இதை சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு… மத கஜ ராஜா இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. மக்களுக்கு பிடித்த வகையில் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதகஜராஜா.

இந்த படத்தில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா மற்றும் இன்னமும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும்போது இந்த திரைப்படத்தில் மனோபாலா மற்றும் என் குரு மணிவண்ணனை பார்க்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது.

க்ளைமேக்ஸிற்கு முன்பு மனோபாலாவுக்கு சில காமெடி காட்சிகள் இருக்கின்றன. அதை எல்லாம் மனோபாலாவால் மட்டுமே செய்ய முடியும். அவ்வளவு சிறப்பான காமெடி காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

இத சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு. ஆனால் கண்டிப்பா அவர் காமெடியனா நடிக்க வரணும். அவரை ரொம்ப மிஸ் பண்றோம். அதே மாதிரி விஜய் ஆண்டனியும் இசையமைக்க வர வேண்டும் என கூறியிருந்தார் சுந்தர் சி.

மேலும் அவர் கூறும்போது இரண்டு நாட்களில் மதகஜராஜா கொடுக்கும் வெற்றியை வைத்துதான் மதகஜராஜா பாகம் 2 படத்திற்கான அப்டேட்டை கொடுப்பேன் என கூறியுள்ளார் சுந்தர் சி.