தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அதே சமயம் இப்பொழுது அரண்மனை மாதிரியான பேய் படங்களை இயக்கியும் அதிக பிரபலமடைந்து வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவருடைய உதவி இயக்குனரான சுராஜ் இயக்கிய தலைநகரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சுந்தர் சி.
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து வீராப்பு சண்டை என்று நிறைய படங்களில் நடித்தார் சுந்தர் சி. அந்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியையும் கொடுத்தன ஆனால் அதற்கு பிறகு அவருக்கு நிறைய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.
சுந்தர் சி அனுபவங்கள்:

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சுந்தர் சி எனக்கு நமிதாவைதான் பிடிக்கும் நமீதாவோடு எப்பொழுது பாடல் காட்சிகள் வச்சாலும் அதில் நான் நமீதாவை தூக்க வேண்டும் என்பது போல ஒரு காட்சியை இயக்குனர்கள் வைத்து விடுவார்கள்.
மற்ற நடிகைகளை எளிதாக தூக்கிவிடலாம் நமீதாவை தூக்குவது கஷ்டம் எனவே அதற்காகவே பயிற்சி எடுத்துவிட்டு வருவேன். அதனால் நமிதாவை பிடிக்கும் என்று கூறி இருந்தார் சுந்தர் சி. மேலும் சுந்தர் சி கூறும் பொழுது இந்த பாடல்களுக்காகதான் நான் சினிமாவை விட்டே போனேன் நடிப்பை விட்டே போனேன்.
ஏனெனில் எனக்கு சுத்தமாக டான்ஸ் ஆடவே வராது ஆனால் எனக்கு எல்லா படத்திலும் டான்ஸ் ஆடுவது போன்ற பாடல்களை வைத்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி.