தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் நடிகர் அஜித் வெகு காலங்களாகவே டிவி சேனல்கள் என எதற்குமே பேட்டிகளே கொடுக்காமல் இருந்து வந்தார். அதே போல படத்தின் வெற்றி விழா, இசை வெளியீட்டு விழா என எதிலுமே அஜித் கலந்துக்கொள்ள மாட்டார் என்கிற நிலையும் இருந்தது.
தற்சமயம் ஒரு யூ ட்யூப் சேனலுக்கு வெகு காலங்களுக்கு பிறகு பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.அதில் பேசிய அஜித் தொடர்ந்து தனது மனைவியை குறித்து நிறைய பேசியிருக்கிறார். எனக்கு மிகப்பெரிய பலவே என் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் மனைவி ஷாலினிதான்.
ஷாலினியை நான் திருமணம் செய்யும்போது அவர் பெரிய நடிகையாக இருந்தார். ஷாலினி எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளார். நான் பல நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். அப்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக இருந்தவர் ஷாலினிதான்.
நான் எனது இதயத்திற்குள் என்னை ஒரு மிடில் க்ளாஸ் ஆளாகவே நினைக்கிறேன். துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ் போன்ற விஷயங்கள் எல்லாமே எனது நண்பர்களிடம் இருந்து நான் கற்றுகொண்ட விஷயங்கள்தான் என கூறியுள்ளார் அஜித்.