Tag Archives: கேங்கர்ஸ்

ஓ.டி.டியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே..!

இந்த வாரம் ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் என்று இரண்டு படங்களும் மலையாள திரைப்படம் ஒரு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இயக்குனர் சுந்தர் சி மற்றும் வடிவேலு நடித்து சுந்தர் சி இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ்.

இந்த திரைப்படம் நல்ல காமெடியாக இருந்ததாக அப்பொழுதே பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல காதலை மையமாக வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி சங்கர் நடித்து வெளியான திரைப்படம் நேசிப்பாயா. இந்த திரைப்படத்தில் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நேசிப்பாயா வெளியாகி வெகு காலங்களாகின்றன. ஆனால் இன்னமும் ஓடிடிக்கு வரவில்லை. அதில் சில சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது படம் திரையரங்களில் பெரியதாக வரவேற்பை பெறாத நிலையில் தற்சமயம் இந்த திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி வாங்கியிருக்கிறது.

மலையாளத்தில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்கும் நடிகர் பாசில் ஜோசப் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மரண மாஸ்.

பெரும்பாலும் பாஷில் ஜோசப் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெரும் என்றாலும் மரண மாஸ் திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மரண மாஸ் திரைப்படத்தை sony லைவ் ஓ.டி.டி வாங்கியிருக்கிறது இந்த வாரம் அந்த திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலு மாமன்னன் படத்தில் நடிச்சது பிடிக்கலை.! ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன.

சுந்தர் சி காலக்கட்டத்தில் இயக்குனராக இருந்த பலருக்கும் இப்போது சினிமாவில் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. அப்படி இருந்தும் கூட சுந்தர் சிக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க காரணம் அவரை மாதிரியான காமெடி படங்களை இயக்கும் இயக்குனர்கள் இங்கு குறைவாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில் வடிவேலுவும் சுந்தர் சியும் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். தலைநகரம், நகரம் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அவர்களது காமெடி சிறப்பாக இருக்கும். இப்போதும் அவை யாவும் பிரபலமாகவே இருக்கின்றன.

vadivelu

இந்த நிலையில் சமீபத்தில் கேங்கர்ஸ் திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது சுந்தர் சி வடிவேலு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பது பிடிக்கவில்லை என கூறியிருந்தார். அவர் கூறும்போது தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிக்க நிறைய நடிகர்கள் இருக்கின்றனர்.

வடிவேலு நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் நடிப்பார்கள். ஆனால் வடிவேலு மாதிரியான காமெடி நடிகர்கள் வேறு யாரும் கிடையாது. மற்றவர்களை சிரிக்க வைக்கவே வடிவேலு படைக்கப்பட்டுள்ளார். அவர் அதைதான் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் சுந்தர் சி.

சினிமாவில் எனக்கு நடந்த சதி.. ப்யூன் பையனை கூட நம்பாதீங்க.. வடிவேலு ஓப்பன் டாக்..

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுடன் மட்டும் நல்லபடியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது உண்டு. அந்த மாதிரி இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது வடிவேலுவின் காமெடிகளும் சிறப்பாக இருக்கும்.

அப்படியாக வடிவேலு காம்போவாக நடித்த ஒரு இயக்குனர் தான் சுந்தர்சி. சுந்தர் சியுடன் நடித்த நகரம் தலைநகரம் மாதிரியான திரைப்படங்களின் காமெடி எல்லாம் அதிகம் வரவேற்பு பெற்றுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட 14 வருடங்களாக சுந்தர் சியும் வடிவேலுவும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு வெகு வருடங்கள் கழித்து இப்பொழுது கேங்கர்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக இருவரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

இந்த பிரிவு குறித்து பேட்டியில் பேசிய வடிவேலு கூறும் பொழுது 14 வருடங்கள் நாங்கள் பிரிந்து இருந்தோம் என்று கூறுவதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ஏதோ சில வருடங்கள் ஆனது போல தான் இருக்கிறது.

சினிமாவை பொறுத்த வரை அதில் நம்மை கோர்த்து விடுபவர்கள் நிறைய பேர் உண்டு. நான் படங்களுக்கு வாய்ப்பு கேட்ட சமயங்களில் தயாரிப்பாளரை சந்திக்கும் முன்பு அந்த தயாரிப்பாளருடைய  ப்யூனை கவனிக்க வேண்டும்.

இல்லையென்றால் அவன் என்னை பற்றி தயாரிப்பாளரிடம் தவறாக சொல்லி விடுவான். இந்த பியூன் மாதிரி நிறைய ஆட்கள் எனக்கும் சுந்தர் சிக்கும் இடையில் புகுந்து விட்டனர். அதனால்தான் நாங்கள் பிரிந்துவிட்டோம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருவது கூட கஷ்டமில்லை. ஆனால் அதற்குள் வந்து விட்டு படுகிற பாடுதான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் வடிவேலு.

ஹாலிவுட் தரத்தில் அமைந்த சுந்தர் சியின் கேங்கர்ஸ்.. கதை இதுதான்..!

உலகப்போர் சமயத்தில் இருந்தே துப்பறியும் உளவாளிகளின் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் அதிக தேவையாக இருந்தது. மற்ற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக்கொள்ள மாறுவேடத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டினர் தங்களது உளவாளிகளை வைத்திருந்தனர்.

அதற்கு திரைப்பட துறை வளர்ந்த பிறகு அந்த கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவில் வந்தன. தமிழில் ஒரு சில திரைப்படங்கள்தான் அப்படி வந்துள்ளன.

அப்படியான ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகதான் கேங்கர்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர் சி யே இயக்கி, நடித்து தயாரித்தும் இருக்கிறார். வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதைப்படி வடிவேலு ஏற்கனவே ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக இருந்து வருகிறார். அந்த பள்ளிக்கு புதிய பி.டி மாஸ்டராக சுந்தர் சி வருகிறார். ஆனால் சுந்தர் சி ஒரு பி.டி மாஸ்டர் மட்டுமே கிடையாது. அவர் ஒரு உளவாளியும் கூட.

அவர் என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதாக கதை அம்சம் செல்கிறது.