Tag Archives: sundar c

முதலில் நயன்தாராகிட்ட டேட் வாங்கிட்டு வாங்க.. தயாரிப்பாளரை அனுப்பிய சுந்தர் சி.. தொங்கலில் நிற்கும் மூக்குத்தி அம்மன்.!

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய நல்ல திரைப்படங்களை வழங்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி படங்களாகவே இருந்து வந்துள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் மீண்டும் சுந்தர் சிக்கு நல்ல மார்க்கெட் வர துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் பலரும் சுந்தர் சிக்கு வாய்ப்பு தர தயாராக இருக்கின்றனர்.

இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வருகிறார். இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் சந்தானத்தை கதாநாயகனாக வைத்து ஒரு காமெடி திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

mookuthi amman

இந்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகள் தற்சமயம் சென்று கொண்டுள்ளன. சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தில் எப்போதுமே சந்தானத்தின் காமெடி என்பது நன்றாகவே இருக்கும்.

எனவே இந்த திரைப்படமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே சுந்தர் சி ஏற்கனவே வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி தருவதாக கூறியிருந்தார். அது நிலுவையில் இருக்கும் நிலையில்தான் சந்தானம் திரைப்படத்தில் அவர் கமிட்டாகி இருக்கிறார்.

இந்த நிலையில் முதலில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைதான் சுந்தர் சி முடித்து தர வேண்டும் என கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சுந்தர் சி முதலில் நடிகை நயன்தாராவிடம் கால்ஷூட் கேளுங்கள். பிறகு என்னிடம் கேட்கலாம் என கூறிவிட்டாராம்.

ஏற்கனவே ஒரு படத்தில் நடிகை நயன் தாரா இப்படி கால்ஷூட் கொடுக்காமல் சுந்தர் சியை அலைகழித்ததாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதனால்தான் சுந்தர் சி இப்படியான பதிலை கொடுத்துள்ளார் என கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

ஜெயம் ரவி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் சுந்தர் சி.. மத கஜ ராஜாவால் வந்த வாய்ப்பு..!

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது.

இதில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம மத கஜ ராஜா திரைப்படம்தான் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சுந்தர் சிக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு இயக்குனருக்கும் திரைத்துறையில் தங்களுக்கென கனவு படம் ஒன்று இருக்கும். உதாரணமாக இயக்குனர் ஷங்கருக்கு வேள்பாரி திரைப்படம் ஒரு கனவு படமாக இருந்து வருகிறது.

அதே போல இயக்குனர் சுந்தர் சியின் கனவு படமாக சங்கமித்ரா திரைப்படம் உள்ளது. இந்த படத்திற்கான கதையை எழுதி அதை படமாக்குவதற்காக காத்துக்கொண்டுள்ளார் சுந்தர் சி. ஆரம்பத்தில் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க இருந்தது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தற்சமயம் சங்கமித்ரா திரைப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

சங்கமித்ரா திரைப்படம் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.அடுத்து சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதால் அதற்கு அடுத்து சங்கமித்ராவை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பே சிவம் 2 எப்ப வரும்… அப்டேட் கொடுத்த இயக்குனர் சுந்தர் சி..!

காமெடி இயக்குனராக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் சீரியஸான திரைப்படங்களையும் முயற்சி செய்தவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த இவர் முறைமாமன் என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

அவர் இயக்கிய முதல் படமே காமெடி திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து காமெடி படங்களாகவே நடித்து வந்தார் சுந்தர் சி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய மத கஜ ராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது சுந்தர் சிக்கு அதிக மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

இதுக்குறித்து அவர் பேட்டியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது என் படங்கள் எல்லாம் பெரும்பாலும் எல்லா காலங்களிலும் மக்கள் ரசிக்கும்படியாகதான் இருக்கும். எனது முதல் படமான முறைமாமன் திரைப்படத்தையே மக்கள் இன்னமும் ரசித்து பார்ப்பதை பார்க்க முடிகிறது.

அதே போல 12 வருடங்கள் ஆனாலும் கூட இப்போது வந்த படமாகவே அவர்கள் மத கஜ ராஜாவை பார்க்கின்றனர். என கூறியிருந்தார் சுந்தர் சி. அப்போது அவரிடம் படத்தில் இடம் பெற்றுள்ள கவர்ச்சி காட்சிகள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சுந்தர் சி படத்தில் கவர்ச்சி காட்சிகள் இருக்கலாம். ஆனால் முகம் சுளிக்கும் விதத்தில் இருக்க கூடாது. அப்படி காட்சிகள் வைப்பதால்தான் எனது திரைப்படங்கள் குடும்பங்கள் பார்க்கும் படமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் அன்பே சிவம் படத்தின் இரண்டாம் பாகம் அல்லது அது மாதிரி ஏதாவது படம் இயக்குவீர்களா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டப்போது சுந்தர் சி கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டார். எனவே இனி அந்த மாதிரியான படங்களை சுந்தர் சியிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது.

12 வருசம் கழிச்சி வந்த படத்துக்கு இவ்வளவு மார்க்கெட்டா? புதிய சாதனையை படைத்த மதகஜராஜா திரைப்படம்.!

வெகு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தனிப்பட்ட வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ரீ ரிலீஸ் ஆகாமல் இருந்த படமாக மதகஜ ராஜா திரைப்படம் இருந்து வந்தது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், மனோபாலா, அஞ்சலி, வரலெட்சுமி இன்னம் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சந்தித்த சில பிரச்சனைகளின் காரணமாக அந்த திரைப்படம் திரைக்கு வராமலேயே இருந்தது.

ஆனால் திடீரென இந்த மாதம் படம் வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதனை தொடர்ந்து அந்த படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தில் நடித்த அஞ்சலிக்கும் இந்த படம் நல்ல மார்க்கெட்டை பிடித்து கொடுத்தது.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் மதகஜ ராஜா திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் மதகஜ ராஜா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அதாவது மதகஜராஜா திரைப்படம் கடந்த 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலமாக 75,000 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளன. 12 வருடம் கழித்து வந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம் என கூறப்படுகிறது.

தட்டி தூக்கியதா மதகஜ ராஜா… முதல் நாள் வசூல் நிலவரம்..!

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது மதகஜ ராஜா திரைப்படம். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி இன்னும் பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் முழுக்கவே காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 12 வருடங்களுக்கு முன்பு ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மதகஜராஜா.

இந்த திரைப்படம் சில பிரச்சனைகளால் வெகு காலங்களாகவே வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த 12 வருடங்களில் சினிமாவில் காமெடி படங்கள் பெரிதாக உருவாகாமல் போனது.

இந்த நிலையில் இவ்வளவு காமெடி காட்சிகள் நிறைந்த படம் என்பதாலேயே மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அளவில் குறைவான திரையரங்குகளில் வெளியானது என்றாலும் கூட 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பட்ஜெட் ரீதியாக இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் இதுவே படத்திற்கு நல்ல வெற்றி என கூறப்படுகிறது.

இதை சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு… மத கஜ ராஜா இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. மக்களுக்கு பிடித்த வகையில் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதகஜராஜா.

இந்த படத்தில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா மற்றும் இன்னமும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும்போது இந்த திரைப்படத்தில் மனோபாலா மற்றும் என் குரு மணிவண்ணனை பார்க்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது.

க்ளைமேக்ஸிற்கு முன்பு மனோபாலாவுக்கு சில காமெடி காட்சிகள் இருக்கின்றன. அதை எல்லாம் மனோபாலாவால் மட்டுமே செய்ய முடியும். அவ்வளவு சிறப்பான காமெடி காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

இத சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு. ஆனால் கண்டிப்பா அவர் காமெடியனா நடிக்க வரணும். அவரை ரொம்ப மிஸ் பண்றோம். அதே மாதிரி விஜய் ஆண்டனியும் இசையமைக்க வர வேண்டும் என கூறியிருந்தார் சுந்தர் சி.

மேலும் அவர் கூறும்போது இரண்டு நாட்களில் மதகஜராஜா கொடுக்கும் வெற்றியை வைத்துதான் மதகஜராஜா பாகம் 2 படத்திற்கான அப்டேட்டை கொடுப்பேன் என கூறியுள்ளார் சுந்தர் சி.

குஷ்பு வரலைனா அந்த நடிகையை கல்யாணம் பண்ணியிருப்பேன்.. அதிர்ச்சி கொடுத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்து வருகிறது.

நிறைய இயக்குனர்கள் காமெடி திரைப்படங்கள் இயக்குவதற்கு நினைத்தாலும் இயக்குனர் எழில், சுந்தர் சி மாதிரியான ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து நல்லப்படியான காமெடி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.

தற்சமயம் பேய் படங்கள் மற்றும் காமெடி திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருக்கிறார் சுந்தர் சி. சுந்தர் சி முறைமாமன் திரைப்படத்தை இயக்கியப்போது அவருக்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் உண்டானது.

அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதற்கு பிறகு இப்போது வரை அவர்கள் நல்லப்படியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மற்ற சினிமா பிரபலங்கள் போல இடையிலேயே இவர்கள் விவாகரத்து செய்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுந்தர் சி பேசிய சில விஷயங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. அதில் சுந்தர் சி கூறும்போது ஒருவேளை நான் குஷ்புவை திருமணம் செய்யவில்லை என்றால் நடிகை சௌந்தர்யாவைதான் திருமணம் செய்திருப்பேன்.

சௌந்தர்யா மிகவும் நல்லவர் என கூறியுள்ளார் சுந்தர் சி. இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அருணாச்சலம் திரைப்படத்தில் சௌந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2014 இல் நடக்கும் சம்பவம் எல்லாம் 2024 இல் மறுபடி நடக்குது.. தமிழ் சினிமாவில் இதை கவனிச்சீங்களா?. மர்மமா இருக்கே.!

சில நேரங்களில் நமது வாழ்க்கையில் வித்தியாசமான சில நிகழ்வுகள் நடப்பதை பார்க்க முடியும். சில சமயங்களில் நடந்த நிகழ்வு ஏற்கனவே நடந்தது போல நமக்கு தோன்றும்.

அதேபோல தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த சில விஷயங்களை போலவே 2024 ஆம் ஆண்டும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது.

ரஜினிகாந்த்:

இரண்டு திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதேபோல 2024 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே கூட கலவையான விமர்சனங்கள்தான் வந்தன 2014 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் நடிப்பில் கத்தி திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்தது. அதேபோல இந்த வருடமும் நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

vijay

சிவகார்த்திகேயன்

அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2014 ஆம் ஆண்டு தான் அவருடைய திரைப்படங்களிலேயே பெரிய ஹிட் திரைப்படமான மான்கராத்தே திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருடைய திரை துறையில் ஒரு பெரிய ஹிட் திரைப்படமாக அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மான்கராத்தே திரைப்படத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை அதிகரித்தார். அதேபோல இப்பொழுதும் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அவருடைய சம்பளத்தை அதிகரித்துள்ளார். மேலும் இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர்கள் தான் இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர்.

சூர்யா:

surya

அடுத்தது நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த திரைப்படத்திற்கு படத்தின் இயக்குனரே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறாக ஆக்கும் வகையில் படம் தோல்வியை கண்டது.

அதேபோல இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்திற்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் துவங்கி அனைவருமே மிகப்பெரிதாக பேசினார்கள். ஆனால் படம் வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.

தனுஷ்:

தனுஷ்க்கு 2014ஆம் ஆண்டு தான் அவருடைய 25வது திரைப்படமான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியானது தற்சமயம் 2024 ஆம் ஆண்டு அவருடைய ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

அதேபோல இயக்குனர் சுந்தர் சி முதன்முதலாக அரண்மனை திரைப்படத்தை துவங்கி வைத்தது 2014 ஆம் ஆண்டு தான் அரண்மனை படத்தின் முதல் பாகம் 2014 ஆம் ஆண்டு வெளியானது தற்சமயம் அதன் நான்காம் பாகம் இந்த வருடம் வெளியாகி இருக்கிறது.

நமிதாவை வச்சி அதை பண்ண சொன்னாங்க.. நடிப்பையே விட்டுட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதே சமயம் இப்பொழுது அரண்மனை மாதிரியான பேய் படங்களை இயக்கியும் அதிக பிரபலமடைந்து வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவருடைய உதவி இயக்குனரான சுராஜ் இயக்கிய தலைநகரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சுந்தர் சி.

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து வீராப்பு சண்டை என்று நிறைய படங்களில் நடித்தார் சுந்தர் சி. அந்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியையும் கொடுத்தன ஆனால் அதற்கு பிறகு அவருக்கு நிறைய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.

சுந்தர் சி அனுபவங்கள்:

sundar c namitha

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சுந்தர் சி எனக்கு நமிதாவைதான் பிடிக்கும் நமீதாவோடு எப்பொழுது பாடல் காட்சிகள் வச்சாலும் அதில் நான் நமீதாவை தூக்க வேண்டும் என்பது போல ஒரு காட்சியை இயக்குனர்கள் வைத்து விடுவார்கள்.

மற்ற நடிகைகளை எளிதாக தூக்கிவிடலாம் நமீதாவை தூக்குவது கஷ்டம் எனவே அதற்காகவே பயிற்சி எடுத்துவிட்டு வருவேன். அதனால் நமிதாவை பிடிக்கும் என்று கூறி இருந்தார் சுந்தர் சி. மேலும் சுந்தர் சி கூறும் பொழுது இந்த பாடல்களுக்காகதான் நான் சினிமாவை விட்டே போனேன் நடிப்பை விட்டே போனேன்.

ஏனெனில் எனக்கு சுத்தமாக டான்ஸ் ஆடவே வராது ஆனால் எனக்கு எல்லா படத்திலும் டான்ஸ் ஆடுவது போன்ற பாடல்களை வைத்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி.

சுந்தர் சியை மதிக்காத தனியார் பள்ளி.. சுந்தர் சி சொன்ன அந்த பதில்.. மானத்தை காப்பாற்றிய திரைப்படம்..!

இயக்குனர் சுந்தர் சி தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஆவார். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் இப்பொழுது வெற்றி படங்களை கொடுப்பதற்கு தடுமாறி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு தொடர்ந்து நிறைய தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை எப்பொழுதும் அவர் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

அவர் இயக்கி வரும் கலகலப்பு அரண்மனை மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே எப்பொழுதும் நல்ல வெற்றியை பெற்று வருகின்றன. இதற்கு முன்பு கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

சுந்தர் சி நிறைய திரைப்படங்களை இயக்கினாலும் அதில் இரண்டு திரைப்படங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. அதில் ஒன்று அருணாச்சலம் மற்றொன்று கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம்.

sundar c

இயக்குனர் சுந்தர் சி:

அன்பே சிவம் சிவம் திரைப்படத்தை பார்க்கும் யாருமே அந்த திரைப்படத்தை சுந்தர் சி தான் இயக்கினார் என்று கூறினால் நம்ப மாட்டார்கள். ஏனெனில் எப்போதுமே காமெடி திரைப்படமாக இயக்கக் கூடியவர் சுந்தர் சி.

அவர் இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கினார் என்பது பலருக்குமே அதிர்ச்சியான ஒரு விஷயம் தான். ஆனால் அன்பே சிவம் திரைப்படம் வெளியான காலத்தில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் அப்போதைய சமயத்தில் சுந்தர்சிக்கு அட்வைஸ் செய்த கமல் நாம் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம்.

anbe sivam

அது நமக்கு நல்லதைதான் செய்யும் என்று கூறியிருக்கிறார். அதேபோல பிறகு சுந்தர் சி தன்னுடைய குழந்தையை ஒரு பெரிய பள்ளியில் சேர்ப்பதற்கு சென்றிருக்கிறார். அந்த பள்ளியை பொருத்தவரை அட்மிஷன் போடுவது என்றால் பள்ளி திறப்பதற்கு சில மாதங்கள் முன்பே போட வேண்டும்.

பள்ளியில் நடந்த நிகழ்வு:

அப்பொழுதுதான் சீட்டு கிடைக்கும் ஆனால் பள்ளி துவங்குவதற்கு 20 நாட்கள் முன்பு சுந்தர்சி குஷ்புவுடன் சென்று இருந்தார். இதனால் சீட் இல்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம் இருந்தாலும் இவர்கள் விஐபி என்பதால் பேசிவிட்டு அனுப்பலாம் என்று பிரின்சிபல் அறையில் அமர வைத்தனர்.

அப்பொழுது வந்த பிரின்சிபல் சினிமா தொடர்பாக ஏதாவது பேச வேண்டுமே என்று கூறி சமீபத்தில் அன்பே சிவம் என்று ஒரு படம் வந்தது சிறப்பான ஒரு திரைப்படம் என்று பாராட்டி பேசிக்கொண்டிருந்தார் அதனைக் கேட்ட குஷ்பூ அந்த படத்தை இயக்கியவர் இவர்தான் என்று சுந்தர்சியை கைகாட்டி இருக்கிறார்.

அதனை அறிந்த அந்த தலைமை ஆசிரியர் உடனே அந்த படத்தை இயக்கிய உங்களுக்கு நான் சீட்டு தர முடியாது என்று எப்படி கூற முடியும் என்று கூறி உடனே அட்மிஷன் போட்டு கொடுத்து இருக்கிறார் இந்த விவரத்தை சுந்தர் சி  ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

உழைச்ச உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கல.. மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி.!

ரேடியோவில் தொகுப்பாளராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து காமெடி நடிகராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார் ஆர்.ஜே பாலாஜி.

அவர் நடித்த முதல் திரைப்படமான எல்.கே.ஜி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆர்.ஜே பாலாஜி அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஆர்.ஜெ பாலாஜி.

உழைச்ச உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கல

பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. பிறகு ஆர்.ஜே பாலாஜி ஒரு இயக்குனராக திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார். அவர் தமிழில் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்க்காத அளவிலான வெற்றியை தமிழில் பெற்றுக் கொடுத்திருக்கின்றன.

மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் அடுத்து சூர்யாவின் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கிய பொழுது அந்த திரைப்படத்தில் நயன்தாராதான் அம்மனாக நடித்தார்.

mookuthi amman

இந்த திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்க முடிவு செய்தார். இந்த படத்திற்கு மாசாணி என்று பெயர் வைப்பதாகவும் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிராக நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான திட்டத்தை தீட்டினார்.

மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி

அந்த வகையில் வேக வேகமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஆர்.ஜே பாலாஜி கூறும் பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பொருத்தவரை சுந்தர் சி சார் இயக்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் என்னை தமிழில் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது சுந்தர் சிதான்.

அதேபோல சுந்தர் சி தயாரிப்பிலும் நான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். எனவே சுந்தர்.சி சாருக்கு நான் இதற்காக போன் செய்து வாழ்த்துக்களை கூறினேன். மேலும் சூர்யா படத்தை இயக்கி வருவதால் என்னால் இப்பொழுது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க முடியாது என்கிற நிலை இருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால் இறுதியாக ஆர்.ஜே பாலாஜி கூறும் பொழுது சில படங்களுக்கு எவ்வளவு கடுமையாக வேலை பார்த்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று கூறியிருந்தார் அவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைதான் கூறுகிறார் என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

கிட்ட கூப்பிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்… சுந்தர் சிக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

சுந்தர் சி தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பயணித்து வரும் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனரான சுந்தர் சி அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

முக்கியமாக ஒரு காமெடி இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் சுந்தர்சி. சுந்தர் சி பெரும்பாலும் இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். அவை அவருக்கு பெரும் வெற்றியையும் பெற்று கொடுத்திருக்கின்றன.

சுந்தர் சி பிரபலம்:

அதே சமயம் வேறு மாதிரி திரைப்படங்களும் அவர் சிறப்பாக இயக்கக் கூடியவர். உதாரணத்திற்கு அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சிதான் இயக்கியிருந்தார்.

sundar-c

அது அதிக அளவு வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது அதேபோல அன்பே சிவம் அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களையும் சுந்தர் சிதான் இயக்கினார். இவர் தமிழ் சினிமாவில் எடுத்த உடனே இயக்குனர் ஆகிய விடவில்லை.

அப்பொழுதெல்லாம் அவ்வளவு எளிதாக இயக்குனராக முடியாது அதற்கு ஏற்கனவே வேறு சில இயக்குனர்களிடம் சில படங்களிலாவது பணி புரிந்திருக்க வேண்டும். இப்பொழுது போல படங்களிலேயே பணி புரியாமல் இயக்குனரான இயக்குனர்கள் அப்போது வெகு சிலர் தான் இருந்தனர்.

ஆரம்பக்காலம்:

sundar-c

இந்த நிலையில் சுந்தர் சி இயக்குனர் மணிவண்ணனிடம் தான் உதவி இயக்குனராக அப்பொழுது பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் மணிவண்ணன் சுந்தர்சியை கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டுவாராம் மேலும் பட வசனங்களை கூட அப்படித்தான் கூறுவார் என்று கூறுகிறார் நடிகர் சரத்குமார்.

மணிவண்ணன் சுந்தர் சி காதில் ஏதோ கூறிவிட்டு சென்றுள்ளார் உடனே சரத்குமார் என்ன வசனம் கூறினார் என்று கேட்டிருக்கிறார் அதற்கு சுந்தர் சி வசனம் எல்லாம் கூறவில்லை கெட்ட வார்த்தையில் திட்டினார் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை சரத்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்தார்.