தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் பெரும்பாலும் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது.
ஒருமுறை சத்யராஜுடன் ஒரு திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் குறித்து இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நானும் சத்யராஜும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தோம்.
அந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே ப்ரிவீவ் ஷோவிற்கு என்னை அழைத்திருந்தனர்.அங்கு சென்று பார்த்தப்போது அந்த படம் நன்றாகவே இல்லை. சத்யராஜும் என்னுடன் அந்த படத்தை பார்த்தார். பிறகு இருவரும் வெளியே வந்தோம்.
அப்போது படத்தின் தயாரிப்பாளர் வெளியே நின்று படத்தை பற்றி கேட்டார். உடனே சத்யராஜ் படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். பிறகு நான் சத்யராஜுடம் இதுக்குறித்து கேட்டேன்.
அப்போது பதிலளித்த சத்யராஜ் அவர்கள் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு என்னிடம் கேட்டிருந்தால் நானே சரியில்லை என கூறியிருப்பேன். இப்போது படத்தை எல்லாம் முடித்து வெளியிட இருக்கின்றனர். எப்படியும் முதல் நாள் முதல் ஷோ முடியும்போது அவர்களுக்கே உண்மை தெரிய போகிறது.
ஒரு வாரம் முன்பே நாம் சொல்லிவிட்டால் அதனால் தூக்கம் இல்லாமல் கவலையிலேயே இருப்பார்கள். அதற்கு பிறகு படம் ஓடவில்லை என்றதும் அன்றே அவன் வாயை வைத்தான் என நம்மைதான் அப்போதும் கூறுவார்கள். அதனால்தான் அப்படி கூறவில்லை என கூறியுள்ளார் சத்யராஜ்.