Tag Archives: மதகஜராஜா

அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

நடிகர் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பே உருவாகி தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மதகஜராஜா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது இயக்குனர் சுந்தர் சியே எதிர்பார்க்காத விஷயமாகும்.

பெரும்பாலும் 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு இப்போது இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது அதிசயமான விஷயம்தான். ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு இப்போது இருக்கும் தொழில்நுட்பம் வேறு.

அந்த அளவிற்கு சினிமாவில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதே சமயம் காமெடி திரைப்படங்கள் வெளியாவதே இப்போது குறைந்துவிட்டது. அதே சமயம் எப்போதுமே மக்கள் காமெடி படங்களை விரும்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்ததால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா திரைப்படம். அரண்மனை 4 திரைப்படம் மொத்தமாகவே 100 கோடி ரூபாய்தான் வெற்றி கொடுத்தது. ஆனால் மதகஜராஜா அதனை தாண்டி வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதகஜ ராஜாவின் வெற்றிக்கு காரணமே லோகேஷ் கனகராஜ்தான்… இந்த விஷயம் தெரியாம போச்சே..!

பொதுவாக தமிழ் சினிமாவில் பொங்கலை விட தீபாவளிக்குதான் அதிகமாக படங்கள் வெளியாகும். ஆனால் இந்த வருடம் பொங்கலுக்குதான் அதிக படங்கள் வெளியாக இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 10க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன.

இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா இயக்கிய வணங்கான் போன்ற படங்களும் இடம் பெறுகின்றன. இந்த மாதிரியான பெரிய படங்களுக்கு நடுவே சின்ன படங்களும் நிறைய வெளியாகின்றன. இப்படி இருக்கும்போது திடீரென இந்த பொங்கல் ரேசில் களம் இறங்கியது மதகஜ ராஜா திரைப்படம்.

படம் முழுக்க காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருந்ததால் இந்த படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஒரு 15 நிமிடம் மனோபாலாவின் காட்சிகள் இருக்கும். அது எல்லாம் அல்டிமெட்டாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஏன் இந்த படம் வரவேற்பை பெற்றது என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் சில பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதாவது கடந்த 10 வருடங்களாகவே தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் பெரிதாக வருவதில்லை.

லோகேஷ் கனகராஜ் மாதிரியான இயக்குனர்கள் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் இரத்த காட்சிகளை வைத்து ஹிட் கொடுக்க துவங்கினர். இதனால் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.

இதனால் இப்போது மதகஜராஜா நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. எனவே இந்த வெற்றிக்கு மறைமுகமாக லோகேஷ் கனகராஜும் ஒரு காரணம் என கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

இதை சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு… மத கஜ ராஜா இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த சுந்தர் சி.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. மக்களுக்கு பிடித்த வகையில் சுந்தர் சி இயக்கும் காமெடி திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதகஜராஜா.

இந்த படத்தில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா மற்றும் இன்னமும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும்போது இந்த திரைப்படத்தில் மனோபாலா மற்றும் என் குரு மணிவண்ணனை பார்க்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது.

க்ளைமேக்ஸிற்கு முன்பு மனோபாலாவுக்கு சில காமெடி காட்சிகள் இருக்கின்றன. அதை எல்லாம் மனோபாலாவால் மட்டுமே செய்ய முடியும். அவ்வளவு சிறப்பான காமெடி காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

இத சொன்னா சந்தானம் கோச்சுப்பாரு. ஆனால் கண்டிப்பா அவர் காமெடியனா நடிக்க வரணும். அவரை ரொம்ப மிஸ் பண்றோம். அதே மாதிரி விஜய் ஆண்டனியும் இசையமைக்க வர வேண்டும் என கூறியிருந்தார் சுந்தர் சி.

மேலும் அவர் கூறும்போது இரண்டு நாட்களில் மதகஜராஜா கொடுக்கும் வெற்றியை வைத்துதான் மதகஜராஜா பாகம் 2 படத்திற்கான அப்டேட்டை கொடுப்பேன் என கூறியுள்ளார் சுந்தர் சி.

தூக்கி நிறுத்திய விஜய் ஆண்டனி, அஞ்சலி, சந்தானம் காம்போ.. எப்படியிருக்கு மதகஜராஜா..!

12 வருட காத்திருப்புக்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம் மதகஜராஜா. நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி சரத்குமார் இவர்கள் எல்லாம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இறந்த நடிகர்களாக மணிவண்ணன், மனோ பாலா போன்றோரும் நடித்துள்ளனர். இதற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது.

படத்தின் கதைப்படி விஷால், சந்தானம் இன்னம் பலரும் இணைந்து ஒரு விழாவுக்கு வருகின்றனர்.வெகு நாட்கள் சந்திக்காத நண்பர்கள் அங்கு சந்தித்து கொள்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் நண்பர்களில் ஒருவர் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

அவர் சோனுவிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவரை காப்பதற்காக விஷால் இந்த பிரச்சனைக்குள் இறங்குகிறார்.

படத்தில் வெகு வருடங்கள் கழித்து பழைய சந்தானத்தை பார்ப்பதே பலருக்கும் இன்பமளிக்கும் விஷயமாக இருக்கிறது. படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் சந்தானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல படம் முழுக்க வரலெட்சுமி சரத்குமாரும் அஞ்சலியும் பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ளனர்.

பழைய அஞ்சலியை அவ்வளவு கவர்ச்சியாக கலகலப்பு படத்தில்தான் பார்த்திருந்தனர். எனவே அதுவும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமின்றி விஜய் ஆண்டனியின் இசை அதுவும் முன்பு விஜய் ஆண்டனி அமைத்த இசை எல்லாம் வேற மாதிரி இருந்தது. அதே அளவில் இந்த படத்திலும் உள்ளது. மொத்தமாக பொங்கலுக்கு வெளியாகும் படத்தில் தனிப்பட்ட இடத்தை மதகஜராஜா பிடித்துள்ளது.