சினிமாவில் எனக்கு நடந்த சதி.. ப்யூன் பையனை கூட நம்பாதீங்க.. வடிவேலு ஓப்பன் டாக்..

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுடன் மட்டும் நல்லபடியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது உண்டு. அந்த மாதிரி இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது வடிவேலுவின் காமெடிகளும் சிறப்பாக இருக்கும்.

அப்படியாக வடிவேலு காம்போவாக நடித்த ஒரு இயக்குனர் தான் சுந்தர்சி. சுந்தர் சியுடன் நடித்த நகரம் தலைநகரம் மாதிரியான திரைப்படங்களின் காமெடி எல்லாம் அதிகம் வரவேற்பு பெற்றுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட 14 வருடங்களாக சுந்தர் சியும் வடிவேலுவும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு வெகு வருடங்கள் கழித்து இப்பொழுது கேங்கர்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக இருவரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

இந்த பிரிவு குறித்து பேட்டியில் பேசிய வடிவேலு கூறும் பொழுது 14 வருடங்கள் நாங்கள் பிரிந்து இருந்தோம் என்று கூறுவதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ஏதோ சில வருடங்கள் ஆனது போல தான் இருக்கிறது.

சினிமாவை பொறுத்த வரை அதில் நம்மை கோர்த்து விடுபவர்கள் நிறைய பேர் உண்டு. நான் படங்களுக்கு வாய்ப்பு கேட்ட சமயங்களில் தயாரிப்பாளரை சந்திக்கும் முன்பு அந்த தயாரிப்பாளருடைய  ப்யூனை கவனிக்க வேண்டும்.

இல்லையென்றால் அவன் என்னை பற்றி தயாரிப்பாளரிடம் தவறாக சொல்லி விடுவான். இந்த பியூன் மாதிரி நிறைய ஆட்கள் எனக்கும் சுந்தர் சிக்கும் இடையில் புகுந்து விட்டனர். அதனால்தான் நாங்கள் பிரிந்துவிட்டோம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருவது கூட கஷ்டமில்லை. ஆனால் அதற்குள் வந்து விட்டு படுகிற பாடுதான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் வடிவேலு.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version