உயிரினங்கள் வாழும் புதிய கோளை கண்டறிந்த நாசா..! ஆத்தாடி..!

பூமியிலிருந்து சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு இரகசியமான கோளில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதாக நம்பிக்கையை ஏற்படுத்தும் புதிய தகவலை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கோள், சிம்மம் நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறிய நட்சத்திரத்தை சுற்றி பயணிக்கிறது. இது 2015ஆம் ஆண்டு நாசாவின் கேப்லர் தொலைநோக்கியின் உதவியால் கண்டறியப்பட்டது. K2-18b என பெயரிடப்பட்ட இந்த கோள், பூமியைவிட 2.6 மடங்கு பெரியது.

2019-ஆம் ஆண்டில், இந்த கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் சூழலை குறிக்கக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் ஆர்வமாக இதை மேலும் ஆய்வு செய்யத் தொடங்கினர்.

பின்னர் நடந்த ஆய்வுகளின் போது, கார்பன் டைஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்கள் இதில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தியர் விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தலைமையிலான குழு, மேலும் முக்கியமான கண்டுபிடிப்பை செய்துள்ளது.

அவர்கள் K2-18b கோளின் வளிமண்டலத்தில் டைமெத்தில் சல்பைட் (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைட் ஆகிய இரசாயனக் கூட்டுகளின் இருப்பைக் கண்டறிந்துள்ளனர். பூமியில், இவை பெரும்பாலும் கடல்களில் வாழும் பைட்டோபிளாங்க்டன் மற்றும் பசுமை நுண் தாவரங்கள் உருவாக்கும் வாயுக்கள்.

இந்த தகவலை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தரவுகள் உறுதி செய்துள்ளன. இதன் அடிப்படையில், சூரிய குடும்பத்திற்கு வெளியேயும் உயிர் சூழல் இருக்க வாய்ப்புள்ளதாக முதல் முறையாக மனித குலம் உறுதியாகக் கூறி வருகிறது.

இக்கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் பெரிய பரபரப்பையும், கொண்டாடுதலையும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பிரபஞ்சத்தில் நாமல்லாத விண்வாழ் உயிரினங்கள் இருக்கிறார்களா என்ற நூற்றாண்டுகளாக இருந்த கேள்விக்கு ஒரு பதில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

1950-இல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஃபெர்மி எழுப்பிய “ஃபெர்மி பாரடாக்ஸ்” என்ற கேள்விக்கான (Fermi Paradox) விடையை இந்த ஆராய்ச்சி நம்மை மேலும் அருகே கொண்டு வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version