23 வயதிலேயே அம்மாவான ஸ்ரீ லீலா.. பிறப்பால் வந்த பிரச்சனை..!

தென்னிந்தியா முழுவதுமே இப்போது பிரபல நடிகையாக மாறி வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. குறைந்த காலக்கட்டத்திலேயே அவருக்கான வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு அவரது தனிப்பட்ட நடனம்தான் காரணமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் ஸ்ரீ லீலா தெலுங்கில் இருக்கும் மற்ற நடிகைகளை போல பத்தோடு ஒன்று பதினொன்று என்றுதான் இருந்தார். ஆனால் போக போக அவரது மார்க்கெட் அதிகரித்தது. முக்கியமாக குண்டூர் காரம் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ லீலாவுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்தது. என்னதான் ஸ்ரீ லீலாவின் சினிமா வாழ்க்கை சிறப்பானதாக இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.

ஸ்ரீ லீலாவின் சொந்த அப்பாவே அவரை நிராகரித்துவிட்டார். குடும்பம் சார்ந்து சில பிரச்சனைகளை அனுபவித்து வருகிறார் ஸ்ரீ லீலா. இதற்கு நடுவே இவ்வளவு சிறு வயதிலேயே குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதன் மூலம் 23 வயதிலேயே குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் ஸ்ரீ லீலா. அவருக்கு தெலுங்கு சினிமாவில் இதனால் நல்ல பெயர்கள் இருந்து வருகின்றன.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version