கருப்பு ட்ரெஸ்ஸில் கவரும் மடக்கி தட்டு நடிகை!.. ட்ரெண்டாகும் நடிகை!. - Cinepettai

கருப்பு ட்ரெஸ்ஸில் கவரும் மடக்கி தட்டு நடிகை!.. ட்ரெண்டாகும் நடிகை!.

2017 ஆம் ஆண்டு சித்திரங்கடா என்கிற திரைப்படம் மூலமாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீ லீலா. ஆனால் வெகு சீக்கிரமாகவே அவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அவருக்கு வரவேற்பு அதிகமாக கிடைத்தது.

sree-leela
sree-leela-2

அதனை தொடர்ந்து கிஸ், பராதே போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஸ்ரீ லீலா வெகு குறைவான காலக்கட்டத்திலேயே தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ஆவார்.

2023 ஆம் ஆண்டு இவருக்கு முக்கியமான வருடம் என கூறலாம். அந்த வருடம் இவர் நடித்த ஸ்கந்தா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் இரு திரைப்படங்களுமே தெலுங்கில் இவருக்காகவே ஓடி நல்ல வெற்றியை கொடுத்தது.

சிறப்பாக நடனமாடுவதுதான் ஸ்ரீ லீலாவின் நேர்மறையான விஷயமாகும். அவருடன் சேர்ந்து நடனமாடும் கதாநாயகர்களே அவருக்கு ஈடு கொடுத்து நடனமாடுவது கடினம் என கூறலாம். அந்த அளவிற்கு உடலை வளைத்து சிறப்பாக நடனமாட கூடியவர் ஸ்ரீ லீலா.

இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் வரும் மடத்தா பட்டி என்கிற பாடல் தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் தீயாய் நடனமாடியிருப்பார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version