Tag Archives: sathyaraj

அந்த படத்தை பார்த்துட்டு சத்யராஜ் சொன்ன பதில்.. ஆடிப்போன சுந்தர் சி.. இவர்கிட்ட கத்துக்கணும்.!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் பெரும்பாலும் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது.

ஒருமுறை சத்யராஜுடன் ஒரு திரைப்படத்திற்கு சென்ற அனுபவம் குறித்து இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நானும் சத்யராஜும் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தோம்.

அந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே ப்ரிவீவ் ஷோவிற்கு என்னை அழைத்திருந்தனர்.அங்கு சென்று பார்த்தப்போது அந்த படம் நன்றாகவே இல்லை. சத்யராஜும் என்னுடன் அந்த படத்தை பார்த்தார். பிறகு இருவரும் வெளியே வந்தோம்.

sathyaraj

அப்போது படத்தின் தயாரிப்பாளர் வெளியே நின்று படத்தை பற்றி கேட்டார். உடனே சத்யராஜ் படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். பிறகு நான் சத்யராஜுடம் இதுக்குறித்து கேட்டேன்.

அப்போது பதிலளித்த சத்யராஜ் அவர்கள் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு என்னிடம் கேட்டிருந்தால் நானே சரியில்லை என கூறியிருப்பேன். இப்போது படத்தை எல்லாம் முடித்து வெளியிட இருக்கின்றனர். எப்படியும் முதல் நாள் முதல் ஷோ முடியும்போது அவர்களுக்கே உண்மை தெரிய போகிறது.

ஒரு வாரம் முன்பே நாம் சொல்லிவிட்டால் அதனால் தூக்கம் இல்லாமல் கவலையிலேயே இருப்பார்கள். அதற்கு பிறகு படம் ஓடவில்லை என்றதும் அன்றே அவன் வாயை வைத்தான் என நம்மைதான் அப்போதும் கூறுவார்கள். அதனால்தான் அப்படி கூறவில்லை என கூறியுள்ளார் சத்யராஜ்.

விஜய் கட்சியில் இந்த பதவி கேப்பேன்.. சத்யராஜின் அதிரடி முடிவு..!

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் த.வெ.க கட்சி குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் சரத்குமார் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர் சத்யராஜ்.

ஒரு வருடத்தில் எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு சத்யராஜ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது.

ஆனாலும் புது நடிகர்களின் வருகைக்கு பிறகு சத்யராஜ் மார்க்கெட் குறைய தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. நடித்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது.

அதனை தொடர்ந்து இப்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தனக்கு நல்ல சம்பளம் கிடைப்பதாக சத்யராஜ் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த பதவியில் சேர்வீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சத்யராஜ் கண்டிப்பாக நான் பெரியார் தொடர்பான ஒரு பதவியை தான் எடுப்பேன்.

பெரியாரின் கருத்துக்களை பரப்பும் ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவி எனக்கு கிடைத்தால் அதை நான் எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் சத்யராஜ். இதன் மூலம் சத்யராஜ் தமிழக வெற்றி கழகத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இதை சொல்றேன்னு என்கிட்ட கோச்சிக்க வேண்டாம்.. அரசியல் தலைவர்கள் குறித்து சத்யராஜ்.!

தமிழ்நாட்டில் எல்லா காலங்களிலுமே அரசியல் தொடர்பான திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி அதிக வெற்றி பெற்ற ஒரு நடிகராக மாறியதற்கு அவர் அரசியல் சார்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்தது தான் காரணமாக இருந்தது.

அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படமே எக்கச்சக்கமான அரசியல் காமெடிகளை கொண்ட படமாகதான் இருந்தது. அதேபோல ஒரு காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு அரசியல் படமாக இருந்த திரைப்படம் தான் அமைதிப்படை.

இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான அமைதிப்படைக்கும் நிகரான ஒரு அரசியல் திரைப்படம் இன்னமும் தமிழ் சினிமாவில் வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் இதுக்குறித்து சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அவர் கூறும் பொழுது ஒருமுறை என்னிடம் பட வாய்ப்பு கேட்டு வந்த ஒரு இயக்குனர் அமைதிப்படை போன்ற கதை ஒன்றை வைத்து இருக்கிறேன் என்று கூறினார்.

ஆனால் மணிவண்ணனை தவிர வேறு யாராலும் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது. இதை நான் சொல்வதற்காக மற்ற இயக்குனர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அமைதிப்படை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு அதிக அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

அரசியலில் உள்ள எல்லா தலைவர்களையும் திட்டி விட வேண்டும் பாரபட்சம் பார்க்காமல் அரசியலை பேசிவிட வேண்டும் அந்த தைரியம் இருந்தால் மட்டும்தான் அமைதிப்படை மாதிரியான ஒரு படத்தை எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார் சத்யராஜ்.

பொய்யெல்லாம் சொல்ல விரும்பலை.. அஜித், விஜய்க்கிட்ட என்னால முடியலை.. உண்மையை கூறிய சத்யராஜ்.!

தமிழ் சினிமாவில் சரத்குமார், விஜயகாந்த் மாதிரியான நடிகர்கள் எல்லாம் பெரிய நடிகர்களாக இருந்தப்போது அவர்களுக்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். அப்போதைய சமயங்களில் சத்யராஜ் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்து வந்தன.

அதனாலேயே சத்யராஜின் மார்க்கெட்டும் அதிகரித்து இருந்தது. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர் சத்யராஜ். காமெடியன், வில்லன் என்று அவர் தொடாத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம்.

அப்படி இருந்த சத்யராஜ்க்கு 2000களுக்கு பிறகு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது. இங்க்லிஷ் காரன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரிதாக மார்க்கெட்டை பெற்று தரவில்லை. அதனை தொடர்ந்து சத்யராஜ் தற்சமயம் அதுக்குறித்து பேசியுள்ளார்.

sathyaraj

அதில் கூறிய சத்யராஜ், எனக்கு ஹீரோவாக வாய்ப்புகள் குறைய காரணமே எனக்கு மார்க்கெட் இல்லாமல் போனதுதான். நான் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல மார்க்கெட் கிடைக்கவில்லை. அஜித், விஜய், சிம்பு, தனுஷ் மாதிரியான நடிகர்கள் வந்த பிறகு அவர்களுக்கு ஈடு கொடுத்து என்னால் நடிக்க முடியவில்லை.

மேலும் கதாநாயகனாக நடிப்பதை விடவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிப்பதற்கு நல்ல தொகை சம்பளமாக கிடைத்தது. அதனால்தான் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினேன் என கூறியுள்ளார் சத்யராஜ்.

 

 

 

இறப்பதற்கு முன்பு எம்.ஜி.ஆர் பார்த்த கடைசி படம்.. மனம் நொந்த சத்யராஜ்..!

சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் முதலமைச்சரானார் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான்.

இதனாலேயே தொடர்ந்து சினிமா துறையில் உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக மதிப்பு உண்டு முக்கியமாக எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார்.

அதனாலேயே இப்பொழுதும் சினிமா துறையில் பெரிதாக மதிக்கப்படும் ஒரு நபராக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார். நடிகர் சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய ரசிகர் ஆவார் சினிமாவிற்கு வந்த காலம் முதலே எம்.ஜி.ஆர் மீது அதிக அன்பு கொண்டிருந்தார் சத்யராஜ்.

sathyaraj

எம்.ஜி.ஆர் பார்த்த படம்:

தொடர்ந்து சத்யராஜின் திரைப்படங்களில் அவர் எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதும் எம்.ஜிஆ.ர் போல் நடிப்பதையும் அதிகமாக பார்க்க முடியும். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் தன்னை பாராட்டியது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் சத்யராஜ்.

அதில் அவர் கூறும் பொழுது வேதம் புதிது திரைப்படத்தை வெளியிடுவதில் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதனை அப்பொழுது எம்.ஜி.ஆர் நேரில் வந்து பார்த்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு எனது கைகளை பிடித்து முத்தம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை நான் இந்த படத்தை வெளியிட வைக்கிறேன் என்று என்னிடம் கூறினார். அந்த படம் பார்த்த 10 நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். வேதம் புதிதான் அவர் பார்த்த கடைசி திரைப்படம் என்று அந்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் சத்யராஜ்.

எங்க அம்மா கோமாக்கு போயிட்டாங்க… குடும்பமே உடைஞ்சு போச்சு.. கண் கலங்கிய சத்யராஜ் மகள்.. யாருமே அறியாத மறுபக்கம்.!

Actor Sathyaraj played both roles as villain hero in Tamil. Most of the movies starring Sathyaraj are well received. Some things related to his family are getting popular now

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகிய பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று கதாநாயகனாக மாறியவர் நடிகர் சத்யராஜ் சத்யராஜை பொருத்தவரை அவர் சினிமாவில் ஒரு தனிப்பட்ட நடிப்பை கொண்டவராக இருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். சத்யராஜ் கதாநாயகனாக நடித்தாலும் மக்களுக்கு பிடிக்கும் வில்லனாக நடித்தாலும் பிடிக்கும் என்கிற ரீதியில் தான் அவரது கதாபாத்திரம் இருக்கும்.

sathyaraj

இப்பொழுதும் கூட நிறைய திரைப்படங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார் பெரும்பாலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த நிலைகள் சத்யராஜ் மகள் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

குடும்பத்தில் நடந்த பிரச்சனை:

அதில் அவர் கூறும் பொழுது எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் போய் நான்கு வருடமாக கோமாவில் இருக்கிறார். இருந்தாலும் என்னை நல்லபடியாக எனது தந்தை பார்த்து கொண்டு வருகிறார். எனது தந்தையின் தாயாரும் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

எனவே அவருக்கும் ஒரு தாயாக நான் இருந்து கொண்டிருக்கிறேன் எனவே தாய் இல்லாத குழந்தைகளின் அருமை என்னவென்று எனக்கு தெரியும் என்று பதிவிட்டு இருந்தார். இவ்வளவு நாள் சத்யராஜ் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பொழுதும் கூட இதுகுறித்து பேசியதே கிடையாது என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தமன்னாவுக்கு ஜெயில் உறுதி.. ஆனால் சத்யராஜ் செஞ்ச மோசடி தெரியுமா? பகீர் கிளப்பும் பிரபலம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மோசடி விளம்பரத்தில் நடித்ததற்காக தமன்னா பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.

இதனால் அவர் கைதாகவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. பெட்டிங் மாதிரியான தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகின்றன.

இதில் எது சரியான அப்ளிகேஷன் எது மோசடி செய்யக்கூடியது என்று மக்களுக்கே தெரியவில்லை. இந்த நிலையில் இதைப்பற்றி விவரம் தெரியாத தமன்னா இப்படியாக ஒரு விளம்பரத்தில் நடித்ததன் மூலமாக சிக்கலில் சிக்கியிருக்கிறார்.

உண்மையை கூறிய பிரபலம்:

இந்த நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் சேகுவாரா சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். பிரபலங்களை பொருத்தவரை அவர்களை இந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க கூடாது. ஆனால் தமன்னா முழுக்க முழுக்க பணத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்.

thammanna

ஒரு கட்டத்திற்கு பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அதிக ஆபாசத்தை காட்டத் தொடங்கினார். இப்படி எல்லாம் ஆபாசம் காட்டினால் அதிக வருமானம் வரும். வரவேற்பும் அதிகமாக கிடைக்கும் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்.

இப்படித்தான் அந்த விளம்பரத்திலும் சென்று நடித்து இருக்கிறார். இதே மாதிரி சத்யராஜ் முன்பு ஒரு மோசடி செய்தார். ஈமு கோழி விற்பனை என்று கூறி ஒரு விளம்பரத்திலும் நடித்திருந்தார் சத்யராஜ். ஆனால் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை இந்த மாதிரி எந்த விளம்பரத்திலும் பார்க்க முடியாது. அவர்களுக்கு இருக்கும் அந்த புத்திசாலித்தனம் இவர்களுக்கு இருப்பதில்லை என்று கூறி இருக்கிறார் பத்திரிக்கையாளர் சேகுவேரா.

பா ரஞ்சித், மாரி செல்வராஜ்க்கு முன்பே சமூகநீதி பேசிய தமிழ் திரைப்படங்கள்..!

அந்த வகையில் பேட்டி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி தான் நடித்த கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதி பிறந்தநாள் பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் ரவி முதன் முதலில் தன்னுடைய சகோதரனின் இயக்கத்திலும் தந்தையின் தயாரிப்பிலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரவி என்னும் தன் பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்னும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்கு மற்றும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு தாஸ் மழை இதயத் திருடன் சம்திங் சம்திங் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது. பிறகு தீபாவளியை சந்தோஷப்பிரமணியம் பேராண்மை தில்லாலங்கடி எங்கேயும் காதல் நிமிர்ந்து நில் தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்தார் இதைப்பற்றி அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பிரதீப் ரங்க நாதனை பற்றி ஜெயம் ரவி கூறியது

பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குனராக ஜெயம் ரவி காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்க நாதனை பற்றி கூறும் போது அவர் கோமாளி படத்தின் கதையை கூறும் போது எனக்கு விருப்பமில்லை. இந்த படம் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்நிலையில் பிரதி பிறந்தநாள் என்னிடம் உங்களுக்கு இந்த படத்தில் பிடித்த சீக்வன்ஸ் ஒன்றை கூறுங்கள் நான் சென்று அந்த சீக்குவன்சி உங்களுக்கு எடுத்து காமிக்கிறேன் எனக் கூறினார். நானும் அந்த படத்தில் வரும் ஒரு சீக்குவன்ஸ் ஒன்றை கூறினேன் அது தன்னுடைய முன்னாள் காதலியை தன் நண்பனை கூட்டிக்கொண்டு பார்ப்பதற்காக செல்லுவார். அந்தப் பெண்ணிற்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையும் இருக்கும். அப்போது அந்தப் பெண்ணை பார்க்கும்போது பயத்தில் அவனுக்கு வியர்க்கும் இது நகைச்சுவையான காட்சி என்றாலும் அதிலும் ஒரு உண்மை தன்மை இருக்கும் இதை எப்படி பிரதிபரங்கநாதன் பண்ணுவார் என நான் அவரிடம் இந்த சீக்குவின்ஸி கூறினேன்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக கருதப்படும் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் சமூக நீதி கருத்துக்கள் குறித்த பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், அவர்களின் கருத்தும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நான் இந்த பதிவில் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்குனர்களுக்கு முன்பாகவே தமிழில் சமூக நீதி பற்றி பேசிய திரைப்படங்களைப் பற்றி காணலாம்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் 1992

இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது சிவக்குமார், ஜீவா, கவுண்டமணி, செந்தில், மனோரமா, கோவை சரளா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை பண்ணையார் ஆடு மாடுகள் ஒன்று நடத்துகிறார். கல்வி அறிவு இல்லாத அந்த மக்கள் அடிமைத்தனத்திலேயே வாழ்கிறார்கள். அந்த ஊருக்கு புதிதாக பள்ளிக்கூடத்திற்கு வரும் வாத்தியார் மக்களின் குழந்தைகளுக்கு கல்விக்காக உதவுகிறார்.

மேலும் அவர்களது அறியாமையால் அந்த ஊர் பண்ணைக்காரர் அவர்களை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் உணர்த்துகிறார். தன்னிலை உணரும் அம்மக்கள் என்ன ஆனார்கள் அந்தப் பண்ணையார் இறுதியில் என்ன ஆனார் என்றும் ஜாதியை கொடுமைகளை காட்டும் சமூக திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கும்.

அலை ஓசை 1985

விஜயகாந்த், நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் சிறுமுகை ரவி இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. இளையராஜா இந்த இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். இந்த படத்தின் கதாநாயகன் முத்து தனது கிராம மக்களின் நலனுக்காக போராடுபவனாகவும், அந்த கிராமத்தில் வாழும் வடிவு என்ற பெண் மீது காதல் கொள்கிறாள்.

மேலும் அவளை திருமணம் செய்ய வில்லத்தனமான மாமா முத்துவை தடுப்பதற்காக பல தடைகளை ஏற்படுத்துகிறார். இறுதியில் அந்த கிராம மக்களை படித்த முத்து எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறான். வடிவைத் திருமணம் செய்து கொள்கிறானா என்பது தான் படத்தின் கதை. இந்த படம் கீழ்வெண்மணி என்னும் கிராமத்தின் பிரச்சனையை அடிப்படையாக க் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இரணியன் 1999

இந்த திரைப்படத்தில் முரளி மற்றும் மீனா ஆகியோர் நடிக்க, ரகுவரன் ரஞ்சித் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் முரளி இரணியனாக நடிக்க அவரது மாமன் மகளாக மீனா நடிக்கிறாய். சிறையிலிருந்து கிராமத்திற்கு வரும் இராணியன் நிலப்பிரபுத்துவ கொடுமைகளை எவ்வாறு அழிக்கிறான் மற்றும் தன் மாமன் மகளை எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறான் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நிலப்பிரபுத்துவ குடும்பம், காலில் செருப்பு அணிகின்ற கூலி விவசாயிகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் போராட்டத்தில் இரணியன் சக நண்பர்களை இழக்கிறான். மீண்டும் பட்டினிக்கும் சாவுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகும் கூலி தொழிலாளர்கள் இரணியனின் போராட்ட உத்வேகத்தில் இருந்து விலகுகிறார்கள். இந்நிலையில் இறுதியாக அந்த கிராம மக்கள் இணியனை புரிந்து கொண்டார்களா? இறுதியில் இரணியனின் இறப்பு எவ்வாறு நடந்தது? நிலப்பிரபுத்துவம் ஒழிந்ததா என்பதை காட்டும் படமாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் வாட்டாக்குடி இரணியனின் கதையை அடிப்படையாக க் கொண்டு வெளிவந்த திரைப்படமாகும்.

வேதம் புதிது 1987

பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் அமலா நடித்திருப்பார்கள். ஊர் பெரியவராக சத்யராஜ் நடிக்க அந்த கிராமத்தில் ஜாதி பார்க்காமல் அனைவரிடமும் சமமாக பழகுவதாக பாலு தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாத்திகம் பேசும் அவரின் சொல்லுக்கு ஊர் மக்கள் கட்டுப்படுவார்கள். எந்த ஒரு பஞ்சாயத்து ஆக இருந்தாலும் இவரின் சொல்லுக்கு மறுத்து யாரும் பேச மாட்டார்கள்.

சத்யராஜனின் மகன் ராஜா வெளியூரிலிருந்து படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வருகிறார். கிராமத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்த காதலியான அமலாவை சந்திக்கிறான். இருவரும் காதலிக்க ராஜாவும் அமலாவின் தந்தையும் ஒரு விபத்தில் இறந்து போய் விடுகிறார்கள்.

மேலும் அமலாவும் இறந்து விட்டதாக அந்த ஊர் மக்கள் நினைத்த வேளையில், யாரும் இல்லாத அனாதையாக அமலாவின் தம்பி நிற்கிறான். பிராமண சமூகத்தினர் அவனை வளர்க்க விரும்பாத நிலையில் பாலு தேவர் அவனை தத்தெடுத்து தன் சொந்தன் மகன் போல் வளர்க்கிறான்.

பிராமண சமூகத்தினர் தங்களை விட கீழ் சமூகத்தில் பிராமண பையன் ஒருவன் சாப்பிடுவது எண்ணி கோபம் அடைகிறார்கள். இந்நிலையில் இறந்ததாக நினைத்த அமலா ஊருக்குள் திரும்பி வருகிறார். அவரை வெளியேற்றும் படியாக பிராமண சமுதாயத்தினர் கூற சத்யராஜ் அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் கதையாக உள்ளது.

பராசக்தி 1952

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். தாயை இழந்த கல்யாணி தன் அப்பாவுடன் மதுரையில் வசித்து வருகிறாள். கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். குணசேகரன், சந்திரசேகரன், ஞானசேகரன் என்ற மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். இதில் குணசேகரனாக சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். இவர்கள் மூவரும் மியான்மரில் வணிகம் செய்து வருகிறார்கள்.

1940 இல் உலகப் போர் நடக்கிறது. இந்நிலையில் தங்கை கல்யாணிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. மூவரும் மதுரைக்கு வர நினைக்கும் வேளையில் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயண சீட்டு கிடைக்கிறது.

பரிசு பொருட்களுடன் மதராசபட்டினம் வருகிறான் குணசேகரன். ஆனால் அங்கு ஒரு பெண்ணால் இவர் ஏமாந்து போக, மதுரைக்கு செல்ல வழி இல்லாமல் பசியினால் சமூக அவலங்களை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கல்யாணம் நடந்து மகிழ்ச்சியாய் வாழும் கல்யாணிக்கு குழந்தை பிறக்கிறது. ஒரு விபத்தில் கணவனும், கல்யாணியின் தந்தையும் இறந்து போக கைம்பெண்கள் சந்திக்கும் துயரங்களை கல்யாணி என்னும் கதாபாத்திரம் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதையும் அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும் இந்த படம் விளக்குகிறது.

அரவிந்தன் 1997

1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அரவிந்தன் இந்த கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க போலீஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவரது நண்பர் தமிழ்வண்ணன் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டதும் அரவிந்தன் காவல்துறை மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட தொடங்குகிறான். இதற்காக மக்களின் ஆதரவையும் பெறுகிறான். அரசியல்வாதிகளுக்காக அரவிந்தனை காவல்துறை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அரவிந்தன் காயத்ரி என்னும் ஒருவர் வீட்டில் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அப்போது மேலாளர் தொழிலாளர்களுக்கு நியாயமான விலை கொடுக்கவில்லை என்பதற்காக மேலாளரை மிகவும் மோசமாக அரவிந்தன் அடிக்கிறான். இதனால் நக்சலைட் என அடையாளம் காட்டப்பட்ட அரவிந்தன் இறுதியாக நீதிமன்றத்தில் சரணடைகிறான். சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தன் சிறையில் இருந்தவாறு ஊழலுக்கு எதிரான பல கட்டுரைகளை எழுதுகிறார். இதனால் அரவிந்தன் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மக்கள் பலரும் ஆதரவு தருகிறார்கள்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல்வாதிகள் அரவிந்தனை கொலை செய்ய திட்டமிட்டு இறுதியில் அவர் சுட்டுக் கொல்லகிறார்கள். இந்த படம் கீழ்வெண்மணி பிரச்சினை அடிப்படையாக கொண்ட படமாகும்.

சும்மா இருக்குறவனை சொறிஞ்சு விட்டுருவாரு சத்யராஜ் ஆர்யா, விஜய்லாம் பாதிக்கப்பட்டுருக்காங்க!.. லிஸ்ட் போட்டு குற்றம் சாட்டிய பிரபலம்!.

ஒரே வருடத்தில் நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்த திரைப்பிரபலங்களில் சத்யராஜும் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதைய காலக்கட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக்க இருக்கின்றனர். அதனை பேன் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியிட திட்ட்மிட்டுள்ளனர். இந்த நிலையில் இதில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க போகிறார் என்கிற தகவல் இரு தினங்களாக வலம் வந்து கொண்டுள்ளன.

திராவிட சிந்தனை, பகுத்தறிவு என பேசும் சத்யராஜ் அந்த திரைப்படத்தில் எப்படி நடிப்பார் என்பதே இதுக்குறித்து பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இதுக்குறித்து ஒரு காணொளியில் பேசிய வலைப்பேச்சு அந்தணன் சில தகவல்களை கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது சும்மா இருக்கும் ஆட்களை கூட சொறிஞ்சு விட கூடியவர் சத்யராஜ். இப்படிதான் ராஜா ராணி திரைப்படம் வெளியானப்போது ஆர்யாவையும் நயன் தாராவும் பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி மாதிரியே இருக்கிறார்கள் என கூறினார். அவர் கூறிவிட்டு அமைதியாக சென்றுவிட்டார்.

sathyaraj

ஆனால் அதற்கு பிறகு ஆர்யாவும், நயன்தாராவும் நிஜமாகவே அவர்களை எம்.ஜி.ஆர், சரோஜா தேவி லெவலுக்கு நினைத்துக்கொண்டு அவர்களது சம்பளத்தை அதிகமாக்கினர். அதே போல ஒருமுறை ஒரு விழாவில் விஜய் குறித்து பேசும்போது விஜய் உங்களை நேசிக்கும் இத்தனை கோடி ரசிகர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என வெகு நேரம் அதுக்குறித்து பேசினார்.

விஜய் கட்சி துவங்க வேண்டும் என்பதைதான் மறைமுகமாக கூறினார் சத்யராஜ். அதற்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பலமுறை கூறினாலும் சத்யராஜ் மாதிரியான சீனியர் நடிகர்கள் கூறும்போது அது விஜய்க்கு சிந்திக்க வைக்கும் விஷயமாக மாறியது. விஜய்யும் கட்சியை துவங்கினார்.

எனவே சத்யராஜின் அரசியல் புரியாமல் பலரும் அவர் மோடி படத்தில் நடிக்க மாட்டார் என கூறி வருகின்றனர். ஆனால் கண்டிப்பாக் அவர் அதில் நடிப்பார் என்கிறார் பத்திரிக்கையாளர் அந்தணன்.

Source: Link

மோடியா நடிக்க தயார்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்..

விஜயகாந்த், பாக்கியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் அதே அளவு பிரபலமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ். பொதுவாக அப்போதைய சமயத்தில் எடுத்தவுடன் நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு யோசிப்பார்கள்.

ஏனெனில் பிறகு கதாநாயகனாகவே நடிக்க வாய்ப்பு கிடையாது என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் வில்லனாக நடித்தும் கூட தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பை பெற்றவர் நடிகர் சத்யராஜ். ஏகப்பட்ட படங்களில் வரிசையாக நடித்து வந்த சத்யராஜ் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க துவங்கினார்.

இருந்தாலும் இப்போதும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். ஆரம்பக்கட்டம் முதலே பெரியாரிய கொள்கைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் சத்யராஜ். அதன் தாக்கங்களை அவரது திரைப்படங்களில் பார்க்க முடியும்.

sathyaraj

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை ஹிந்தியில் படமாக்க உள்ளனர். அதில் சத்யராஜ்தான் மோடியாக நடிக்க உள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தன. நேற்றிலிருந்து சமூக வலைத்தளம் முழுக்க இதுதான் பேச்சாக இருந்தது. ஏனெனில் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பா.ஜ.கவின் கருத்துக்கள் இருப்பதால் சத்யராஜ் எப்படி அந்த படத்தில் நடிப்பார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சத்யராஜ் நீங்கள் கூறிதான் அந்த படத்தில் நடிக்க போகிறேன் என்ற தகவல் எனக்கே தெரிந்துள்ளது. இப்போது வரை அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வரவில்லை. எம்.ஆர் ராதா அவரது இறுதி காலக்கட்டங்களில் சாமி படங்களில் நடிக்கவில்லையா. அந்த மாதிரி இந்த வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளார் சத்யராஜ்,

பிரதமராக களமிறங்கும் சத்யராஜ்!.. கேட்கவே அதிர்ச்சியா இருக்கே!.. இதுதான் காரணம்..

விஜயகாந்த், சரத்குமார் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் கதாநாயகனாக இருந்த காலக்கட்டத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் இவர் விஜயகாந்திற்கு போட்டி நடிகராக இருந்தார்.

ஹீரோவாக மார்க்கெட் குறைந்த பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் சத்யராஜ். இப்போது வரை மார்க்கெட் குறையாமல் நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். சத்யராஜ் ஆரம்பம் முதலே பெரியாரிய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவர்.

அதை பல படங்களில் அவர் வெளிப்படுத்தியும் இருப்பார். பெரியார் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக்கியப்போது சம்பளமே வாங்காமல் அந்த படத்தில் நடித்தார் சத்யராஜ். இந்த நிலையில் தற்சமயம் இந்திய பிரதமராக சத்யராஜ் ஒரு திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று ஒரு செய்தியை சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார்.

sathyaraj

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. ஏனெனில் எங்கு சென்றாலும் பிரதமர் குறித்து விமர்சனம் அளித்து வருகிறார் சத்யராஜ். அவர் எப்படி பிரதமராக நடிப்பார் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

ஆனால் மணிவண்ணன் உயிரோடு இருந்தப்போதே சத்யராஜ் பிரதமராக நடித்து அமைதிப்படை மாதிரியான திரைப்படத்தை இயக்க வேண்டும் என பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போது சத்யராஜ் பிரதமராக நடித்தாலும் அந்த படம் அமைதி படை போல நெகட்டிவ் கதாபாத்திரம் கொண்ட கதையாகதான் இருக்கும் என கூறப்படுகிறது.

வேண்டாம் என சத்யராஜ் மறுத்த திரைப்படம்!.. அவருக்கு போட்டியாகவே வெளியிட்ட கே.எஸ் ரவிக்குமார்!. எந்த படம் தெரியுமா?.

விஜயகாந்த் சரத்குமார் எல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் அதே அளவிற்கு வரவேற்பை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ்.

விஜயகாந்தை போலவே ஒரே வருடத்தில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் சத்யராஜ். ஆனால் புது நடிகர்கள் வர துவங்கியவுடன் சத்யராஜின் மார்க்கெட் சரிய துவங்கியது.

இந்த நிலையில் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் நானும் கூட ரஜினிகாந்த் மாதிரி இப்போதும் மார்க்கெட் உள்ள நடிகராக இருந்திருப்பேன். திடீரென புகழ் கிடைக்கவும் கண் மூடி தனமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து விட்டேன் என சத்யராஜே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

sathyaraj

இந்த மாதிரியே கே.எஸ் ரவிக்குமாருடன் ஒரு பேட்டியில் பேசும்போது யானை தன் மேல் தானே மண்ணை வாரி போட்டு கொள்வது போல நானும் கே.எஸ் ரவிக்குமாரின் நல்ல நல்ல படங்களின் வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன்.

இப்படிதான் கே.எஸ் ரவிக்குமார் ஒரு படத்தில் நடிக்க அழைத்தப்போது நான் அதை மறுத்து வேறொரு திரைப்படத்தில் நடித்தேன். இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியானது. என் படம் இரண்டு வாரங்கள் தான் ஓடியது. ஆனால் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் 25 வாரங்கள் ஓடியது.

எனக்கே வயிற்றெரிச்சலாக போய்விட்டது என்கிறார் சத்யராஜ். அது நாட்டாமை திரைப்படம்தான் என்கின்றனர் ரசிகர்கள்.சத்யராஜ் நடிப்பில் அதே சமயத்தில் தாய் மாமன் திரைப்படம் வெளியானது. ஆனால் நாட்டாமைதான் நல்ல வரவேற்பை பெற்றது என கூறப்படுகிறது.