே அவரது திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.

அவர் நடித்த திரைப்படத்திலேயே மாமன்னன் திரைப்படம் மட்டும் தான் ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது. காமெடி திரைப்படங்களில் பெரிதாக இப்பொழுதும் வடிவேலு காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.

சுந்தர் சி நடித்த திரைப்படத்தில் கூட வடிவேலுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. ஆனாலும் அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை இந்த நிலையில் வடிவேலு மற்றும் பகத்ஃபாசில் இணைந்து நடித்த மாரிசன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி கூறும்போது வடிவேலு மற்றும் பகத்ஃபாசில் இணைந்து நடிப்பது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் எனக்கு ஆச்சரியமாக இல்லை.

ஏனெனில் இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆர்.பி சௌத்ரி தான் இந்த திரைப்படத்தை தயாரித்தார் ஆனால் அந்த படம் விற்பனை ஆகாமல் கிடப்பில் கிடந்தது.

இப்பொழுதுதான் அந்த படம் விற்பனை ஆகி உள்ளது. உண்மையில் வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக மார்க்கெட் இல்லை அதனால் தான் அவர் படங்கள் விற்பனையாவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.

வடிவேலு அதுக்காக வீட்ல அழுது இருப்பாரு.. ரகசியத்தை உடைத்த சரத்குமார்..!

தமிழில் பிரபலமான காமெடி நடிகர்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருடைய காமெடிக்காகவே பிரபலமாக இருந்துள்ளன. இன்னமும் சில வடிவேலு காமெடிகள் எந்த படத்தில் வரும் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும்.

ஆனால் வடிவேலுவிற்கும் நடிகர் விஜயகாந்துக்கும் இடையே சண்டை ஏற்பட்ட பிறகு அது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. அதனை தொடர்ந்து அரசியலுக்கு சென்றார் வடிவேலு. பிறகு திரும்ப அவரால் சில வருடங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.

என்னதான் இப்போது மீண்டும் வாய்ப்பை பெற்று நடித்து வந்தாலும் கூட பழைய வடிவேலுவாக அவர் இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் விஜயகாந்த் தான் வடிவேலுவை வளர்த்துவிட்டவர், ஆனால் அவரது இறப்புக்கே வடிவேலு வரவில்லை என பலரும் வடிவேலுவை பேசி வந்தனர்.

vadivelu

இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சரத்குமார் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் ஒரு கார் பார்க்கிங்கில் வந்த சண்டைதான் எல்லாவற்றுக்கும் காரணம். எல்லா மனிதர்களுக்குமே நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்கிற ஈகோ பிரச்சனை வரதான் செய்யும்.

அதற்கு பிறகு அரசியலுக்கு சென்ற வடிவேலு தொடர்ந்து விஜயகாந்தை பற்றி மோசமாக பேச வேண்டிய சூழல் உருவானது. இதனால்தான் அவர் அந்த இறப்பிற்கு வராமல் இருந்திருப்பார். ஒருவேளை விஜயகாந்தை பார்க்க வந்து ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்திருப்பார்.

ஆனால் வீட்டில் அழுதிருப்பார். இப்படி கடைசி நேரத்தில் கூட விஜயகாந்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டிருப்பார். அவரும் மனிதர்தானே என கூறியிருக்கிறார் சரத்குமார்.

சினிமாவில் எனக்கு என்னவெல்லா செஞ்சுருக்காய்ங்க.. கமல்ஹாசனுக்கு நடந்த கொடுமைகள்.!

சிறுவயதிலிருந்தே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சின்ன வயதில் இருந்து அவருக்கு நடிப்பின் மீது அதிகம் அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சினிமாவிலேயே பயணித்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் அரசியல் ரீதியாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவற்றை கமல்ஹாசன் எப்படி சமாளித்தார் என்பது பலருக்குமே பெரும் ஆச்சரியமான விஷயம் தான்.

ஏனெனில் சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களும் பெரிய இடத்தை பிடித்து விடுவது கிடையாது. சினிமாவிற்குள் இருக்கும் போட்டி பொறாமை காரணமாக அவர்கள் நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.

kamalhaasan

இது குறித்து வடிவேலு ஒரு பேட்டியில் பேசும்பொழுது ஒருமுறை நான் கமலஹாசனை வியந்து இவ்வாறு கூறினேன். கமல்ஹாசன் எப்படி தான் இத்தனை பேருக்கு நடுவில் மிகப்பெரிய ஹீரோ ஆனாரோ என்று கூறினேன்.

அப்பொழுது அது குறித்து கமலஹாசனிடம் வந்து பேசும்பொழுது உனக்கு செஞ்சதை விட எனக்கு இந்த சினிமா நிறைய கஷ்டங்களை செய்து இருக்கு ஆனால் அதை எல்லாம் தாண்டி தான் வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார் என வடிவேலு அந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார்.

சினிமாவில் எனக்கு நடந்த சதி.. ப்யூன் பையனை கூட நம்பாதீங்க.. வடிவேலு ஓப்பன் டாக்..

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுடன் மட்டும் நல்லபடியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது உண்டு. அந்த மாதிரி இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது வடிவேலுவின் காமெடிகளும் சிறப்பாக இருக்கும்.

அப்படியாக வடிவேலு காம்போவாக நடித்த ஒரு இயக்குனர் தான் சுந்தர்சி. சுந்தர் சியுடன் நடித்த நகரம் தலைநகரம் மாதிரியான திரைப்படங்களின் காமெடி எல்லாம் அதிகம் வரவேற்பு பெற்றுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட 14 வருடங்களாக சுந்தர் சியும் வடிவேலுவும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு வெகு வருடங்கள் கழித்து இப்பொழுது கேங்கர்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக இருவரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

இந்த பிரிவு குறித்து பேட்டியில் பேசிய வடிவேலு கூறும் பொழுது 14 வருடங்கள் நாங்கள் பிரிந்து இருந்தோம் என்று கூறுவதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ஏதோ சில வருடங்கள் ஆனது போல தான் இருக்கிறது.

சினிமாவை பொறுத்த வரை அதில் நம்மை கோர்த்து விடுபவர்கள் நிறைய பேர் உண்டு. நான் படங்களுக்கு வாய்ப்பு கேட்ட சமயங்களில் தயாரிப்பாளரை சந்திக்கும் முன்பு அந்த தயாரிப்பாளருடைய  ப்யூனை கவனிக்க வேண்டும்.

இல்லையென்றால் அவன் என்னை பற்றி தயாரிப்பாளரிடம் தவறாக சொல்லி விடுவான். இந்த பியூன் மாதிரி நிறைய ஆட்கள் எனக்கும் சுந்தர் சிக்கும் இடையில் புகுந்து விட்டனர். அதனால்தான் நாங்கள் பிரிந்துவிட்டோம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருவது கூட கஷ்டமில்லை. ஆனால் அதற்குள் வந்து விட்டு படுகிற பாடுதான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் வடிவேலு.

பிச்சை எடுத்து கூட சாப்புடுவேன்.. ஆனால் வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வேண்டும் என்று வந்து காணாமல் போன நடிகைகள் பலர் உண்டு.

அப்படியான நடிகைகளில் நடிகை சோனாவும் முக்கியமானவர். நடிகை சோனா கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கும் மேலாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்று வந்த சோனாவிற்கு போக போக அந்த அளவிற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார்.

அப்படியாக வடிவேலுவுடன் அவர் அழகர் மலை, குசேலன் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது வடிவேலுவை மிகவும் தாக்கி பேசியிருந்தார்.

அதில் கூறிய சோனா கூறும் பொழுது வடிவேலுடன் சேர்ந்து நடித்த பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க 17 படங்களில் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவற்றையெல்லாம் நான் நிராகரித்து விட்டேன்.

தெருவில் சென்று பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் ஆனால் வடிவேலுவுடன் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினார் சோனா. மேலும் அவர் கூறும்பொழுது வடிவேலுவை நான் குறை கூறுகிறேன் என்றால் மற்றவர்களை போல நானும் அவரை குறை கூறிய வீடியோவாக இது மாறிவிடும்.

எனவே நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டால் சோனா

வேற ஏதாச்சும் பேசலாமா..! அஜித் விஜய் பற்றிய கேள்வியால் கடுப்பான வடிவேலு..!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் வடிவேலு. சமீப காலங்களாக வடிவேலுவுக்கு வாய்ப்புகள் என்பது அவ்வளவாக கிடைப்பதில்லை. இறுதியாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

அதுவரை காமெடியாக நடித்து வந்த வடிவேலு அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நிறைய சீரியஸான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.

ஆனாலும் கூட மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என காமெடி கதை களங்களை தேடி நடித்து வருகிறார் வடிவேலு. அந்த வகையில் தற்சமயம் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அடுத்து பிரபுதேவாவுடன் ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.

அதில் விஜய் இப்போது அரசியலுக்கு சென்றுவிட்டார். விஜய்யின் இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா என கேட்டனர். அதற்கு பதிலளித்த வடிவேலு வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றார். பிறகு அஜித்திற்கு ரேஸில் விபத்து ஏற்பட்டது குறித்து கேட்கப்பட்டது அதற்கும் வடிவேலு பதிலளிக்கவில்லை.

எனவே இந்த பேட்டியானது வைரலாகி வருகிறது.

இளையராஜா பயோபிக்கில் வடிவேலு.. அப்போதே வரவிருந்த திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் உள்ள இணையற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இசையமைப்பாளராக அவர் இருந்து வந்திருக்கிறார். தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

அதனால்தான் இப்போதும் கூட கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளராக அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் பல நாள் கனவாக இருந்தது.

இளையராஜா வாழ்க்கை வரலாறு:

சினிமாவிற்கு வரும்போதே நடிகர் ரஜினி மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் தனுஷ்.

ilayaraja

இந்த நிலையில் அவருடைய முதல் ஆசை நிறைவேறும் வகையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வெகுவாக இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது பலரும் அறியாத இளையராஜாவின் வாழ்க்கையை இந்த படத்தில் காணலாம் என கூறப்படுகிறது.

வடிவேலு நடிக்க இருந்த படம்:

இந்த நிலையில் இதற்கு முன்பே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருந்ததாக  கூறப்படுகிறது. இளையராஜாவின் மோதிரம் என்று இந்த படத்திற்கு பெயர் வைக்க நினைத்திருக்கின்றனர். வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

vadivelu policevadivelu police

ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து இளையராஜா ஏதோ ஒரு காரணத்தினால் விலகி விட்டாராம். பிறகு ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த திரைப்படம் நின்று விட்டது பிறகு படபிடிப்பு நடக்கவில்லை ஆனால் அந்த திரைப்படம் இளையராஜா வாழ்க்கை கதையை கொண்ட படம் தான் என்று கூறப்படுகிறது.

என் பையன் வாழ்க்கையே போயிடுச்சு!.. வடிவேலுவால் மோசம் போன பிரபலம்..

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகும் பொழுது அவருக்கு போட்டி என்பது அதிகமாகவே இருந்தது.

இப்பொழுது இருப்பதை விடவும் காமெடி நடிகர்கள் அந்த காலகட்டங்களில் அதிகமாக இருந்தனர். முக்கியமாக கவுண்டமணி செந்தில் இருவரும் பிரபலமாக இருந்த காலகட்டமாக வடிவேலு என்ட்ரி ஆன காலகட்டம் இருந்தது.

vadivelu

இருந்தாலும் கூட தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக வடிவேலு தனக்கென தனி இடத்தை பிடித்தார் வடிவேலு. வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு ராஜ்கிரண் காரணமாக இருந்தார். அதேபோல தொடர்ந்து வடிவேலு பெரும் உச்சத்தை தொடுவதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் வி சேகர்.

வடிவேலுவிற்கு வந்த வாய்ப்பு:

காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் வி சேகர். தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வடிவேலுவிற்கு சான்ஸ் கொடுத்து வந்தார். முக்கியமாக கவுண்டமணியும் செந்திலும் நடித்திருக்கும் திரைப்படங்களில் கூட அவர் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்து இருப்பார்.

அந்த திரைப்படங்களில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைகளை தாண்டி வடிவேலு நகைச்சுவை செய்து அவருக்கான இடத்தை பிடித்திருப்பார் . வி சேகர் திரைப்படத்தில் நடித்த பிறகுதான் முதன்முதலாக வடிவேலு கார் வாங்கினார் என்று வி சேகரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

vadivelu

அப்படியெல்லாம் உதவி செய்த வி.சேகருக்கு வடிவேலு உதவி செய்யாமல் விட்டதை வி சேகர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வி சேகர் தன்னுடைய மகனை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்திருந்தார்.

இயக்குனருக்கு ஏமாற்றம்:

அந்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் வி சேகர் வடிவேலுவும் அதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். என்னை உயர்த்திவிட்ட இயக்குனர் நீங்கள் உங்கள் மகனை நான் உயர்த்தி விட மாட்டேனா? என்றெல்லாம் கூறியிருக்கிறார் வடிவேலு.

vadivelu

ஆனால் அதற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்து விஜயகாந்தை அதிகமாக விமர்சித்ததன் காரணமாக திரும்ப சினிமாவில் நடிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் திரும்ப மதுரைக்கு சென்று விட்டார் வடிவேலு. அப்பொழுது வடிவேலுவை திரும்ப நடிப்பதற்கு வர சொல்லி கேட்டிருந்தார் வி.சேகர் ஆனால் வடிவேலு அதற்கு மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தை கருணாசை வைத்து இயக்கினார் வி சேகர்.

ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தன்னுடைய மகனுக்கும் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போனது என்று மனம் வருந்தி கூறுகிறார் வி சேகர்.