modi sathyaraj

பிரதமராக களமிறங்கும் சத்யராஜ்!.. கேட்கவே அதிர்ச்சியா இருக்கே!.. இதுதான் காரணம்..

விஜயகாந்த், சரத்குமார் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் கதாநாயகனாக இருந்த காலக்கட்டத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் இவர் விஜயகாந்திற்கு போட்டி நடிகராக இருந்தார்.

ஹீரோவாக மார்க்கெட் குறைந்த பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் சத்யராஜ். இப்போது வரை மார்க்கெட் குறையாமல் நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். சத்யராஜ் ஆரம்பம் முதலே பெரியாரிய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவர்.

அதை பல படங்களில் அவர் வெளிப்படுத்தியும் இருப்பார். பெரியார் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக்கியப்போது சம்பளமே வாங்காமல் அந்த படத்தில் நடித்தார் சத்யராஜ். இந்த நிலையில் தற்சமயம் இந்திய பிரதமராக சத்யராஜ் ஒரு திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்று ஒரு செய்தியை சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார்.

sathyaraj

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. ஏனெனில் எங்கு சென்றாலும் பிரதமர் குறித்து விமர்சனம் அளித்து வருகிறார் சத்யராஜ். அவர் எப்படி பிரதமராக நடிப்பார் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

ஆனால் மணிவண்ணன் உயிரோடு இருந்தப்போதே சத்யராஜ் பிரதமராக நடித்து அமைதிப்படை மாதிரியான திரைப்படத்தை இயக்க வேண்டும் என பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போது சத்யராஜ் பிரதமராக நடித்தாலும் அந்த படம் அமைதி படை போல நெகட்டிவ் கதாபாத்திரம் கொண்ட கதையாகதான் இருக்கும் என கூறப்படுகிறது.