Tag Archives: madha kaja raja

அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

நடிகர் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பே உருவாகி தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மதகஜராஜா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது இயக்குனர் சுந்தர் சியே எதிர்பார்க்காத விஷயமாகும்.

பெரும்பாலும் 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு இப்போது இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது அதிசயமான விஷயம்தான். ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு இப்போது இருக்கும் தொழில்நுட்பம் வேறு.

அந்த அளவிற்கு சினிமாவில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதே சமயம் காமெடி திரைப்படங்கள் வெளியாவதே இப்போது குறைந்துவிட்டது. அதே சமயம் எப்போதுமே மக்கள் காமெடி படங்களை விரும்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்ததால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா திரைப்படம். அரண்மனை 4 திரைப்படம் மொத்தமாகவே 100 கோடி ரூபாய்தான் வெற்றி கொடுத்தது. ஆனால் மதகஜராஜா அதனை தாண்டி வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.