Tag Archives: sundar c

ஓ.டி.டியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே..!

இந்த வாரம் ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் என்று இரண்டு படங்களும் மலையாள திரைப்படம் ஒரு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இயக்குனர் சுந்தர் சி மற்றும் வடிவேலு நடித்து சுந்தர் சி இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ்.

இந்த திரைப்படம் நல்ல காமெடியாக இருந்ததாக அப்பொழுதே பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல காதலை மையமாக வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி சங்கர் நடித்து வெளியான திரைப்படம் நேசிப்பாயா. இந்த திரைப்படத்தில் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நேசிப்பாயா வெளியாகி வெகு காலங்களாகின்றன. ஆனால் இன்னமும் ஓடிடிக்கு வரவில்லை. அதில் சில சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது படம் திரையரங்களில் பெரியதாக வரவேற்பை பெறாத நிலையில் தற்சமயம் இந்த திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி வாங்கியிருக்கிறது.

மலையாளத்தில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்கும் நடிகர் பாசில் ஜோசப் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மரண மாஸ்.

பெரும்பாலும் பாஷில் ஜோசப் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெரும் என்றாலும் மரண மாஸ் திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மரண மாஸ் திரைப்படத்தை sony லைவ் ஓ.டி.டி வாங்கியிருக்கிறது இந்த வாரம் அந்த திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த படத்தை பார்த்துட்டு சத்யராஜ் சொன்ன பதில்.. ஆடிப்போன சுந்தர் சி.. இவர்கிட்ட கத்துக்கணும்.!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் பெரும்பாலும் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது.

ஒருமுறை சத்யராஜுடன் ஒரு திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் குறித்து இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நானும் சத்யராஜும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தோம்.

அந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே ப்ரிவீவ் ஷோவிற்கு என்னை அழைத்திருந்தனர்.அங்கு சென்று பார்த்தப்போது அந்த படம் நன்றாகவே இல்லை. சத்யராஜும் என்னுடன் அந்த படத்தை பார்த்தார். பிறகு இருவரும் வெளியே வந்தோம்.

sathyaraj

அப்போது படத்தின் தயாரிப்பாளர் வெளியே நின்று படத்தை பற்றி கேட்டார். உடனே சத்யராஜ் படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். பிறகு நான் சத்யராஜுடம் இதுக்குறித்து கேட்டேன்.

அப்போது பதிலளித்த சத்யராஜ் அவர்கள் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு என்னிடம் கேட்டிருந்தால் நானே சரியில்லை என கூறியிருப்பேன். இப்போது படத்தை எல்லாம் முடித்து வெளியிட இருக்கின்றனர். எப்படியும் முதல் நாள் முதல் ஷோ முடியும்போது அவர்களுக்கே உண்மை தெரிய போகிறது.

ஒரு வாரம் முன்பே நாம் சொல்லிவிட்டால் அதனால் தூக்கம் இல்லாமல் கவலையிலேயே இருப்பார்கள். அதற்கு பிறகு படம் ஓடவில்லை என்றதும் அன்றே அவன் வாயை வைத்தான் என நம்மைதான் அப்போதும் கூறுவார்கள். அதனால்தான் அப்படி கூறவில்லை என கூறியுள்ளார் சத்யராஜ்.

500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!

முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களும் கூட கவனம் பெற்று வந்தது.

ஆனால் இப்போதைய காலக்கட்டங்களில் படத்தின் கலெக்‌ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பெரிய தொகையை கலெக்‌ஷனாக காட்டுகிறார்கள்.

விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களில் இப்படி நடப்பதை பார்க்க முடியும். இது உண்மையா பொய்யா என்கிற ஐயம் இன்னமுமே பலருக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுக்குறித்து மிக வெளிப்படையாக பேசியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

sundar c

இயக்குனர் சுந்தர் சி இதுக்குறித்து பேசும்போது இந்த படத்தின் கலெக்‌ஷன் என கூறுவதெல்லாம் வெறும் நம்பர் ரேஸ்தான். சும்மா விளம்பரத்துக்காக சொல்கிறார்கள். தயாரிப்பாளர்கள் எல்லாம் எப்படி நொந்து நூடுல்ஸ் ஆகிறாங்கன்னு எங்களுக்குதான் தெரியும்.

அப்படி வசூல் போட்டாதான் அந்த நடிகருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும். அதனால் அப்படி பண்றாங்க. நம்மை பொறுத்தவரை மக்களுக்கு நம்ம படம் பிடிச்சிட்டா அதுவே போதும் என கூறியுள்ளார் சுந்தர் சி

சுந்தர் சி நிறைய திரைப்படங்களை தயாரித்துள்ளார். எனவே ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் இந்த வசூல் குறித்து நடக்கும் மோசடிகளை அவர் வெளிக்கொண்டு வந்துள்ளார் என இதுக்குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

சினிமாவில் எனக்கு நடந்த சதி.. ப்யூன் பையனை கூட நம்பாதீங்க.. வடிவேலு ஓப்பன் டாக்..

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி அதில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுடன் மட்டும் நல்லபடியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது உண்டு. அந்த மாதிரி இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் போது வடிவேலுவின் காமெடிகளும் சிறப்பாக இருக்கும்.

அப்படியாக வடிவேலு காம்போவாக நடித்த ஒரு இயக்குனர் தான் சுந்தர்சி. சுந்தர் சியுடன் நடித்த நகரம் தலைநகரம் மாதிரியான திரைப்படங்களின் காமெடி எல்லாம் அதிகம் வரவேற்பு பெற்றுள்ளன.

ஆனால் கிட்டத்தட்ட 14 வருடங்களாக சுந்தர் சியும் வடிவேலுவும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு வெகு வருடங்கள் கழித்து இப்பொழுது கேங்கர்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக இருவரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

இந்த பிரிவு குறித்து பேட்டியில் பேசிய வடிவேலு கூறும் பொழுது 14 வருடங்கள் நாங்கள் பிரிந்து இருந்தோம் என்று கூறுவதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ஏதோ சில வருடங்கள் ஆனது போல தான் இருக்கிறது.

சினிமாவை பொறுத்த வரை அதில் நம்மை கோர்த்து விடுபவர்கள் நிறைய பேர் உண்டு. நான் படங்களுக்கு வாய்ப்பு கேட்ட சமயங்களில் தயாரிப்பாளரை சந்திக்கும் முன்பு அந்த தயாரிப்பாளருடைய  ப்யூனை கவனிக்க வேண்டும்.

இல்லையென்றால் அவன் என்னை பற்றி தயாரிப்பாளரிடம் தவறாக சொல்லி விடுவான். இந்த பியூன் மாதிரி நிறைய ஆட்கள் எனக்கும் சுந்தர் சிக்கும் இடையில் புகுந்து விட்டனர். அதனால்தான் நாங்கள் பிரிந்துவிட்டோம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருவது கூட கஷ்டமில்லை. ஆனால் அதற்குள் வந்து விட்டு படுகிற பாடுதான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் வடிவேலு.

படப்பிடிப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாநாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா. அதே சமயம் நயன்தாரா தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் தொடர்பாக பேசப்பட்டு கொண்டே இருக்க முடியும்.

படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார். படப்பிடிப்பு தளங்களில் நிறைய விதிமுறைகள் போடுவார் என்று எல்லாம் நயன்தாரா குறித்து பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் உண்டு.

ஆனால் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் மட்டும் நயன்தாராவின் செயல்பாடுகள் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

mookuthi-amman

முக்கியமாக படங்களுக்காக நடக்கும் பூஜை நிகழ்ச்சிகள் இசை வெளியீட்டு விழா வெற்றி விழா மாதிரியான எந்த ஒரு விஷயத்திலும் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார்.

ஆனால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பூஜை துவங்கிய பொழுது அதில் நயன்தாரா இருப்பதை பார்க்க முடிந்தது. அதேபோல படப்பிடிப்பு தளங்களிலும் நயன்தாரா அவருக்கான காட்சிகள் எடுக்கப்பட்ட பின் வேக வேகமாக சென்று கேரவனில் அமர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

ஆனால் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் அவருக்கான காட்சி முடிந்தாலும் மற்ற படப்பிடிப்புகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது பெரும்பாலும் நயன்தாரா புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் பொழுது இயக்குனர்களை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது.

அதனால் அவர் இஷ்டத்திற்கு இருப்பார் ஆனால் சுந்தர் சியிடம் என்னும் பொழுது நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர்சி என்பதால் அவரது பேச்சைக் கேட்டு நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு வெக்கமா இல்லையானு என் பிள்ளைகள் கேட்டாங்க… மனம் திறந்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி இயக்குனர்களுக்குதான் அதிக பஞ்சமாக இருந்து வருகிறது. ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படமான முறை மாமன் திரைப்படத்தில் இருந்தே தொடர்ந்து அதிக வெற்றி படங்களையே கொடுத்து வருகிறார்.

காமெடி படங்களுக்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. தற்சமயம் அரண்மனை மாதிரியான பேய் படங்களைதான் அவர் இயக்கி வருகிறார்.

சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடித்தவர் நடிகை குஷ்பு. அப்போதில் இருந்தே குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

sundar c

அதற்கு பிறகு குஷ்புவுக்கு உடல் எடை அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகினார். இந்த நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் குஷ்பு.

அதனை தொடர்ந்து சுந்தர் சியிடம் பழைய குஷ்பு புகைப்படத்தை பார்க்கும்போது மீண்டும் காதல் மலர்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி எனக்கு இப்போதும் குஷ்பு மீது அதே காதல் இருக்கிறது. எங்கள் காதலை பார்த்து எங்கள் பிள்ளைகளே வெக்கமா இல்லையா என கேட்பார்கள் என கூறியுள்ளார் சுந்தர் சி.

ஹாலிவுட் தரத்தில் அமைந்த சுந்தர் சியின் கேங்கர்ஸ்.. கதை இதுதான்..!

உலகப்போர் சமயத்தில் இருந்தே துப்பறியும் உளவாளிகளின் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் அதிக தேவையாக இருந்தது. மற்ற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக்கொள்ள மாறுவேடத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டினர் தங்களது உளவாளிகளை வைத்திருந்தனர்.

அதற்கு திரைப்பட துறை வளர்ந்த பிறகு அந்த கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவில் வந்தன. தமிழில் ஒரு சில திரைப்படங்கள்தான் அப்படி வந்துள்ளன.

அப்படியான ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகதான் கேங்கர்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர் சி யே இயக்கி, நடித்து தயாரித்தும் இருக்கிறார். வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதைப்படி வடிவேலு ஏற்கனவே ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக இருந்து வருகிறார். அந்த பள்ளிக்கு புதிய பி.டி மாஸ்டராக சுந்தர் சி வருகிறார். ஆனால் சுந்தர் சி ஒரு பி.டி மாஸ்டர் மட்டுமே கிடையாது. அவர் ஒரு உளவாளியும் கூட.

அவர் என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதாக கதை அம்சம் செல்கிறது.

தியேட்டர்ல அந்த விஷயம் பத்தி எல்லாம் ஒண்ணுமே தெரியாது.. ஆடிபோன ஹிப் ஹாப் ஆதி.. உதவி செய்த சுந்தர் சி.!

ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இயக்குனர் சுந்தர் சி மூலமாக வாய்ப்பை பெற்று இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்.

இவர் இசையமைத்த திரைப்படங்களின் பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார் ஹிப் ஹாப் ஆதி.

அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் மீசைய முறுக்கு. மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த பொழுது திரைப்படத் துறை சார்ந்து பல விஷயங்கள் தெரியாமல் இருந்தார். அதில் அவர் கூறும்போது மீசைய முறுக்கு திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் விக்ரம் வேதா திரைப்படமும் வெளியானது.

இதனால் எங்கள் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காது என்று கூறினார்கள் எனக்கு அப்பொழுதெல்லாம் அதைப்பற்றி தெரியாது. படம் வெளியாகிறது என்றால் எல்லா படத்திற்குமே திரையரங்குகள் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் 120க்கும் குறைவான திரையரங்கில்தான் மீசைய முறுக்கு திரைப்படம் வெளியானது. ஆனால் அப்போது சுந்தர் சி சார் கூறினார் இந்த படம் நல்ல வெற்றியை உனக்கு பெற்று தரும் என்று கூறினார். அதேபோல முதல் நாள் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

மூன்றாவது நாள் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினார். அதேபோல அதிகரித்தது. இப்படியாக முதல் திரைப்படத்தில் பணிபுரிந்த பொழுது எல்லா விதத்திலும் சுந்தர் சி தான் உதவினார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

நயன்தாரா சுந்தர் சி பிரச்சனை..! பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு..!

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா மிக முக்கியமான நடிகை ஆவார். பெரும்பாலும் நடிகை நயன் தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.

எனவே நடிகை நயன் தாரா தற்சமயம் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது பலரும் அறிந்த விஷயமே.

ஆனால் அதற்கு பிறகு பாலிவுட்டில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் ஒட்டு மொத்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரமாக நயன்தாராவின் கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் அடுத்து தமிழில் அவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

நயன் தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு தனி செல்வாக்கு உண்டு. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்க துவங்கியது முதலே திரைப்படம் தொடர்பாக சில பிரச்சனைகள் சென்று கொண்டுள்ளன. இந்த நிலையில் நயன் தாராவுக்கும் சுந்தர் சி க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

இதற்கு பதிலளித்த குஷ்பு கூறும்போது தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லப்படியாக சென்றுக்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

படத்தில் பங்கு வேண்டும்.. நயன் தாரா போட்ட கண்டிஷன்.. இரு மடங்கு பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன்.!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் திரை கதையில் துவங்கி பல விஷயங்களை வேலை பார்ப்த்தவர் நடிகரும் இயக்குனருமான ஆர.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜியின் உழைப்பால் அந்த திரைப்படம் சிறப்பான காமெடி திரைப்படமாக வந்தது. அந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு வைக்கப்பட்டிருந்த காட்சிகளுமே நன்றாக ஒர்க்அவுட் ஆயிருந்தது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து தயாரிக்க இருக்கிறது வேல்ஸ் நிறுவனம். இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார் என்பதாலேயே இப்பொழுது இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

mookuthi amman

ஏனெனில் சுந்தர் சி மற்றும் நயன்தாரா காம்போவில் ஒரு சாமி படம் என்னும் பொழுது இது மிகப் புதிதாக இருக்கும். சுந்தர்சியம் இதுவரை எந்த சாமி திரைப்படத்தையும் இயக்கியது கிடையாது பேய் படங்களை தான் இயக்கி இருக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு சாதாரணமாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் 55 கோடி பட்ஜெட்டில்தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் சுந்தர்சி வந்த பிறகு படத்தின் பட்ஜெட் அதிகரித்திருக்கிறது. இப்பொழுது இந்த திரைப்படம் 112 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.

தமிழ் சினிமவில்  முதன்முதலாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதைக்கு 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் செலவிடப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. நயன்தாரா இந்த படம் நல்ல வசூலை கொடுக்கும்  என்று நம்பி வருவதால் படத்திற்கு 50 சதவீத சம்பளத்தை மட்டுமே வாங்கி இருக்கிறார்.

மீதி 50 சதவீதத்தை படத்தில் வரும் லாபத்தில் இருந்து பங்குகளாக கேட்டிருக்கிறார் நயன்தாரா

சம்பளமே வாங்காமல் நான் பண்ணுன படம்.. சுந்தர் சி இயக்கத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம்..!

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருக்கும்.

அந்த வகையில் தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தார் சுந்தர் சி. காமெடி படங்கள் என்று மட்டும் இல்லாமல் அவர் அருணாச்சலம் , அன்பே சிவம் மாதிரியான படங்களையும் இயக்கி இருக்கிறார்.

சமீப காலங்களாக பேய் படங்கள் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து பேய் படங்களாக இயக்கி வருகிறார் சுந்தர் சி. அப்படியாக அவர் இயக்கிய அரண்மனை படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவரிடம் நீங்கள் இயக்கிய திரைப்படங்களிலே உங்களுக்கு பிடித்த படம் என்ன என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி. கண்டிப்பாக எனது முதல் படம் முறைமாமன் தான். அதுதான் எனக்கு இயக்குனராக ஒரு அடையாளத்தை கொடுத்தது.

அந்த படத்தை இயக்கும்போது அதற்கு நான் சம்பளமே வாங்கவில்லை. செலவுக்கு மட்டும் அவ்வப்போது தயாரிப்பாளர் பணம் தருவார் என கூறியுள்ளார் சுந்தர் சி.

நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!

நடிகை நயன்தாரா தமிழில் தற்சமயம் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஆர் ஜே பாலாஜியுடன் நயன்தாரா இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சுந்தர் சி இடமும் அவர்கள் பேசியிருக்கின்றனர். அவரும்  படத்தை இயக்குவதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா ஏப்ரல் மாதம் வரைக்கும் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் மூக்குத்தி அம்மன் டு2 திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

mookuthi amman

இதனால் இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷாலை வைத்து அடுத்த படத்தை துவங்குவதற்கு திட்டமிட்டார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இப்பொழுது நயன்தாரா மார்ச் மாதத்திலேயே கால்ஷீட் தருவதாகவும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்றும் இயக்குனர் சுந்தர் சி யை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே விஷாலும் தற்சமயம் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராக இருப்பதால் யாரை வைத்து திரைப்படம் இயக்குவது என்கிற தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார் சுந்தர் சி.

பெரும்பாலும் அவர் விஷால் படத்தைதான் அடுத்து துவங்குவார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதகஜராஜா நல்ல வெற்றியை கொடுத்திருந்தது அதனை தொடர்ந்து இன்னொரு படத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம் சுந்தர் சி.