தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான ஒரு நடிகர் என பலரால் புகழப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். அவர் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும்.
அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் அன்பே சிவம். இப்போதும் கூட கமல் ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் அன்பே சிவம் திரைப்படத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும். அன்பே சிவம் திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கினார்.
அந்த படத்தில் கமல்ஹாசன் கால் ஊனமான கண் பார்வை பிரச்சனையாக இருக்கும் நபராக நடித்திருப்பார். இதற்காக கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அணியும் கண்ணாடியை கமல்ஹாசன் அணிந்தார்.
நல்லப்படியாக கண் பார்வை உள்ளவர்கள் அந்த கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்த்தால் அவர்களுக்கு தலை எல்லாம் சுத்த துவங்கிவிடுமாம். எனவே இதற்காக கமல்ஹாசனுக்கு கண்ணில் ஒரு லென்சு பொருத்தப்பட்டது. அதன் மூலம் அந்த கண்ணாடியை மாட்டிக்கொண்டு கமல் நடிக்க முடிந்தது.
அதே போல படத்தில் அவரை கால் ஊனமாக காட்டுவதற்காக ஒரு ஷூவை உயரம் அதிகமாகவும் ஒரு ஷூவை உயரம் குறைவாகவும் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் இயற்கையாகவே கால் ஊனமாக உள்ள நபர் போல கமலால் நடிக்க முடிந்துள்ளது.
இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்கும் நடிகராகதான் இப்போதும் கமல் இருக்கிறார்.
தமிழில் பேய் படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் இரண்டு முக்கியமான இயக்குனர்களில் ஒன்று சுந்தர் சி மற்றொன்று லாரன்ஸ். இவர்கள் இருவருமே எனக்கும் அவருக்கும்தான் போட்டியே என்கிற ரீதியில் போட்டி போட்டு வந்தனர். லாரன்ஸ் தற்சமயம் இந்த பேய் படங்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.
ஆனால் சுந்தர் சி நிறுத்துவதாக இல்லை. அரண்மனை என அவர் துவங்கிய திரைப்படம் ஒவ்வொரு பாகமாக வெளிவந்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மாறுகிறார்களே தவிர கதையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை.
இந்த நிலையில் தற்சமயம் அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்திற்கான தயாரிப்பு வேலைகள் துவங்கியுள்ளன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அது இல்லாமல் நடிகர் சந்தானமும் இதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆனால் திடீரென தற்சமயம் விஜய் சேதுபதி இந்த படத்தை விட்டு விலகியுள்ளார். என்ன காரணம் என தெரியவில்லை. விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்தை சுந்தர் சியால் கொடுக்க முடியவில்லை என சில பேச்சுக்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. இதற்கு முன்னர் வந்த அரண்மனை திரைப்படங்களிலும் கூட சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips